Wednesday, September 9, 2020

களி மண் ஸ்நானம்

"பெரியவாளுடைய பிரிஸ்கிரிப்ஷன் - களி மண் ஸ்நானம்"

(ஆயுர் வேதமா? சித்த வைத்தியமா? நேச்சர் க்யூரா?)

இவற்றையெல்லாம் கடந்த, பெரியவாளுடைய சித்த சங்கல்ப வைத்தியம்! டிவைன் க்யூர்!

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன். 

விவாகமாகி இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. அதற்குள், அந்த இளம் தம்பதிக்குத் தலையில் ஓர் இடி.

ஆமாம், நிஜமாகவே தலையில் ஆபத்து. அந்தப் பையனுக்குத் தலைக்குள் கட்டி. (TUMOR)

"ரொம்ப ஈஸி! ஆபரேஷன் செய்து கட்டியை எடுத்துடலாம்" என்று டாக்டர்கள் சுலபமாகச் சொல்லி

விட்டார்கள்.

பெண்ணுக்கு வயிற்றைக் கலக்கியது. 'என்ன ஆகுமோ?' என்ற கவலை.

தம்பதியாகப் பெரியவாளிடம் வந்தார்கள்.

தேன் நிலவு போக வேண்டியவர்கள், தேனம்பாக்கத்துக்கு வந்தார்கள்.

பெண்ணின் கண்களில் நீர் பெருகியது.

"ரொம்பக் கவலையா இருக்கு பெரியவா...கல்யாணமாகி ரெண்டு மாசம் ஆறது..பெரியவா என்ன சொன்னாலும் கேட்கிறேன்.."--பெண்.

மௌனம்.

"ஆபரேஷன்லே எனக்கு நம்பிக்கையில்லே..அதுவும், தலையிலே ஆபரேஷன் சரியாகப் படலே"-பெரியவா.

சிறு இடைவெளி, தம்பதியின் உயிர்கள், செவியிலும்,கண்களிலும் மையம் கொண்டன.

'என்ன உத்தரவு வருமோ? ஜெயிக்கப் போவது எதுவோ? தர்மமா? தருமனா?'

பெரியவாள் சொன்னார்கள்;

"காவேரிக் கரையோரமா ஒரு க்ஷேத்திரத்திற்குப் போ. ஸ்வாமி தரிசனம் செய். தினமும் காலையில்

காவேரிக் கரை களி மண்ணைத் தலையில் அப்பிக் கொண்டு அரை மணி உட்கார். அப்புறம் ஸ்நானம், ஸந்த்யா வந்தனம்,ஸ்வாமி தரிசனம். ஆசாரமான வீட்டில் தங்கணும். சுயம் பாகம் செய்து சாப்பிடணும். இப்படி ஒரு மண்டலம் - நாற்பது நாள் - இருந்தா எல்லாம் சரியாகும்."---பெரியவா.

தம்பதி பெரியவாள் கூறியதை தெய்வ வாக்காக ஏற்றுக் கொண்டார்கள்.திருச்சி அருகில் காவேரிக்கரையில் ஒரு க்ஷேத்திரத்தில் தங்கினார்கள்.களி மண் ஸ்நானம் செய்து கொண்டான் பையன்.

மண்டலம் முடிந்து, சென்னை டாக்டரிடம் போனார்கள்."ஒண்ணுமில்லை, கட்டி கரைஞ்சு போச்சு" என்று சொல்லி அனுப்பிவிட்டார் டாக்டர்.

அந்தப் பெண்மணி மறுபடியும் பெரியவாளிடம் வந்து, சந்தோஷ மிகுதியாலும் நன்றிப் பெருக்காலும் அழுது கொட்டினாள்.

"நான் என்ன பண்ணினேன்? 'வைத்யோ நாராயணோ ஹரி'தெரியுமோன்னோ? எனக்கு ஒண்ணும் தெரியாது" என்றார். 'பேஷஜாம் பிஷக்' (மருத்துவருக்கெல்லாம் மருத்துவர்)

ஆமாம், பெரியவாளுடைய பிரிஸ்கிரிப்ஷன், ஆயுர் வேதமா? சித்த வைத்தியமா? நேச்சர் க்யூரா?

இவற்றையெல்லாம் கடந்த பெரியவாளுடைய சித்த சங்கல்ப வைத்தியம்! டிவைன் க்யூர்!

No comments:

Post a Comment