வடா பாவ்
தேவையான பொருட்கள்
*பூண்டு சட்னி*
*பவுடர் செய்வதற்கு...*
*வடா மாவிற்கு...*
*. கடலை மாவு 2 கப்
*. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
*. ஓமம் 1 டீஸ்பூன்
*. உப்பு சுவைக்கேற்ப
*. தண்ணீர்
தேவையான அளவு
*ஆலு வடா*
*செய்வதற்கு...*
*பிற பொருட்கள்*
*. பாவ் பன் 8
*. வெண்ணெய்
டோஸ்ட் செய்வதற்கு
*. எண்ணெய் -பொரிப்பதற்கு தேவையான அளவு
*செய்முறை*
* முதலில் பூண்டு சட்னி பவுடரை செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், எள்ளு, வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பை தூவி பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து வடா பாவ்விற்கு வேண்டிய வடையை தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நிறம் மாறியதும், அதில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 3-4 நிமிடம் கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு மசாலா குளிர்வதற்குள், ஒரு பௌலில் கடலை மாவு, மஞ்சள் தூள், ஓமம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சற்று கெட்டியாக கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்🔵🟣
No comments:
Post a Comment