Monday, February 28, 2022

பருப்பு அடை

 4 வகையான பருப்புகள் சேர்த்த அருமையான பருப்பு அடை...

👉 முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் 

இட்லி அரிசி – 1 கப்,
கடலைப்பருப்பு – 1/2 கப், 
உளுத்தம்பருப்பு – 1/2 கப், 
பாசிப்பருப்பு – 1/4 கப்,
துவரம்பருப்பு – 1/4 கப்

இந்த எல்லா பொருட்களையும் போட்டு நான்கு முறை தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ளுங்கள். அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி இதோடு 6 வர மிளகாயை காம்பு எடுக்காமல் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். 

ஊறிய அரிசி பருப்பை தண்ணீரை வடித்து விட்டு, வர மிளகாய்களை எடுத்து காம்பை மட்டும் நீக்கிக் கொள்ளுங்கள். இப்போது ஊறி இருக்கும் அரிசி பருப்பு, மிளகாயையும் மிக்ஸியில் போட்டு, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரொம்பவும் தண்ணீராக அரைக்கக்கூடாது. மொழுமொழுவென அரைத்து விட்டால் அடை சுவையாக இருக்காது. அரைத்த மாவை மிக்ஸி ஜாரில் இருந்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். 

இந்த மாவில் பொடியாக நறுக்கிய

வெங்காயம் – 2 கைப்பிடி அளவு,
துருவிய கேரட் – 1 கைப்பிடி அளவு, 
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது,
கருவேப்பிலை
கொத்தமல்லி தழை – பொடியாக நறுக்கியது சிறிதளவு, 
சீரகம் – 1/2 ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், 
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், 

இந்த பொருட்களை போட்டு நன்றாக கலந்துவிட வேண்டும். 

👉 இப்போது நமக்கு அடை தட்டுவதற்கு மாவு தயாராக உள்ளது. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து விட்டு, அதில் லேசாக எண்ணெய் தடவி விட்டு ஒரு குழி கரண்டி அளவு மாவை அந்த தோசைக்கல்லில் வார்த்து, உங்களுடைய கையை வைத்து அதை லேசாக தட்டி விட மீண்டும். 

கையை தண்ணீரில் நனைத்து அல்லது எண்ணெயை தொட்டுக்கொண்டு இப்படி அடை தட்டி ஒரு மூடி போட்டு சில நிமிடங்கள் இதை அப்படியே வேகவிடுங்கள். மிதமான தீயில் அடை வெந்து வந்தால்தான் பருப்புகள் சரியான பக்குவத்தில் வெந்து சிவந்து நமக்கு கிடைக்கும். அடுப்பை வேகமாக வைக்கக்கூடாது. அடை கருகிவிடும். 

ஒரு பக்கம் சிவந்தவுடன் மீண்டும் திருப்பி போட்டு தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மீண்டும் மூடி போட்டு மிதமான தீயில் வேக வைத்து சுட சுட அடையை தேங்காய் சட்னி, புதினா சட்னியுடன் பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.

பின் குறிப்பு...

👉இந்த மாவை புளிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தேவைப்பட்டால் வெங்காயம், கேரட், இந்த மசாலாப் பொருட்களை சேர்ப்பதற்கு முன்பாகவே கொஞ்சம் மாவை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அந்த மாவை பயன்படுத்திக் கொள்ளலாம். மாவு கெட்டுப் போகாது. வெங்காயமும் மற்ற மசாலா பொருட்களும் சேர்க்காமல் அரைத்த உடனேயே, அடை மாவை ஃப்ரிட்ஜில் எடுத்து வைக்கவும்.



காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பூரி

 காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பூரி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர் – ஒன்று, 
கோதுமை மாவு – 200 கிராம், 
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, 
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், 
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை : 

காலிஃப்ளவரை சிறிய பூக்களாக நறுக்க வேண்டும். சூடான நீரில் காலிஃப்ளவரை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு, தண்ணீரை வடியவிட்டு காலிஃப்ளவர் பூக்களைத் தனியே எடுத்து வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டு பூரி மாவு போல பிசைய வேண்டும்.

காலிஃப்ளவருடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மசிக்க வேண்டும். கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாக திரட்டி நடுவே காலிஃப்ளவர் கலவையை வைத்து மடித்து மீண்டும் திரட்ட வேண்டும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து திரட்டிய பூரிகளைப் போட்டு பொரித்து எடுக்க காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பூரி தயார்.



மறக்க முடியாத மாமனிதர் : சுஜாதா

 மறக்க முடியாத மாமனிதர் : சுஜாதா

(இன்று நினைவு தினம் )

2008-ம் ஆண்டு அந்த 27-பிப்ரவரி சாதாரணமாகவே விடிந்தது. டிவியில் செய்தி பார்க்கும் போதுதான் அது சாதாரணமான நாள் இல்லை என்று புரிந்து கொள்ள முடிந்தது. நான் அவரை நேரில் சந்தித்துப் பேசியது ஒரே ஒரு முறை என்றாலும் நினைவில் இருந்து நீங்காத சந்திப்பு.

பள்ளியில் படிக்கும்போது என் நண்பன் ராமகிருஷ்ணன் என்பவன், நான் கையில் கிடைத்ததையெல்லாம் படிக்கும் ஜென்மம் என்பதால் என்னுடன் ஒரு நாள் "வெறும் காமிக்ஸ் புத்தகங்களையே படிக்கிறாயே, நாவல்கள் படிக்க மாட்டாயா?" என்று கேட்க,

"அதெல்லாம் புரியாதுடா" என்றேன் நான்.

சுஜாதா எழுதிய எழுதிய அனிதா - இளம் மனைவி ராணிமுத்துவில் வந்திருந்ததைக் கையில் வைத்திருந்தான். "சுஜாதான்னு இந்த லேடி ரொம்ப நல்லா எழுதியிருக்கு. படி" என்று கையில் கொடுக்க, உள்ளே மீசையுடன் வாத்தியார் படம். "டே, இது ஆம்பளை டா. ஆதர் பென் நேம் சுஜாதா" என்றேன். புன்னகைத்துவிட்டு நகன்றான். எது எப்படியோ, வாத்தியார் அப்போதுதான் எனக்கு அறிமுகமானார். பிறகு பிடித்த சுஜாதா பைத்தியம் இன்று வரை தீரவில்லை.

நேற்று (26th Feb) புத்தகக் கண்காட்சி சென்றபோது ஒரு அன்பர் விகடன் பதிப்பக ஸ்டாலில் நின்றபடி சுஜாதா எழுதிய "தலைமைச் செயலகம்" புத்தகத்தைத் தேட,  என் அருகே இருந்த புத்தகங்களிலிருந்து அதை நான் எடுத்துக் கொடுத்தேன். முகம் நிறைய புன்னகையுடன் நன்றி சொன்னபடி நகர்ந்தார் அவர். அதுதான் சுஜாதா புத்தகம் நம்முள் ஏற்படுத்தும் மாற்றம், பெயரைக் கேட்டவுடன் புன்னகைப்போம். வாத்தியார், ரஜினி நடித்த சிவாஜி திரைப்படத்தில் எழுதிய புகழ்பெற்ற வசனம், "பேர கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல..." என்பது அவருடைய பெயருக்கும், அவர் எழுதிய புத்தகங்களுக்கும் சாலப் பொருந்தும்.

சுஜாதா மரணத்தைப் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிடும் போது.  ஒரு பெண் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது,  சுஜாதாவிடமிருந்து வந்த பதில்," Nobody dies ; they live in memories and in the genes of  their children".

மாலைமதியில் அவருடைய "விபரீதக் கோட்பாடு" வந்தபோது கடையில் வாங்கிக்கொண்டு வரும்போது, வழியில் ஒரு மண்டபம் தென்பட,  அதில் உட்கார்ந்து கொண்டு என் நண்பன் ஒருவனுடன் சேர்ந்து, இருவரும் படிக்க ஆரம்பித்தோம். அது ஒரு கோயில் அருகே இருந்த மண்டபம் என்பதால் அருகில் இருந்த பல்வேறு பிசைக்காரர்களைக் கூட கவனிக்கவில்லை.

என் தந்தையின் நண்பர் ஒருவர் இதைப் பார்த்துவிட்டு, என் தந்தையிடம், "என்ன ஓய், பிள்ளயாண்டானோட எதாவது சண்டையா, கோச்சிண்டு போய் பிச்சைக்காராளோட ஒக்காந்திருக்கானே, " என்று உளறிவிட என் தந்தை பதறிய கதை தனி.

கடலூரில் வேலை பார்த்து வந்தபோது சென்னையில் வருடாவருடம் புத்தக விழா நடக்கும் விஷயம் தெரிந்து (அப்போது அமேஸான் / ஃப்ளிப்கார்ட் போன்றவை இல்லை) , இதற்காகவே, ஒவ்வொரு ஜனவரியும் மெனக்கெட்டு சென்னை வந்து, காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடக்கும் புத்தக விழாவில் புத்தகங்கள் வாங்குவது வழக்கம் இன்று வரை இது தொடர்கிறது.

எல்லாவித subjects ஐயும் தொடும் இவர் எழுத்துக்கு என்றுமே வயதாவதில்லை. ஆரம்பம் முதல் இது நாள் வரை சுஜாதா கோடிட்டு காட்டிய நிறைய புத்தகங்களை வாங்கியிருக்கிறேன் (கௌதம புத்தரின் தம்ம பதம், Zen and the Art of Motorcycle Maintenance என்று ஆரம்பித்து ஏராளமான புத்தகங்கள்), நிறைய படங்களைப் பார்த்திருக்கிறேன், இரண்டொருமுறை தொலை பேசியிருக்கிறேன், சில மின்னஞ்சல்கள் அனுப்பி பதிலும் பெற்றிருக்கிறேன், ஏற்கனவே குறிப்பிட்டபடி ஒரேயொரு முறை நேரில் சந்தித்துள்ளேன்.

ஒரு பேட்டியில், "எனக்கென்னமோ, உண்மையான ரசிகர்கள் கடிதம் எழுத மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது," என்று சொன்னது, என்னைப் பொறுத்தவரை உண்மைதான். இதுவரை அவர் கதைகளை விமர்சித்து ஒரு கடிதம் கூட எழுதியதில்லை.

சுஜாதா மறையவில்லை. நம்முடன் அவர் புத்தகங்கள் மூலம் வாழ்கிறார்.

சேஷாத்திர மலை

 திருப்பதிக்கு `சேஷாத்திர மலை' என்று பெயர் வந்த காரணம் ரொம்பவே சுவாரஸ்யமானது. யுகங்கள் பலவாகியும் சேஷாத்திரி மலை என்ற புகழுடன் திகழ்கின்றது,

முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் ஒரு வாதம் ஏற்பட்டது. ஒருவரைவிட மற்றவர் பலசாலி என அவ்விருவரும் வாதிட்டுக்கொண்டனர். அச்சமயத்தில் கடவுளின் திருநாமத்தை ஜபித்துக்கொண்டு நாரதர் அவ்விடம் வந்து சேர்ந்தார்.  அவர்களின் சண்டையை அவர் கேட்டு, 

'அன்பர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு சண்டை போடுகிறீர்கள். நீங்கள் இருவருமே பலசாலிகள். உங்களில் யார் மிகப் பலசாலி என்ற விஷயத்தை அறிய ஆவலானால், நான் உங்களுக்கு ஒரு உபாயம் சொல்கிறேன் கேளுங்கள்: 'ஆதிசேஷனே! நீ மேரு பர்வதத்தின் குமாரரான ஆனந்த பர்வதத்தை வலம் வருவாயாக! வாயு தேவனே! ஆதிசேஷன் வலம்கொண்ட ஆனந்தபர்வதத்தை உனது வலிமையால் அசைப்பாயாக! உன்னால் அசைக்க முடியுமானால் நீதான் பலசாலி, இல்லையேல், ஆதிசேஷன் பலசாலி” என்றார்.

நாரதர் சொன்ன இந்த யோசனை அவ்விருவர்களுக்கும் பிடித்தது. உடனே  ஆதிசேஷன் ஆனந்த பர்வதத்தை வலமாகச் சுற்றிக் கொண்டார். வாயுதேவன் தனது வலிமையையும், முழுமையையும் காட்டி அந்தப் பர்வதத்தை அசைக்க முயன்றார்; ஆயினும் அசைக்க முடியவில்லை. இரவும் பகலுமாக புயல் காற்றாக வீசிக்கொண்டிருந்தான் வாயுதேவன். ஆதிசேஷனும் விடாப்பிடியாக இருந்து பருவதத்தைப் பலமாகப் பிடித்துக்கொண்டான்.

வாயுதேவனின் வலிமை மிகவும் பயங்கரமானது. வீசிய காற்று புயலாக மாறியது. இதனால்,  எல்லா உலகங்களும் நடுங்கிவிட்டன. எல்லாப் பிராணிகளும் மிகவும் கஷ்டப்பட்டன. ஆதிசேஷனும், வாயுதேவனும் அவரவர் முயற்சியைக் கைவிடவில்லை. இவ்வாறு சில நாள்கள் இந்த பிடிவாதப் போட்டியில் கழிந்தன. ஏழு உலகங்களும் ஸ்தம்பித்துப்போயின பூமியின் இயக்கம் யாவும் நின்று போனது. மண்ணுலகின் உயிர்களெல்லாம் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாயின. 

இதைப் பார்த்து இந்திரன் முதலிய தேவர்கள் அங்கு வந்தனர். 

தேவேந்திரன் ஆதிசேஷனை நோக்கி 'சுவாமி! இது நியாயமா! பசுக்கள் சண்டையிடுவதால், இடையில் உள்ள கன்றுகள் கஷ்டப்படுவது நியாயமா? உங்கள் சண்டையால் எல்லா உலகங்களும் கஷ்டப்படுகின்றன. வாயு தேவனின் கோபத்துக்கு பிராணிகள் ஆளாக முடியுமா? ஆகையால் நீ எங்களைப் பார்த்தாவது உன் முயற்சியைக் கைவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.  

தேவர்களின் விண்ணப்பத்துக்கு இணங்கி, ஆதிசேஷன் ஆனந்த பர்வதத்தில் உள்ள தன் பிடிப்பை சிறிது தளர்த்தினான். இதுவே நல்ல தருணம் என்று எண்ணிய வாயுதேவன், ஆனந்த பர்வதத்தை மேலே தூக்கி எறிந்துவிட்டார். அங்கேயிருந்த அந்தப் பர்வதம் பூலோகத்தில் வராகக்ஷேத்திரம் எனும் இடத்தில் விழுந்தது. இப்போதிருக்கும் திருப்பதி பகுதிதான் அது. ஆதிசேஷன் மூலமாக வந்த காரணத்தால், அந்த மலைக்கு சேஷாத்திரி (சேஷன் மலை) என்ற பெயர் வந்தது.

திருப்பதி முதல் திருமலை பகுதி 3

 🌹🙏திருப்பதி முதல் 🏞திருமலை வரை...ஒரு விரிவான 🚐பயணத்தொகுப்பு

By சுஜாதா &வெங்கடேசன்

பகுதி 3

12 மணிக்கு ஶ்ரீனிவாசம்ல ரிபோர்ட் பண்ணனும். ஆனா 11 40 க்கு ரேணிகுண்டா பைபாஸ் தாண்டி எம் எஸ் ஸ்டாட்ச்யூ  வந்து ராமானுஜர் சிலை வரச்சே 11.45 ஆகி படபடன்னு வரது... பஸ்ஸ்டாண்ட் முன்னாடியே பஸ்ஸை ஸ்லோ பண்ண சொல்லி  குதிக்கறோம். மெட்ரோவோ எதோவோ bridge கட்டறான்..அந்த புழுதில இவரை இழுத்துண்டு ஶ்ரீனி வாசம் ஓட மணி 12.00.. மெடல் டிடக்டர் உள்ள நுழைஞ்சு ஓட கௌன்டர்ல செல் போனை காட்டறேன்.  அவன் பார்கோடு ஸ்கேன் பண்ணிட்டு கரெக்ட் டயம். ஒரு நிமிஷம்லேட் ஆனாலும் கான்சல்ங்கறான். 

ரெண்டாவது மாடில A 220 ஐ தேடி பிடிச்சு லக்கேஜ வைக்கறோம். பெரிய ரூம். பத்து பேர் கூட தங்கலாம். பாத்ரூம் டாய்லட் க்ளீனா இருக்கு. லேசா குழாயை அழுத்தினா தண்ணி செம ஃபாஸ்டா பாஞ்சு பக்கெட்ட தள்ளி விடறது. ஒன்னு ரெண்டு கொசு நுழையப்பாக்கறது. 

வயத்துல பசி ஆரம்பிக்க அன்னதானம் ஃபர்ஸ்ட் ஃப்ளோர்லன்னு நெனவு வந்து கீழ இறங்கறோம். போன தடவை செருப்ப தொலைச்சுட்டு இவர வெயில்ல துரத்தி வாங்கிண்டு வரச்சொன்னது நினைவு வர ஜாக்ரதையா ஜோடிய பிரிச்சு தனித்தனியா போடறோம்

சாம்பார் சாதத்துல பரங்கிக்காய் தான்..நல்லா வெந்து இருக்கு.கார தொகையல் தயிர் சாதத்துக்கும் இதுதான் தொட்டுக்க. ரூம் வந்து கொஞ்சம்ரெஸ்ட் எடுத்துண்டு நமக்கு ஏற்கனவே தெரிஞ்ச திருச்சானூர் ,கோவிந்த ராஜர் தவிர மத்த கோயில்கள் சுத்தப்போறோம்னு (சேவிக்க போறோம்னு சொல்லுங்கோன்னு மொறைக்கறேன்)அழச்சிண்டு போறார். வாசல்ல 800/- ரூபாய்க்கு எல்லா கோயிலுக்கும் கூப்பிடறான். அவன் கார்காரன். நாம ரெண்டு பேர்க்கு ஆட்டோ போதும்னு இன்னிக்கு கோதண்டராமர் ,கபில தீர்த்தம்,இஸ்கான் ,கோவிந்த ராஜர் கவர் பண்ணிட்டு நாளைக்கு மத்த கோயில்னு 350/- ஆட்டோ பேசறார். 

முதல்ல கோதண்ட ராமர் சன்னதிக்கு போறோம். 

ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி பெருமாள் ஆலயம். இவ்விடத்திலுள்ள பெருமாளை ராமாயண காலத்தில் ராமனுடன் வாழ்ந்த ஜாம்பவான் என்ற பாகவதர் ப்ரதிஷ்டை செய்ததாக தல வரலாறு சொல்றது. 

 ஆலயம் திருப்பதி நகரத்தோட  மையப் பகுதியில் இருக்கு. .இங்கு மூலவர் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தி சீதா பிராட்டியுடனும் இளைய பெருமாளான லக்ஷமண ஸ்வாமியுடனும் எழுந்தருளி இருக்கார் 

இங்கும் வைகானஸ ஆகமத்தின் படி பூஜைகள் நடந்துண்டு இருக்காம். ஆச்சார்ய ஸ்தானத்தில் விளங்கும் ஆஞ்சநேயர் ஸ்ரீ ராமனின் சந்நிதிக்கு நேர் எதிரே தனிக்கோவில் கொண்டருளியுள்ளார்.

 கோவிலைச் சுற்றி அருமையான நந்தவனம், குளு குளுவென இருக்கு..

கோயில் 10 ம் நூற்றாண்டில் சோழர் குல ராஜவம்சத்தினரால் கட்டப்பட்டதாம். . 

புராணங்களின்படி இலங்கையிலிருந்து சீதையுடன் திரும்பிய ராமன் இந்த ஸ்தலத்தில் ஓய்வெடுத்ததாக சொல்லப்படுகிறது.

 நரசிம்ம ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் விஜயநகர கோயிற்கலை அம்சங்களின் பாதிப்பை கொண்டுள்ளது

ஏகதள பாணியில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் சுவர்களில் சிம்ம உருவங்கள் பொதிக்கபட்டிருக்கு..இந்த கோயிலின் கோபுரம் வட்டவடிவில் அமைந்து உச்சியில் கலசத்துடன் காட்சியளிக்கிறது.

திருப்பதி-திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான். 

இவருடைய சந்நதியில்  காட்சி தரும் ராமபிரான் பிற தலங்களில் பார்ப்பதுபோல நிமிர்ந்து காணப்படுவதில்லை. 

தன் தலையைச் சற்றே சாய்த்தபடி அழகுக் கோலம் காட்டுகி றார். எதற்காக இந்த சாய்ந்தத் திருக்கோலம்? ...நாளை..

குறிப்புகள் 

3. வேத மலை

வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி வெங்கடாசலபதியை பூஜித்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த மலையை வேதமலை என்று அழைக்கப்படுகிறது.

வட மொழியில் நாராயணாத்ரி:

நாரணனின் நாமம் நமைக்காத்துப் பொய்யுறவு
தீருமுழி உய்க்கும் திகழ்தருமால் – பாருளீர்
கள்ளச் சகடம் கடிந்தானைப் போற்றுமினோ
உள்ளம் நிலைபேறு (உ)றற்கு.

4. கருட மலை

கருட பகவான் இங்கு எம்பெருமானை வணங்க வந்தார். அப்போது வைகுண்டத்திலிருந்து ஏழுமலையானை எடுத்து வந்தார். அதன் காரணமாக இந்த மலையை ‘கருட மலை’ என்று அழைக்கப்படுகிறது.

கருடாத்ரி:

பருந்தின் வரையுடையான் பாவனனெம் நெஞ்சில்
இருந்து நிறைந்த இயல்பில் – பொருந்தியாம்
அற்றேம் மனப்பிணிகள், உற்றேமே இன்பமெலாம்
பெற்றேரும் பெறற்கரிய பேறு.



திருப்பதி முருகன் தலமா? திருமாலின் தலமா

திருப்பதி முருகன் தலமா? திருமாலின் தலமா?’ என்பதுதான் அன்று பெரியவர் கி.வா.ஜ.விடம் கேட்ட கேள்வி.

கட்டுரையாளர்;இந்திரா சௌந்தர்ராஜன் 

நன்றி; தீபம் இதழ் & பால ஹனுமான். 

‘இரண்டுக்குமே அங்கே ஆதாரம் உண்டு’ என்றார் கி.வா.ஜ.’ 

‘எப்படி?’ என்று கேட்டார் பெரியவர். 

‘வடநாட்டார் பாலாஜி என்று அந்த ஆண்டவனை அழைக்கிறார்கள். பாலனாக இருப்பவன் முருகன் தான். அடுத்து, வெள்ளிதோறும் திருமலையில் இன்றும் வில்வத்தால் அர்ச்சனை நடக்கிறது. மேலும், மலைகளுக்கெல்லாம் தலைவன் முருகன்தான் என்பது வழக்கு. அவன் குறிஞ்சி நிலக் கடவுளல்லவா?’என்றார் கி.வா.ஜ.. ‘சரி! இதில் உன்னுடைய கருத்து என்ன?’ – என்று கேட்டார் பெரியவர். 

‘பழங்காலத்தில் அங்கே முருகன் கோயிலும், திருமால் கோயிலும் இருந்திருக்க வேண்டும். திருமால் கோயிலுக்கு சிறப்பு வரவர, முருகன் கோயில் மறைந்திருக்க வேண்டும். இதுதான் என் கருத்து’ என்றார் கி.வா.ஜ. 

ஆனால், பெரியவர் தன் கருத்தாகச் சொன்னது என்ன தெரியுமா? 

‘ஏதோ ஒரு புராணத்தில் அங்கே இரண்டு சக்திகள் இருப்பதாகப் படித்திருக்கிறேன். ஒன்று கௌமாரி; இன்னொன்று வைஷ்ணவி. அதனால்தான் அந்த கோயில் மதில்சுவரில் சிங்க வாகனம் உள்ளது! 

திருமால் ஆலயம்தான் என்றால் கருட வாகனம் இருக்கும். முருகன் கோயிலாக இருந்தால் மயில் வாகனம் இருக்கும். ஆனால், சக்திக்கு வாகனமான சிம்மம்தான் அங்கே உள்ளது. தொண்டை மண்டலத்தில், சக்தி க்ஷேத்திரத்தில் சிம்மம்தான் இருக்கும். ஒரு காலத்தில் திருப்பதி, தமிழ்நாட்டின் தொண்டை மண்டலத்தோடுதான் சேர்ந்திருந்தது. பின், அரசியல் காரணங்களால் மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில் ஆந்திராவோடு சேர்ந்து விட்டது. இரண்டு சக்திகளுக்கான கோயிலாக அது இருப்பதனால் – முருகன் கோயில் என்றும், திருமால் கோயில் என்றும் சொல்வது பொருந்துகிறது’ என்றார். 

பிறகு அங்கு இருக்கும் மடத்துச் சிப்பந்தியிடம் ‘எனக்கு திருப்பதியில் கொடுத்த பரிவட்டம் உள்ளே இருக்கிறது. அதைக் கொண்டுவா’ என்று பணித்தார். அவரும் அந்த பரிவட்ட ஆடையைக் கொண்டு வந்தார். அதை கி.வா.ஜ.விடம் கொடுத்து அளக்கச் சொன்னார். கி.வா.ஜ.வுக்கோ ஒரே பரவசம். 

ஏனென்றால், அந்த பரிவட்டம் திருப்பதி பெருமாளுக்கு சாத்தியபின் பெரியவருக்கும் சாத்தப்பட்டது. இப்படி இருவர் திருமேனியைத் தழுவியதை அவர் தழுவும்போது சிலிர்ப்பு ஏற்படத்தானே செய்யும்? 

கி.வா.ஜ.வும் அதை அளந்து பார்த்தார். சரியாக முப்பத்தி ஆறு முழங்கள் இருந்தது. இதுபோன்ற பரிவட்ட ஆடைகளை திருப்பதி தேவஸ்தானத்துக் கென்றே பிரத்யேகமாக தறிபோட்டு நெய்வது வழக்கம். இதற்கென்றே நெசவாள கிராமம் ஒன்று உள்ளது. அவர்களுக்கும் காலம் காலமாக முப்பத்தாறு முழம்தான் கணக்கு. கி.வா.ஜ.வும் முப்பத்தாறு முழம் இருப்பதைக் கூறினார். உடனேயே பெரியவர், ‘நம்மவர்களில் பெண்கள் பதினெட்டு முழம் கட்டுகிறார்கள். இரண்டு பெண்களுக்கு என்றால் முப்பத்தி ஆறு தானே?’ என்று கேட்டார். அதாவது வைஷ்ணவி, கௌமாரி என்னும் கணக்கில்… சமத்காரமான அந்த கருத்தும் கேள்வியும் கி.வா.ஜ.வுக்கு பிறகே புரிந்தது. அதேசமயம் திருமலை எப்படி திருமாலின் கோயிலாக பெரும்புகழை அடைந்தது, ஏன் சக்தி தலமாக தொடரவில்லை என்கிற கேள்வியும் எழுந்தது. பெரியவர் அதற்கும் பதிலைச் சொன்னார்: 

‘இன்றும் இரண்டு சக்திகளின் செயல்பாடுகளும் அங்கே அனுக்கிரகமாக மாறி வெளிப்பட்டபடிதான் உள்ளது. கௌமார சக்திக்கு முருகனையும், வைஷ்ண விக்கு திருமாலையும் அடிப்படையாகச் சொல்வார்கள். இதில் இருவருக்கும் மாமன் மருமகன் உறவு முறை உண்டு. அவ்வகையில் மாமனே பெரியவர் என்பதால், மருமகன் மாமனுக்குள் ஐக்கியமாகி விட்டார் எனலாம். இது ஒரு கோணம். 

அடுத்து, காத்து ரட்சிப்பதில் திருமாலே முன் நிற்பவர். ‘சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்பது வழக்கு. சித்தாந்தப்படி அவனே எல்லாமுமானவன். அவனுக்குள் எல்லாமே அடக்கம். அடுத்து, அது ஏழாவதாக உள்ள மலைமேல் உள்ள ஆலயம்! அதில் ஆறு சுடர்களில் மலர்ந்த ஆறுமுகன் அடங்கிவிடுகிறான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்

அஹோபிலம்

சகல   பாவ சாப தோஷ  நிவர்த்தி ஸ்தலம்  

அகோ பலம்   அகோபிலம்:

ஆந்திர மாநிலத்தில் உள்ள இரண்டு திவ்ய தேசங்களுள் ஒன்று இந்த அஹோபிலம். மற்றொன்று   கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் திருமலையாய்  எழுந்தருளி சேவை சாதிக்கும் திருப்பதி . அகோபிலம் என்ற இந்த  திவ்ய தேசம் ஆந்திரா மாநிலத்தில்  கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. "அஹோ' என்றால் "சிங்கம்'. "பிலம்' என்றால் "குகை'.

கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பு மலையிலுள்ள  அஹோபிலத்தில் ஒன்பது நவ கிரகங்களின் அம்சமாக ஒன்பது  நரசிம்ம மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார் பெருமாள்.

இது நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாக கருதப்படுகிறது. இங்கு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட "உக்கிர ஸ்தம்பம்' (தூண்) உள்ளது.

திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான் அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.

இங்குள்ள அகோபில மடம் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது. இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும். இந்த மடத்தின் முதல் ஜீயரான இவருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு.

அகோபிலம் என்னும் திவ்ய தேசத்தில் நரசிம்மர், அகோ பலம் என்று சிறப்பித்து சொல்லும் விதத்தில் சேவை சாதிக்கிறார். இரண்யனை சம்ஹாரம் செய்த போது, நரசிம்மரைப் பணிந்து நின்ற தேவர்கள் எல்லாரும் அகோ பலம்! அகோ பலம்! என்று சொல்லி வணங்கினர். அகோபிலம் என்பதற்கு சிங்க குகை என்பது பொருள். அகோ பலம் என்றால் ஆச்சரியம் மிக்க பலம் கொண்டவர் என்று பொருள்.

இரண்டு தளங்களாக அமைந்துள்ளது அஹோபில ஷேத்திரம். கீழ் அஹோபிலத்தில் பிரகலாத வரதர் ஆலயமும், மேல் அஹோபிலத்தில் அகோர ந்ருஸிமஹர் ஆல்யமும் அமைந்துள்ளன. மலையடிவாரம் கீழ் அஹோபிலம் என்று அழைக்கப்படுகின்றது. அடிவாரத்திலிருந்து எட்டு கி.மீ தூரத்தில் சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதி மேல் அஹோபிலம் என்று அழைப்படுகின்றது. மற்ற நவ நரசிம்மர் ஆலயங்கள் சுற்றிலும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன.

மலையேற்றம் மற்றும் நடைப்பயணம் அவசியம் என்பதால் அந்த எம்பெருமானின் அருளும் உண்மையான உடல் உறுதியும் இருந்தால் மட்டுமே நவநரசிம்மர்களையும் சேவிக்க முடியும். எனவே தான் திருமங்கை ஆழ்வார் தமது பாசுரத்தில் "தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்!" என்று பாடியுள்ளார்.

நரசிம்மர் அவதாரம் எடுத்த தூணும், நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்ட இடமும் உள்ளது. மலையடிவாரக்கோயிலின் முன்பு 85 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண் ஒன்று உள்ளது. இதை "ஜெயஸ்தம்பம்' அதாவது வெற்றித்தூண் என்கிறார்கள். இந்த தூணை பூமிக்கடியில் 30 அடி தோண்டி நிலை நிறுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். இந்த தூணின் முன்பு நாம் மனமுருகி வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

ராமபிரான் சீதையை தேடி வரும் போது இந்த தூணின் முன்பு வழிபாடு செய்ததாகவும், வழிபாடு செய்தவுடன் சீதை கிடைத்து விட்டதைப்போன்ற உணர்வு ராமனுக்கு ஏற்பட்டதாகவும் புராணங்கள் கூறுகிறது

புகழ் பெற்ற இந்த அகோபிலம் தலம் அமைந்துள்ள மலைப்பகுதி ஆதிசேஷன் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது.

இம்மலைத் தொடரின் ஒரு பக்கம் திருமலை அமைந்திருக்க, இன்னொரு பக்கம் ஸ்ரீசைலம் விளங்குகிறது.

கருடன் வழிபட்ட ஒன்பது நரசிம்ம மூர்த்தங்களும் சுயம்பு வடிவங்களே!

#அவை_வருமாறு:-

1. அகோபில நரசிம்மர்: குரு  

  உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே.

2. பார்க்கவ நரசிம்மர்: சூரியன்

மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். ராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது ராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.)

3. யோகானந்த நரசிம்மர்: சனி

மலைமீது, தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் இங்கே யோக நிலையில் அமர்ந்துள் ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர்.

4. சத்ரவத நரசிம்மர்: கேது

கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர். அரிய வகை கருங்கல்லாலான திருவடிவம்.

5. க்ரோத (வராக) நரசிம்மர்:ராகு

பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ள னர். இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயரு டைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத் தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம்.

6. கராஞ்ச (சாரங்க) நரசிம்மர்: சந்திரன்

மேல் அகோபிலத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளார். கராஞ்ச மரத்தடியில் கோவில் கொண்டு, கையில் வில்லேந்தியுள்ளதால் இப்பெயர் பெற்றார்.

7. மாலோல நரசிம்மர்: சுக்கிரன்

"மா' என்றால் லட்சுமி. "லோலன்' என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார். அகோபிலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் கொண்டுள்ளார்.

8. பாவன நரசிம்மர்: புதன்

 பவானி நதிக்கரையில் கோவில் கொண்டதால் இப்பெயர் பெற்றார். அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும்.

9. ஜ்வாலா நரசிம்மர்: செவ்வாய்

மேரு மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுவென்கின்றனர். இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.

மலையின் மேலும் கீழுமாக மொத்தம் 9 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. எனவே இதனை "நவ நரசிம்ம க்ஷேத்ரம்' என்பர்.

இந்த 9 கோயில்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

காலை முதலே கோவிலில் இருந்தால் மட்டுமே மாலைக்குள் ஒன்பது நரசிம்மர்களையும் ஒரே நாளில் தரிசிக்க முடியும் ..

மேலே அஹோபிலம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது ..அதற்கு மேல் மலையேறிதான் மூன்று நரசிம்மர்களை தரிசிக்க முடியும்.

மலையேற்றம் கொஞ்சம் கடினம் தான் போக இரண்டு மணிநேரம் வர ரெண்டு மணி நேரம் ஆகும் ..ஊன்றுகோல் அங்கே கிடைகிறது ..

மீதி நரசிம்மர்களை தரிசிக்க வண்டி வசதி உள்ளது .அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாவன நரசிம்மரை தரிசிக்க போகும் பாதை மிகவும் கடினமாக உள்ளது .வாழ்வில் மறக்க இயலாது ..  

  ஒவ்வொரு நரசிம்மரையும் தரிசிக்க தரிசிக்க அருமையான அனுபவங்களை என்னால் உணர முடிந்தது .

அவன் அருள் இருந்தால் மட்டுமே அகோபிலத்தை நம்மால் தரிசக்க இயலும் .ஆனால் வாழ்வில் ஒரு முறையேனும் தரிசக்க வேண்டிய ஈரப்பு மிக்க திவ்ய -திருத்தலம் ..

மலை அடிவாரத்தில் உங்களை அழைத்து செல்ல கைடுகள்  இருகிறார்கள்..சிறு குழுவாக சேர்ந்து ஒரு கைடு என வைத்து கொள்ளலாம் ..ஒருவர்க்கு சுமார் 500 போதுமானது ..

சென்னையில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும் . இக்கோவிலுக்கு கோயிலுக்கு ஆலகட்டா (23 கீ.மி.) மற்றும் கடப்பாவில் (70 கி.மீ) இருந்து பேருந்து வசதி உள்ளது. நந்தியால் மற்றும் கர்நூல் ரயில் நிலையங்கள் அருகில் அமைந்துள்ளன..ஒருமுறை சென்று வாருங்கள்.

அருமையாக_உள்ளது .

எண்ணப்பறவை_26

எண்ணப்பறவை_26

கஸ்மரோடு கஸ்டமராக இருந்த அமுதாவை பைக்குக்கு ஸைடு ஸ்டாண்ட் போடும்போதே கவனித்து விட்டான்.

அரை கிலோ ஊத்துக்குளி வெண்ணெயை வாங்கிக்கொண்டு சில்லறையை எண்ணிப் பார்த்து விட்டு அமுதா திரும்பும்போது ஒரு மைல்டான ஸென்ட் வாசம்.  அதே ஸென்ட்!  மனதை விட்டுப் பிரியாத அதே ஸென்ட்!! 

'ஆம் ஐ dட்ரீமிங்?'

அரவிந்தைப் பார்த்தன அமுதாவின் கண்கள்.

நம்ப முடியவில்லை அவளால்.  பிரமிப்பு சற்று நெஞ்சினில் ஒரு படபடப்போடு.  என்ன பேசுவதென்றே தெரியவில்லை.  படபடப்போ நிற்கும் என்று தோன்றவில்லை.

'ஞாபகம் இருக்காங்க என்ன?  அன்னிக்கு ஒரு நாள்.. பாஸ்புக்.. bபாங்கில...'

அவனுடைய அந்த ஆரம்பம் அவளை சற்று அமைதிப் படுத்தியது.

'நன்னா ஞாபகம் இருக்கே. எப்படி இருக்கேள்?  என்ன இங்க இப்படி இவ்வளவு தூரம்?'

'என்னோட கலீக் போஸ்டல் காலனியில இருக்கார்.  அவாத்துக்கு வந்தேன்.  வர வழியில அம்மா வெண்ணெய் வாங்கிண்டு வர சொன்னா.  அதான்.  நீங்க எப்படி இங்க?  வீடு பக்கத்துல இருக்கா?'

'ஆமாம்.  அடுத்த தெரு.  ஜெய்சங்கர் தெரு. வாங்கோளேன் ஆத்துக்கு.  வெயிட் பண்றேன்.'

'நீங்க கிளம்புங்க.  கூட்டமா இருக்கு வேற.  வெண்ணெய் வாங்கிண்டு நானே வரேன்.  கண்டிப்பா வரேன்.  ஷ்யூர்.'

'ஜெய்சங்கர் தெரு டோர் நம்பர் இருபத்தைந்து.  ஸைட் என்ட்ரென்ஸ்.  கண்டிப்பா வரணும்.'

'ஆத்துல பேரண்ட்ஸ் இருக்காங்களா?'

'அப்பாவும் அக்காவும் இருக்கா.'

ரோடில் சிந்தனையோடு சிரிக்கும் கூட்டத்தில் அவளும் சேர்ந்துவிட்டாள்.  உடல் முழுவதும் ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு.

'என் நம்பிக்கை வீண் போகல'

'குமுதாகிட்டேயும் அப்பா கிட்டேயும் எப்படி இன்ட்ரொட்யூஸ் பண்ணுவது அரவிந்தை?'

'எனக்கு தெரிஞ்சவர்?'

'என்னோட கலீக்குக்கு தெரிஞ்சவர்?'

'அபிராமி அக்காவுக்கு தெரிஞ்சவர்?'

ஏதாவது ஒன்றை சொல்லித்தானே ஆகவேண்டும்.  என்னன்னு இப்ப புரியல.  கூடவே 'அத்தை பையன்' சிரிப்பு மனதோடு.

'வீணாக நானே வம்புல மாட்டிக் கொண்டு விட்டேனோ!'

'நான் சாதாரணமாகத் தான் இன்வைட் பண்ணினேன்.  இவன் பட்டுனு ஒத்துண்டுட்டானே ஆத்துக்கு வர.'

அவனைக் கதையில் தேடிக்கொண்டிருந்தாள்.  இப்போது நிஜத்திலும் கனவைக் கொடுக்கிறானே.

ஓட்டமும் நடையும் நூறு மீட்டர்.

வாசலில் அப்பா.  'என்ன அவசரம்?  ஏன் படபடப்பு ஒரே? என்ன விஷயம்?'

'அப்பா சட்டென்று கண்டுபிடிக்கும் அளவுக்கா என்னிடம் மாற்றம்?  கொஞ்சம் என்னை அடக்கிக் கொள்ளணும்.'

'இல்லப்பா, என்னோட கலீக்குக்கு தெரிஞ்ச ஒருத்தரை பார்த்தேன் கடையில.  ஆத்துக்கு கூப்பிட்டேன்.  வரேன்னுட்டார் பட்டுனு.  அதான் கொஞ்சம் அவசரமா வந்தேன் அவர் வரதுக்குள்ள.'

'இவ்வளவு தானே.  வரட்டுமே.  வரவர் என்ன நாட்டோட பிரதம மந்திரியா என்ன?  நம்மள மாதிரி சாதாரண மனுஷர் தானே.'

'யாருடி அவர்?' குமுதா கேட்டாள்.

'ஒரு நாளைக்கு எங்க ஆஃபீஸுக்கு வந்திருந்தார்.  என்னோட கலீக் ப்ரியாவை பார்க்க.  அவ இன்ட்ரொட்யூஸ் பண்ணினா.  அப்ப கொஞ்ச நாழி என்னோடையும் பேசிண்டிருந்தார்.  நல்ல டைப்பா தெரிஞ்சார்.'

கௌரவப் பொய்தான் காதலுக்கு கை வந்த கலையாச்சே.  ஏற்கனவே பாஸ்புக் பொய்யில் ஆரம்பிச்சது தானே.

ஒரு ப்ளாஸ்டிக் ச்சேர் மற்றும் டில்லி மோடா அவன் வருவதற்குள் அறையில் தங்கள் ஸ்தானத்தை உறுதி செய்து கொண்டன.

'மேடம், மே ஐ கம் இன்?'

'வாங்கோ.  இப்பத்தான் அமுதா சொல்லிண்டிருந்தாள் நீங்க வருவேள்னு.  ஐ ஆம் அமுதாஸ் ஃபாதர், பேர் கணபதி சுந்தரம்.  உட்காருங்கோ'

'ஆம் ஐ ட்ரப்ளிங் யூ?' கேட்டுக்கொண்டே வாங்கி வந்த ஆப்பிள்களை அவரிடம் கொடுத்தான்.

'இல்ல.  நாட் அட் ஆல்.  நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்.  குமுதா, சொம்புல தூத்தம் எடுத்துண்டு வாம்மா.  அமுதா எங்கே?'

'அப்பா அவரை உட்காரச் சொல்லுங்கோ.  பேசிண்டிருங்கோ.  இதோ மூஞ்சி அலம்பிண்டு வந்துடறேன்.'

கொஞ்சம் ப்ரெஷ்ஷா இருக்கலாமேன்னு முகத்தை சோப்பு போட்டு... துண்டால் துவட்டிக் கொண்டே பாத்ரூமிலிருந்து வந்தாள் அமுதா.

கணபதி சுந்தரம் பேச்சை தொடர்ந்தார்.

'என்ன பண்றேள் உத்யோகம்?'

'இப்ப உட்லண்ட்ஸ் ஹோட்டல்ல அக்கௌண்ட்ஸ் ஸைடுல இருக்கேன்.  இன்னும் பத்து பதினைந்து நாளுல அமூல் கம்பெனியில சேரப் போறேன்.'

அப்போது குமுதா சொம்பு ஜலத்தோடு வந்து அதன் மேல் டம்ளரைக் கவிழ்த்து அவன் அருகில் வைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.  சொம்பை வைக்கும்போது சற்று அவளுக்கு இடம் அளிக்கும் வகையில் எழுந்து சற்று நகர்ந்து விட்டு பிறகு அமர்ந்தான்.  பார்வை பரிமாற்றங்களும் இருக்கத்தான் செய்தன.

'இவ பெயர் குமுதா.  மூத்த பொண்ணு.  ரெண்டு பொண்ணுங்க எனக்கு குமுதா அமுதான்னு.  இவ பொழுது போகலைன்னு ஒரு சின்ன கம்பெனிக்கு வேலைக்கு போயிண்டிருக்கா.'

பரஸ்பரப் பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.  அதற்குள் அவசர ஒப்பனையை முடித்துக் கொண்டு அமுதா சேர்ந்து கொண்டாள்.

'என்ன எங்க அப்பாகிட்ட மாட்டிண்டேளா?'

'மேடம், யூ ஆர் கிஃப்டட் ரியலி.  உங்க அப்பா ஒரு ஜெம்.  உங்க ரெண்டு பேர் மேலையும் எவ்வளவு பாசமா இருக்கார்.  என் அப்பாவும் இப்படித்தான்.  என் மேலையும் என் தங்கை மேலையும் அப்படி ஒரு அன்பு.'

'உங்களுக்கு தங்கை இருக்காளா?'

'இருந்தா...'. இப்படி சொல்லும்போதே அரவிந்த் முகத்தில் ஒரு சோகம் கப்பென்று.

'இருந்தாளா?!!  ஏன் இப்படி சொல்லறேள்?  என் கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்கோ.'

'ரெண்டு வருஷத்துக்கு முந்தி நடந்த விபத்துல என் அப்பாவும் தங்கையும் போய் சேர்ந்துட்டா.'

'என்ன் ...... ன?  அட ராமா...என்ன சார் சொல்றேள்?'

சற்று அமைதி அங்கு.

தொடரும்....

எண்ணப்பறவை_25

எண்ணப்பறவை_25

'அரவிந்த், பவானியோட சொந்தக்காரப் பொண்ணு ஒண்ணு உமான்னு சொன்னேனே ஞாபகம் இருக்கா?'

'ஞாபகம் இருக்கு.  சொல்லுங்கோ ஏக்கேண்ணா.'

'அவாள்லாம் இப்ப பத்தமடையில இல்ல.  அவ அப்பாவுக்கு திண்டிவனம் மாத்தலாயிடுத்தாம்.  அவ அப்பா ரிஜிஸ்ட்ராரா இருக்கா.  பேசிட்டோம் உங்காத்த பத்தி.  அடுத்த ஞாயித்துக் கிழமை எங்காத்துக்கு பொண்ண அழச்சிண்டு வரேன்னு சொல்லியிருக்கா.  நீ வேணா ஒண்ணு செய்யேன்.  எங்காத்துக்கு வர மாதிரி வந்து அந்த பொண்ண பார்த்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லு.  பிடிச்சிருந்தா உங்க அம்மாகிட்ட பேசறேன்.  என்ன ஸொஜ்ஜி பஜ்ஜியோட பொண்ண பார்க்க முடியாது.'

'ஏக்கேண்ணா உங்க கிட்ட பிடிச்சதே இந்த ஹாஸ்யம்தான். அது இருக்கட்டும்.  எங்க அம்மா கிட்ட இதப் பத்தி பேசட்டுமா?'

'வேணாம்.  எங்காத்துக்கு கேஷுவலா வர மாதிரி வா.  அவா கிட்டேயும் நான் நீ வரப் போற விஷயத்த சொல்ல மாட்டேன்.  டோண்ட் ஒரி.'

'இஃப் ஐ ஆம் ஓபன், மன்னி தப்பா எடுத்துக்க மாட்டாளே?'

'அவ கிட்ட கூட சொல்லப் போறதில்ல நீ வரப் போறதப் பத்தி.  நான் எப்படியோ அப்பறமா நைஸா சமாளிச்சு சொல்லிக்கிறேன்.'

'எத்தனை மணிக்கண்ணா வரணும்?'

'வாயேன் ஒரு ரெண்டு மணிக்கா.  சரியா இருக்கும்.'

'நேத்திக்கு கூட அம்மா ஒரு ஏழெட்டு ஜாதகம் வந்திருக்குன்னு சொன்னா.  மன்னியோட சொந்தக்கார பொண்ண முதல்ல பார்த்துட்டு அதெல்லாம் பார்க்கலாம்.  நீங்க தான் எனக்கு இந்த அலையன்ஸ் விஷயத்துல எல்லாம் கூட இருக்கணும் கல்யாணம் ஆகிற வரைக்கும்.'

'அதுக்கென்னடா.  என் தம்பி கல்யாணத்த முடிச்சுண்டு குஜராத் போகிற வரைக்கும் இருக்கேன்.  கவலைப் படாத.'

ஆழ் மனதில் சற்று எமோஷனலாக இருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை.

ஞாயிற்றுக் கிழமை.  நண்பனிடம் பைக் வாங்கி விட்டான்.  பஸ்ஸிலும் ட்ரெயினிலும் போனால் அந்தஸ்து என்ன ஆகிறது.

அம்மாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பியபோது மணி ஒன்று.

'ஜாக்ரதையா போடா.  பயமுறத்தரதா நெனைக்காதே.  ஏற்கனவே அனுபவ பட்டிருக்கோம்.  அது சரி, என்ன என்னிக்கும் இல்லாம இப்படி ஒரு அலங்காரம்.  ஸென்டெல்லாம் ஊரையே தூக்கறது.'

'ஏய் கிழவி.  யூத் அலங்காரத்துல கண்ணு படக்கூடாது.  சூப்பரா உனக்கு ஒரு மாட்டுப் பொண்ண பின்னாடி ஒக்காத்தி வெச்சு அழச்சிண்டு வரப் போறேன்.  என்ன, இப்ப திருப்தி தானே.'

'பார்க்கலாம்.  அந்த சாமர்த்தியமெல்லாம் உன் கிட்ட இருந்திருந்தா நான் ஏன் இவ்வளவு கவலைப் படப்போறேன்?  அலங்காரத்த பார்த்தா நீயும் அனந்துவும் திருட்டுத்தனமா சினிமா போகற மாதிரி தெரியறது.  எதுவோ... ஜாக்ரதையா போய்ட்டு வா.'

ஏக்கேண்ணா குழந்தைக்கு கிலுகிலுப்பையும் அவர்களுக்கு சாத்துக்குடி பழங்களையும் வாங்கிக் கொண்டு மாம்பலம் போஸ்டல் காலனியில் உள்ள அனந்த கிருஷ்ணன் வீடு வரும்போது கிட்டத்தட்ட மணி இரண்டை தொட்டுக் கொண்டிருந்த்து கடிகாரம்.

வாசல் திண்ணையில் நெற்றியில் பட்டை விபூதியோடு வெற்றிலை பாக்கை அரைத்துக் கொண்டு கையில் எக்ஸ்ப்ரஸ் பேப்பரை மேலையும் கீழேயும் பார்த்துக் கொண்டிருந்த நபரை கணித்து விட்டான் அவர்தான் திண்டிவனம் ரிஜிஸ்ட்ரார் என்று.

'வாடா வா.  உள்ள வா.  பவானி, இங்க பார் யார் வந்திருக்கான்னு?'

'வா அரவிந்த்.  எப்படி வந்த?'

'பைக்குல வந்தேன் மன்னி.'

'பைக்காஆஆஆ?'

அவளே அப்படி கேட்டு விட்டு அடக்கிக் கொண்டாள்.  நல்ல தருணம்.  ஏன் பழசை எல்லாம் கிளற வேண்டும்?

'குழந்தை எங்க மன்னி?'

'இப்பதான் தூங்கறான்.  எழுந்துடுவான் நீ கிளம்பறதுக்குள்ள.'

சாத்துக்குடிப்பை கை மாறுகிறது.

'மாமா, இவன் எங்காத்துக்காரரோடு வேலை பார்க்கற பையன்.  எனக்கு தம்பி மாதிரி.'

'சார் யாரு?'  அப்பாவித்தனமான கேள்வி அரவிந்திடமிருந்து.

'என் பேரு ஸ்வாமிநாதன்.  திண்டிவனத்துல ரிஜிஸ்ட்ராரா இருக்கேன்.'

'உமா.  உமா.  கொழந்த தூளிய ஈரமாக்கிட்டான்னு நெனைக்கிறேன்.  அங்க ஒரு வேஷ்டி இருக்கு பார்.  அதைக் கொண்டு வரையா?'

காரணத்தோடு தானே எல்லாம். புரிந்ததால் ஒரு நமுட்டுச் சிரிப்பு அரவிந்திடம்.

'உமா, இவர்தான் அரவிந்த்.  எங்காத்துக்காரரோடு உட்லேண்ட்ஸுல வேல பார்க்கிறார்.  கூடிய சீக்கிரம் கை நிறைய சம்பாத்யத்தோடு பெரிய வேலை கிடைக்கப் போறது.  நன்னா கிரிக்கெட் ஆடுவார்.'

புன்முறுவலோடு ஒரு அறிமுகம்.

'மன்னி, அது என்ன வார்த்தைக்கு வார்த்தை ஒரு 'ர்'.  என்னிக்கும் உங்க தம்பி நான்.'

'அதானே.  உனக்கு எதுக்குடா மரியாதை?'

'மன்னி, பழசே பெட்டர் ..'

சற்று கலகலப்பு.  ஏக்கேண்ணாவும் சேர்ந்து கொண்டார்.

'உமா, அரவிந்துக்கு காஃபி கொஞ்சம் கலக்கறையா?  சர்ரக்கரை, பால், டிகாக்‌ஷன் எல்லாம் இருக்கு.  அவன் கொஞ்சம் ஸ்ட்ராங்கா கேட்பான்.'

உமாவின் அப்பாவை அழைத்து அவரிடம் அரவிந்தை அறிமுகம் செய்து வைத்தனர்.  அவருடைய பார்வையில் சற்று வித்யாசத்தை அரவிந்த் பார்த்தான்.

'கார்த்தால பேசிண்டிருந்தேளே, அவர் தானே இவர்?'

இப்படி பொட்டென்று போட்டு உடைப்பார் என்று பவானியும் அனந்த கிருஷ்ணனும் எதிர் பார்க்கவில்லை.  நெளிந்தார்கள்.

உமா கொண்டு வந்த காஃபியை அங்கிருந்த டீப்பாயில் வைத்தாள்.  'த்தேங்க்ஸ்' ஒரு வார்த்தை.  காதில் விழுவதற்குள் உமா மீண்டும் சமையலறைக்கு சென்று விட்டாள்.

'சார், எனக்கு ஒரே பொண்ணு.  உங்க ஜாதகத்தை வாங்கிண்டிருக்கேன்.  எனக்கு எங்க ஜோஸ்யர் சொன்னாதான் மத்ததெல்லாம்.'

மீண்டும் நெளிந்தார்கள் பவானி தம்பதியினர்.

'இந்த பிராமணன் ஏன் இப்படி?' எரிச்சல் கலந்த பவானியின் மைண்ட் வாய்ஸ்.

'மன்னி, நான் கிளம்பறேன்.  அம்மா எங்கேயோ கிளம்பணும் அஞ்சு மணிக்குன்னா.  அதுக்குள்ள தாம்பரம் போகணும்.  இன்னொரு நாள் வரேன்.'

காட்டிய அவசரத்தின் காரணத்தை ஓரளவு யூகித்தாள் பவானி.

'நேத்திக்கு ரெண்டு பொண்ணு ஜாதகத்தை இவர் கிட்ட கொடுத்தனுப்பினேனே.  அம்மாகிட்ட கொடுத்திட்டியோன்னோ?'

பவானியின் பொய் அவனுக்கு புரிந்தது.  

'தம்பிக்கு ஜாதகமா குவிஞ்சிண்டு வர்ரதுன்னு உமா அப்பாவுக்கு சொல்றாங்க போல இருக்கு.'.

மனதில் அவனுக்கு தோன்றியதை பவானி புரிந்து கொள்ள ஏதுவாக ஒரு புன்னகையில் காட்டி விட்டான்.

எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான்.

'பொண்ணு பரவாயில்லை.  இருந்தாலும்...'

சிரித்துக் கொண்டே பைக்கில் பயணம்.  சட்டென்று நினைவுக்கு வந்த்து.  'அடடா, அம்மா வெண்ணெய் வாங்கிண்டு வரச் சொன்னாளே!'

சற்று ஓரம் கட்டி ஒருவரிடம் கேட்டான்.

'வெண்ணெய் வாங்கணும்னா அருணாச்சலமய்யர் கடைதான் பெஸ்ட்.  அயோத்யா மண்டபம் எதிர்ல இருக்கு.'

த்தேங்க்ஸ் சொல்லிவிட்டு வண்டியை திருப்பி அருணாசலம் ஐயர் கடைமுன் நிறுத்தினான்.

அங்கே....

தொடரும்..

Sunday, February 27, 2022

நெய் நல்லது

 நெய் சாப்பிட்டா நல்லது  

பெரும்பாலான மக்கள், நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, இரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்துடன், உணவில் நெய்யை அறவே சேர்ப்பது இல்லை.

ஆனால் ஆயுர்வேதத்தில், நெய்யினை உணவில் தினந்தோறும் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. 

நெய் ஒரு மிகச் சிறந்த போஷாக்கான, மருத்துவ குணம் வாய்ந்த உணவு. வாயு மற்றும் பித்த சம்பந்தமான நோய்களுக்கு, நெய் மிக முக்கியமான மருந்து. 

நெய்யை உணவில் சேர்த்தால் 

* நெய் எளிதில் ஜீரணமாகி விடும். சாப்பிட்டவுடன் அவை கொழுப்பாக உடலில் தங்கப்படுவதில்லை. மாறாக எனர்ஜியாக எரிக்கப்படுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.

* மாலைக்கண் மற்றும் கிட்டப் பார்வை, தூரப்பார்வை என பார்வை குறைபாடு இருப்பவர்கள் கட்டாயம் நெய்யை சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை தெளிவடையும்.

* பால், தயிர் போன்றவற்றில் ஒவ்வாமை இருப்பவர்கள் தாரளமாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். அவற்றிலுள்ல லாக்டோஸ் இல்லையே தவிர அவ்ற்றின் பண்புகள் ஒத்திருக்கும்.

* நெய்யில் நிறைய நேர்மறையான குணங்கள் இருப்பதால் அதனை சாப்பிடுவதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என ஆயுர்வேதம் கூறுகின்றது.

* மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால்? முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு. அவை மருந்துக்களின் குணங்களை செல்களின் சுவருக்குள் ஊடுருவச் செய்கிறது.

* மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

* சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே. இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

துவையல்

 சிரிக்காமல் இந்த *கதையைகடந்து போகவே முடியாது.

நான்கு வருடங்களுக்கு முன்பாக இதே நாளில் இந்த மிஸ்டர் எக்ஸ் கதையை நான் முகநூலில் பதிவிட்டதாக மார்க் சொல்கிறார்.

படித்துப் பார்த்தேன். 

2018ல்  இருந்ததை விட இப்போது 2000 நண்பர்கள் கூடுதலாக உள்ளார்கள்.

அவர்களும் படிக்கட்டும் என மீண்டும் பகிர்கிறேன்.

துவையல்

நந்து சுந்து

வாஷிங் மெஷின் ஓடிக் கொண்டிருந்தது. அது ஓடும் போது மிஸ்டர் எக்ஸ் பக்கத்திலே உட்கார்ந்திருக்க வேண்டும் என்று ஆண்டவள் கட்டளை.

சிலருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கும். இந்த வாஷிங் மெஷினுக்கு ஓட்டத்தில் நடக்கும் வியாதி. பாதி ஓடிக் கொண்டிருக்கும் போது ஸ்டாண்டிலிருந்து அதுவே இறங்கும். பின்னர் செக்கு மாடு மாதிரி ஒயர் அனுமதிக்கும் தூரத்திற்கு சுற்றிச் சுற்றி வரும்.  உள்ளே துணிக்குப் பதிலாக கடலையைப் போட்டிருந்தால் செக்கு எண்ணெய் என்று நோட்டீஸ் அடித்து அநியாய விலைக்கு விற்றிருக்கலாம்.

 சர்வீஸ் இஞ்னீயர் ஒரு தடவை வந்து பார்த்தார்.

“டிரம்முக்கு வயசாயிடுச்சு..பியரிங் போயிடுச்சு..அதான் சத்தம் போடுது”

“அப்படியே என் பொண்டாட்டிக்கும் பியரிங் போயிடுச்சான்னு பாருங்களேன்...அவ போடற சத்தத்துல  என் ஹியரிங்கே போயிடுச்சு”

“மெஷின்ல புது டிரம், பியரிங் ரெண்டும் போடனும்.  மொத்தம் ஆறாயிரம் ரூபா ஆகும்”

கேவலம் ஒரு டிரம்முக்கு ஆறாயிரமா? மனசு கேட்கவில்லை.

எனவே cheer girls மாதிரி மெஷின் குதித்தால் குதிக்கட்டும் என்று விட்டு விட்டார். ஒரே வித்தியாசம் வாஷிங் மெஷின் துணியோடு குதிக்கும்.

மெஷின் ஓடிக் கொண்டிருந்தது.  திருக்கடையூரில் மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை  கட்டிப் பிடித்த மாதிரி அதை கெட்டியாக பிடித்து கொண்டு இருந்தார் மிஸ்டர் எக்ஸ். இல்லாவிட்டால் அது தெருக்கோடிக்கு ஓடி விடும்.

ஓடிக் கொண்டிருந்த மெஷினில் திடீரென ஒரு பெரிய சப்தம் கேட்டது. கிங்காங் காலால் தரையை மிதித்தது போல ஒரு சத்தம். பிறகு மெஷின் பொசுக் என நின்று போனது. பியரிங் பிய்த்துக் கொண்டு போயிருக்க வேண்டும். கிச்சனிலிருந்து தூக்கி எறியப்பட்ட டம்ளர் மாதிரி டிரம்மில் ஒடுக்கு விழுந்திருந்தது.

“ஐயோ..மெஷின் புட்டுகிச்சு” என்று கத்தினார் மிஸ்டர் எக்ஸ்.

“சரி..சரி. சவுண்ட் விடறதை நிறுத்திட்டு   மெஷின்லேந்து துணி எல்லாம் வெளில எடுங்க”

“எடுத்து?”

“பிழிஞ்சு அலசுங்க”

வடாம் பிழியச் சொன்னாள்..பிழிந்தார்...நடு நடுவில் கொஞ்சம் மாவு எடுத்து வாயில் போட்டுக் கொள்ளலாம் என்ற ஊக்க போனஸ் காரணமாக. இப்போது துணியைப் பிழியச்சொல்கிறாளே... வாயில் புடவையை  உருட்டி வாயிலா போட்டுக் கொள்ள முடியும்?

“ஏன் நீ அலசக் கூடாதா?”

“எனக்குத் தான் டென்னிஸ் எல்போ…முழங்கை வலின்னு சொல்லியிருக்கேனே”

“நீ விட்டா செஸ் விளையாடறப்ப செஸ் எல்போ வந்ததுன்னு கூட சொல்லி ஏமாத்துவே....உன்னைப் பத்தித் தெரியாதா?”

“இப்போ எடுத்து அலச முடியுமா முடியாதா?..இல்லேன்னா நாளைக்கு போட்டுக்க உங்களுக்கு பனியன் இல்லே”

கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி அவருக்கு பனியன். பதினைந்து மண்டலமாக  ஒரே பனியனைத் தான் போட்டுக் கொண்டிருக்கிரார். ஓட்டை ஓட்டையாக அது பனியன் ரவா தோசை மாதிரி இருந்தது. இப்போது இந்த சனியன் அந்த ஓட்டை பனியனிலேயே கை நுழைக்கப் பார்க்கிறதே?

“நான்..இது வரைக்கும் துணி அலசினதே இல்லையே..எனக்கு அனுபவமே கிடையாதே....நீ ஒரு தடவை எனக்குக் காட்டு. அனுபவம் புதுமை...உன்னிடம் கண்டேன்னு ஒரு தடவை பாத்துக்கறேன்..”

“இதுக்கெல்லாமா உங்களுக்கு டெமோ வேணும்”

“ஆமா.."

மிஸ்டர் எக்ஸ் வாஷிங்  மெஷின் கதவைத் திறந்தார். துணிகள் எல்லாம் TMT முறுக்குக் கம்பிகள் மாதிரி முறுக்கிக் கொண்டு நின்றன.

முதலில் ஒரு துணியைப் பிடித்து இழுத்தார். வடிவேலு கூடவே  நாலு காமெடியன்கள் வருவது மாதிரி  நாலு துணிகள் கூடவே வந்தன.

‘சேர்ந்தே இருப்பது வாஷிங் மெஷின் துணிகள்..சேராமல் இருப்பது வெண்பொங்கலும்  உப்பும்’ என்று காதில் திருவிளையாடல் வசனம் கேட்டது.

முதலில் சிறிய துணிகளை எல்லாம் எடுத்தார். பிறகு எக்ஸெல்லின் புடவையைப் பிடித்து இழுத்தார். துச்சாதனன் பிடித்து இழுத்த திரெளபதி புடவை பிடித்து மாதிரி அது வந்து கொண்டே இருந்தது.

“இது ஆறு கஜம் புடவையா..இல்லே நூறு கஜம் புடவையா?..பி.சி.சர்க்கார் மேஜிக் காட்டற மாதிரி வந்துகிட்டே இருக்கு...பூமி சூரியனைச் சுத்த இருபத்தி நாலு மணி நேரம் ஆகுதுன்னா இந்த புடவை உன்னை சுத்தி வர நாப்பத்தெட்டு மணி நேரம் ஆகும் போல இருக்கே..”

“இந்த கலாட்டா எல்லாம் வேணாம்...ஒரு துணி விடாம வெளில எடுங்க..”

துணிந்த பின் கையே ஈரம் கொள்ளாதே என்று பாடியும் கையெல்லாம் ஈரமானது.

சில துணிகள் எக்ஸெல்லின் ஜாக்கெட் ஹூக்கில் மாட்டிக் கொண்டு ஹூக்கமது கை விடேல் என்று பிரியாமல்  அடம் பிடித்தன.

“இந்த ஹூக்லேந்து  பிரிக்கற வேலையாவது நீ செய்யலாமில்லே..”

“ஹூக்கும்...சரி..நகருங்க...” என்று அவைகளைப் பிரித்துக் கொடுத்தார் எக்ஸெல். 

பிறகு மிஸ்டர் எக்ஸ் மெஷினிலிருந்து வேட்டியை வெளியே எடுத்தார். அது யானைக்கு கொடுக்கும் சோற்று உருண்டை  மாதிரி உருளையாக இருந்தது.

அதை வைத்துக்க் கொண்டு கொஞ்ச நேரம் சுற்றி சுற்றிப் பார்த்தார். அதன் சுற்றுச் சூழல் சரியாக இல்லை. ஆரம்பமும் முடிவும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

அவ்வளவு பெரிய உருண்டையை கிரிக்கெட் பந்தாக உபயோகித்து போலிங் போட்டால் புஜாரா எப்படியும் இரண்டு ரன்னாவது அடித்து விடுவார் என்று தோன்றியது.

கிழே சப்பணம் போட்டு அமர்ந்தார். சிக்கு விழுந்த இயர் போனை பிரித்தெடுக்கும் பருவப் பெண் போல பரிவுடன் பிரித்தெடுத்தார்.

கொஞ்ச நேரத்தில் வேட்டியின் சிக்கை எடுத்து விட்டார். பாதி தாத்தாக்கள் இப்போதெல்லாம் ஏன் அரை டிராயர் போடுகிறார்கள் என்ற ரகசியம் இப்போது புரிந்தது அவருக்கு.

வெளியில் எடுத்த துணிகளை எல்லாம் ஒரு பக்கெட்டில் போட்டார்.

“இப்போ என்ன பண்ணனும்?”

“எல்லாத்தையும் புதுத் தண்ணில அலசனும்....துணில  சோப் எல்லாம் அப்படியே இருக்கும்...”

சோப்பன சுந்தரி சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று பாத் ரூமுக்கு எடுத்துச் சென்று பக்கெட்டில் தண்னீர் பிடித்தார்.

ஆனால் அவருக்கு அலசத் தான் தெரியவில்லை.

துணிகளை முறுக்கிப் பிழிய முனைந்தார். பாகப் பிரிவினை சிவாஜி மாதிரி முழங்கை முறுக்கிக் கொண்டதே தவிர துணி முறுக்கிக் கொள்ளவில்லை.

“ஏ சிறுக்கி...இங்கே வந்து பாரு..முறுக்க வரல்லே..நீயே முறுக்கேன்”

“என்னால முடியாதுங்க..”

அந்த முறுக்கு மறுத்தவள் மேல் கோபம் கோபமாக வந்தது.

“இங்கே பாருங்க...ஒரு கை ஆண்டி க்ளாக் வைஸ்,… இன்னொரு கை க்ளாக் வைஸ்..அப்போத்தான் துணி பிழிய வரும்” என்றார் எக்ஸெல்.

“அதெல்லாம் வேனாம்...இங்கே பாரு ஒரு ஸைட் ஆண்டி..இன்னொரு சைட் அங்கிள்..நீ வந்து ஒரு கை பிடி..”

“எனக்கு டென்னிஸ் எல்போ”

“எப்போப் பாரு டென்னிஸ் எல்போன்னு தபோ தபோன்னு அடிச்சுக்கறே...ரெண்டு கையிலயுமா டென்னிஸ் எல்போ..ஒரே நேரத்துல விம்பிள்டனும் ஃப்ரெஞ் ஓபனுமா ஆடறே?..ஒரு கை நல்லா இருக்கு இல்லே...அந்த  கையால பிடி”

எக்ஸெல் வேண்டா வெறுப்பாக ஒரு கையில் பிடித்துக் கொண்டார். மிஸ்டர் எக்ஸ் முதலில் புடவையைப் பிடித்துத் திருகினார். டீக்கடையில் பரோட்டாவுக்கு மாவு இழுத்து பிசைந்து சுற்றிப் போட்டது போல பிறகு அதை தூக்கி பக்கெட்டில் கடாசினார்.

“தலைகாணி உறை எல்லாம் ஏன் துவைக்கப் போட்டே?”

“அது என் நைட்டிங்க..”

“அதானே பாத்தேன்..தலைகாணி உறைக்கு எப்படிடா கை முளைச்சதுன்னு கன்ப்யூஸ் ஆயிட்டேன்”

“அந்த டெர்ரி டவலை நல்லாப் பிழிங்க”

அந்த டெர்ரி டவல் ஏழு கிலோ எடை இருக்கும் போல இருந்தது. நியூட்டன் கண்டுபிடித்த centre of gravity முழுக்க அந்த டவலில் குடியேறி கீழே கார் பார்க்கிங்கை நோக்கி பாரம் இழுத்தது. 

“என்னோட நாலு கர்சீப் துவைக்கப் போட்டிருந்தேனே..எங்கே காணோம்?” என்றார் எக்ஸெல்.

“பஜ்ஜியை அமுக்கின நியூஸ் பேப்பர் மாதிரி ஒரே எண்ணைக் கறையா இருந்ததே அதுவா?...போனாப் போகட்டும்”

“என் கர்சீப்ன்னா அவ்வளவு சீப்பா போயிடுச்சா..மெஷின்லயே விட்டுட்டு வந்திருப்பீங்க”

மெஷினுக்குள் போய்ப் பார்த்தார். ஒன்றும் தெரியவில்லை.

“மெஷின் டிரம்ல கைய தடவிப் பாருங்க”

டிரம்மைத் தடவிப் பார்த்தார். தந்தூர் அடுப்பில் ரொட்டியை ஒட்டின மாதிரி கர்சீப் டிரம் சுவற்றில் ஒட்டிக் கொண்டிருந்தது.

“டிரம்ல இருக்கற ஓட்டை எல்லாம் பாத்துட்டு  உன் மூஞ்சின்னு நினைச்சு கர்சீப் போய் ஒட்டிகிச்சோ?”

“உங்களுக்கு திமிர் அதிகமாயிடுச்சு...சீக்கிரமா நீலம் போடுங்க..”

“அதெல்லாம் வேணாம்...நீ இண்டர்வியூவுக்கு நிமிர்ந்த நடையோட போகவாப் போறே?”

“அக்கம் பக்கம் இருக்கறவங்க எல்லாம் உங்க பனியன் கலர் பாத்து சிரிக்கறாங்க... கிச்சன் மேடை துடைக்கற துணி மாதிரி இருக்கு”

உஜாலா பாட்டிலை எடுத்தார். 

“அரை பக்கெட் தண்ணீல பத்து சொட்டு நீலம் ஊத்துங்க”

மிஸ்டர் எக்ஸ் ஊற்றினார்.

“ஐயோ..தெரியாம கவுண்டிங் மிஸ் பண்ணிட்டேன்.....சொட்டு எண்ணிக்கை தப்பாயிடுச்சு...இன்னொரு தடவை ரீ கவுண்டிங் பண்ணிகிட்டே  ஊத்தட்டுமா?”

“வேணாம்..உங்க பனியன் எல்லாம் ஊதாக் கலர் ஆயிடும்..ஊதாக்கலரு பனியன்.. உனக்கு யாரு அப்பன்னு பசங்க வந்து க்ரூப் டான்ஸ் ஆடிடுவாங்க...இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்தி அட்ஜஸ்ட் பண்ணுங்க”

நீலம் போட்டு விட்டு துணிகளைக் காயப் போட்டார்.

“ஐயோ..இடுப்பு கழண்டு போயிடுச்சு....நாளைலேந்து உன் பாவாடை ரவிக்கை எல்லாம் பெட்ரோல், டீசல் எந்த  வாஷ் வேணும்னாலும் போட்டுக்கோ..எவ்வளவு செலவானாலும் பரவாயில்லே..”

“இதுக்கே சலிச்சுகிட்டா எப்படி? நாளைக்கு பெட்ஷீட் ஜமக்காளம் எல்லாம் துவைக்கப்போறோம்” என்று சிரித்தார் எக்ஸெல்.

“அடிப்பாவி...உனக்கு எத்தனை எகத்தாளம் இருந்தா ஜமக்காளம் துவைக்கனும்னு சொல்லுவே..நான் இப்பவே எங்க அப்பா வீட்டுக்குப் போறேன்”

“நாளைக்கு நீங்க முழுக்க முழுக்க கையால துணி துவைக்கறீங்க”

“மாட்டேன்” என்று போய் சோபாவில் உட்கார்ந்தார் மிஸ்டர் எக்ஸ்.

திடீரென அவர் போனில் ஒரு மெஸ்ஸெஜ் வந்தது.

இரண்டு வாரம் முன்பு அவர் வழக்கமாக பார்க்கும் டி.வி சீரியல் பற்றி அந்த சேனல் ஒரு பரிசுக் கேள்வி கேட்டிருந்தது.

“இன்றைய எபிசோடில் கதாநாயகி போகும் ஆட்டோவை வில்லனின் டாடா சுமோ எவ்வளவு நேரம் துரத்திக் கொண்டு போனது” என்பது  தான் கேள்வி.

“முப்பது நிமிடங்கள்” என்று மிஸ்டர் எக்ஸ் சரியான விடையை அனுப்பியிருந்தார்.

அந்த சரியான விடைக்கு முதல் பரிசு கிடைத்திருந்தது.

“உங்களுக்கு ஒரு புது வாஷிங் மெஷின் பரிசு விழுந்துள்ளது. நாளை சேனல் அலுவலகம் வந்து வாங்கிச் செல்லவும்” என்று இருந்தது அந்த மெஸ்ஸேஜ்.


கடுக்காய் பொடி: சர்வ ரோக நிவராணி:

 கடுக்காய் பொடி: சர்வ ரோக நிவராணி:

நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது. நமது உடலை வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. கடுக்காய் மரம் 4000 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது புராணங்களிலும் இம்மரத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாயகம் இந்தியா தான்.

தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும் போது ஒரு துளி அமிர்தம் சிந்தியது. அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணங்கள் தெரிவிக்கின்றன.

கடுக்காய் பொடியின் பயன்கள்:-

(1) இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

(2) பிராண வாயு அதிகரிக்கிறது.

(3) வாய் மற்றும்குடல் புண்களை ஆற்றும்

(4) இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 300 மடங்கு அதிகமாகிறது. ( 300% ஆக்சிஜன் = 2 மணி நேரம் பிராணயாமம்)

(5) மலசிக்கலை நீங்குகிறது.

(6) இது ஒட்டு மொத்த வயிற்றயுமே சுத்தம் செய்கிறது.

(7) இளமையாக வைத்திருக்கும்.

(8) வாழ்நாளை அதிகரிக்கிறது.

(9) வாய் துர்நாற்றம் அகலும்.

(10) எதிர்மறையான எண்ண பதிவுகளை அகற்றும்.

எடுத்துக் கொள்ளும் முறை:-

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் 1 ஸ்பூன் கடுக்காய் பொடியுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குடித்து வர வேண்டும்.

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே."

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாகும். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள்.

எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில்  கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது.

நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி  வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம்.

 மனிதன் பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம், நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தன்மையால் ஆனவன். மனிதன் குழந்தையாய்ப் பிறந்து நிலத்தில் உழல்கிறான். உணவுப் பொருட்களில் நீரைச் சேர்த்து, நெருப்பிட்டு சுவையாய் அருந்தி, இதமாய் வருடிச் செல்லும் காற்றை சுவாசிக்கிறான். சந்தோஷமான வாழ்க்கையில் அவன் தன்னை மறந்த நிலையில் ஆகாயத்தில் ஆனந்தமாய்ப் பறக்கிறான்.

பஞ்சபூதங்கள் ஒரு மனிதனை அரவ ணைத்துச் சென்றால் அவன் வாழ்கிறான். இல்லையெனில் வீழ்கிறான். ஒருவனு டைய உயிர் நீரோட்டம் போன்றது. உயிரற்ற உடலை மண்ணில் புதைப் பதும் நெருப்பில் எரிப்பதும் நிகழ்கிறது. உயிரானது காற்றில் கலந்து ஆகாயத்தில் ஒடுங்கி விடுகிறது.

உடலை வைத்துத்தான் இந்த உலகத்தில் நமக்கு இருப்பிடம். இதை எல்லாரும் உணர வேண்டும். ஒருவரின் லட்சியங்கள் எவ்வளவு உயர்ந்த தாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உடல்நலம் ஒத்துழைக்க வில்லையென்றால் பாதிக்கிணறு தாண்டிய கதையாகிவிடும். உடலைப்பற்றி பின்வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.

"கூறுவேன் தேகமது என்னவென்றால்
குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.'

உடல் என்பது, எலும்புகளைத் தூண்போல நாட்டி வைத்து, அவற்றின் இருப்பிடம் மாறி விடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, அவற்றுக்கு இடையில் தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, தோலால் மூடி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை அடக்கி உடல் என்ற உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறதாம்.

இன்றைய நவீன மருத்துவம் மனித உடம்பை அதன் செயலின் பொருட்டு பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து வகைப்படுத்தியுள் ளது. நவீன மருத்துவம் தேகத்தின் அடிப்படை யாகக் கருதும் எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், தசை மண்டலம், மூச்சு மண்டலம் ஆகிய ஐந்து மண்டலங்களும் சேர்ந்ததுதான் நம்முடைய தேகம் என்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் தம் மதிநுட்பத்தால் மேற் கண்ட பாடல் மூலம் நமக்குத் தெரியப்படுத்தி உள்ளார்கள்.

எனவே, விஞ்ஞானம் விண்ணை முட்டி அதற்கு மேலும் வளரலாம். ஆனால் விஞ்ஞானம் ஒருக்காலும் சித்தர்களின் ஞானத்திற்கு ஈடாகாது. ஏன்?

எப்படி என்று எப்போதும் கேள்விகளையே எழுப்பிக் கொண்டிருந்தால் கடைசியில் குழப்பம்தான் மிஞ்சும். சில நேரங்களில் சித்தர்களின் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் உயர அதுவே வழியாகும்.

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைதல்தான்.

இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் (நெருப்பு) பித்த நோய்களும், காற்றினால் (வாயு) வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

பிணியுடையவனே மனிதன். தனக்கு வரும் பிணியை மதிநுட்பம், மன திடம் போன்றவற்றால் போக்கிக் கொள்வதே சாமர்த்தியம்.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய சித்தர்களைச் சரணடைவதே உத்தமம். வானத்தை முட்டும் கட்டிடங்களும் குளிரூட்டப் பட்ட மருத்துவமனைகளும் நுனிநாக்கு ஆங்கிலமும் ஒருபோதும் நோயை முழுமையாய் விரட்டிவிடாது. நமக்குநாமே மருத்துவனாகி, நமது உடம்பை நாமே பகுத்துப் பார்க்கும் மதிநுட்பத்தை நாம் பெற வேண்டும்.

மானுட உடலைப் பீடிக்கும் நோய்கள் மொத்தம் 4448 ஆகும். அதில் மிகவும் கடுமை யான நோய்கள் 448 என திருமூலர் குறிப்பிடுகிறார்.

கடுமையான நோய்கள் தேகத்தைத் தாக்கினால், விரைவில் நலம் பெற

சிவபெருமானை வேண்டுங்கள் என்று

திருமூலர் கூறுகிறார்.

உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி

மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை 

 குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

துவர்ப்புக்கும் வாயுவுக்கும் ஆகாது. ஆனால் வாழைப்பூவை கடலைப்பருப்பு சேர்த்துத்தான் பொரியல் செய்து சாப்பிடுகிறோம்.

கடலைப்பருப்பு வாயுப் பதார்த்தம். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காயை மருந்தாக்குவது எப்படி?

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:-

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடை ப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது. பின் வரும் சித்தர்  பாடலைக் கவனியுங்கள்.

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே."

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தென்னாட்டவருக்கு திரிபலா:--

திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம்.

உடல் வலிமை பெற:--

நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம்- இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை- இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும்.

பல் நோய்கள் தீர:--

கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.

மூல எரிச்சல் தீர:--

கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும். எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில்.கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது.

 தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? இருக்கிறது என்கிறார்கள் சித்தர்கள். கடுக்காய்தான் அது. அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர்.

மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காய். எண்ண முடியாத மருத்துவ குணங்கள் கொண்டது. இதைத் தேடி ஏழு கடல், ஏழு மலை தாண்டி எல்லாம் செல்ல வேண்டியதே இல்லை. எல்லா நாட்டு மருந்துக்கடைகளிலும் குறைந்த விலைக்கு கிடைக்கும் மூலிகைச்சரக்கு இது. ஒவ்வொரு வீட்டிலும் உப்பு சர்க்கரை மாதிரி வாங்கி வைத்திருக்க வேண்டிய பொருளும்கூட.

கடுக்காய் வகைகள்:---

பிஞ்சு  கடுக்காய், கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால்கடுக்காய்      என, பல வகைகள் உண்டு. 

கிடைக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடும். இவை தவிர,காபூல் கடுக்காய், சூரத் கடுக்காய் எனும் வகைகளும் இங்கே கிடைக்கின்றன.

பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும். கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன் உடலுக்கு அழகும் மெருகும் தரும். செங்கடுக்காய், காச நோயைப் போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும். வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி பலவித நோய்களையும் போக்கும். பால் கடுக்காய், வயிற்று மந்தத்தைப் போக்கும் என கடுக்காய் வகைகளின் பயனை அன்றே சித்தர்கள் சொல்லியுள்ளனர்.

கடுக்காயை
விஜயன்,
அரோகினி,
பிருதிவி,
அமிர்தமரிதகி,
த்ருவிருத்தி

                என அதன் புறத்தோற்றத்தையும் மருத்துவக் குணத்தையும் கொண்டு் வகைப்படுத்திஉள்ளது  சித்த ஆயுர்வேத மருந்துவங்கள். உச்சி முதல் பாதம் வரை பல நோய்களுக்கு கடுக்காய்ப்பொடி மருந்து. மருந்தாக்குவதற்கு முன்பு கடுக்காயின் கொட்டையை நீக்க வேண்டியது முக்கியம்.

"கடுக்காய்க்கு அக நஞ்சு; 
சுக்குக்கு புற நஞ்சு"

          என்கிறது சித்தர் பாடல். அதாவது சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது முக்கியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் கொட்டையை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.

பசியின்மையைப் போக்கும் கடுக்காய்:-

----------------------------------------------------------------------

பசிக்கிறது, சாப்பிட முடியவில்லை என உணவின் மீது வெறுப்பு வரும் அரோசக நோய்க்கு, கடுக்காய் துவையல் சிறந்த மருந்து. கடுக்காயை கஷாயமாக்கி அருந்தினால், மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்து மலம் இளகும். சர்க்கரை நோய் இல்லாமலேயே அதிகமாக சிறுநீர் கழிக்கும் நோய்க்கும், இந்த துவையல் சிறந்த மருந்து.

ஒரு கடுக்காயின் தோலை பொடி செய்து

தினமும் மாலை சாப்பிட, இளநரை மாறும். மூக்கிலிருந்து ரத்தம் கசியும் நோய்க்கு கடுக்காய்த்தூளை நசியமிட்டுச் சரியாக்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள்.

துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய்,

மலமிளக்கும். அதே சமயம் ரத்தமாக கழிச்சல் ஆகும் சீதபேதிக்கும் மருந்தாகும் என்பது இன்றளவும் புரிந்துகொள்ள முடியாத மருத்துவ விந்தை. ஒரே பொருள் மலத்தை இளக்கவும், பேதியை நிறுத்தவும்

பயன்படுவது தான் மூலிகையின் மகத்துவம். அதில் உள்ள பல்வேறு நுண்ணிய மருத்துவக் குணமுள்ள பொருட்கள் தேவைக்கேற்றபடி பயனாவது, இயற்கையின் நுணுக்கமான கட்டமைப்பு.

சர்க்கரையைக் குறைக்கும் கடுக்காய்:-

--------------------------------------------------------------------

கடுக்காயை உப்புடன் சாப்பிட்டால், கபநோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும், நெய்யுடன் சாப்பிட்டால் வாத நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால் அத்தனை நோய்களும் அகலும். கல்லீரல் நோய் உள்ளவர்கள், அதற்கென வேறு எந்த மருத்துவம் எடுத்துக்கொண்டாலும் கடுக்காய் பொடியை நிலக்கடலை அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, கல்லீரலைத் தேற்றி காமாலை வராது காத்திடும்.

திரிபலா பெருமைகள்:-

-----------------------------------------

திரிபலா எனும் சித்த மருத்துவ மருந்தில்

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மும்மூர்த்திகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் கடுக்காய் பிரதானமானது. திரிபலா கூட்டணி. இன்று, சர்க்கரை நோய்க்கும் மூலம், பவுத்திரம், குடல் அழற்சி நோய்களுக்கெல்லாம் பயனாவதை நவீன மருத்துவ அறிவியல் உறுதிப்படுத்தி இருக்கிறது. நோயாளிகள் இந்தக் கூட்டணி மருந்தை தினம் காலை மாலை உணவுக்கு முன்னதாக அரை தேக்கரண்டி சாப்பிட்டு வர, பிற மருந்துகளுக்கும் துணையாகும். சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

புண்களைக் கழுவ இந்தத் திரிபலா

சூரணத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஆறாத புண்களான சர்க்கரை நோய்ப் புண், வெரிகோஸ் நாள புண், படுக்கைப்புண் ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்ய, கடுக்காய் கலந்த இந்த திரிபலாசூரணம் நல்ல மருந்தாக இருக்கும். பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தாலோ, வாய்துர்நாற்றம் இருந்தாலோ, பல் சொத்தை இருந்தாலோ, திரிபலா பொடியை பற்பொடியாகப் பயன்படுத்த வேண்டும்.

எமன் அருகில் வராமல் இருக்க, காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் அருந்தச் சொன்னார்கள் சித்தர்கள். எமன் வருவாரோ மாட்டாரோ, கொஞ்ச நோய்க் கூட்டம் நிச்சயம் வராது என்கிறது இதனை ஆய்ந்த மருத்துவ உலகம். எனவே, இனி உங்கள் இரவு மெனுவில் கடுக்காய் இருப்பது நோயில்லா வாழ்வுக்கு சித்தர்கள் தரும் சிறப்பு டிப்ஸ். 

நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம். நல்லன செய்து நலம் பல பெறுவோம். கடுக் காயைக் கருத்தில் வையுங்கள்.உடல் நலத்தை மேம்படுத்துங்கள்....

திருக்கடவூர் மயானம்

 l: இன்றைய கோபுரம் தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம்மிகவும் பழமையான தலம் திருவடி பணிந்து கோடி ஜென்ம வினைகள் தீர வேண்டிய நின்றேன்

 தர்மத்தின் வழி நடப்பவர்களுக்கு என்றும் ஸ்வாமி துணை நிற்பார் 🙏

சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்கள்

111. திருக்கடவூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்)

சிவஸ்தலம் பெயர்
திருக்கடவூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்)
இறைவன் பெயர்
பிரம்மபுரீஸ்வரர், பெரிய பெருமானடிகள்
இறைவி பெயர்
நிமலகுசாம்பிகை, அமலக்குய மின்னம்மை
தேவாரப் பாடல்கள்
சம்பந்தர்
வரிய மறையார் பிறையார்
அப்பர்  
குழைகொள் காதினர்
சுந்தரர் 
மருவார் கொன்றை


எப்படிப் போவது


மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தொலைவில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 2 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.


ஆலய முகவரி

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
திருமெய்ஞ்ஞானம்
திருக்கடையூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609311
தொடர்புக்கு: 94420 12133 , 04364 - 287 429

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தல வரலாறு

 இறைவன், பிரமனை ஒரு கல்பத்தில் எரித்து, நீராக்கி, மீண்டும் உயிர்ப்பித்துப் படைப்புத் தொழிலை அருளிய தலமாதலின் இப் பெயர் பெற்றது.

எமவாதனையைக் கடத்தற்குரிய ஊர்.

சைவ சமயத்தில் ஜந்து தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவை காசி மயானம், கச்சி மயானம் (காஞ்சீபுரம்), காழி மயானம் (சீர்காழி), நாலூர் மயானம் மற்றும் கடவூர் மயானம் ஆகும். மயானம் எனபது சிவபெருமான் பிரம்மதேவரை எரித்து நீராக்கிவிட்ட இடமாகும். ஒரு பிரம்ம கர்ப்பத்தின் பலயுக முடிவில் சிவபெருமான் பிரம்மாவை எரித்து நீராக்கிவிட்டார். அவ்வாறு பிரம்மா சிவபெருமானால் எரிக்கப்பட்ட இடமே திருக்கடவூர் மயானம். தேவர்கள் யாவரும் ஒன்று கூடி திருக்கடவூர் மயானம் வந்து பிரம்ம தேவருக்கு மீண்டும் உயீர் வழங்க வேண்டி தவம் செய்தனர். இறைவன் அதற்கிணங்கி இத்தலத்தில் பிரம்மாவை உயிர்ப்பித்து அவருக்கு சிவஞானத்தை போதித்து படைக்கும் ஆற்றலை மீண்டும் வழங்கினார். பிரம்மா சிவஞானம் உணர்ந்த இடம் திருக்கடவூர் மயானம். ஆகவே இத்தலம் திருமெய்ஞானம் என்றும் அழைக்கப்படுகிறது.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற தலங்களில் திருக்கடையூர் மயானம் தலமும் ஒன்றாகும். மேற்குப் பார்த்த சிவஸ்தலங்களில் இத்தலமும் ஒன்று. ஆலயத்தின் நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் ஒரு பெரிய வெளிப் பிரகாரம் காணலாம்.நேர் எதிரே உள்ள 3 நிலை கோபுரத்தின் முன் நந்தி மண்டபம், பலிபீடம் உள்ளன. கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் தனி கருவறையில் சுற்றுப் பிரகாரத்துடன் மேற்கு நோக்கி அருள் புரிகிறார். சிவன் சந்நிதியில் வடபுறம் முருகர் சிங்காரவேலர் என்ற திருநாமத்துடன் தென்திசை நோக்கி அருள் புரிகிறார். சிங்காரவேலர் கையில் வில்லும், அம்பும் கொண்டு பாதக் குறடு அணிந்தும் காட்சியளிப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும்.

ஆலயத்தின் மேற்குப் பிரகாத்தில் தென்புறத்தில் சங்கு சக்கரத்துடன் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக ஸ்ரீபிள்ளைபெருமாள் காட்சி தருகிறார். வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் கிழக்குப் பார்த்த தனி கோவிலில் தனி சந்நிதியில் இறைவி நிமலகுசாம்பிகை கிழக்கு நோக்கி அருள் புரிகிறாள்.ஆலயத்தின் வெளியே தென்புறம் பிரம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்படும் நீரைக் கொண்டு தான் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. என்றும் 16 வயதுடன் வாழ இறைவன் அருள் பெற்ற மார்க்கண்டேயர் சிவபூஜை செய்வதற்காக இக்கிணற்றில் கங்கையை சிவபெருமான் வரவழைத்துக் கொடுத்தார் என்பது தல வரலாறு. காசியில் இருந்து கங்கா தீர்த்தம் எடுத்து வந்தாலும் அபிஷேகம் கிடையாது. இந்த புனித நீரைக் கொண்டு மற்ற தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் என்ன என்று கூறி பாகுலேயன் என்ற மன்னன் பிரம்மபுரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்த போது சிவலிங்கத்தின் உச்சியில் வெடிப்பு ஏற்பட்டது. அதற்கான தழும்பு இத்தல இறைவனின் திருமுடியில் காணப்படுகிறது. இத்தல பிரம்ம தீர்த்தத்தில் கங்கை வந்த நாள் பங்குனி மாதம் அஸ்வினி நட்சத்திரம் ஆகும். வருடந்தோறும் வரும் இந்த புண்ணிய நாளில் மட்டும் தான் பக்தர்கள் அனைவரும் புனித நீராடுவர்.

இவ்வாலயத்தின் தல விருட்சமாக கொன்றை மரம் விளங்குகிறது.

சிறப்புகள்

இத்தலத்தின் காசித் தீர்த்ததிலிருந்துதான் திருக் கடவூர் வீரட்டானேச்சுவரருக்கு நாள்தோறும் திருமஞ்சன நீர் கொண்டு வரப்படுகிறது.

இவ்வூரில் உள்ள 16 கல்வெட்டுகளில் ,15 பிற்கால சோழர்கள், ஒன்று பாண்டிய மன்னன் கல்வெட்டுகள் உள்ளன.

....சிவ சிவ நமசிவாய சிவயநம திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய சிவயநம

தினமும் சொல்ல 1000 கோடி கோவிலுக்கு சென்ற பலன் கிடைக்கும்



மிக முக்கிய 16 சடங்குகள்!!

 இந்துக்களின் வாழ்வில் மிக முக்கியமாக மேற்கொள்ளப்படவேண்டிய 16 சடங்குகள்!!

இந்துக்கள் தங்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில சடங்குகளை தர்மநூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. சடங்கு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனப் பொருள்படும். சடங்குகளை எளிமையான முறையில் மேற்கொள்வதே சிறப்பாகும். இவை சம்ஸ்காரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்துக்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ‘சம்ஸ்காரமும்’ ஒன்றாகும். ’சம்ஸ்காரம்’ என்றால் முறைப்படுத்துதல் அல்லது தயார்படுத்துதல் எனப் பொருள்படும். கிரியசூத்திர நூல் 16 புற சடங்குகளை விவரிக்கின்றது. இந்த பதினாறு சடங்குகளும் புறத்தில் செய்யப்பட வேண்டியவை. அகத்தில் செய்யப்பட வேண்டிய எட்டு சடங்குகளையும் இந்நூல் விளக்குகின்றது. இவை கௌதமர் தர்மசூத்திரம் (8:14-8:25) இலும் விளக்கப்பட்டுள்ளன.

அகத்தின் எட்டு (8) சடங்குகள்:

1) எல்லா உயிர்களிடமும் கருணை

2) பொறுமை

3) பொறாமை இல்லாமை

4) மனத்தூய்மை

5) சாந்தம்

6) நல்ல எண்ணங்களைக் கொண்டிருத்தல்

7) தாராளகுணம்

8) பேராசை இல்லாமை

புறத்தின் பதினாறு (16) சடங்குகள்:

1) திருமணம் (விவாகம்) – தகுதிபெற்ற வயதினை உடைய ஓர் ஆண் ஒரு பெண்ணின் கரங்களைப் பற்றி அக்கினி சாட்சியாக ஏழு முறை அக்கினியைச் சுற்றி வருதல். இறைவன் ஜோதிவடிவானவர். எனவே அக்கினியான ஜோதியை சாட்சியாக கொண்டு திருமணம் நடக்கின்றது. தமிழர்களின் திருமணத்தின் போது மணமகன் மணமகள் கழுத்தில் தாலி அணிவிக்கிறான். இது மிகவும் முக்கிய சடங்கு ஆகும். பெரும்பாலான இந்துக்கள் வாழ்நாளில் இந்த சடங்கு மிக முக்கியமானதாக மேற்கொள்ளப்படுகின்றது.

2) முதல் இரவு (கர்பதானம்) – திருமணமான ஆணும் பெண்ணும் குழந்தை பாக்கியத்தைப் பெறுவதற்காக இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு தாம்பத்திய பந்தத்தில் ஈடுபடுதல். தாயான பெண் ஓர் உயிர் தன் உடலில் தங்கி உடலாக உருவெடுப்பதற்கு தன் கருவறையைத் ‘தானமாக’ தருகிறாள். கணவனும் மனைவியும் விளக்கேற்றி இறைவனை மனதார வழிபட்டு வாழ்க்கையைத் துவங்குவதன் மூலம் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.

3) கருவுற்றல் (பும்சவனம்) – கருவுற்ற மனைவி தாய் ஸ்தானத்தை அடைகிறாள். எனவே கணவன் அவளை தாயைப் போல பராமரித்து பணிவிடை செய்யவேண்டும். அவள் மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூட பேசாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். பிருகதாரண்யக உபநிடதம் (6.4), மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவன் அவளுக்கு ஆரோக்கியமான உணவைச் சமைத்துக் கொடுக்க வேண்டும் (அல்லது ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்) என அறிவுரை செய்கின்றது. கணவன் மனைவிக்காக பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். தன் மனைவி குழந்தையை நலமாகப் பெற்றெடுக்கும் வரை இந்த சடங்கை கடைப்பிடிக்க வேண்டும்.

4) வளைக்காப்பு (சீமந்தம்) – கருவுற்ற பெண் எந்தவொரு சிரமமும் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முக்கிய சடங்காகும். பெரும்பாலும் 8-ஆவது அல்லது 9-ஆவது மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்மணிக்கு அவளின் உறவினர்களும் நண்பர்களும் பழங்களும் பலகாரங்களும் ஊட்டிவிட்டு மகிழ்ச்சிப் படுத்துவார்கள். மேலும் வளையல்களும் அணிவிப்பார்கள். கர்ப்பிணி பெண் ஆசைபடும் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும், அவளுக்கு வருத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்த்துவிட வேண்டும் என யஜ்ஞவல்கய ஸ்மிரிதி (3:79) தெரிவிக்கின்றது. மேலும் பிரசவ காலம் நெருங்கும் போது அவளின் கணவன் (மற்றும் பெற்றோர்) எப்போதும் அவளின் அருகாமையில் இருக்கவேண்டும் என்றும் நீண்டதூரப் பயணத்தை தவிர்த்து விட வேண்டும் எனவும் அறிவுரைக்கப்படுகின்றது. இது மிக முக்கியமான சடங்கு.

5) குழந்தை பிறந்த சடங்கு (ஜாதகர்மன்) – குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் சடங்காகும். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை ஒருவன் இரண்டு முறை பிறக்கின்றான். தாயின் கருவறையில் தோன்றி பிறப்பது ஒருமுறை, கல்வியைத் தொடங்கும் போதும் இரண்டாவது முறை ஆகும். பிறந்த குழந்தையின் நாவில் தேன் அல்லது சீனிப்பாகு தடவி இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சடங்கை வீட்டிலுள்ள பெரியவர்கள் அல்லது குழந்தையின் தாய்தந்தை மேற்கொள்வர். அதன்பிறகு அனைவரும் குழந்தையின் நீண்ட ஆயுள், நிறைவான அறிவு மற்றும் தாயின் நலம் ஆகியவற்றிற்காக பிரார்த்தனை மேற்கொள்வர்.

6) குழந்தைக்குப் பெயர்சூட்டுதல் (நாமகரணம்) – குழந்தை பிறந்த சில தினங்களில் குழந்தைக்குப் பெயர்சூட்டப்படுகின்றது. அர்த்தமுள்ள மற்றும் இனிமையான பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்குச் சூட்டுவர். குழந்தையை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, வீட்டு பூஜை அறையில் குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையை மடியில் அமர வைத்து அதன் காதில் தேர்ந்தெடுத்த பெயரை செப்புவார்கள்.



திருப்பதி முதல் திருமலை பகுதி 2

 🌹🙏திருப்பதி முதல் 🏞திருமலை வரை...

ஒரு விரிவான 🚐பயணத்தொகுப்பு

By சுஜாதா &வெங்கடேசன்

பகுதி 2 App களுடன் போராட்டம். 

Govinda Appமூலம் திருமலையில் ரூம் கிடைச்சும் ஏழெட்டு டெபிட் இருந்தும் சிலது தகராறு பண்றது. மறுபடி ஒரு டெபிட் கார்டோட போராடி பணம்கட்டி அலாட்மெண்ட் மெசேஜ் வந்து இவர்ட்ட காட்டறேன்..

பேஷ் பேஷ் 100/- க்கு திருமலைல ரூம் ரொம்ப சமத்து தான் ..முத நாளே கீழ திருப்பதி போகணுமே. அங்க எங்க தங்கறதாம்கறார்.

கோவிந்தா ஆப்ல திருப்பதிக்கு புக் பண்ண ப்ரவிஷன் இல்லையேன்னு அன்னிக்கு முழுக்க ராத்திரி 12 மணி வரைக்கும் போராடி நேர திருமலைக்கே போயிடலாம்னு முடிவு பண்றேன். 

இவர் வழில சோளிங்கர்ல முதல்நாள்தங்கி மலை மேல ஏறி பெருமாள் சேவிச்சுட்டு அடுத்த நாள் அங்கேர்ந்து திருமலை போகலாமேங்கறார். 

அந்த ஊர்ல லாட்ஜும் கேட்டு வைக்கறார் 

அப்படியே திருச்சானூர் நாகலாபுரம் சித்தூர் னு என்னென்னவோ ஆப்ஷன் சொல்லி குழப்பறார். எனக்கு கீழ திருப்பதிலேயே சாண் இடம் கொடுக்க சொல்லி பெருமாளை வேண்டிக்கறேன். 

மறுநாள் TTD Info ன்னு இன்னொரு ஆப் Download பண்ணி அவசர அவசரமா போராடி அது 2 ந்தேதி 6.00 டு 12 ன்னு எதோ  டயத்துல புக் பண்ண சொல்ல டெபிட் கார்டு போட்டு 200+200 கட்ட சொல்றது. ஶ்ரீனிவாசம் காம்ளெக்ஸ் ல 12 மணிக்குள்ள ரிபோர்ட் பண்ணனும். இவர் கார்த்தால கூடு வாஞ்சேரில கிளம்பி 12 மணிக்குள்ள ஶ்ரீனிவாசம் தேடிண்டு போய் ஒரு வேளை நேரமாயிட்டா accomadation cancel னு போட்டிருக்கு பார்னு குண்டை தூக்கி போடறார்.

எல்லாம் கார்த்தால 4.00 க்கெல்லாம் எழுந்து கரெக்டா போயிடலாம்கறேன். இவர் காஞ்சிபுரம் போய்ட்டா திருப்பதி பஸ் கிடைக்கும் கறார்.

4.00 மணிக்கு எழுந்துண்டேனே தவிர இவர் ரெடியாகி கத்தகத்த வழிக்கு  மோர்ஞ்சாதம் பிசைஞ்சு எடுத்துண்டு ரூமெல்லாம் பூட்டி ஆத்தை விட்டு கிளம்ப 5.30 ஆகி செங்கல் பட்டு 6.30 க்கு போய் காஞ்சிவரம் 8.45 க்கு போறோம். பாதரூம் போய்ட்டு ஓட்டல் ல ரெண்டு இட்லி பிச்சி வாய்ல போட்டுண்டு வந்தா ஒரு ப்ரைவேட் பஸ் 8.20 க்குங்கறான். 

பக்கத்துல கவர்மண்ட் பஸ் 8.40 க்குன்னு அதுலதான் சீட் வசதியாயிருக்கும்னு ஏற சொல்றேன். இவர் கத்திண்டே ஏறி எப்ப போய்சேரும்னு கண்டக்டர்கிட்ட  கேக்க அவன் 12 ஆகும்னு சொல்ல அதுக்குள்ள ப்ரைவேட்பஸ் கிளம்ப மறுபடி அதுல கூட்டத்துல ஏறிக்கறோம். 

அது  அங்கங்க  நின்னு வழி டிக்கட் ஏத்திண்டு போறது...நான் இவரை திட்டறேன்..அரக்கோணம் வந்து நல்ல எடமா கிடைக்கறது. 12 க்குள்ள போய்ச்சேர்ந்து எடம் கிடைக்கணுமேன்னு பெருமாளை த்யானம்பண்ணின்டுவரேன். 

இவரோ புத்தூர்நகரில ரோஜா (அவ தொகுதியாம்)கட் அவுட்ல ஜெகன் மோகனுடன் ஜெகன் மோகினியா நிக்கறா பாருடின்னு வேடிக்கை பார்த்துண்டு வரார். 

குறிப்புகள்

2. சேஷ மலை

பெருமாளின் அவதாரம் ஆதிசேஷன். இவர் மலையாக அமைந்ததால் அந்த மலைக்கு பெயர் ‘சேஷ மலை’ என்று அழைக்கப்படுகிறது.

சேஷாத்ரி:

*பார்தாங்கும் பாந்தள் பெருநாகத் துற்றானைச்
சார்வாரைத் துன்பங்கள் சாராவாம்*
  – *சீர்பெற்றிம்
மண்ணிலுறை வானோர் போல் வாழ்வாராம் மாநிலத்தீர்
உண்மையிது கேளீர் உவந்து.*

திருப்பதியில்  தினமும் மண் பானையில் தயிர்சாதம் மட்டும் தான் நைவேத்தியமாக படைக்கப்படுகிறதாம்!

Govinda App  - Tirumala Tirupati Devasthanams app provides services to devotees of Lord Sri Venkateswara, Tirumala. A pilgrim can avail services like Accommodation, Special Entry Darshanam, Hundi, Seva and can be involved in various trusts and schemes that are part of Tirumala Tirupati Devasthanams.

The new App aims to provide pilgrims with better user experience in availing the Services. Pilgrim registration with valid e-mail ID is a prerequisite for booking of Seva/Accommodation/Darshanam . Registration OTP will be sent to the registered mobile number for verification & activation. Please complete all this process well in advance to avail online services.