சுக துக்கம் - சுஜாதா சிறுகதை (1977)
செல்வம் செப்டம்பர் ஆறாம் தேதி இறந்து போனான். அவனுக்கு வயசு முப்பது
7-45க்கு என்னுடன் காண்டீனில் வெண்ணை தடவிய ரொட்டித் துண்டும் மலிவு விலை காப்பியும் சாப்பிடும் போது பி.டி.ஏ.சைட் ஒன்றுக்கு மனுப் போடுவது பற்றிச் சொன்னான். தன் பெண்ணின் முதல் பிறந்த தினத்துக்கு வரவேண்டும் என்றும், அவளுக்கு இப்போதே சேர்க்க ஆரம்பித்து எல்.ஐ.சியின் ஜீவன் சுரக் ஷாவோ ஏதோ சொன்னான். மாதம் இருநூறு கட்டினால் பதினெட்டு வயசுக்கு ஒரு லட்சமோ என்னவோ வருமாம்.
"வேஸ்ட்டு செல்வம், பேங்கல ரிக்கரிங் டெபாசிட் போட்டா இதைவிட அதிகமா வருமே *
"ஆயுள் இன்ஷுரன்ஸும் சேர்ந்திருக்கில்லை இடையில் எதாவது ஆயிருச்சுனனா முழுப்பணமும் கொடுப்பாங்களே" என்றான்
“உனக்கு அதில எதும் பயனில்லை செந்தில். உனக்கென்ன ' எந்தவித கெட்ட பழக்கமும் இல்லை எண்பது எண்பத்தைத்து வரை தாங்குவாய்" என்றேன்.
புன்னகைத்தான்.
================
அந்த இயல்பான உரையாடவில் பின்னால் நினைக்கும்போது கடவுள் அனை மரணச் செய்நியை ஒளித்து வைத்திருப்பாரோ எனறு எண்ணத் தோன்றியது இல்லையேல் செத்துப் போவதற்கு பத்து நிமிஷம் முன்னால் ஏன் நீண்ட ஆயுள் பற்றி பேச்சு வரவேண்டும்! எங்கிருந்தோ வடமேற்கு மூலையில் இருந்து கொண்டு கடவுள், 'முட்டாள், யாரும் சாசுவதம் இல்லை எண்பது நிமிஷம் கூட பேச என்ன உரிமை இருக்கிறது உனக்கு' என்று கேட்டிருப்பாரோ? கடவுளே, அப்படியா?
செக் ஷனுக்குத் திரும்பி அன்றைய வேலையை ஆரம்பிக்கலாமா என்று யோசிப்பதன்முன், டெக்கான் ஹெரால்டு புரட்டிவிட்டு ஜாப் கார்டு வாங்கிக்கொண்டு டூல் செக் ஷனுக்கு போய் கட்டிங் டூல் ஒன்று வாங்கி வந்து என் ஸீட்டுக்கு வருகிறேன். சூப்பிரண்டின் மேசை மேல் இருந்த டெலிபோன் ஒலித்தது. அந்த ஒலியில் எச்சரிக்கை இருந்தது போலத் தோன்றியது. எப்போதும் போலத்தான் ஒலித்தது. ஆனால் ஷிப்ட் ஆரம்பிக்கும் நேரத்தில் யாரும் கூப்பிட மாட்டார்கள்.
சற்று அபூர்வமாகத்தான் இருந்தது.
"சேகர் உனக்குத்தான் கால்" என்று போனை மேசை மேல் வைத்தார் நஞ்சப்பா
நான் அதை எடுத்துத் தோளில் துடைத்து விட்டு "சேகர் ஸ்பிக்கிங்" என்றேன்.
“உடனே வாக் இன் சேம்பருக்கு வா"
"என்ன?"
செல்வம் மாட்டிக்கிட்டான் ஆக்சிடெண்டாயிருச்சி “
"உயிருக்கு ஆபத்து இல்லியே?
“நீ உடனே வா. டி.ஜி.எம்.சூப்டறாரு” நான் போனை எறிந்து விட்டு ஓடுவதை பலருமே கவனித்தார்கள்.
அசெம்பிளி ஹாலில் மேல்புறத்தில் வரிசையாக சேம்பர்கள் இருந்தன. சாதனங்களை உச்சி உஷ்ணத்திலும் குளிரிலும் சோதித்துப் பார்க்க ஏற்பட்டது. ஒவ்வொன்றும் பெரிய அறை போல அதில் குளிர் அறைக்கு முன்னால்தான் கும்பல் கூடிக் கொண்டிருந்தது.
அவசரமாக பின்பக்கத்து ஷட்டர், சாவி சுற்றி திறக்கப்பட்டு ஆம்புலனசு பின்பக்கமாக அரங்கத்தில் நுழைந்து கொண்டிருந்தது. கூட்டத்தை விலக்கி “எனன ஆச்சு குரு என்றேன்.
“செல்லம் குளோஸ்" என்றான் யாரோ. பதற்றத்துடன் சேம்பரின் பக்கவாட்டில் இருந்த திட்டி வாசலை அணுகினேன்.
"ஏனாயித்து?"
சூப்ரண்ட் சுப்பாரால்தான், “சேகர், நீ வா வழி விடுப்பா" என்றான் செல்வத்தின் சினேகிதன் என்ற முறையில் எனக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது
மெல்ல அணுகினேன். நான் பார்க்க விரும்பவில்லை. பார்க்க விரும்பவில்லை.
"போளி மகா என்ன சேஃப்ட்டிப்பா இந்த பாக்டரியில் என்னதான் ஆச்சு?"
"கோல்ட் சேம்பருக்குள்ள போயிட்டான் ரெண்டு நிமிசத்தில் செத்துட்டான். அலாரம் எல்லாம் பையாஸ் பண்ணி வெச்சிருக்காங்க உருப்புடுவாங்களா இந்த மேனேஜ்மெண்ட் - மகா, ஓர்க்கர்ஸுங்களை சாவடிக்கறதுக்குனே இருக்குறானுங்க." நடந்தது என்ன என்று புரிய எனக்கு சற்று நேரமாயிற்று.
ஆளுக்காள் எதோ சொன்னார்கள். குளிரில் எப்படி சாக முடியும்? அதிக குளிராலா? இல்லையே? புரிந்தபோது இது ஒரு பரிதாபத்துக்குரிய தவிர்த்திருக்கக்கூடிய சாவு என்பது தெரிந்தது.
செல்வம் சேம்பரின் பக்கவாட்டுக் கதவைத் திறந்துகொண்டு சேர்தனை செய்யப்போகும் ட்ரான்ஸ்மீட்டருக்கு இணைப்பு கொடுக்க உள்ளே சென்றிருக்கிறான். அங்கே ஏற்கனவே ஒரு ரேடியோ ரிலே சோதனையில் இருந்திருக்க அதை குளிர்விப்பதற்காக நைட்ரஜன் பயன்படுத்துவார்கள் சேம்பர் முழுவதும் நைட்ரஜன் நிரம்பியிருக்கிறது. நுழைந்த மாத்திரத்தில் அவன் சுவாசப்பை முழுவதும் நைட்ரஜன் ஏறிக்கொண்டு நினைவிழப்பதற்கு முன் கதவைத் திறந்து வெளியே வர கதவின் கைப்பிடி வரை வந்து அதைப் பற்ற முயற்சித்துத்தான் செத்திருக்கிறான். முகம் முழுவதும் சயோனோசிஸ் நீலம் பாரித்து ......
செல்வமா இவன்? சற்றுமுன் காண்டீனில் பார்த்த சிரித்த முகமா இவ்வளவு முழுமையாக, இவ்வளவு விரைவாக செத்துப்போக முடியும் காலில் ஒரு செருப்பு மட்டும் இருந்தது. தலை பினவாங்கி கண் மூடி இருந்தது வலது கை இடது கைவிரல்கள் பூத்து ஒன்றுமில்லை என்று சைகை காட்டுவது போல இருந்தன. மூக்கில் ரத்த முத்து, “கடவுளே இப்பத்தான் சார் காண்டீனல பேசிக்கிட்டு இருந்தேன்” என்றேன்.
வெஸ்போ டிப்பார்ட்மெண்டிலிருந்து மேடப்பா என்னைக் கூப்பிட்டனுப்பினார் "நீ தானே செல்வத்துக்கு நெருங்கிய நண்பன்" என்றார்.
எனக்கு சற்று நிகைப்பாக இருந்தது. "அப்படின்னு சொல்ல முடியாது சார்" என்று பினவாங்கினேன்
"அவன் வீட்டுக்கு போயிருக்கல்ல ?"
"போயிருக்கிறேன். கல்யாணத்துக்கு முந்தி வீடு பார்க்கறப்ப" இந்த பொறுப்பை நிச்சயம் தவிர்க்க முயன்றேன் வீட்டுக்கு போனதில்லை பஸ்ல பார்ப்போம், எப்பவாவது"
"உங்க கூடத்தான் எப்பவும் பேசிகிட்டு இருந்தார்ங்கிறாங்க. பஸ்ல பக்கத்துக்கு பக்கத்துல வருவீங்களாம்"
"என்ன விஷயம் சார்?
"அவன் மனைவியை சந்திச்சு இருக்கியா?"
"இல்லைங்க"
"குழந்தை இருக்குதா?"
'ஒரு பொண்ணு..." காலைவதான் அதைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தான் என்ற சொல்ல நினைத்து உள்வாங்கிக் கொண்டேன். -
"வேன் எடுத்துக்கிட்டு போ நீதான் இந்த செய்தியை மனைவி கிட்ட சொல்லணும் "
"என்ன சார்?"
"போற வழியில் உன் சமசாரத்தையும் அழைச்சுகிட்டு போ"
"கல்யாணம் ஆவலை சார்" என்றேன்.
"அப்ப லேடி வெல்ஃபேர் ஆபீசரையும் அனுப்பறேன். போய் சொல்லிட்டு வந்துருப்பா தெரிஞ்சவங்க உடன் இருந்தே ஆகணும்"
"அப்படி ஒண்ணும் தெரிஞ்சவன் இல்லை சார் என்ன சார் பேஜார்ல மாட்டிவிட்டிட்டீங்களே"
"யாராவது சொல்லணுமில்லை?
"அதுக்கு நான்தான் அகப்பட்டேனா. எதாவது நல்ல சேதி இனிப்பு கொடுக்கணும், போளஸ் கவரை கொண்டு கொடுக்கணுமனா நீங்க போவிங்க சாவு செயதினனா எங்களை அனுப்புவீங்க இதை யூனியன்கிட்ட சொல்லியே ஆகணும்"
"இதோ இருக்காரு யூனியன் தலைவர்"
ரெட்டி மீசையைத் திருகிக்கொண்டு. 'சூளே மகா போய் சொன்னா என்ன ஆச்சு உனக்கு அவன்தான் செத்துப் போயிட்டான் இருக்கறவங்க பேஜார் பண்ணணுமா” என்றான்.
மேடப்பாவின முகம் கடுமையானது. "இஷ்டமில்லைனனா நான் உன்னை ஃபோர்ஸ் பண்ண விரும்பலை. வாழ்க்கைல சுக துக்கம் எல்லாம் தான் வரும் செல்லம் உன்னைப் பத்தி தன் மனைவிகிட்ட பேசியிருப்பான். நீதான் அவனை கடைசியா: பார்த்தே நீ போய் சொல்றதுநான் நாகரீகம் டைரக்டர் டெல்லி போயிருக்காரு சாயங்காலம் வந்து பார்ப்பாகுன்னு சொல்லு. ஆறுதல் சொல்வாரு இந்த செய்தியை மட்டும் வீட்டில் யாரு பெரியவங்க இருக்காங்களாமா?
"இல்லை. தனியாகத்தான் இருக்கான. சேஷாதரிபுரத்தில் வீடு பார்க தாண்டி"
"போய் சொல்லிடுப்பா"
“என்ன சார்" என்றேன் மிக நயக்கத்துடன். ரெட்டி " போடா போய் சொல்லு மேனேஜ்மெண்டல நிறைய காம்பென்சேஷன் வாங்கித் தரோம்னு சொல்லு"
மேடப்பா, "அவன் ஐ என் டி யு சி யா அல்லது ஏ ஐ டி யு சி யா?"
===========================
வெல்பேர் ஆபிசர் மலையாளி. "எனிக்கு ஹிருதயம் தாங்காது. சேகர் சொல்லிடறது ஐயாயிரம் ரூபாய் டெத் ரிலீஃப் ஃபண்டிலிருந்து ட்ரா பண்ணி கொண்டு வரது"....
வண்டியில் செல்லும்போது டிரைவர் "பாடிய கொண்டு போயட்டாங்களா சார்?" என்றான். "பச்சையாயிருச்சாமே."
"நெரியாதுப்பா"
"அந்தப் பையனை பார்த்திருக்கேன். சிவப்பா வெடவெடன்னு ஆக்கி ஆடுவானில்லை. கோகுலா பார்லகூட பாத்திருக்கேன்."
"தெரியாதுப்பா"
சேஷாத்ரிபுரத்தில் பார்க்கை ஒட்டிய சந்தில் இருந்தது வீடு. கணேசர் திருவிழாவின் மிச்சங்கள் கான்க்ரீட் மேடையில் காற்றில் காய்ந்த மஞ்சள் மாலைகளாக ஆடிக்கொண்டிருக்க எதிரே “ஜகமெச்சித உடுகா"விலிருந்து ராஜ்குமார் பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது. மெல்ல பக்கவாட்டு மாடிப் படிகளில் ஏறிச் சென்றபோது என் உள்ளம் பதைபதைத்தது. செய்தியை எப்படிச் சொல்லப் போகிறேன்.
"கிரிஜா மேடம் நீங்க முதல்ல போங்க. நான் தேவைப்பட்டா உள்ளவரேன். பெண் பிள்ளைக்கு பெண் பிள்ளை துக்க செய்தி சொல்றதுதான் உத்தமம்"
மெல்ல புடவைத் தலைப்பால் வாயை மூடிக்கொண்டு சற்றே அவிழ்ந்த கூந்தலுடன் வெல்பேர் பெண் அதிகாரி கதவின் மணிப் பொத்தானை அழுத்தினாள் குழந்தை அழுதுகொண்டிருந்தது. கதவு திறக்குமுன் நான் கடவுளைக் கேட்டேன். என்ன இது உன் விளையாட்டு? எதற்காக என்னை இப்படி சோதிக்கிறாய்? ஒரு நண்பனின் சாவுச் செய்தியை அவன் மனைவிக்குத் தெரிவிக்கும் இந்த விபரீதமான பொறுப்பை மேல் திணிக்கிறாய்?
கதவு திறந்தது. நான் என் எதிர்கால மனைவியை சந்தித்தேன்
No comments:
Post a Comment