நாற்கோணம் -20
By N Krishnamurthy
*வைதேஹி*
கார்லேந்து கௌசியும்,இவரும் எறங்கினா.
அதைத்தொடர்ந்து ராமும், சீதாவும் எறங்கினா. அவா எல்லோரையும் பாத்து நான் வாயடைச்சு நிந்தேன்.எல்லாரும் கோபால்சாமி மாமாவ விஷ் பண்ணா.ராம்மும்,சீதாவும் அவருக்கு நமஸ்காரம் பண்ணா. அவா ரெண்டு பேரும் நமஸ்காரம் பண்ணும் போது மாமா
"கொழந்தைகளா.சந்தோஷமா இருங்கோ"ன்னு வாயார வாழ்த்தினார்.
கௌசி பேசினா
" மன்னி நீங்க பேசினதுக்கப்புறம் ராம் கிட்ட விஷயத்தை சொன்னனேன். அவன் உடனே ஆபீஸ்லேந்து புறப்பட்டு வந்து, என்னை கூப்டுண்டு, சீதா ஆபிசிக்கு போய் அவளையும் பர்மிஷன் போட வச்சு,அவளையும் கூட்டிண்டு,உங்காத்துக்கு போய் அண்ணாவையும் கூப்டுண்டு வந்தான்" என்றாள் மூச்சு விடாமல்.
நான் அவளிடம் "ஏண்டி, கவுசி உங்க ஆத்துக்காரரை விட்டூட்டு வந்துட்டே" ன்னு கேட்டேன். அதுக்கு அவ "அவர் இன்னைக்கு காலைல தான் கெளம்பி திருவள்ளூர் போய் பெருமாளை தரிசனம் பண்ணிண்டு ,வேண்டிண்டு வறேன்னு சொல்லீட்டு போய் இருக்கார். இனிமே தான் ஆத்துக்கு வருவார்.ஆத்துக்கு திரும்பி போய் அவர் கிட்ட விஷயத்தை சொல்லிகலாம்னு இருக்கேன்" என்றாள்.
எல்லோரும் உள்ளே போய் பெருமாளை சேவிச்சோம். நான் பெருமாளுக்கு மனசார நன்றி சொன்னேன்.
" அன்னிக்கு யுத்த பூமீல குழம்பிய நெலமேல இருந்த அர்ஜுனுக்கு கீதோபதேசம் பண்ண அதே பார்த்தசாரதி பெருமாள், கொழம்பிய நெலமேலிருந்த எங்க மனசையும் தெளிய வெச்சு, தன்னுடைய சன்னதிக்கு எல்லாரையும் அழச்சிண்டு வந்து, அருள் பண்ணினதை எண்ணி எண்ணி ஆனந்த கண்ணீர் வடிச்சேன்.
சினிமாவில் கடைசி காட்சில எல்லா பாத்திரங்களும் ஒண்ணா சேறர்து போல, பார்த்தசாரதி கோயில்ல நாங்க எல்லாம் ஒண்ணா சேந்து பெருமாளை தரிசிச்சோம்.
கோவில் பிரகாரத்தை சுத்தி வரச்சே, ராமையும் சீதாவையும் காணோம். அப்புறம் பாத்தா அவா, ஒரு ஓரத்தில் உக்கார்ந்துண்டு, சிரித்து பேசிண்டு இருந்தா. அத பாக்கறதுக்கு கண் கொள்ளா காட்சியா இருந்தது.
"சிறுசுகள், என்னமா மன கஷ்டத்தில் இருந்திருப்பா. அவாளுக்கு இப்பதான் சந்தோஷம் கெடச்சிருக்கு. அப்படியே இருக்கட்டம். தொந்தரவு பண்ண வேண்டாம்" ன்னு நெனச்சுண்டேன்.
அதுக்கப்புறம் கோபால்சாமி மாமாவை பாத்து
" மாமா.ராமும், சீதாவும் இவ்வளவு தூரம் இங்க வந்து இருக்கா.ராமநாதன் மாமா ஃப்ரீயா இருந்தா,மறுபடியும் அவாத்துக்கு போயிட்டு குழந்தைகள அவாளுக்கு நமஸ்காரம் பண்ண வைக்கலாமே" ன்னு சொன்னேன். அதுக்கு கோபால்சாமி மாமா " இது நல்ல ஐடியாம்மா .போன் பண்ணி பாக்கறேன்" என்றார் .போன் பேசி முடிஞ்சதும் கோபால் சாமி மாமா " ராமநாதன் சாரும்,மாமியும் கோவிலுக்கு நடந்து வந்துண்டு இருக்காளாம். இன்னும் ரெண்டு, மூணு நிமிஷத்துல வந்துடுவேன்னு சொல்றார் " என்றார்.
அடுத்த நாலாவது நிமிஷத்தில ராமநாதன் மாமாவும், லக்ஷ்மி மாமியும் கோயிலுக்குள்ள நுழஞ்சா. ராமுக்கும் சீதாவுக்கும் ராமநாத மாமாவை அறிமுகம் பண்ணி வச்சேன். ரெண்டு பேரும் அவர் கால்ல விழுந்தா. மாமாவும்,மாமியும் அவாள வாய் நிறைய வாழ்த்தினா. இதெயெல்லாம் பாக்கும்போது நேக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.
பெரிய வாள்ளாம் சொல்றபடி, சந்தோஷம்னு வந்தா மொத்த சந்தோஷமும் சேந்து வரும் அப்படின்னு நேக்கு அப்பதான் புரிஞ்சுது.
*நான்(கதாசிரியர்):*
நாளை பதிவில் சீதா, ராம் கல்யாணம். கல்யாணத்துக்கு வர முடியாதவர்கள், முதல் நாள் மாலை ரிசப்ஷனுக்கு வந்துவிடுங்கள்.இது நம்ப வீட்டு கல்யாணம். சீதா,
ராம்,ஜானகி,
ஜெயஸ்ரீ,
வைதேகி,சாரங்கன்,கௌசி,தாசரதி மற்றும் கோபால்சாமி மாமாவை நேரில் பார்க்கலாம். முகூர்தத்துக்கு வருகிறவர்கள் ராமனாதன்,லக்ஷ்மி ஜோடியையும் பார்க்கலாம். தேவை படுபவர்கள் அவரை அறிமுகம் பண்ணிக்கொள்ளலாம்.
ஞானம்பிகா தான் கேட்டரிங்.இவ்வளவு சொல்கிறேனே,கல்யாண சத்திரம் பற்றி சொல்லவில்லையே என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. நாளை பதிவில் அதுவும் தெரிந்து விடப்போகிறது.
No comments:
Post a Comment