Wednesday, November 1, 2023

நாற்கோணம் - 4

 நாற்கோணம் - 4

By N Krishnamurthy 

 *சீதா:* எனக்கு என்னமோ இன்னைக்கு காலைல இருந்து மூடே சரியில்லை. ஆபீஸ் போனதில் இருந்து ஒரே டென்ஷன். என் பக்கத்தில் சீட்டில் இருந்த ஜானகி வழக்கம் போல சிரிச்சுண்டு இருக்கா. எப்படித்தான் இப்படி  நாள்  பூரா  சிரிச்சுண்டு இருக்க முடியறதோ! 

அவளுக்கு திடீர்னு ஒரு போன் கால் வந்தது. ஒரு நிமிஷம் நம்பர பாத்தூட்டு, சீட்டிலிருந்து எழுந்து கொஞ்ச தூரம் நடந்து போய், காலியா இருந்த கான்பிரன்ஸ் ரூமுக்கு  போய் கதவை சாத்திண்டூட்டா. அஞ்சு நிமிஷம் கழிச்சு திரும்பி வந்தா. மூஞ்சி பூரா பூரிப்பு. அப்பவே மலர்ந்த தாமரை போல இருந்தா. "என்ன ஜானகி, இவ்ளோ சந்தோஷமா இருக்க.ஏதாவது  முக்கியமான போன் காலா" என்று கூறி  லேசாக கண்ணை சிமிட்டினேன். ஜானகி "முக்கியமானது தான். ஆனா நீ நினைக்கிற படி இல்ல. என்கூட ஒண்ணா படிச்ச பொண்ணு , காலேஜ்ல ரொம்ப குளோஸ், இப்ப மதுரைல வேலைல இருக்கா.அவளுக்கு மெட்ராஸ்ல ஏதோ ஆப்பர்சூனிட்டி கெடைச்சிருக்கு.அது விஷயமா பேசிண்டு இருந்தா" என்றாள். அவ பாடி லாங்குவேஜ்லேந்து   அவ பொய் சொல்றான்னு நேக்கு பட்டது.

ரெண்டு நிமிஷம் கழிச்சு  அவ எழுந்து பாத்ரூமுக்கு போனா. அவ மொபைல் அவள் டேபிள் மேல இருந்தது. யாரும் பார்க்காத போது அந்த மொபைலை எடுத்து , அன்லாக் பண்ற பேட்டனை போட்டேன.முதல்ல அன்லாக் ஆகல. கொஞ்சம் யோசிச்சு ரொம்ப நாள் முன்னாடி அவ யூஸ் பண்ண பேட்டனை  போட்டேன். அன்லாக் ஆயிடுத்து.கால் லிஸ்ட்டுலேர்ந்து கடைசியா வந்த காலை  பார்த்தேன்.ராம்ன்னு போட்டு இருந்தது. என்கிட்ட பொய் சொல்லி இருக்கா கடங்காரி.  இவா ரெண்டு பேரும் என்ன பேசியிருப்பாளோன்னு எண்ணினா நெஞ்சு பத்த எரியறது.

பேன்ட்ரிக்கு போய் ஜில்லுன்னு  ஒரு  டம்ளர் பச்ச தண்ணியை  குடிச்சேன்.திரும்பி வந்து சீட்டில் உக்கார்ந்தேன். 

அஞ்சு நிமிஷம் கழிச்சு பாத்ரூம்ல இருந்து ஜானகி வந்தா. எதுவும் நடக்காத மாதிரி அவ பாட்டுக்கு வேலையை பாத்துண்டு இருந்தா.

லஞ்ச்க்கு  அப்பறம் மத்தியானமா, அவ கிட்ட பேச்சு  கொடுத்தேன். "அன்னைக்கு வந்தானே என் அத்தை பையன் ராம். அவன பத்தி நீ என்ன நினைக்கிற" அப்படின்னு கேட்டேன். " "அவர பத்தி நான் எதுக்கு நினைக்கணும்" என்றாள்  கள்ளி. "இல்லடி. நீ என் க்ளோஸ் ஃப்ரெண்ட். நான் அவன பண்ணிக்க போறவ(இதை அழுத்த கொடுத்து  சொன்னேன்.நண்ணா புரியட்டும்ன்னு). அவன பத்தி உன் அபிப்பிராயத்தை சொல்லு" ன்னு கேட்டேன். கூம்பின

 தாமரை  போல அவ முகம் கூம்பீட்த்து. 

"நீ ஆச்சு. அவராச்சு. நான் எதுக்கு  நடுவுல.நான் இந்த வெளையாட்டுக்கு வரலடியம்மா "என்றாள்  அவள். " என்னடி திடீர்னு நீ மூணாம் மனுஷி  மாதிரி பேசுற. நீ என் க்ளோஸ் பிரண்ட் இல்லையா" அப்படின்னேன். அதுக்கு ஜானகி " ஆமாண்டி நான் உன் க்ளோஸ் பிரண்டு தான்.ஆனா கூட, ஒரு பிரண்டுனா, எது எதுல தலையிடணம், எதை எதையெலைல்லாம் தலையிடக்கூடாதுன்னு நியதி இருக்கு இல்லையா" என்றாள். பெரிய கைககாரி. என்னமா பேசறா. இவ  கிட்ட பேச கத்துக்கணும்னு நினைச்சேன்.

அதுக்கப்புறம் அவ  மூஞ்சீல சுரத்தே இல்ல. முகம் சின்னதாகவே இருந்தது. என்கிட்ட அன்னிக்கி அப்புறம்  பேசவே இல்ல. இதை நான் ரொம்ப ரசிச்சேன். எனக்கும்  முதல்ல இப்படித்தானே இருந்திருக்கும்?

No comments:

Post a Comment