Tuesday, February 1, 2022

கோதாவரி நதி தீரம் 3

 கோதாவரி நதி தீரம்🌹🎻🎼

ராஜமுந்திரி-பத்ராசலம்-வாரங்கல் தெலுங்கு மண்ணில் ஒரு பயணம்

(சுஜாதா&வெங்கடேசன்) 

  3) நதியில் நீராடி-கண்ணன் கழல் தேடி...

நதி கடந்ததும் கோதாவரி என்ற ஸ்டேஷன் வரது. ஒரு கிராமம் போல இருக்கிறது. அடுத்து ராஜ முந்திரியில் இறங்குவதை விட இங்க இறங்கினால் லாட்ஜ் cheap ஆக இருக்கும் நதியும் பக்கத்தில் இருப்பதால் சௌகரியம் என நினைத்து இறங்க சொல்கிறார். 

முன்னதாக கூகுளில் சில லாட்ஜ் பார்த்து வைத்ததில் “சோனா இன்” என சொல்லி 

ஒரு ஆட்டோவை கேட்கிறார் . 100/- என சொல்லி கொண்டு விடுகிறான். 

700/- ரூபாய்க்கு நல்லா இருக்கு. 

மார்கழி மாச ஆரம்பம்ங்கறதால திருப்பாவை பாட்டு ..தெலுங்கு தேசத்துல கேட்க பரவசமா இருக்கு. 

வாங்கோ கோதாவரியில தீர்த்தமாடிட்டு கோயில்ல பொங்கல் சாப்பிடலாம்கறேன். 

அங்க இருக்கறவா கோதாவரி கூப்பிடு தூரம்னு கை காட்டறா... வழி கேட்டுண்டு எதோ ஒரு படித்துறைல இறங்கறோம். ப்ரமாண்டமா ஓடிண்டு இருக்கு. இவர்க்கு நல்ல ஜலதோஷம் ..குளிர்ல எறங்க மாட்டேன்னுடறார். 

முதல்ல குளிரினாலும் ட்ரெய்ன்ல வந்த சூட்டுக்கு எதமா இருக்கு..அம்மா தாயே கோதாவரின்னு நல்லா முழுக்கு போடறேன். 

இவர் நதியைப்பார்த்துண்டே என்னமோ பேசிண்டு இருக்கார். 

கோதாவரி தென்னிந்தியாவின் நீளமான நதி. சுமார் 1465 கிமீ நீளமுடையது. இந்திய நதிகளில் சிந்து, கங்கை பிரம்மபுத்திர நதிகளுக்கு அடுத்த பெரிய நதி. அது அரபிக்கடலிலிருந்து 80கிமீ அருகில் மகாராட்டிரத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள திரிம்பகேஸ்வரம் என்னும் மேற்குத்தொடர்ச்சி மலையில் தோன்றுகிறது. அந்தத் தோற்றுவாயிலிருந்து அப்படியே மேற்காக இறங்கியிருந்தால் அதன் நீளம் சுமார் 80கிமீக்குள் அடங்கிச் சிறுநதியாகிச் சிறுத்திருக்கும். ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்காகப் பாய்ந்து தக்காண பீடபூமியை ஈரமாக்கித் தன்னோடு சேரும் துணையாற்றுத் தண்ணீரையெல்லாம் கூட்டிப் பெருக்கிக்கொண்டு பேராறு ஆகி வங்கக் கடலில் கலக்கிறது. மகாராட்டிரம், தெலுங்கானம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் ஏராளமான மாவட்டங்கள் இந்நதியால் வளம்பெறுகின்றன

“ஈரப்புடைவையோட ஆட்டோ பிடிச்சி லாட்ஜ் போகணும்னு” சொல்லி அவர் ப்ரமையை கலைக்கறேன். 

ரூம் வந்து புடைவை மாத்திக்கறேன். 

திருப்பாவை முடிஞ்சு லௌட் ஸ்பீக்கர்ல எதோ தெலுங்குல சொல்றா..இவர் கூகுள் பார்த்துட்டு சின்ன ஜீயர் மடம் கோயில் பக்கத்துல ஹரே கிருஷ்ணா கோயில் சேவிச்சுட்டு நர்மதா போட்டிங் போலாங்கறார். 

சின்ன ஜீயர் மடத்துல பெருமாள சேவிச்சுட்டு துளஸி தீர்த்தம் வாங்கிண்டு பக்கத்துல 

இஸ்கான் போறோம்..

கோயில் உள்ள தரிசனம் முடிஞ்சு புளியோதரை பாக்கட் வாங்கி வாசல்ல உக்கார்ந்து சாப்படறோம். 

ரெண்டு தெலுங்கு குடும்பம்பெண் மாப்பிள்ளை பார்க்க மீட் பண்ணிக்கறா..ஆம்பளைகள்லாம் ஒரு பக்கமும் லேடீஸ்ஒரு பக்கமும் பேச  பொண்ணும் மாப்பிளையும் தனியா போறா...

இனிமே இவர் 

இஸ்க்கான் (ISKCON) கோயில் முக்கிய ஆன்மீக வழிப்பாட்டுத்தலமாகவும் பொழுதுபோக்குத்தலமாகவும் ராஜமுந்திரி நகரத்தில் பிரசித்தமாக அறியப்படுகிறது. கௌதமி காட் என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது.

இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோயில் நாட்டிலுள்ள இஸ்க்கான் கோயில்களிலேயே இரண்டாவது பெரிய கோயில் எனும் புகழைப்பெற்றுள்ளது. (முதல் பெரிய இஸ்கான் கோயில்பெங்களூர் நகரத்தில் உள்ளது )குறிப்பிடத்தக்கது. இஸ்க்கான் (ISKCON) எனப்படும் ‘இண்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் கிருஷ்ணா கான்சியஸ்னஸ்’ எனும் பிரசித்தமான ஆன்மீக அறக்கட்டளை அமைப்பானது கோதாவரி ஆற்றின் கரையிலேயே இந்த கோயிலை கட்டியுள்ளது.

ஸ்ரீ சைதயன்ய குருவும் ராமானந்த ராயா எனும் யோகியும் இங்கு சந்தித்து உரையாடியதன் நினைவாக இந்த மடாலயம் ‘ராமானந்த ராய கௌடியா மடம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

வரலாற்றுக்குறிப்புகளின்படி ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு எனும் யோகி இந்த ஸ்தலத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ண பஹவானின் அவதாரமாகவே வணங்கப்பட்டுள்ளார் என்பதாக சொல்லப்படுகிறது.




No comments:

Post a Comment