Tuesday, February 1, 2022

பிராயச்சித்தம்

 விஜயா  சுப்ரமணியம்

சிறுகதை

பிராயச்சித்தம் 

20−1−22

~~~~~~  

        சிறைக்கதவுகள்   திறந்தன்,  சின்ன கேட்   வழியாக   சின்னையன்    வெளியில்   வந்தான்,  வாசலில்   யாராவது   இருக்கிறார்களா    என்று பார்த்தான்,    இவன்   என்ன   சுதந்திரத்துக்காக   பாடுபட்டு   ஜெயிலுக்கு   போன  தியாகியா   யாராவது   மாலை   போட்டு   வரவேற்க?

  கட்சி   கூட்டத்தில்    நடந்த   அடிதடியில்   யாரோ    கத்தி  குத்த   பழி   இவன்   மேல்   விழுந்தது,,,எப்படியோ   வாதாடி;இரண்டு   வருடம்   சிறை   தண்டனையில்   முடிந்தது,   

           வெளியில்    வந்து   வெளிக்காற்றை    நன்றாக   சுவாசித்தான்,   எத்தனை   நாளாகி   விட்டது   இந்த  மாதிரி  வெளியுலகத்தை பார்த்து?   

            வீட்டிற்கு   போகிறான்  சின்னையன்,   மனைவி,குழந்தைகள் யாரும்   இல்லை,  சிறைக்கு   யாரையும் வரவேண்டாம்   என்று   சொன்னதால் மனைவி   வரவில்லை,    நன்னடைத்துக்காக   சீக்கிரம் , ரிலீஸ் பண்ணி   விட்டார்கள்,   எல்லாமே    அங்கு   புது   ஆட்கள்,  யாருக்கும்   இவனை   அடையாளம்    தெரியவில்லை,

    பக்கத்து   வீட்டுகாரர்   இவன்   மனைவி    குழந்தைகளை   பற்றி   கேட்டவுடன்   ஒரு   மாதிரி  பார்த்தார்"

அவர்கள்   தந்தை   வீட்டுக்கு   போயிருப்பதாக   சொன்னார்"

             குற்றம்  ,செய்து   விட்டு   ஒருவன் ஜெயிலுக்கு   போய்விடுகிறான்,  அவன் சம்பளத்தையே   நம்பி   இருக்கும்   மனைவி    என்ன   செய்வாள்?  தந்தை. ஜெயிலில்    இருக்கிறார்   என்று   இங்கு.வயிறு   பசிக்காமல்   இருக்குமா?

பால், காய்கறி,   ஸ்கூல்   பீஸ்   கட்டாமல் இருக்க  முடியுமா?    எங்கு   போவது பணத்துக்கு?"   தவறு   செய்து   சிறைக்கு போகும்   மனிதர்களுக்கு   ஒரு  சிறை தண்டனை   தான்,  ஆனால்   மனைவிக்கும்,குழந்தைகளுக்கும் தினமுமே    தண்டனை   தான்,

              டீ  ,குடித்துக்   கொண்டே   யோஜிக்கிறான்,   ஜெயிலில்   வேலை செய்ததில்   கொஞ்சம்   பணம்   இருக்கிறது,   பஸ்  பிடித்து   மனைவியையும்    குழந்தைகளையும் பார்க்கப்  போகிறான்,  

     இவன்   போய்   சேரும்   பொழுது விடிகாலை   நேரம், மாமனார்   வீட்டு கதவை   தட்டுகிறான்,   கதவை   திறந்த மாமனார்   இவனை   பார்த்து   திடுக்கிடுகிறார்,   ஒன்றும்   பேசாமல் உள்ளே   போகிறார்,  காபி   போட்டு கொண்டு   இருந்த     மனைவி   ஒரு புகை   படிந்த   பழைய   ஓவியம்   போல் இருந்தாள்,  இவனை   பார்த்ததும்   ஓடி வந்தாள்,   இரண்டு   வயது   பையன் அம்மாவிடம்    இந்த   "அங்கிள்"   யாருன்னு   கேட்டான்,    தந்தையே தன்   மகனிடம்  "நான்தாண்டா   உன் அப்பா"  என்று   சொல்ல   வேண்டிய நிலை,  

         பெண்ணோ   இவன்   கிட்ட  வரவே பயந்தாள்,   இந்த   இரண்டு   வருட சிறை   தண்டனையில்   இவன்   இழந்தது    வாழ்க்கையின்   ஒரு   இனிமையான   பாகத்தை,   இனி   திரும்பி    கிடைக்காது,  

       ,மாமனாரின்   கடையில்   அவர் கூட,  இருக்க  ,ஆரம்பித்தான்,  யாராவது புது  ,ஆள்   யாருன்னு   கேட்டால்  , "  வேலைக்காக   வந்து   இருக்கிறார்"

மாப்பிள்ளை    என்று  ,சொன்னால் சிறையில்   இருந்த   விஷயம்   நாளை தெரிய   வரும்,   தெரிந்தால்   கடையில் வருமானம்   குறையும்,  மனைவி, குழந்தைகள்   வாழ்க்கையும்   பாதிக்கும்,         இன்னும்   நம்  ,சமூகம்   சிறைக்கு சென்றவர்களை     சரிசமமாக   பார்ப்பது இல்லை,

      வீட்டிலேயும்    யாரும்   பெரிதாக ஒட்டுவது   இல்லை,  எல்லோரிடமும் ஒரு   விலகல்   தெரிந்தது, யாருக்காவது தான்   இந்த   வீட்டு   ஜெயிலுக்கு   போய் விட்டு   வந்த  ,மாப்பிள்ளை    என்று தெரிந்து   விடுமோ   என்று   சின்னையன்   தினமும்   பயந்து   சாகிறான்,  

              தன்னாலே    தன்   குடும்பத்துக்கு ஒரு   கெட்ட   பெயர்   வரக்கூடாது   என்று சினைனையன்   கவலைப்படுகிறான்,

     இரு   வரப்போகும்   நாட்களில்   சிக்கல்கள்   தான்   அதிகம்   வரும்,      சினைனையன்   தீர்மானித்து   விட்டான்,   தான்   அவர்களை    விட்டு பிரிவது   தான்   தான்   செய்த   தவறுக்கு "பிராயச்சித்தம்"    ஜெயிலுக்கு   போய் வந்தவன்   என்ற   களங்கம்  ஒரு நாளும்   அழியப்   போவதில்லை, 

     இந்த   பாவ  மூட்டையை   தன்  குடும்பம்   ஏன்   வாழ்க்கை  பூரா சுமக்க   வேண்டும்?   கையில்   இருந்த பணத்தை    வைத்து   விட்டு   இரவு வீட்டை    விட்டே    போய்விடுகிறான்,

     சின்னையன்   போல்   மத்தியதர குடும்பத்தினர்   தான்   மான   அவமானத்துக்கு   பயப்படுகிறார்கள்,      மேல்மட்ட   வகுப்பினர்   சிறைக்கு போவதை   பற்றி   கவலைப்   படுவதே இல்லை,   

இந்த   ஓவியம்   திரு   ரவீந்தரன் அவர்களால்   வரைந்தது,  மிக்க   நன்றி

No comments:

Post a Comment