Sunday, February 20, 2022

எண்ணப்பறவை_10

எண்ணப்பறவை_10

வெள்ளிக் கிழமை ஐந்து மணிக்கு ஐஜி கூப்பிட உள்ளே சென்றாள் அமுதா.

'ரிப்போர்ட் எந்த அளவுக்கு ரெடி ஆயிருக்கு?'

'நாளைக்கு வந்து டைப் பண்ண வேண்டியதுதான் பாக்கி, சார்.'

'பரவாயில்லையே.  டூ ஃபாஸ்ட் யூ ஆர்.  நான் கொஞ்சம் பார்க்கலாமா ரெடியானத'

இதை எதிர்பார்த்தே எடுத்து வந்திருந்தாள்.

'ஓ.  ஷ்யூர் சார்'.  காண்பித்தாள்.  பார்த்தார்.

'ரொம்ப நல்லா இருக்கு ப்ரஸன்டேஷன்.  திஸ் இஸ் ஹௌ ஐ வான்ட்டட்.  குட் ஜாப்'

'தேங்க் யூ சார்'

ஐஜி கிட்டேயே பாராட்டு.  மகிழ்ச்சியாக இருந்தது.  நேராக பரந்தாமனிடம் வந்து பகிர்ந்து கொண்டாள்.

கிட்டத்தட்ட கொடுக்கப்பட்ட வேலை முடிந்துவிட்டதால் ஆறு மணிக்கே கிளம்பி விட்டாள்.  கல்யாணி ஆஸ்பத்திரி ஸ்டாப்பிங் வந்து 12G பஸ்ஸையும் பிடித்தாகி விட்டது.

பஸ் ஏறியவுடன் அரவிந்த் பற்றிய சிந்தனை.  'வேலை மும்மரத்தில் ப்ரியாவிடம் அவன் கஷ்டம் என்ன என்று தெரிஞ்சிக்க முடியாம போச்சே.  மன்டே அவள விடப்படாது.'

பஸ் ஆழ்வார்பேட் அருகில் வந்தவுடன் பின்னாலிருந்து அவள் தலையை யாரோ தட்டிய உணர்வு.  திரும்பிப் பார்க்கும் போது அங்கு அபிராமி நின்று கொண்டிருந்தாள்.

நல்லவேளை அன்று அமுதாவிற்கு பக்கத்து சீட் தெய்வாதீனமாக காலியாக இருந்தது.  சிரித்துக் கொண்டே உட்கார்ந்தாள் அபிராமி.

'என்ன அமுதா.. ஒரே யோசனை?  அத்தை பையன் படம் ஓட்டிண்டிருக்கியாக்கும் மனசுல.  நான் இந்த பஸ்ஸுல ஏறினது கூட தெரியாம அவனோட டூயட் பாடிண்டிருக்கும்போது நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ?'

'போங்கோக்கா.  உங்களுக்கு எப்போதும் கிண்டல்தான்.  உங்க கிட்ட ஏன் மறைக்கணும் அவனப் பத்திதான் நெனச்சிண்டு வரேன்.  ஆனால் டூயட் ஸென்ஸில் இல்லை.  அவனாத்துக்கு பக்கத்துல இருக்கிற என் கலீக் அவனப் பத்தி பேசிண்டிருந்தா.  அதைத்தான் நெனச்சிண்டு வந்தேன்.'

'இன்ட்ரெஸ்டிங்.  லேஸுல அவன் உன்ன விடமாட்டான் போல இருக்கே.  என்ன சொன்னா உன்னோட கலீக் அவனப் பத்தி.  உன்னப் பத்தியே நெனச்சிண்டு பைத்தியமா அலையறானாமா?'

'போங்கோக்கா.  என்ன நடந்துதுன்னா....'

ஆஃபீஸில் அன்று லஞ்ச் டயத்தில் நடந்த்தை ஒன்று விடாமல் சொன்னாள்.  அதன் பிறகு கடைசியாக ப்ரியா வைத்த ஸஸ்பென்ஸ் வரையில் தொடர்ந்தது.

'எனக்கென்னவோ உங்க அத்தை பையன் உன்னையே சுத்தி சுத்தி வர மாதிரி இருக்கே எங்க போனாலும்...'

'அக்கா, அத்தை பையன்னே முடிவு பண்ணிட்டேளா.. ஆனாலும் நீங்க ... போங்கோக்கா.'

'ஏண்டி, ரோடுல போறவன் ஒருத்தனை நீயே அத்தை பையன்னுதானே இன்ட்ரோ பண்ணின.  இப்ப மாத்திரம் உனக்கு கோபம் வந்தா விட்டுடுவோமா?  இனிமேல் அவன் உனக்கு அத்தை பையன்தான்.'

சிரித்தனர் இருவரும்.

'அப்புறம் சொல்ல மறந்துட்டேனே.  நரசிம்மன் வந்தார்.  சொல்லிட்டேன்.  அடுத்த வாரம் உன்ன பார்த்து பேசிட்டு அவாளோட எடிட்டர் கிட்ட அழச்சிண்டு போறேன்னு சொல்லியிருக்கார்.'

'ரொம்ப தேங்க்ஸ் அக்கா.  இப்பவே ஏதாவது கதையை யோசிக்க ஆரம்பிக்கிறேன்.'

'எதுக்கு யோசனை?  உங்க அத்தை பையன வெச்சே கதை ஒண்ண ஓட்டேன்.  நல்லா வரும்.'

'அக்க்...கா.  ரொம்ப ஓவரா கிண்டல் பண்றீங்க நீங்க.  அழுதுடுவேன் போல இருக்கு.'

'ஐ அம் நாட் ஜோக்கிங் அமுதா.  இப்ப எல்லோருமே காதல் கதைகள் தான் விரும்பி படிக்கிறா.  அவனப் பத்தி  விவரங்கள உன் கலீக் மூலம் கேட்டு தெரிஞ்சிண்டு கொஞ்சம் கற்பனையை சேர்த்து முயற்சி பண்ணேன்.  ஐ திங்க் யூ கேன் ஸக்ஸீட்.'

'நீங்க சொல்றதும் நாட் எ bபேட் ஐடியா.  ஆனா...'

'ஆனா என்ன ஆனா.  ட்ரை பண்ணு அமுதா.  கண்டிப்பா கதையோட ஹீரோயின் நீயாத் தான் இருக்கணும்.'

'அக்க்க்....கா.  திரும்பவும் கிண்டல் ஆரம்பிச்சாச்சா.'

'ச்சே ச்சே.  ஐ ஆம் ஸீரியஸ்.  ஜஸ்ட் அன்னிக்கு நம் பேங்க்குல நடந்த முதல் சந்திப்பையே bபேஸா வெச்சு ஒய் டோண்ட் யூ ஸ்டார்ட்?  எனக்கென்னவோ நன்னா வரும்னுதான் தோணறது.'

சிறிது நேரம் மௌனம் அமுதாவிடம்.  யோசனை பலமாக இருந்ததால் பேச்சு இல்லை.

சில நிமிடங்கள் கழித்து, 'எஸ் அக்கா.  முயற்சிக்கிறேன்.  ரெண்டு மூணு அத்யாயம் எழுதிட்டு உங்க கிட்ட காமிக்கிறேன்.  தென் வீ வில் dடிஸைட்.'

'குட்.  ஏஏஏய்.  பேசிண்டே வந்ததுல இந்தியன் பேங்க் ஸ்டாப் வந்துடுத்து.  அடுத்த ஸ்டாப்பிங்ல நாம இறங்கணும்.'

அயோத்யா மண்டபம் ஸ்டாப்பிங்கில் அபிராமிக்கு டாட்டா காண்பித்துவிட்டு நடக்கிறாள்.  அபிராமி சொன்னதை நினைத்துக் கொண்டும் நடக்கிறாள்.

'உயிரோட்டமுள்ள கதையை எழுதணும்னா உண்மைகளைச் சேர்த்தால்தானே முடியும்.  முதலில் உண்மையை சேர்ப்போம்.  பார்ப்போமே உயிர்களும் அதில் சேருதான்னு?'

உயிர்கள் சேராதா என்ற ஆதங்கம் நம்பிக்கையோடு நடக்கிறது அவளிடம் இப்போது.

'ப்ரியாவைப் பார்க்கும்போது விடக் கூடாது அவளை.  எப்படியாவது அவனைப் பற்றி கேட்டுத் தெரிஞ்சுக்கணும்.'

தொடரும்....

No comments:

Post a Comment