பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 32
(சுஜாதா&வெங்கடேசன்
அடுத்து ஆட்டோ சென்ற இடம் இரட்டைத்திருப்பதி எனப்படும் திருத்தொலைவில்லி மங்கலம்...
இங்கு இரண்டு கோயில்கள் உள்ளது.இவை இரண்டும் இரட்டைத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஷேத்திரத்தில் ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகிறது. கோயில் அடர்ந்த காட்டில் மீதமுள்ள. அருகில் வீடுகள் அதிகம் இல்லை.அர்ச்சகர்கள் வரும் நேரம் அறிந்து சென்று தரிசனம் செய்வது நல்லது.நம்மாழ்வார் 11 பாசுரங்களைப் பாடியுள்ளார். நவகிரகங்களில் ராகு கேது என்ற இரு சாயாகிரகங்களுக்கு உரிய தலங்களாக விளங்குகிறது
அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில்,
உத்சவர் மாயக்கூத்தர்
தாயார் அலமேலு மங்கை நாச்சியார்
மற்றொரு கோயில்
அரவிந்த லோசனன்
செந்தாமரைக்கண்ணன்
கருந்தடங்கண்ணி நாச்சியார்
ஆத்ரேயசுப்ரபர் எனும் ரிஷி, யாகம் செய்வதற்காக இத்தலத்தில் நிலத்தை உழுத போது ஒளிரும் வில்லையும் தராசையும் கண்டு ஆச்சரியமடைந்து கையில் எடுக்க, அவை சாப விமோசனம் பெற்று ஆண், பெண்ணாக உருப்பெற்றன. குபேரனை மதிக்காததால் சாபம் பெற்றதாகக் கூறினர். இதனாலேயே இவ்வூர் துலை, வில்லி மங்கலம் எனும் பெயர் பெற்றது.
பின்னர் யாகம் நடத்தி அவிர்பாகத்தை தேவர்களுக்குத் தந்த சுப்ரரும், பெற்ற தேவர்களும் திருமாலைத் தொழுது வழிபட திருமால் காட்சியளித்தார். தேவப்பிரான் எனும் திருப்பெயரும் பெற்றார்.
காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
தொடரும்....
No comments:
Post a Comment