👩🏿🦰🧑🦰🧑காலம் தோறும் பெண்🧒👩🏻👦🏾
வை மு கோ 2
கோதை வீட்டில் எப்போதும் ஏதேனும் பாசுரங்களையும் ஸ்லோகங்களையும் பாடிக் கொண்டே இருப்பார். அதனால் அவருக்கு தமிழ் மொழி மிகச் சரளமாக வந்தது. வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வேலை நேரம் போக மீதி நேரங்களில் அழகாக புராணக் கதைகளையும் நாட்டுப்புறக் கதைகளையும் சொல்லுவார். பின்னாட்களில் தானே கற்பனையில் பல சுவாரசியமான கதைகளை உருவாக்கி அதையும் சொல்ல ஆரம்பித்தார். இதை கவனித்த கோதையின் புகுந்த வீட்டினர் அவரின் படைப்பாற்றைலையும் கற்பனைத் திறனையும் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். அவரது கணவர் பார்த்தசாரதி அவரை ஊக்குவிக்கும் பொருட்டு நிறைய நாடகங்களுக்கு கோதையை அழைத்துச் சென்றார். கணவருடன் வெளி உலகையும் நாடகங்களையும் பார்க்க ஆரம்பித்த கோதையின் கற்பனைத் திறத்துக்கு நிறைய தீனி கிடைத்தது. அவர் தானே ஒரு நாடகத்தை எழுத விரும்பினார்.
பெண்களின் வளர்ச்சிக்கும் சமூக மறுமலர்ச்சிக்கும் தான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார். வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்த காலத்தில் தன் குடும்பத்தினர் தனக்கு அளித்த சுதந்திரத்தையும் ஊக்கத்தையும் சரியான வழியில் கொண்டு போக வேண்டும் என்ற துடிப்பு அவருக்கு இருந்தது. தனக்கு அமைந்த இந்த நல்ல வாய்ப்பால் சமூகத்தையும் மாற்ற வேண்டும் என விரும்பினார்.
அவருக்கு சரளமாக எழுத வராததால் அவரது தோழி பட்டம்மாள் அவருக்கு உதவி செய்ய முன் வந்தார். கோதை சொல்லச் சொல்ல பட்டம்மாள் நாடகத்தை தழிமில் எழுதிக் கொடுத்தார். அடுத்த சில நாட்களில் (1924 ல்) ‘இந்திரமோகனா’ எனும் அவரது முதல் நாடகம் எழுத்தில் உருவானது. அப்போது அவருக்கு வயது 24. அந்நாட்களில் நாடகம் எழுதுவதில் புகழ் பெற்று விளங்கிய பம்மல் சம்மந்த முதலியார் மற்றும் துப்பறியும் கதைகளில் புகழ் பெற்றவரான வடுவூர் துரைசாமி ஐயங்காரிடம் தன் மனைவியின் நாடகப் பிரதிகளைக் காண்பிக்க, படித்துப் பார்த்த இருவரும் கோதையின் திறமையை வெகுவாகப் பாராட்டி மேலும் எழுத உற்சாகம் அளித்தனர்.
அதனை அடுத்து ‘வைதேகி’ எனும் நாவலை எழுதினார். ஆனால் அப்போது அதை வெளியிட எந்த பதிப்பகமும் முன் வராத காரணத்தால், ஏற்கனவே ஆரம்பித்து நஷ்டத்தால் பாதியில் நின்றுவிட்ட ‘ஜகன்மோகினி’ என்ற பத்திரிக்கையை 1925-ல் வாங்கி மாத அதை இதழாக மாற்றி அச்சிட்டார். தன்னுடைய முதல் நாவலை அவ்விதழிலேயே தொடர்கதையாக வெளியிட்டார். மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது அந்நாவல்.
தன்னுடைய படைப்புகள் மட்டுமல்லாது புதியதாக எழுத வரும் இளம் படைப்பாளிகளின் படைப்புகளையும் பிரசுரித்து அவர்களை ஊக்கப்படுத்தினார். அதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் அந்த இதழில் வெளியிட்டார்.
சிறு வயது முதல் தன் சித்தப்பாவிடம் படித்த திருக்குறள், நாலடியார் தேவாரம், திருவாசகம் போன்றவை பிற்காலத்தின் இவரது படைப்புகளுக்கு மிகவும் உதவியது. தொடர்ந்து இவர் எழுதிய நாவல்களும் நாடகங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. தன் தீரா கற்பனைகளாலும் தேன் சுவை மொழி நடையாலும் மக்களிடையே வெற்றி நடை போடும் எழுத்தாளராக பிரபல்யமானார். தமிழில் துப்பறியும் நாவல்கள் படைத்த முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமை கோதையையே சேரும்.
இவரது படைப்புகளை இந்து, சுதேசமித்திரன் நியு இந்தியா ஆகிய நாளிதழ்கள் பாராட்டி எழுதின. மகாத்மா காந்தி தமிழகம் வந்திருந்த போது அவரை சந்திக்கச் சென்றார். அவரது சந்திப்பு கோதையின் வாழ்க்கையின் மிகப் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. அது முதல் மிகையான ஆபரணங்கள் பட்டாடைகள போன்றவற்றைத் தவிர்த்து, கதர் ஆடை அணிந்து மிக எளிமையாக தோற்றம் கொண்டார். காந்தியத்தில் ஈர்க்கப்பட்டு அவரது கொள்கைகளைப் பின்பற்றினார். பல சமூக சேவைகளில் ஈடுபட்டதோடு மட்டுமன்றி தேச நலனுக்காக சுதந்திரப் போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றார்.
சுதந்திர உணர்வு நாட்டு மக்களை சென்றடைய பல மேடைகளில் கோதையும் உரையாற்றினார். கதை எழுதும் திறன் மட்டும் அல்லாது பேசும் திறனும் அவரிடம் போட்டி போட்டுக்கொண்டு இருந்தது. தனது பேச்சின் நடுவே குட்டி குட்டி கதைகளைச் சொலி கூட்டத்தை கலையவிடாமல் கட்டுண்டு கிடக்கச் செய்வதில் திறமைசாலி அவர். எழுத்தையும் பேச்சையும் போலவே கர்நாடாக இசையில் கோதைக்கு இருந்த ஆற்றல் அளவிடற்கரியது. ராஜாஜியின் மனதிற்கு பிடித்த மேடைப் பேச்சாளர் இவர். தான் பேசும் மேடைகளில் எல்லாம் கோதையும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பாராம் ராஜாஜி.
அவரது குரல் வளம், உச்சரிப்பு, பாடும் திறன் பலரை அவர் பாட்டுக்கு அடிமையாக்கியிருந்தது. அவர் பாடியதோடு மட்டுமல்லாமல் ப…
No comments:
Post a Comment