Friday, November 3, 2023

நாற்கோணம் - 13

 நாற்கோணம் - 13

By N Krishnamurthy 

 *ஜானகி:* என் தோளை தொட்டு யாரோ கூப்ட்டதும் திரும்பி பாத்தேன். திரும்பி பாத்த நான்   திகைப்படஞ்சேன்னு சொல்ல  மாட்டேன். நான் பாத்தது என்னுடைய பெரியப்பா பையன் ராகவன் அண்ணாவைத்தான். நான் அவனை அங்க பாத்து திகைப்படையாத  காரணம் என்னன்னு  தெரியணமா? சொல்றேன். என் ஏற்பாட்டின்படி தான் அவன் அங்க  வந்திருக்கான். இது சீதாவுக்கும், ஜெய்ஸ்ரீ க்கும் தெரியாது. 


நான் ராகவன் அண்ணாவை  பாத்து " அண்ணா.வாட் எ  சர்ப்ரைஸ். நீங்க எங்க இவ்வளவு தூரம்"என்றேன்.

"ஹாஸ்டல்ல போர் அடிச்சது. அதனால மகாபலிபுரம் போய் பாத்துட்டு வரலாம்னு நெனச்சு கிளம்பி வந்தேன்" என்றான்.

சீதாவிடமும்,ஜெய்ஸ்ரீயிடமும்  "இது என் பெரியப்பா பையன் ராகவன் அண்ணா. மெட்ராஸ்ல ஒரு ஐடி கம்பெனில வேலை செய்றான்.ஹாஸ்டல்ல பேயிங் கஸ்டா தங்கி இருக்கான்" என்று சொல்லீட்டு,  அவனிடம் சீதாவை காமிச்சு" இவ என்னோட க்ளோஸ் பிரண்டு சீதா. என் கூட வேலை செய்றா"  என்று கூறிவிட்டு,அப்புறம் ஜெயஸ்ரீயை காமிச்சு, " இவங்க  ஜெயஸ்ரீ மேடம். எங்க டீம் லீடர்" என்று அண்ணாவிடம்  கூறினேன்.நான் ஜெயஸ்ரீ யை மேடம் என்று அறிமுகப்படுத்தியதை அவள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்று அவள் முகத்தில் இருந்து தெரிஞ்சுண்டேன்.

"நைஸ் டு மீட் யூ"  என்று சொல்லி சீதாவிடம் அவன் கைகளை நீட்ட,  சீதா அவனைப் பார்த்து 

" உங்கள பாத்தல  சந்தோஷம்"  என்று இரு கைகளையும்  குவித்தாள். ஜெயஸ்ரீ மட்டும் தன்  கைகளால் அண்ணாவின் கைகளைப் பிடித்து குலுக்கி " நைஸ் டு மீட் யு ராகவன்"என்றாள். அத்தோடா இல்லாம அவள் ராகவனை கண்ணால்  அளவெடுக்க  ஆரம்பித்தாள். விஷயம் விபரீதமாக போகறதுக்கு  முன்னால் நான் சீதா விடமும், ஜெய ஸ்ரீ இடமும்

"  ராகவன் அண்ணா என்னை விட ஜஸ்ட்  நாலு  வயசு பெரியவன். அவ்வளவுதான்" என்றேன். இதை கேட்டதும் ஜெய்ஸ்ரீயின் முகம் சுருங்கீட்த்து. இத தான் நான்  எதிர்பார்த்தேன்.

ராகவ அண்ணாவை பத்தி குட்டீயூண்டு இன்ட்டொரடக்ஷன்.

ராகவ அண்ணா   பாக்கற்தக்கு திருத்தமாக இருப்பான். ஐந்தடி பதினோரங்கலம் உசரம். கோதுமை நிறம். அறிவைப்பறை சாத்ற விசாலமான நெத்தி. படிய வாரி விடப்பட்ட கிராப்புத்தலை. குறுகுறு என்று அலைபாயும் கண்கள். எந்தப் பெண்ணும் அண்ணாவை ஒரு   மொற பாத்தா, இன்னொரு மொற பாக்காம இருக்க மாட்டா.

அண்ணா அப்புறம் என்னிடம் "வேற எங்கெங்க போக போறீங்க" என்று கேட்டான். " இன்னும் கொஞ்ச நாழில பீச்சுக்கு போய் கொஞ்ச நேரம் உக்கார்ந்தூட்டு திரும்பி சென்னை போகணும்" அப்படீன்னேன். "நேக்கும் அதே புரோகிராம் தான்.நான் உங்க கூட கலந்துகற்தல உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே" ன்னான்.

" நாட் அட் ஆல்.யூ ஆர் மோஸ்ட் வெல்கம்" என்றாள் ஜெய்ஸ்ரீ.

வெயில் தாழ்ந்ந்ததும் நாங்க நாலு பேரும் பீச்சுக்கு போனோம்.

நெறய ஜோடிகள் கடல பாத்துண்டு,கடல போட்டீண்டிருந்தா. சீதா கடலை பாத்துண்டபடியே உக்காந்திண்டிருந்தா. ராகவன் அவளிடம் பேச முயற்சித்தும் , சீதா அவனுக்கு அதிகம் பிடி கொடுக்கல . கேட்ட கேள்விக்கு மோனோ சிலபல்ல பதில் தந்தா அவ்வளவு தான்.ஆனா சேத்து வச்சு ஜெயஸ்ரீ வேண மட்டும் அண்ணாகிட்ட பேசிண்டிருந்தா.  இருட்ட தொடங்கினவுடனே நான்  ஜெயஸ்ரீயை  பாத்து "கெளம்பலாமா" என்றேன்.ஜெயஸ்ரீ "அதுக்குள்ளவா" என்றாள். சீதாவும் "ஆமாம் .லேட்டானா அம்மா தேடுவா" என்றாள். சரி என்று எல்லோரும் கிளம்பினோம். அப்போது அண்ணா எங்களைப் பாத்து " நைஸ் டு மீட் யூ லேடிஸ். வி வில் கீப் இன் டச்" என்றான். ஜெயஸ்ரீ உற்சாகமாக "ஷ்யூர்" ன்னு பதிலளிச்சா.

திரும்பி ஹாஸ்டலுக்கு வரும்போது மணி கிட்டத்தட்ட எட்டே கால் ஆயிட்டது. டிபன் சாப்டூட்டு, 9:30 மணிக்கு சீதாவுக்கு போன் பண்ணி அவ பத்திரமாக போய் சேர்ந்தாளான்னு  தெரிஞ்சுண்டேன். அவள் ஒரு வேளை ராகவனைப் பத்தி  ஏதாவது விசாரிப்பாளோன்னு பாத்தேன்.  ஆனா சீதா அப்படி  ஒண்ணும் செய்யலை. நான் ஏற்கனவே ராகவனிடம் சீதாவை பத்தி *முழுக்க* சொல்லியிருக்கேன்.

என் மொபல்லேந்து அவ போட்டோவும் காட்டியிருக்கேன். பை சான்ஸ் ராகவண்ணாவின்  ஜாதகமும்,சீதாவின் ஜாதகமும் பொருந்தீட்த்துன்னா சீதாவை என் மன்னியாக்கிலாம். அத்தோடு இல்லாம  ராமும் ஃப்ரீயாகி விடுவார்.சொந்தமாக போனதால, ராமை  நெருங்கர்தும் சுலபமா  போயிடும்ன்னு நெனைச்சேன். இது என்னமோ என்னோட  திட்டம்ன்னு  நான் நெனைக்கல. ஆண்டவனே இது போல  ஒரு திட்டத்தை போட்டு கொடுத்திருக்கணம் என்று கூட எண்ண ஆரம்பிச்சேன்.நாம ஒண்ணு நெனக்க தெய்வம் வேறொண்ணை நெனக்கும்னறதை என்னால லேட்டாதான் புரிஞ்சிக்க முடிஞ்சது.

No comments:

Post a Comment