நாற்கோணம் - 7
By N Krishnamurthy
*சீதா:* இன்னைக்கு வெள்ளிக்கிழமை. எழுந்திருக்கும் போதே என்னவோ போல இருந்தது. இன்னைக்கு வேற எண்ண தேச்சுண்டாகணம். இல்லேன்னா அம்மா உடமாட்டா. நெஞ்செல்லாம் ஏதோ படபடன்னு அடிச்சிக்கிறது.ஏன்னே தெரியல.
எண்ண தேச்சு குளிச்சூட்டு, பூஜை ரூம்ல போய் ஸ்லோகம் சொல்லிட்டு, டிரஸ் மாத்திண்டி வந்து பிரக்பாஸ்ட் சாப்பிட உக்காந்தேன். சாப்ட்டூட்டு கையில் லன்ச் பாக்ஸை எடுத்துண்டு ஆபீசுக்கு போனேன்.
வழக்கம்போல நான் போய் சேர்ந்த பத்து நிமிஷம் கழிச்சு ஜானகி வந்து சேர்ந்தா. என்ன பாத்து "ஹாய் சீதா" ன்னு அவ சொல்லவும்,பதிலுக்கு நானும் 'ஹாய் ஜானகி" ன்னு சொன்னேன்.
பத்தரை மணி இருக்கும். ரிசப்ஷனிஸ்டிடமிருந்து போன் வந்தது. "சீதா, உங்கள பாக்க ஒருத்தர் வந்து இருக்கார்.பர்சனலா பாக்கணும்னு சொல்றார்" என்றாள். "அவர் யாருன்னு பேர கேட்டு சொல்லும்மா" என்றேன். "ராம்ன்னு சொல்றார் " என்றாள்
ரிசப்ஷனிஸ்ட்
"என்ன இது .திடீர்னு ராம் வந்து இருக்கான்னு நேக்கு ஒண்ணுமே புரியல. ஒரு வேளை கல்யாண தேதி நிச்சயம் பண்ணியாச்சோ என்னமோ. அதை எங்கிட்ட நேர்ல சொல்லணும்ன்னு ஆசை பட்டு வந்திருக்கானோன்னு
நெனைச்சுண்டேன். நான் என் சீட்டிலேந்து எழுந்து போய் ராமை பாக்க போனேன். ராம் ரிசப்ஷன்ல போட்டிருந்த சோபாவ்ல உட்காந்துண்டு இருந்தான்.அவன் முகம் கொஞ்சம் இறுக்கமாக இருந்தது.நான் போய் அவன் எதிரில் நிந்துண்டு " என்ன இவ்வளவு தூரம்" ன்னு கேட்டேன். "உன்ன பாத்து ஒரு விஷயம் சொல்லணும்னு தோணித்து.அதான் வந்தேன் " என்றேன்.
நேக்கு இப்போ இன்னொரு பயம் பிடிச்சிண்டூட்த்து. "ஒருவேளை நான் உன்னை விரும்பல. ஜானகியைத்தான் விரும்புறேன்" னு சொல்லிடுவானோன்னு பயந்தேன்.
"என்ன சொல்லுங்கோ" ன்னு சொன்னேன். "பக்கத்துல காபி டே இருக்கு. அங்க போய் பேசலாமா" ன்னு கேட்டான்.
" ஒரு நிமிஷம் இருங்கோ. நான் என் டீம் லீடர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடறேன்" அப்படீன்னு சொல்லுட்டு, உள்ள போய் என் டீம் லீடர் ஜெயஸ்ரீ கிட்ட "கொஞ்சம் வெளில போறேன்.அரை மணில வந்துடறேன்"ன்னு சொன்னேன். "எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கரம் வரப்பாரு" என்றாள் அவள். நான் இப்படி வெளியில போனதும், திரும்பி வந்து பர்மிஷன் வாங்கிட்டு போறதையும், ஜானகி கவனிச்சிண்டே இருந்தா. அவகிட்ட நான் ஒண்ணும் சொல்லல. கல்யாணம் டேட் பிக்ஸ் ஆயிருந்தா அதை தெரிஞ்சுண்டு வந்து அவகிட்ட சொல்லலாமேன்னு இருந்தேன்.
நானும்,ராமும் நடந்து போனோம்.
எவ்வளவோ நாள் நான் அவன் கூட இப்படி நடந்து போயிருந்தாலும், இன்னிக்கு நடந்து போகும்போது ஒரு இனம் தெரியாத சந்தோஷமா, பயமான்னு, தெரியல இருந்தது.
பக்கத்தில் இருந்த காபி காபிடே ல போய் உட்கார்ந்ததும் "காஃபி ஆர்டர் பண்ணட்டுமா" ன்னு கேட்டேன்.அதுக்கு "காபிவேண்டாம். இங்க விஷம் கிடைக்குமான்னு பாரு. ஆர்டர் பண்ணு.ரெண்டு பேரும் சாப்டூட்டுஒரே அடியா போயிடலாம்" அப்படின்னான். எனக்கு பயம் ஆயிடுத்து." என்ன சொல்றீங்க நீங்க" அப்படின்னு கேட்டேன். "நான் சொல்வதைக் கேட்டு மயக்கம் போட்டுடாத. நேத்து ராத்திரிதான் அம்மா மெதுவா இந்த விஷயத்தை என்கிட்ட சொன்னா. நம்ப ரெண்டு பேர் ஜாதகத்தையும் ஜோசியர் கிட்ட காட்டினாளாம். ரெண்டு ஜாதகமும் பொருந்தி வரலையாம். சரின்னு அம்மன் சம்மதியில பூ போட்டு பாத்து இருக்கா. அதுலயும் தப்பான பூதான் வந்ததாம். அதனால அம்மா ரொம்ப குழப்பமா இருக்கா. அம்மா அப்புறம் இத உன் அப்பா கிட்ட சொல்லி இருக்கா.உங்க அப்பா ரெண்டு பேரு ஜாதகத்தையும் எடுத்துண்டு போய் அவருக்கு தெரிஞ்ச ஜோசியர் கிட்ட காட்டி இருக்கார் .அவரும் இதே பதிலை சொல்லி இருக்கிறார்.அனேகமா நம்ம கல்யாணம் நடக்காது" என்று முடித்தான். என் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.
" என்னால இதை நம்பவே முடியலையே" என்றேன். "மனச திட படுத்திக்கோ. நான் சொல்றபடி கேளு. நமக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு. ஒரு நல்ல நாள் பாத்து ரெஜிஸ்டர் ஆபீஸ் போய் கல்யாணம் பண்ணிண்டு அப்புறம் வீட்டுக்கு சொல்லிக்கலாம். என்ன சொல்ற" என்றான். "ரெண்டு குடும்பமும் பாத்து சந்தோஷப்பட, பெரியவாள்ளாம் ஆசீர்வாதம் பண்ணற மாதிரி கல்யாணத்தை விட்டூட்டு, ரிஜிஸ்டர் ஆபீஸ்ல போய் ரகசிய பண்ணிண்டா நண்ணாவா இருக்கும்" என்று சொன்னேன். அதற்கு ராம்" எனக்கு மட்டும் அப்படி ஆசையா? அதுதான் ஒரே வழி. வேற வழி இல்லை" என்றான்.நான் அவனிடம்" கொஞ்சம் டைம் கொடுங்க. நான் யோசிக்கிறேன்" என்று சொன்னேன். அதுக்கு ராம்" நீ எவ்ளோ டைம் ஓணா எடுத்து யோசி. எங்க ஆத்லயும்,உன்
ஆத்லயும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க போறதில்ல. அதை மட்டும் ஞாபகம் வெச்சுண்டு நீ என்ன வேணாலும் யோசி" என்று கூறினான். "சரி. நான் போயிட்டு வரேன்" ன்னு அவன் கிளம்பீட்டான். அங்கிருந்து கிளம்பி ஆபீஸ் போகச்ச ரொம்ப தூரம் நடந்து போற மாறி நேக்கு இருந்தது.
துக்கம் தொண்டய அடச்சுது. எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறதூன்னு புரியல. சீதான்னு பேர் வெச்சாலே வாழ்க்கையில கஷ்டத்தை தான் அனுபவிக்கணமோ?
ஜானகி என்னை பார்த்து "என்ன சீதா. எங்க போயிட்டு வர. ஏதாவது ப்ராப்ளமா" என்று கேட்டாள்.நான் சமாளிச்சிண்டு அவளிடம் "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல ஜானகி. யாரோ தெரிஞ்ச வா வந்தா. பாத்துட்டு வரேன் "என்று சொல்லி சமாளித்தேன்
No comments:
Post a Comment