பெருங்குளம் உற்சவரே மாயக்கூத்தர்...
பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 33
(சுஜாதா&வெங்கடேசன்
ஆட்டோ தாமிரபரணியின் கரைவழியே அடர்ந்த காட்டு வழியில் செல்கிறது.6-7கிமீ.சென்றதும் பெருங்குளம் என்னும் திருக்குளந்தைஅடைகிறோம்.நேரம் 11.30...
கூடச் சென்றேன் இனிஎன் கொடுக்கேன்?
கோல்வளை நெஞ்சத் தொடக்கம் எல்லாம்
பாடற் றொழிய இழந்து வைகல்
பல்வளை யார்முன் பரிசுஅ ழிந்தேன்
மாடக் கொடிமதிள் தென்குளந்தை
வண்குட பால்நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை உயர்த்த வெல்போர்
ஆழி வலவனை ஆதரித்தே''
நம்மாழ்வார் திருக்குளந்தைப் பெருமாளிடத்திலே தாம்கொண்ட ஈடுபாட்டைத் தெரிவிக்கும் இப்பாசுரம், பெண்தன்மையில் பேசும் பாசுரமாகும்.
இதன்பொருள்: ""பெரிய மாடங்களையும் அழகிய கொடிகள் கட்டப்பட்ட மதில்களையும் உடைய திருக்குளந்தை திவ்யதேசத்தில் எம்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலமாய் சேவை சாதிக்கிறார். அவரே மாயக்கூத்தன். மேலும் கருடப் பறவையை கொடியிலே கொண்டு போரிலே வெற்றி பெறும் திருச்சக்கரத்தைத் தம் வலக்கையில் கொண்டவர். அவருடன் கூடிக் கலக்க விரும்பி நான் சென்றேன், அங்கே அவர் மீது கொண்ட காதலால் என்னுடைய அழகிய வளை, மனம் முதலியவை என்னிடமிருந்து நீங்கின. அது மட்டுமா? பல்வகையான வளையல்களை உடைய இந்தப் பெண்களின் முன் என் நாணமும் நீங்கினேன். இனி நான் எதனைக் கொடுப்பேன்?''
இங்குள்ள உற்சவர் மாயக்கூத்தன் என்று திருநாமம் பெற்றுள்ளார். மூலவர் சோரநாதன் என்றழைக்கப்படுகிறார். எம்பெருமான் இங்கு கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தோடு காட்சியளிக்கிறார். இங்கு பெருமாளுக்குக் குளந்த வல்லித்தாயார் (கமலாவதி), அலுமேலுமங்கைத் தாயார் என்று இரண்டு உபயநாச்சியார்கள் எழுந்தருளி உள்ளனர்.
பெருமாள் தம் நெஞ்சத்தில் ஏற்றுக் கொண்ட கமலாவதி அவர் திருமார்பில் உறைகின்ற திருக்காட்சியை இன்றும் காணபெரிய
இத்திருத்தலத்திலும் சிற்பங்களின் பேரழகு கண்ணைக் கவர்கிறது மனதையும் சேர்த்து. பல தூண்கள் சிற்பங்களின் அழகால் நிறைந்திருந்தாலும் குறிப்பாக ஒரு தூணில் குதிரையும் யாழியும் கலந்த ஒரு மிருகத்தை வாகனமாகக் கொண்டு கல்கி அவதாரம் வாளுடன் தோற்றமளிப்பது தனித்துவமாக உள்ளது, வேறெங்கும் இல்லாத வடிவம்.
இத்திருக்கோயிலில் பல வருடங்களுக்கு முன்பாக வாசத்தடம் என்ற குளம் பிரசன்ன ஜோதிடம் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. திருக்கோயிலின் தெற்குப்புறமாக கழுநீர்தொட்டியான்என்ற சன்னதி உள்ளது. திரு மடப்பள்ளியில் இருந்து வரும் பிரசாத நீர், இவரது பாதம் வழியாகத்தான் செல்கிறது.
திருக்குளந்தை பெரிய அளவிலான குளங்கள், வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த பசுமையான பூமியாகும். இங்கு, மூலவர் ஸ்ரீனிவாச பெருமாள் நின்ற கோலத்தில் பெரிய உருவத்துடன் காட்சி தருகிறார். பொதுவாக வைணவத் தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் பெரிய பாக்கியமாகக் கருதப் படுகிறது. அதன் காரணமாகவே, இத்தல பெருமாளின் திருவடியை நன்றாக தரிசிக்க அர்த்த மண்டபத்திற்கு வெளியே பெரிய கண்ணாடி ஒன்று உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது புதுமையான ஒன்றாகும்.
சேவை மாலை 6.00 மண வரை
தொடரும்
No comments:
Post a Comment