*அம்மாவின் சமையல்* 👇
*கருவடாம் கூட்டு* ( இதற்கு சுரைக்காய் , சௌ சௌ , பீர்க்கங்காய் , கத்திரிக்காய் போன்றவை நன்றாக இருக்கும் )
💐தேவையான காயை சிறு துண்டுகளாக நறுக்கவும் !
💐காய் துண்டுகளை தண்ணீர் விட்டு மஞ்சள் பொடி , உப்பு , கட்டி பெருங்காயம் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கவும்
💐பாதி வெந்தவுடன் அதில் அரை ஸ்பூன் சாம்பார் பொடி , சிறிய கட்டி வெல்லம் கருவிப்பிலை 4 இலைகள் போடவும்
💐அது கொதிக்கும் வரை , ஒரு மிக்சியில் தேங்காய் 5 துண்டுகள் , அரை ஸ்பூன் தனியா ,
4 காய்ந்த மிளகாய் , ஒரு ஸ்பூன் அரிசி மாவு போட்டு கொரகொரப்பாக அரைத்து அந்த கொதிக்கும் கூட்டு பாத்திரத்தில் சேக்கவும் !
💐cooker இல் சாதம் வைக்கும் போது மேலே ஒரு தட்டில் கூடவே துவரம் பருப்பு கால் ஸ்பூன் வெந்தயம் , எண்ணை விட்டு வேக வைக்கவும்
💐ஒரு கடாயில் எண்ணை விட்டு அதில் கடுகு , கால் ஸ்பூன் சீரகம் , உளத்தம் பருப்பு , 2 வர மிளகாய் பெருங்காய பொடி ,கறி வேப்பிலை , ( சாம்பார் கருவடாம் இதை பொன்னிறமாக தனியாக எண்ணை விட்டு வதக்கி வைப்பது நல்லது ) தாளித்து , வெந்த துவரம் பருப்பை கூட்டு செய்யும் பாத்திரத்தில் சேர்ததவுடன் தாளிப்பை கொட்டி ஒரு ஸ்பூன் நெய் விட்டு, 4 இலைகள் கருவேப்பிலை போட்டு, ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை off செய்யவும் !
💐சுவையான புளி இல்லாத கருவடாம் கூட்டு தயார் !!!
No comments:
Post a Comment