Thursday, November 2, 2023

நாற்கோணம் -8

 நாற்கோணம் -8

By N Krishnamurthy 

*சாரங்கன்:* அடுத்த நாள் சாப்பாடு முடிஞ்சதும், ஆஞ்சநேயர் கோயில் கிட்ட இருக்கற  ஜோசியரை போய் பாத்து  இவா ரெண்டு பேரோட ஜாதகத்தையும் காமிச்சேன். அவரும் கௌசியோட ஜோசியர் என்ன சொன்னாரோ அதேயே தான் சொன்னார். நேக்கு என்ன பண்றதுன்னு தெரியல. இதை வைதேகி கிட்ட எப்படி சொல்ல போறேனோ. சீதா கிட்ட என்னால சொல்ல முடியுமா?

மனசுல கிலேசம் அதிகமாயிடுத்து. வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் வைதேகி "என்ன ஆச்சு" ன்னு கேட்டா.  வைதேகி கிட்ட  எல்லா விஷயத்தையும் சொன்னேன். வைதேகி இடிஞ்சு போயிட்டா. "ஒண்ணு பண்ணுங்கோ. இத மொள்ள மொள்ள சீதா கிட்ட சொல்லலாம். இப்ப வேண்டாம். நாளன்னிக்கி ஞாயிற்றுக்கிழமை  அவள உக்கார வச்சு விஷயத்தை பக்குவமா  சொல்லலாம்"ன்னா.

நேக்கும் அது சரீன்னு பட்டது.

 *வைதேகி:*

வெள்ளிக்கிழமை சீதா ஆபிசுலேந்து வரச்சே அவ முகமே சரியில்லை.சரி.

ஆபிஸ்ல ஏதோ ப்ராபளாமா இருக்கும்னு நெனெச்சுண்டேன்.

ராத்திரி டிபன் சாப்பட கூப்பிட்டேன். பசிக்கலைன்னூட்டா."வெறும் வயத்தோட படுக்காதடி.ஒரு டம்ளர் பாலாவது குடீ"ன்னேன்.

அழிசாட்யமா வேணான்னூட்டா. என்னிக்கும் சீதா இப்படி இருந்ததே இல்ல.நானும் விட்டுப்பிடிப்போம்ன்னு சும்மா இருந்தூட்டேன்.

சனிக்கிழமை அவளுக்கு ஆபீஸ் லீவு.அவ மூட் மாறலைன்னு தெரிஞ்சுண்டேன்.

ஏதாவது பேச்சு கொடுக்கணமேன்னு "இன்னிக்கு என்ன சமைக்கலாம் சொல்லு" அப்படீன்னேன்.

" இத மாத்திரம் எங்கிட்ட கேளூ" என்றாள் சீதா நிஷ்டூரமாக. நான்

" நேத்தி சாயங்காலத்தலேந்து பாக்கறேன். என்னமோ மாறி இருக்க.சரியா சாப்ட கூட இல்ல.என்ன நெனச்சிண்டிருக்க மனசுல" ன்னு பொரிஞ்சு தள்ளீட்டேன். சீதா என்னை நேருக்கு நேர்பாத்து"தோ பார்ம்மா.நீ மனசில இருக்கறதை ஒளிவு மறைவு இல்லாம எங்கிட்ட சொல்றயாக்கும்" என்றாள். 

" எதை நான் மறைச்சேன் சொல்லுடி " என்றேன்.ஒரு நிமிஷம் அவ மௌனமா இருந்தா.அப்புறம் சொல்றா"நேக்கும்,ராம்க்கும் கல்யாணம் நடக்காதுன்ற விஷயத்தை நீ மறக்கலயா" என்றாள்.

நேக்கு ஷாக் அடிச்ச மாரி இருந்தது. இவ கிட்ட இத யார் சொல்லியிருப்பான்னு யோசிச்சேன்.சீதா  பயங்கர மைண்ட் ரீடர்.அவ என் கிட்ட " இந்த சமாஜாரம் எப்படி நேக்கு தெரிஞ்சுதுன்னு  பாக்றாயாக்கம். நேத்தி ராம் என் ஆபிசுக்கு வந்திருந்தார். அவர் எல்லாத்தையும் சொல்லீட்டார்" அப்டீன்றா.

நான் அவகிட்ட " நான் இதை உன்கிட்ட மறைக்கணும்னு நெனக்கல. இன்னைக்கு உக்கார்ந்து இதை பத்தி பேசலாம்னு நினைச்சுண்டு தான் இருந்தேன் "அப்படின்னு சொன்னேன்.அதுக்கு சீதா " இத பத்தி இனிமே பேசி என்ன பிரயோஜனம் சொல்லு" அப்படின்னா விரக்தியா.

"என்ன பண்ணுறது எல்லாம் உன் தலையெழுத்து.நீ மனுச  தேத்திக்கணம். வேற ஏதாவது நல்ல வரனா பாக்கலாம். நீ மனசு உடைஞ்சு போயிடக்கூடாது" என்றெல்லாம் சொன்னேன் .அதுக்கு சீதா "புரியர்தம்மா. இந்த ஏமாற்றத்தை   தாங்க முடியாமல், நான் ஏதோ பண்ணிண்டுவேனோன்னு பயந்து, நீ என்னை தேத்த ட்ரை பண்ணிண்டு இருக்க. ஜாடைல தான் நான் அப்பா மாரி. மனசுல உன்ன மாதிரி தான். உனக்குள்ள  மனோ தைரியம் நேக்கும் உண்டு . என்ன பண்றது.இந்த ஏமாற்றத்தை என்னால இப்ப தாங்க முடியல. இப்பவே சொல்லிட்டேன் இன்னும் கொஞ்ச நாளைக்கு கல்யாண பேச்ச விட்டூடங்க" என்று சொல்லிக் கொண்டே அவள் ரூமுக்கு போகச்சே அவள் கண்களில் கண்ணீர் திரண்டு இருந்ததை பார்க்கும் போது எனது நெஞ்சில் ரத்தம் வடிந்தது.

No comments:

Post a Comment