Wednesday, September 2, 2020

ஸ்ரார்த்தம்

ஸ்ரார்த்தம் செய்ய வேண்டிய நேரம் &  7 முக்கிய பொருட்கள் 

பித்ருக்களுக்கு செய்யும் ச்ராத்தத்தில் முக்கியமாக இந்த ஏழு பொருட்கள் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று சொல்கிறது இந்து மத  சாஸ்திரம்.....

1. உச்சிஷ்டம் 
உச்சிஷ்டம் என்றால் எச்சில் பொருள்.
பசுமாட்டினிடம் பால் கறக்கும்போது முதலில் கன்றுக்குட்டியை பால் ஊட்ட செய்து ,பால் சுரந்தபின் கன்றை விலக்கி விட்டு மடியை அலம்பாமல் கன்றுக்குட்டியின் வாய் எச்சிலுடன் கறக்கப்படும் பசும்பால் தான் உச்சிஷ்டம் என்பது.இது பித்ருக்களுக்கு மிகவும் பிரியமானது.பசும்பால் கட்டாயம் சிராத்தத்தில் சேர்க்கவேண்டும். 

2. சிவ நிர்மால்யம்
தபஸ் செய்து பகீரதனால் ஆகாயத்திலிருந்து பூமிக்கு வரவழைக்கப்பட்ட  கங்கையானது சிவனுக்கு அபிஷேகம் செய்த ஜலமாகையால் சிவநிர்மால்யம்.
சிராத்தத்தில் ஆரம்பத்தில் கங்கா ஜலத்தால் வீடு முழுவதும் சுத்தம் செய்து  பின்னர் ச்ராத்த சமையல் செய்ய ஆரம்பிக்கலாம்.

3. வமனம்
என்றால் வாந்தி பண்ணி துப்பியது எனப்பொருள். அதாவது தேனீக்கள் பல பூக்களிலிருந்து தங்கள் வாயில் தேன் சேகரித்து கூட்டில் உமிழ்கின்றன.தேன் என்பது தேனிக்களால் துப்பப்பட்ட எச்சில் பொருள்.தேன் நம் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் ப்ரியமானது.ஆகவே தேன் சேர்த்து கொள்வதால் பித்ருக்கள் மிகவும் திருப்தி அடைகிறார்கள்.

4 . ஶ்வேத பர்ப்படம்
ஶ்வேதம் என்றால் வெண்மை, பர்ப்படம் என்றால் பட்டுதுணி ,பித்ருக்களுக்கு வெண் நிறமுடைய பட்டுதுணி மிகவும் ப்ரியம்.
ஆகவே ச்ராத்தத்தின் போது வெண்நிற பட்டு வேஷ்டி கட்டிகொள்வதும் ச்ராத்தத்தில் சாப்பிடுபவர்க்கு வெண்பட்டு தந்து அதை கட்டிக்கொண்டு சாப்பிடச்செய்வதும் பித்ருக்களுக்கு சந்தோஷத்தையும் சிராத்தம் செய்பவருக்கு நீண்ட ஆயுளையும் பெற்றுத் தரும்.


5 . தௌஹித்ர
என்றால் பேரன் ,பேத்திகள். 
யாருக்கு சிராத்தம் செய்கிறோமோ அவருடைய பெண்ணின் குழந்தைகளான பேரன் பேத்திகள், இறந்த தாத்தா பாட்டிக்கு மிகவும் பிரியமானவர்கள்.
மேலும் தௌஹித்ர என்பதற்கு வேறு பொருளும் பெரியோர்களால் கூறப்படுகிறது.அதாவது அமாவாசை திதி அன்று பசுமாட்டிற்கு நிறைய புற்கள் போட்டு சாப்பிடசெய்து மறுநாள் பிரதமை அன்று அந்த மாட்டிலிருந்து கறந்தபாலை தயிராக்கி அதை வெண்ணையாக்கி அதை நெய்யாக காய்ச்சினால் அதுவே ‘’தௌஹித்ர’’ எனப்படும் பொருள்.
அதாவது அப்போது காய்ச்சிய நெய் பித்ருக்களுக்கு மிகவும் ப்ரியமானது.

6.குதப..
குதப  என்றால் சிராத்தம் செய்யவேண்டிய நேரம்.பகல் காலை 11.30க்கு மேல் மதியம் 12.30 மணி வரையுள்ள காலமே குதப காலம்.கூடியவரை இந்த நேரத்தில் சிராத்தம் செய்தல் -முடித்தல் அதிகமான பலனை தரும். 

7.திலா
என்றால் கருப்பு நிறத்தில் உள்ள எள். இதுவும் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் சந்தோஷத்தை தரும்.

ஆகவே மேற்கூறிய

1.பசும்பால்

2.கங்கா ஜலம்

3.தேன்

4.வெண்பட்டு

5.புத்துருக்கு நெய்

6.குதப காலம்

7.கருப்பு எள்

இந்த ஏழு பொருட்கள் ச்ராத்தத்தில் சிறிதளவாவது சேர்த்து செய்வது நிறைவான பலனை தரும். 

பித்ருக்களின் ஆசியையும் பரிபூரணமாக பெறலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
சிரார்த்தம் வகைகள்...

முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிராத்தத்துக்கு பார்வணசிராத்தம் என்று பெயர். 

 ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிராத்தம் சங்கல்ப சிராத்தம் எனப்படும். 

 ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும்,சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிராத்தம் ஆம சிராத்தம் எனப்படும். 

 சிராத்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வது ஹிரண்ய சிராத்தம் எனப்படும். 

 சிராத்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம். 

இது எதுவும் முடியாதவர்கள், வீட்டின் அருகில் இருக்கும் கோவிலின் கோசாலைக்கு சென்று அங்கு  இருக்கும் பசுவுக்கு ஆறு வாழைப்பழங்கள் உணவாக கொடுத்து விட்டு தெற்கு நோக்கி வணங்க வேண்டும்.

கூடுதல் தகவலாக 

நாம் தர்ப்பணம் செய்கையில் ஆள்காட்டி விரலுக்கும்,சுக்கிரவிரல் எனப்படும் கட்டைவிரலுக்கும் இடையே சுக்கிர ரேகைகள் வழியாக கீழே விழும் தர்ப்பண நீரின் சக்தி பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல் நோக்கி எழும்புகிறது.

No comments:

Post a Comment