பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 34
(சுஜாதா&வெங்கடேசன்
நேரம் 11.45 மீண்டும் கிளம்பிய ஆட்டோ சிக்கலான கிளை பாதைகளில் சென்று பத்து நிமிடத்தில் திருக்கோளூர்
அடைகிறோம்..
குபேரன் ஒரு முறை சிவனை வழிபட கைலாயம் சென்றான். அங்கே உமையவள் சிவனுடன் இருக்க இவனது கண்கள் உமையவளை கெட்ட நோக்கத்தோடு பார்க்க, இதனால் கோபம் கொண்ட பார்வதி குபேரனை சபித்தாள். அதனால் அவனிடம் இருந்த நவநிதிகளும் அகன்று உருவம் விகாரமானது. நவநிதிகளும் தவமிருந்து இவ்வூர் பெருமாளை அடைக்கலம் கொண்டதால் வைத்தமாநிதி பெருமாள் (நிதிகளை வைத்திருபவர்) என அழைக்கப்படுகின்றார்.
குபேரன் இவ்வூர் பெருமாளை நோக்கி கடுந்தவம் செய்து பாதி நிதியை பெற்றான். திரும்ப பெற்ற செல்வங்களை ஓரிடத்தில் நிலையாக நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் தன்மையுடன் இலக்குமி தேவிக்கு கொடுத்தான். நிலையான செல்வம் இருக்கும் இடத்தில் அதர்மம் ஆட்சி புரியும் தர்மம் இருக்காது. ஆகவே செல்வம் ஒருவரிடம் நிலையாக இல்லாமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது பெருமாள் கிருபை.
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்
ஆழ்வார்களில் நம்மாழ்வார் மீது மட்டும் அன்பு பூண்ட மதுரகவி ஆழ்வார் பிறந்த ஊரான திருக்கோளூருக்கு ராமானுஜர் வந்த வேளையில், ஒரு பெண்மணி மோர் விற்க ஊரை விட்டு வெளியே செல்லக்கண்டார். அவர் அவளிடம் தேடி போகும் ஊர் என இவ்வூரைபற்றி பிறர் சொல்ல, நீயோ வெளியே செல்கிறாயே என்றார். அவளும் சலிக்காமல், முயல் புளுக்கையை எங்கே விட்டால் என்ன? அதில் என்ன மாற்றம் இருக்கும்? என்றாள். ஆச்சரியமுற்ற யதிராஜரிடம் பெரியார் செய்த 81செயல்களை சுட்டி காட்டி, அப்படி நான் இருந்தேனா என்கிறாள். இதில் 79ஆவதாக சொல்லப்படும் எம்பார் என்பவர் ராமானுஜரின் தம்பி முறை. சிவபக்தி செய்தவர். இதில் ராமானுஜரை பற்றியுமே கூட வருகிறது. அப்பெண்மணி கூறியது திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் எனப்படுகிறது. வரலாற்று குறிப்பு தரும் அவை ....
தொடரும்
No comments:
Post a Comment