Monday, October 9, 2023

மிளகு குழம்பு

 மிளகு குழம்பு | Milagu Kuzhambu 

தேவையானபொருள்கள்.

மிளகு /  pepper - 2 ஸ்பூன்
சீரகம்  / cuminseeds-2 ஸ்பூன்
கடலைபருப்பு /   chana dal - 2 ஸ்பூன்
உளுந்து  /  urad dal - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்  / dry chilli  - 1
கொத்த மல்லி  /  coriander - 2 spoon 
சின்ன வெங்காயம்  / small onion  - 4
 பூண்டு   / garlic  - 4 பல்
மஞ்சள் / turmeric - அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் / asafoetida  - அரை ஸ்பூன்
புளி  / Tamarind  /  - நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெயய் / gingelly oil   -100 கிராம்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை ;

கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகு ,கொத்தமல்லி ,சீரகம் ,கடலை  பருப்பு ,உளுந்தைப்பருப்பு ,காய்ந்த மிளகாய்,கருவேப்பில்லை போட்டு நல்ல வறுத்து எடுத்து ஆற வைத்து தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து கொள்ளவும் .

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,வெந்தயம்,பூண்டு,சின்ன வெங்காயம்,கருவேப்பில்லை போட்டு வதக்கி மஞ்சள் தூள் ,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்த மசாலா சேர்த்து 5 நிமிடம் வதக்கி புளி தண்ணீர் உப்பு குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குழம்பு கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கினால் சுவையான மிளகு குழம்பு ரெடி .

No comments:

Post a Comment