மறக்கக் கூடாத மஹாளய அமாவாசை ..!
மகாளயபட்ச துவக்கத்தில் பூமிக்கு வந்து தங்கும் பித்ருக்கள், மகாளயபட்ச முடிவில் அமாவாசையன்று தில (எள்) தர்ப்பணம் பெற்றுக்கொண்டு, மீண்டும் மேலுலகத்திற்கு சென்று விடுவதாக ஐதீகம்.
அவர்கள் மறுஜென்மம் எடுத்திருந்தாலும், வாரிசுதாரர் செய்யும் பிதுர்பூஜையால் அவர்களுக்கு பசித்த வேளையில் உணவு கிட்டுமென்பது விதியாகும்.
அன்றைய முன்னோர்களுக்கான வழிபாட்டினை மேற்கொள்ளும்போது, வேதவிற்பன்னர் ஒரு மந்திரம் சொல்வார். அது...
"ஏஷா நமாதா, நபிதா, நப்ராதாநபந்து
நாந்ய கோத்ரிணஹ
தே ஸர்வே திருப்தி மாயாந்தும் மயோத்
ஸ்ருஷ்டை ஹிகு சோதனஹ.'
அதாவது,
"என் தாயார், என் தந்தை, என் சகோதரர், என் உறவினர் என்ற எந்த வகையான உறவுக்கும் உட்படாத- என் கோத்திரப் பிரிவுக்குள்ளும் வராத- எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்தப் பூவுலகத்திலிருந்து போயிருக்கின்றன. எந்த விதிக்கணக்கிலோ, இயற்கையாகவோ, வியாதியாலோ, விபத்தினாலோ இந்த உலகைவிட்டுப் பிரிந்திருக்கக்கூடிய ஆத்மாக்கள் எல்லாம் நற்கதியடைய நான் பிரார்த்திக்கிறேன். மேலுலகில் எந்தவித துன்பங்களும் அனுபவிக்காமல், மீண்டும் புது உடலோடு எடுக்கும் அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். எள்ளும் தண்ணீரும் கொண்டு நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால் அந்த எல்லா ஆத்மாக்களும் திருப்தி அடையட்டும்'’
என்பதுதான் அந்த சுலோகத்தின் பொருள்.
நம் முன்னோர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நண்பர்கள், நம்முடன் வாழ்ந்து அமரர் ஆனவர்கள் அனைவருக்கும் இம்மந்திர வழிபாட்டினால் நற்கதி கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.
பொதுவாக அனைத்து அமாவாசை திதிகளிலும், அக்னி பகவானின் பத்தினியான ஸ்வாதா தேவியானவள், தர்ப்பணம் தருபவர் அளிக்கும் எள்ளையும் நீரையும் வாங்கி வானத்தில் எங்கோ உள்ள நீத்தார் உலகத்திற்கு எடுத்துச் செல்கிறாள்.
ஆனால், இந்த மகாளய பட்ச அமாவாசையில் மட்டும் எல்லா முன்னோர்களும் சூரிய சந்திர உலகிற்கு வந்துபோவதால், ஸ்வாதா தேவியால் அனைத்து முன்னோர்களையும் அங்கேயே சந்திக்கும் வாய்ப்புள்ளது.
மகாளயபட்ச அமாவாசையில் நாம் புனித நீர்நிலையில் பிதுர்பூஜை மேற்கொள்ளும் போது, வேதவிற்பன்னர் மந்திரம் கூற நாம் அளிக்கும் நீர், எள் இவற்றை முன்னோர்களிடம் எளிதில் சேர்ப்பித்துவிடுகிறாள் ஸ்வாதாதேவி.
இந்த மகாளய பட்ச புண்ணிய காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய, சிரார்த்தம் செய்ய ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள், மகான்கள் என அனைவரும் பூலோகத்திற்கு வருகிறார்கள்.
சுய ஜாதகத்தில் 5 மற்றும் 9 ம் இடங்கள் பாதிக்கப்பட்டோர் தவற விடக் கூடாத நாள் மஹாளய அமாவாசை தினம் என்பதை நினைவில் கொள்க.
-------------------------------------------------------------------------------------------------------------------------
திதி / தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும்..?
நாம் செய்யும் புண்ணிய காரியங்களே நமது வருங்கால சந்ததியரின் நல்வாழ்வின் முறையை தீர்மானிக்கிறது.
அதேதான் ஜாதகத்தில் 5 மற்றும் 9 ம் இடங்கள் சுட்டி காட்டுகின்றன..
நாம் என்ன சேர்த்து வைக்கிறோமோ அதுதான் நம் பிள்ளைகளுக்கு போய் சேரும்.
அது தலைமுறை தலைமுறையாய் உங்கள் ஜாதகத்தில் வந்து பேசும்.
பல ஜாதகங்களில் பார்த்திருக்கிறேன் இதை.
என்ன செய்தால் நம் தலைமுறையினரின் 5 மற்றும் 9 ம் இடம் சிறப்பு பெரும்..?
பட்டினியால் வருந்தும்ஏழைகளுக்கு உணவளித்தல் -- 3 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்.
புண்ணிய நதிகளில் நீராடுதல் ……..3 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்.
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ….5 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்.
அன்னதானம் செய்தல்……..5 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்.
ஏழைப்பெண்ணுக்குதிருமணம் செய்வித்தல் ……….. 5 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்.
பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது ……………..6 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்.
திருக்கோயில் புனர்நிர்மாணம் ……..7 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்.
அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தல் ……..9 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்.
பசுவின் உயிரைக் காப்பாற்றுவது / கோசாலை பராமரிப்பு ..14 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்.
முன்னோர்களுக்கு கயா ஷேத்திரத்தில் பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்.
நான் சொல்ல வருவது உங்களுக்கு புரியவில்லை என்றால் மீண்டும் முதல் வரியை வாசிக்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
அமாவாசையன்று வாசலில் ஏன் கோலம் போடக் கூடாது?
ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு திதி விசேஷமானது. அதைப்போல மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை திதி மிகவும் முக்கியமானது ஆகும்.
அமாவாசையன்று, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும் என இந்து சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
அதாவது கோலம், மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி போன்றவை பித்ருக்களின் வருகையைத் தடுப்பதாக அமையும் என்பதால் இதை அமாவாசை தினத்தன்று தவிர்க்க சொல்கிறார்கள்.
இவை பித்ருக்களுக்குப் பிடிக்காததும் கூட...
ஆகவே அமாவாசையன்று நம் வீட்டுக்கு பித்ருக்கள் வந்து செல்லும் வரை, அதாவது தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலிலோ பூஜையறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்புவதையும் தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
மஹாளயபட்சம் – ஜோதிட ரகசியம்
வாழ்ந்துமறைந்தநமது முன்னோர்களுக்கு திதி கொடுக்க புரட்டாசி மாத அமாவாசையை ஏன் பிரதானமாக கொள்கிறோம்...?
ஆவணி மாதத்தில் ஆத்மாக்காரனாகிய சூரியன் ஆட்சியாக இயங்குகிறார் என்பதுதான் முழு முதல் காரணம்...
புரட்டாசி மாதம் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்வது என்பது ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமைகளில் ஒன்று..
மஹாளய அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை காலத்தைப் பித்ரு பட்சம் என்று அழைக்கிறார்கள்.
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னிராசியில் சஞ்சாரிக்கிறார்.
கன்னி ராசிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.
நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.
நம்மையும் சேர்த்து,சூரிய மண்டலம்,நமது பக்கத்தில் இருக்கும் சில நட்சத்திரக் கூட்டங்களுடன் ஒரு மையத்தைச் சுற்றி வருகிறது.
அந்த மையத்தைப் போல பல சிறு(அகலம் 1,00,000 ஒளி ஆண்டுகள்;ஒரு ஒளி ஆண்டு என்பது ஒன்பது லட்சம் கோடி கிலோ மீட்டர்கள் தூரத்தைக் கொண்டது.
இந்த மையங்கள் ஒருங்கிணைந்து கன்னிராசியை மையமாகக் கொண்டுதான் சுற்றி வருகின்றன.
பொதுவாகவே மையம் என்பது ஒரு முக்கிய ஆதாரமாக செயல்படுகிறது.
பூமிக்கு மையம் சூரியன்!
அதுவே பூமிக்கு ஆதாரம்!!
மனித வாழ்க்கையை எடுத்துக் கொண்டால்,உடலை விட்டு பிரிந்த உயிர்,இந்த கன்னிராசி இருக்கும் மண்டலத்தில் ஒடுங்குகிறது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
எனவேதான் , கன்னிராசி இருக்கும் மண்டலத்தைப் பித்ருயானம்(பித்ருக்களின் வழி)என்பார்கள்.
இந்த கன்னிராசி தென் திசையில் இருக்கிறது.
எனவேதான் அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
அந்தத் திசையில் சூரியன் சஞ்சாரிக்கும்போது விசேஷமாகவே பித்ரு காரியம் செய்கிறோம்.
இறந்தவர்களது திதியன்று சிரார்த்தம் செய்கிறோம்.
அது அந்த ஒரு திதியில் மட்டுமே செய்யப்படுகிறது.
அப்படி இருக்க இந்த பித்ரு பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட தேய்பிறை காலம் முழுவதும் செய்யப்படுவது ஏன்?
இதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்,நாம் பித்ருக்களின் காலக்கணக்கைப் பார்க்க வேண்டும்.
சூரியனது சுழற்சியை வைத்து சூரிய வருடம் என்று இருப்பது போல,சந்திரனது சுழற்சியை வைத்து சந்திரவருடம்(சந்திரமானம்) என்பது உண்டு.
அதேபோல்,பித்ருக்களின் பித்ருவருடம் என்று இருக்கிறது.
இது சந்திரனை வைத்து உருவாகும் திதியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் விளக்கம்:
ஒரு பட்சம் = 15 நாட்கள்(வளர்பிறை அல்லது தேய்பிறை)
2 பட்சம் = ஒரு பித்ரு நாள்(நமக்கு ஒரு சந்திர மாதம்)
30 பித்ரு நாள்(60 பட்சம்)=ஒரு பித்ரு மாதம்
12 பித்ரு மாதம்(720 பட்சம்)=ஒரு பித்ரு வருடம்===இதை திதியாக மாற்றினால்,
ஒரு பித்ரு வருடம் =(720 பட்சம்,15 திதி)=10,800 திதி
ஒரு சந்திர வருடத்தில் 360 திதிகள் இருக்கவே,
10,800 திதி/360 திதி =30 வருடம்
அதாவது நம்முடைய சந்திர வருடக்கணக்கில் 30 வருடம் என்பது பித்ருக்களின் ஒரு வருடம் என்பதாகும்.
ஒருவன் 30 வருடங்களுக்கு தனது பித்ருக்களாகிய முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்தால்,பித்ருக்களின் வாழ்நாளில் ஒரு வருடத்துக்கு மட்டுமே அந்த சிரார்த்தம் கிடைத்தது என்று ஆகும்.
அவ்வளவு காலமாக ஒருவர் சிரார்த்தம் செய்வது மிக மிக மிக அபூர்வம்.
அதனால்,பித்ரு உலகமான கன்னிராசி இருக்கும் மண்டலத்துடன் சூரியன் இணையும் புரட்டாசி மாதத்தில் ஒரு முழு பட்சத்தையும்(15 நாட்கள்) பித்ருக்களுக்கு வழிபாடு செய்வதற்காக ஒதுக்கியுள்ளனர் நமது முன்னோர்கள்.
தேய்பிறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால்,அதுதான் பித்ருக்களின் பகல்காலம் ஆகும்.
அவர்கள் விழித்திருக்கும் அந்தக் காலகட்டத்தில் புரட்டாசி மாத பித்ரு பட்சத்தில் அவர்கள் உலகை நோக்கி நாம் அவர்களை வழிபடுகிறோம்.
இந்த பட்சத்தில் நாம் செய்யும் வழிபாடு,சிரார்த்தம் செய்யப்படாத அனைத்து பித்ருக்களையும் சென்றடைகிறது.
இவ்வாறு அனைத்து ஜீவன்களையும் அரவணைக்கும் விதமாக நம் இந்து முன்னோர்களால் நமக்குத் தரப்பட்டிருக்கிறது.
இதனால்தான் ஒருவன் புரட்டாசி அமாவாசையன்று அன்னதானம் செய்தால்,12 ஆண்டுகளுக்கு அன்னதானம் செய்த புண்ணியத்தை அடைகிறான் என நமது இந்து மதம் சொல்கிறது.
முறையாகவும்,சிரத்தையாகவும்,அக்கறையுடனும், எவனொருவன் பித்ரூ கடமைகளை சரியாக செய்வானோ அவனுக்கும் அவன் தலை முறைக்கும் முன்னோர்களின் பரிபூரண ஆசியை பெறுவார்கள் என்பது சத்தியம்.
அந்த ஆசியால் உங்களுடைய நீண்டகால பல பிரச்னைகளுக்கு சரியான தீர்வுகளை கிடைக்க பெறுவீர்கள்.

No comments:
Post a Comment