சிவப்பு ரிக்ஷா..
நாம் பின்னோக்கிப் பார்ப்போமேயானால் அதாவது 40 அல்லது 50 வருடம் முன்னர்.மதராஸ் பட்டினத்தில் பீக்ஹவரில் டிராமில் பயணிக்கும் மக்களில் குறிப்பாகப் பெண்கள் எந்த விதமான இன்னல்களைச் சந்திக்கின்றனர். பெண் பிள்ளைகள்ப் படும் கஷ்டங்களைத் தொழிவாகச் சொல்லியிருப்பார். இந்தக் கதையின் நாயகி மாதிரி துணிச்சலான சில பெண்கள் தங்களை எப்படித் தற்காத்துக் கொள்கின்றனர் என்பதையும் அழகாக நகைச்சுவைக் கலந்து நமக்குத் தந்திருக்கிறார் எழுத்தாளர்த் திருத் தி. ஜானகிராமன் அவர்கள்.
பெண்களிடம் துணிச்சல், தன்னம்பிக்கை, வைராக்கியம் அனைத்து ஒன்று சேர அவர்களிடம் இருக்க வேண்டும் என்பதையும் அவருடைய எழுத்தின் மூலம் நமக்குத் தெரியப்படுத்தியிருப்பார் எழுத்தாளர். அந்தப் பீக் ஹவரில் டிராம் முழுவதும் எப்படி இருந்திருக் கூடும் என்பதைப் படம்பிடித்துக் காட்டியிருப்பார் எழுத்தாளர். கூட்ட நெரிசலில் அந்த டிராம் முழுவதும் வியர்வையின் வாசனை வருகிறதென்றால் எவ்வளவு கூட்டம் இருந்திருக்கும் அங்கு.
கதைக்குள் செல்வோம், ஸப் எடிட்டர் டிராமில் பயணிக்கிறார், ஒரே கூட்ட நெரிசலில் நிற்க இடமில்லாமல் அவர் அந்த டிராமில் பயணித்துக் கொண்டிருக்கையில். ஒரு பையன் முழங்கைக்குக் கீழ்லிருந்து இரத்தம் வெளியேறுவதைப் பார்த்தார். அந்தப் பையன் வலியைப் பொறுத்துக்கொண்டு, ஏதும் கத்தாமல் நகர்ந்து சென்றுவிட்டான். அவனின் இந்தக் கோலத்துக்குக் காரணம் இளம் பெண்தான். அவள் பெயர் ருக்கு, அவள்தான் அந்தப் பையனைத் தன் நகத்தாலே கிள்ளியதின் காரணத்தால் பையனின் கையிலிருந்து இரத்தம் வந்தது.
என்ன இது அந்தப் பெண்ணின் முகத்தில் கோபம் தாண்டவமாடுகிறது. அப்போது ஏதோ தவறு இங்கு நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டார் ஸப் எடிட்டர். குறிப்பாக இளம் பெண்ணின் வீடும் இவரின் வீடும் பக்கத்தில் இருந்ததால் இவர்கள் இறங்கும் இடம் ஒன்றாக இருந்தது.
டிராமிலிருந்து இறங்கிய உடனே என்ன ஒரு பெரு மூச்சு, கால் விரலெல்லாம் நசுங்கிப் போயிடும் போலிருக்குது என்று சொல்லிக்கொண்டே இறங்கினாள் ருக்கு. அதற்கு ஸப் எடிட்டர் இரத்தம் கூடத்தான் பீறீட்டு வந்ததுஎன்றுக் கூற, சட்டென்று திரும்பி, அவரைப் பார்த்துச் சிரித்தாள். அவளும் பிறகு என்ன சார் இன்று எவ்வளவு கூட்டம் இருந்தது டிராமில் என்று உங்களுக்குத் தெரியும்.
எவ்வளவுதான் கூட்டம் இருந்தாலும் அவன் இருக்கிற இடத்தில் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காது. இடித்து நின்றான். சரி கூட்ட நெருக்கடிப் போனால் போகிறது விட்டுவிட்டேன். ஆனால் அவன் ஏன் காது அருகில் வந்து ஊதவேண்டும் அதான் சரியான பாடம் கற்பித்தேன் என்றாள். நிற்கவே இடமில்லையாம் இதில் சேஷ்டை வேரையா?
இளம்பெண் வீடு வந்தவுடன் சார் என்று அழைத்தால். அதற்கு ஸப் எடிட்டர் என்னையா என்று கேட்டதற்கு ஆம் வீட்டுக்கு வாங்க ஒரு கப்புக் காப்பிக் குடித்துவிட்டுச் செல்லலாம் என்று சொல்லி அவரை வீட்டினுள் அழைத்துச்சென்றால். உள்ளே நுழைந்ததும் அப்பாவிடம் அறிமுகம் செய்துவைத்தாள். அப்பா இவர் யார் தெரியுமா? என்றாள். அதற்கு ருக்குவின் தந்தை இவரைப் பார்த்த மாதிரி இருக்கிறது என்று பதிலளித்தார். ஆம் நீங்கள் தற்போது படித்துக்கொண்டிருக்கும் செய்தித் தாளில் இவர் ஸப் எடிட்டராக இருக்கிறார் நல்லது என்று கூறி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது ருக்கு உடைகளை மாற்றிக்கொண்டு கையில் காப்பியுடன் வந்து ஸப் எடிட்டருக்கும் தன் தந்தைக்கும் காப்பிக் கொடுத்தாள். பிறகு பேச ஆரம்பித்தாள் அப்புறம் என்ன சார், காபிச் சாப்பிட வேண்டியதுதானே என்றாள். அவரோ வீட்டுக்குப் போய்ச் சாப்பிடத்தான் போகிறேன் பிறகு எதற்கு எனரறார். பரவாயில்லை சார் ஒரு கப்புகாபிதானே என்றாள். எதற்கு வம்பு என்று காப்பியைக் குடித்தார். உங்களுக்கும் தெரிந்துவிட்டதா ருக்கு வம்புக்காரின்னு? என்று ருக்குவின் தந்தை கேட்டார். ஸப் எடிட்டர்ச் சிரித்தார், அதற்குத் தந்தை ஏன் யாரையாவது அடித்தாயா என்று ருக்குவிடம் கேட்டார். அடிக்கவில்லை, கிள்ளினேன் இரத்தம் வந்தது அவனுக்கு.
இதே மாதிரிதான் சில மாதங்கள் முன்னர் ஒருவன் வம்பு வைத்துக் கொண்டான். ஒரு அடிக் கொடுத்தேன் அவன்அப்படி நழுவிப் போய்விட்டான் அந்த இடத்தைவிட்டு என்றாள். நல்ல தைரியசாலி சார் உங்கள் பெண் என்று கூறினார் ஸப் எடிட்டர்.
ருக்கு இப்போது காலேஜில் படிக்கிறாள். ஒரு நாள் டிராம் இல்லை இவர் பேருந்திற்காகக் காத்திருந்த சமயம். திடீரென்று நீல நிற வாகனம் அந்தப் பக்கமாகப் போனப் போது அதில் ருக்கு இருப்பதைப் பார்த்தார் எடிட்டர் . அவள் அடையாளம் தெரியாமல் வளர்ந்திருந்தாள். புடவை உடுத்தியிருந்தாள். வாகனம் வேகமாகச் சென்று விட்டது, வாகனத்தை ஓட்டியவன் கையை உயர்த்திப் பேருந்திற்காகக் காத்திருந்த இரண்டு நபர்களைப் பார்த்து ஹலோ சொல்லிக்கொண்டே வாகனத்தை ஓட்டிச் சென்றான் அந்த இளைஞன்.
அங்குப் பக்கத்தில் கூடி இருந்த சில மாணவர்கள் பார் அதிர்ஷ்டத்தை அவனுக்குப் புதுசு புதுசாச் சிநேகம்கிடைக்கிறது அவனுக்கு என்று கூறினர். மாணவர் அவர்கள் வாய்க்கு வந்ததைப் பேசியது எடிட்டர் அவர்களுக்கு கஷ்டமாக இருந்தது. அவர்கள் பேசியதைக் கேட்டு ஒதுங்கி நின்றார் எடிட்டர். அவர் கூட நினைத்தார் எங்கேப் போனது இவளது வேகம் துணிச்சலெல்லாம். இந்தப் படிப்புப் படுத்துகிற பாட கூட இருக்காலாம் என்று எண்ணினார். வீட்டிற்கு வந்தவுடன் எடிட்டரின் மனைவி ராஜம் அவரிடம் சொன்னாள், ருக்கு வந்துவிட்டுப் போனாள். எதற்காக என்று கேட்டார், ராஜம் வந்து முக்கியமான விஷயமொன்றுமில்லை வரமுடிந்தால் வீட்டுக்கு வரும்படி கூறிச் சென்றாள்.
எடிட்டர்ச் சாப்பிட்டவுடன் அவளது வீட்டுக்குச் சென்றார், அவள் அங்கு உணவுச் சாபிட்டுக்கொண்டிருதாள். நான் உங்களைப் பார்த்தேன் பாண்டிப் பஜாரில், ஏனோ உங்கள் முகம் வாடிப்போய் இருந்தது. எடிட்டர் ஏதாவது நெனச்சுக்கப் போறாரேன்னுதான் உங்கள் வீட்டுக்கு வந்தேன். நீங்க இன்னும் வரவில்லை என்று சொன்னாள் மாமி. சொன்னாச் சொன்னா அதான் உடனே கிளம்பி வந்தேன் என்றார்.
ஒரு தடியன் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டான், அவன் பி.ஏ படிக்கிறான். எங்கே என்றான் மாம்பலம் என்றேன், நான் உங்களை அங்கு இறக்கிவிடுகிறேன் என்றான். அதனால்தான் அவனது வாகனத்தில் ஏறினேன். நான் அவன் வாகனத்தில் அமர்ந்தது, அவனது வாகனத்தை பற்றிப் புகழ்ந்தவுடன். அவன்வாகனத்தை வேகமாக ஓட்ட ஆரம்பித்தான்.எங்கு இருக்கிறீர்கள் என்றான் நான் லஸ்சில் இருக்கிறேன் என்றேன். வீட்டு முகவரியைக் கேட்டான் நானும் தப்பான முகவரியைக் கொடுத்து மாம்பலத்தில் ஒரு இடத்தில் வண்டியை நிருத்தச் சொல்லி இறங்கினேன், வீட்டுக்குவந்தான். அவன் நல்ல முகவரியைத் தேடிக்கொண்டே இருக்கட்டும், அவனுக்கு நல்ல வேண்டும் என்றாள்.
ஒரு மாதம் ஆனது இது நடந்து, இரண்டு மூன்று முறை அவள் வீட்டுக்குப் போனார் எடிட்டர் அவள் இல்லை, காலை கூட்டத்துக்குப் பயந்து கொண்டு சீக்கிரமேப் போய்விடுகிறாளாம். அப்படி ஒரு நாள் இவர் வண்டிக்காகக் காத்திருந்த நேரம் ருக்கு ரிக்ஷாவில் வந்தாள். என்ன சார் என்றால், அட நீயா? ஏன் பேருந்தில் போகலையா? என்று கேட்டார் எடிட்டர். இந்த நெருக்கடியில் எப்படிச் சார் என்றாள்? அவள் சொன்னாள் போதும் வீம்புக்கு நின்றதெல்லாம். பின்ன என்ன சார் உங்களுக்கெல்லாம் காளை மாடு மாதிரிப் பலம் இருக்கிறது. அந்த மாதிரிப் பலம் ஒவ்வொரு பொம்மனாட்டிக்கும் வர வரையில் சிரமந்தான். இப்படிப் போகும் போது வம்பு இல்லாமல், காலும் நசுங்காமல் இருக்கும் இல்லையா? வரட்டுமாச் சார்? நகத்தைக் கூட நறுக்கிவிட்டேன் என்றாள். ரிக்ஷா நகர்ந்தது. பிரமிப்புத் தெளியாமல் அந்தச் சிவப்பு ரிக்ஷாவைப் பார்த்துக் கொண்டே நின்றார் எடிட்டர். அந்தப் பெரிய சிவப்பில் டிராமில் விழுந்த இரத்தத் துளி மறைந்தது போல் இருந்தது என்று எழுத்தாளர் முடித்த விதம் அருமை.
-பாலமுருகன். லோ-
No comments:
Post a Comment