சுப்ரமண்ய ஐயர் என்ற இயற் பெயர் கொண்ட அபிராமி பட்டர் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் திருக்கடையூர் என்ற ஷேத்ரத்தில் பிறந்தவர்.
இவர் சக்தி பூஜையும் யோக நெறியும் முறையே பயின்று அதனால் யோக சித்தி அடைந்து சிதாகாசத்தில் அம்மையை ஒளி வடிவில் கண்டு பேரின்பத்தில் ஆழ்ந்திருந்தார் .அவரை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது இல்லை.
அன்நாளில் தஞ்சையை ஆண்ட வந்த சர்ஃபோஜி மஹாராஜா தை அமாவாசை அன்று தேவி தர்சனத்துக்கு வந்திருந்தார்.
சந்நிதியில் மெய் மறந்த நிலையில் அமர்ந்திருந்த பட்டரைப் பார்த்து இவர் யார் என பக்தர்களை வினவ, இவர் ஒரு பித்தர். வேதத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபாடுடையவர் எனக் கூற, அதை சேவியுறாமல் அபிராமியே வழிபட்டார் .ஆனால் அவர் சுடர் விடும் முகம் அரசர் கண்களில் தோன்ற, அவரிடம் " பட்டரே இன்று என்ன திதி" என்று கேட்க , பட்டரோ அன்னையின் திருமுக ஒளியில் திளைத்திருந்தமையால், " பௌர்ணமி " என்று சொன்னார்!
அரசனோ இந்த ஊர் மக்கள் சொன்னது மெய்தான் இவர் ஒரு பித்தர் என்று கருதி சென்றுவிட்டார்.
தியானம் கலைந்து எழுந்த பட்டர் நடந்தவற்றை உணர்ந்து தான் தவறாக சொண்ணதற்குப் பரிகாரம் தேடும் வகையில் வைராக்கியம் மேலிட, அம்பிகையின் சந்நிதியில் ஆழ்ந்த குழி வெட்டி, அதில் தீ மூட்டி, அதன் மேல் விட்டத்திலிருந்து நூறு ஆரங்கொண்ட உரியைக் கட்டித் தொங்க விட்டார் !
அதன் மேல் அமர்ந்து,அம்பிகையை தியானித்து, வணங்கி பெரும் பழியைத் துடைத்து என் வாழ்வை உய்விக்க அம்பாள் வரவில்லை எனில் உயிர் துறப்பேன் எனக் கூறி உதிக்கின்ற என்று தொடங்கும் அந்தத்தியைப் பாட ஆரம்பித்தார் !
ஒவ்வொரு பாடலும் முடிந்த பின் ஒவ்வொரு கயிராக அறுத்து வந்தார். சூரியன் மறைந்தான் 79 வ பாடல் விழிக்கே அருளுண்டு என்ற பாடல் பாடி முடித்தவுடன் அம்பாள் வானில் தோன்றி தன் தாடங்கம் ஒன்றை எடுத்து வானில் எறிந்தாள் !
அது கோடி சூர்யா பிரகாசமாய் தோன்றி முழு நிலவாய்க் காட்சி கொடுக்க பட்டர் முன் தோன்றிய அம்மை " வாய் சோர்ந்து, அரசனிடம் கூறிய சொல்லை மெய் என நிரூபிக்கவே இங்கு வந்தோம், தொடர்ந்து பாடுக" என கட்டளையிட, அவ்வண்ணமே பாடி முடித்தார் !
100 பாடல்களைக் கொண்ட அந்தாதி சௌந்தர்ய லஹரிக்கு இணையான பலன் கொண்டது !
பித்தன் என்று கருதிய மக்களும், அரசனும் அவர் அடி பணிந்து மன்னிப்புக் கேட்டனர் .
அரசன் அவருக்கு வெகுமதிகள் அளித்து, நிறைய பட்டயங்கள் அளித்தார் ! இன்றும் அவர் வம்சாவளியினர் அனுபவிக்கின்றனர் !
அபிராமி அம்மை பதிகம் இயற்றினார் உருக வைக்கும் பாக்கள் ! தை அமாவாசை ! அந்தப் புனித நாளில் இந்த சம்பவம் நடந்தது !
No comments:
Post a Comment