# ரோஜா_தினம்.
#சிறுகதை
( கஞ்சாநகரம் துங்கபாலா)
ரோஜாக் கொத்து
“ தீபக்.. நாளைக்கி வாலன்டைன்ஸ் டே.... மீட் யூ அட் த கான்டீன்...
சுஷ்மா. என் தேவதை.
நான் பால்கனியில் காற்றாட அமர்ந்து, நிறைய சிவப்பு ரோஜாக்கள் படம் போட்ட ஆர்ச்சி கார்டில், மனத்தைக் கொட்டி அழகான காதல் வரிகளில் ப்ரபோஸ் எப்படிப் பண்ணுவது என்று கற்பனையில் மிதந்தேன்.
நான் ரொம்ப ஸ்மார்ட்.. ஸ்டூடியஸ்.. சாது பையன்.. மத்யம வர்க்க தமிழ்ப் பையன்களை அப்படித்தான் பெற்றோர்கள் வளர்ப்பார்கள்.. மூன்றாவது வருடம் பி..காம் டிகிரி..
படிப்பில் ஃபோகஸ்ட்.. எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்வேன். பரிசும் வாங்கி விடுவேன். க்விஸ் போட்டிகளில் ஸ்டேட் சாம்பியன்.
ஆனால் இதெல்லாமே எனக்கு எதிரி.. மத்தவங்கள்ளாம் அரட்டை அடிக்கிறத்துக்கு.... ஊர் சுற்ற.... காஃபி டே யில் நேரம் செலவழிக்கன்னே காலேஜ் வரச்சே ....என்னை geek னு ஒதுக்கிடுவாங்க..
டீன் ஏஜு.. பொண்ணுங்களோட பழக ஆசையில்லாம இருக்குமா? ஆனா எப்படி?
நான் நார்மல் பையன் தான்.. சம்பிரதாயமான குடும்பம். அப்பா அம்மாக்கு அடங்கினவன். அவங்க எனக்கு என்ன வேணாலும் தருவாங்க.
சரி... இப்படியே போகட்டும்.. பொண்ணுங்க பேசலன்னு கொறப் படவேண்டான்னு நெனச்சு நான் பாட்டுக்கு என் அறிவு ஜீவி வாழ்வைத் தொடர்ந்த போது தான்...
வீடு, காலேஜ், ஸ்டார் மூவீஸ், படிப்பு.... போட்டி.... பரிசு... என்று போன என் ரொட்டீன் வெறுமை வாழ்க்கையில் மின்னலாக வந்தாள் சுஷ்மா.
காண்டீனில் ஒருநாள் வழக்கம்போல் தனியா பட்டாட்டா வடா, மசாலா சாய் சாப்பிடும்போது,
“ஹாய் தீபக்.... என்றாள்.. கங்க்ராட்ஸ் ஃபார் ஸ்வீப்பிங் ஆல் த ப்ரைஸஸ் இன் மல்ஹர் அன்ட் மூட் இன்டிகோ என்றாள்
மும்பையில் ஐ..ஐ..டி நடத்தும் கல்சுரல் விழா மூட் இன்டிகோ.. ஸென்ட் ஸேவியர் காலேஜ் நடத்தும் விழா மல்ஹர்.. இது இரண்டிலும பாட்டு, பேச்சு, Quiz எல்லாவற்றிலும் பரிசு வாங்குவது காலேஜுக்கே பெருமை.. அதுவும் ரஹ்மான், சிவமணி , சங்கர் மகாதேவன் போன்ற பிரபலங்கள் கையால்....
என்ன... ஒரு படி ஒசத்தியாதான் பேசுவாங்க...
ஆனா அதுவே தனிமைப் படுத்துது.
என்னைப் பிடித்து, என்னிடம் வந்து ஒரு பெண் பேசியது புது அனுபவம்.
பின் நிறையப் பேசினோம். நட்பு வளர்ந்தது. ஸீரியஸ் படம் பார்க்க அமீர் கான்.. டைம் பாஸ் படம் பார்க்க ஷாருக் கான்.. பழைய படங்கள் தான் எங்கள் ஃபேவரிட்..
அவளுக்கு பம்பாய் ஹிந்தி புரியாது.. டெல்லிப் பெண்.. குலாம் படத்தில் ஆமீர் கான் ராணி முகர்ஜியிடம் “ஏ.... க்யா போல்தி து.... ஆத்தி க்யா கண்டாலா” என்று பாடும்போது “கண்டாலா” என்றால் என்ன அர்த்தம்?என்பாள்..
அது பம்பையா மொழி.. “ ஏய்....என்ன சொல்ற.... கண்டாலா ( ஹில் ஸ்டேஷன்) வரயா என்று அர்த்தம்”..
சிரிப்பாள்..
என்னிடம் தமிழ் பேச, கொஞ்சம் கொஞ்சம் கற்றுக் கொண்டாள்..
“ என்னடா சமத்துப் பையா “ என்று சீண்டுவாள்.
அவளுக்கு என்னை மிகவும் பிடித்தது. இருவர் மனத்திலுமே ஒரு தென்றல் வீசியது.
ஒரு நாள் ப்ருத்வி தியேட்டரில் நஸீர், ஷபானா ஆஸ்மி நடித்த “துமாரி அம்ரிதா” நாடகம் போனோம். அங்கிருந்து பாந்திரா பான்ட் ஸ்டான்ட். பேல் பூரி, தஹி படாடா பூரி, பானி பூரி எல்லாம் சாப்பிட்டு விட்டு கடலுடன் நடந்தோம்.
ரோமாபுரி அரண்மனை பாணியில் ஷாருக்கான் மாளிகை. சிறிது தள்ளி தாஜ் ரீஜன்ட் ஹோட்டல்.
அந்த மாலை நோ சூரிய அஸ்தமனமும், அங்கு ஒளிர்ந்த விளக்கு வெளிச்சங்களும் கடல் காற்றும் மாஜிக் செய்த ரம்யமான சூழலில் இருவரும் நடந்த போது....
ஸல்மான் கான் வீடு... காலக்ஸி அப்பார்ட்மென்ட் எதிரே அரபிக் கடல் அலை களின் பேரிரைச்சல் நடுவே...
அவள் திடீரென்று “ ஐ லவ்யூ தீபக் “ என்றாள்..
ஸ்தம்பித்து விட்டேன். பதில் பேச முடியவில்லை.
மனத்தில் குழப்பம்.. கமிட் பண்ண பயம்..
யோசிக்க, யோசிக்க.. அவளை மணந்தால் வாழ்வு நன்றாக இருக்கும் என்ற தீர்மானமான நம்பிக்கை.... இன்று துணிந்து விட்டேன்..
அதுதான் இந்த ஆர்ச்சி கார்டு, ஹைகூ கவிதை எல்லாம்.
திடீரென்று வீட்டின் உள்ளே பெரிய ரகளை..
அப்பா தலையில் அடித்துக் கொள்ள ..அம்மா பெருங்குரலில் அழ...
“ மானம் போறதே.. இனி ஒரு ஃபங்ஷனுக்குத் தலை காட்ட முடியாதே....சொந்தங்கள்ளாம் ஏசுவாங்களே,.... இது மாதிரி ஸீரியல் வசனங்கள்..
டிங்...டிங்...
மொபைலில் மெஸேஜ்
அவன் அக்கா ஜோதி அனுப்பியிருந்தாள்...... “கூட வேலை பார்க்கும் ஸமீர் இரானியை ரெஜிஸ்டர் மாரேஜ் பண்ணிக்கப் போறேன்.. அப்பா அம்மா சம்மதிக்க மாட்டாங்க.. இருவரும் புது வேலைக்கு துபாய் போறோம்.. அப்பா அம்மாவைப் பாத்துக்கோ....”
தெளிவானேன்.... இன்னும் வாழ்வில் படித்து முன்னேறி சாதிக்க நிறைய இருக்கிறது.. முக்கியமாக அப்பா அம்மா மனம் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.. என் மனம் உடைந்தால் ஓகே..
மறுநாள் காண்டீனில் கண் நிறையக் கனவுகளுடனும், மனம் நிறைய எதிர்பார்ப்புடன் கணங்களைக் கரைத்துக் கொண்டிருந்த சுஷ்மாவிடம் ஒரு கொத்து மஞ்சள் ரோஜா மலர்களை நீட்டினேன்.
" ஹாப்பி வாலன்டைன்ஸ் டே சுஷ்மா ... "
சிகப்பு எதிர்பார்த்த இடத்தில் மஞ்சள். உடைந்தாள். விருட்டென்று எழுந்தாள். திரும்பிப் பார்க்காமல் போய் விட்டாள்.
அரும்பிய காதல் மலரு முன்னே உதிர்ந்து விட்டது.
" தீபக் .. என்ன யோசனை?" சுசீலா கையில் காப்பியுடன் வந்தாள்.
" சுஷ்மாவைப் பத்தியா? இத்தனை வருஷம் கழித்து நேத்திக்கித் தான் எங்கிட்ட இதைப் பத்தி சொன்ன...
பயம்... நான் தப்பா நெனப்பேன்னு... சரிதானே...
அவளுக்கும் உனக்கும் ஒரு சின்ன ஸ்பார்க். அவ்வளவு தான். உனக்கு என்ன வயசு அப்போ? 20 இருக்குமா? அது ஒரு ஸார்ட் ஆஃப் இன் ஃபாச்சுவேஷன்.
அதுக்கப்புறம் படிப்பு, வேலைன்னு எவ்வளவு இருக்கு?"
" அது இல்ல சுசீ. அன்னிக்கு அவ ரொம்ப நொந்து போயிட்டா. அப்புறம் நான் அவளப் பாக்கவே இல்லை. அடி மனசுல குற்ற உணர்ச்சி,"
கவலையே படாதே. நேத்து .ஃபேஸ் புக்கில கண்டு பிடிச்சுட்டேன். 2 பசங்களோட, பஞ்சாபி கணவனோட கொழு கொழுன்னு... ப்ரொஃபைல் போட்டிருக்கா பாக்கணுமா?"
வேண்டாம்மா.. வேண்டாம். என் ஸ்வீட் பெண்டாட்டி... ஹாப்பி வாலண்டைன்ஸ் டே " என்று, சிவப்பு நிற ரோஜாக் கொத்தை அவளிடம் நீட்டி அவளை அணைத்தான்.
" போதும். போதும். வினிதா காலேஜிலேர்ந்து வர நேரமாச்சு..."
" அம்மா... பாத்துட்டேனே" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் வினிதா.
என்னுரை: நேற்று ரோஜா தினம். அதற்காக வாலண்டைன்ஸ் டேக்கு ஒரு வாரம் முன்னால் அட்வான்ஸா ஒரு கதை எழுதிட்டேன்.
Lakshmi jayaram
No comments:
Post a Comment