வசந்த காலம் வருமோ?-15
By N Krishnamurthy
ம்ருதுளாவிற்கு முதல் வருடம் விரைவில் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது.
ஆயிஷ்ஹோமம் பண்ணுவதற்காக ஒரு நாள் சாரங்கன் குடும்ப வாத்தியாரான ராகவ ஐயங்காரை போய் பார்த்துவிட்டு வந்தான்.
பன்னிரெண்டு மாதங்கள்முடிந்து பதிமூணாம் மாதத்தில் ம்ருதுளா பிறந்த நக்ஷ்த்ரமான மகம் வரும் தேதியையும், ஆயுஷ் ஹோமத்திற்கு என்னென்ன வாங்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்று அவர் சொல்ல அதைக் குறித்துக் கொண்டு வந்து கோமளத்திடம் கொடுத்தான் சாரங்கன்.
ஆயுஷ் ஹோமம் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
ரங்க நாயகிக்கும், சீதாலஷ்மிக்கும் போஸ்ட் கார்டில் ஆயுஷ்ஹோம பத்திரிக்கை அனுப்பிய மூன்று நாட்கள் ஆனதும் அவர்களுக்கு போன் செய்தான் சாரங்கன். கோமளா தான்பேசினாள். இரண்டு பேருமே பத்திரிக்கை வந்துவிட்டதை உறுதி செய்தி விட்டு, முதல் நாளே வந்து விடுவதாக சொன்னார்கள்.
சீதாலஷ்மி, மஹா மற்றும் பட்டுசாமி முதல்நாள் மாலை மூணு மணிக்கு வந்து சேர்ந்தார்கள்.ரங்கநாயகி குடும்பத்துடன் மாலை ஆறு மணிக்கு வந்தாள்.
முதல் நாள் இரவே வீட்டின் முன்புறம் மாவிலையால் தோரணம் கட்டியிருந்தார்கள்.மாக்கோலம் போட்டு,சுற்றிலும் செம்மண் பூசி இருந்தார்கள்.
ஆயுஷ் ஹோமம் அன்று காலை ம்ருதுளாவை ஸ்னானம் செய்வித்து, புது ஆடையை அணிவித்தாள் மைதிலி.
ஒரு வயதுக் குழந்தை துருதுறுப்பின் மறு உருவம் என்று சொல்லலாம்.கை, கால்கள் முளைத்து சுதந்திரமாகத் திரிய கொஞ்சம் தைரியமும் வந்துவிட்டது. என்ன பண்ணலாம் என்று சுற்றிச்சுற்றிப் பார்க்கிறது.
ஆயுஷ் ஹோமத்தைத் தொடங்குவதற்கு முன் வழக்கம் போல முதலில் தெய்வப் அனுக்ஹரத்தையும், பெரியவர்களின் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கான சாரங்கனும்,மைதிலியும் அனுக்ஞையைச் செய்தார்கள்
அடுத்து மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விக்னேஸ்வர பூஜை செய்யப்பட்டது. இதற்குப் பிறகு இந்த ஹோமத்தை எதற்காக எப்படிச் செய்யப் போகிறோம் என்பதை விளக்கும் சங்கல்பம் செய்யப்பட்டது.
சகல தீர்த்தங்களின் அதிபதியான வருணன், ஆயுள் தேவதை, மிருத்யுஞ்சய ருத்ரன், பஞ்ச சாத்குன்ய தேவதைகள், நட்சத்திர தேவதை (குழந்தை எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அந்த நட்சத்திரத் துக்கான தேவதை) ஆகியோரை தியானித்து ஆவாகனம் செய்தார்கள்.
பிறகு ஆயுஷ்ஹோமம் செய்யப்பட்டது.
இதற்கு பிறகு ம்ருதுளாவிற்கு காது குத்த ஏற்பாடாகியிருந்தது.
சாரங்கன் ம்ருதுளாவை மடியில் உட்கார வைத்துக்கொண்டு ஒரு வாழைப்பழத்து தோலுரித்து அவளிடம் நீட்டினான். மேலும் குழந்தைக்கு காது குத்தும் முன், இரு காது முனைகளிலும் சிறிது தேங்காய் எண்ணையை தடவினாள் ரங்கநாயகி.
தட்டான் காதில் ஊசி கொண்டு துளையிட ஆரம்பித்தார். இன்றைய காலத்தில் பயன்படுத்தப்படும் காது குத்த உதவும் துப்பாக்கி போன்றவை போல நவீன கருவிகள் அக்காலத்தில் இல்லை.
குழந்தை வலி பொறுக்காமல் கத்தினாள்.மைதிலி நெடுநேரம் சமாதானம் செய்ய வேண்டியிருந்தது.
அங்கு வந்திருந்த தூரத்து சொந்த பெண்மணி
என்று பாடினாள்.
மைதிலி
என்ற திருவாய்மொழியை சஹானா ராகத்தில் பாடினாள்.
(மைதிலி சிறுவயதில் திருப்பாவை, திருவாய்மொழி,மற்றும் பல வைணவ இலக்கியங்களை மனப்பாடமாக கற்றுத் தெரிந்திருந்தாள். இது கூட ஆச்சரியமில்லை, ஆனால் எந்தெந்த இடங்களில் எந்தெந்த பாடல்களை எடுத்து பாட வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கும் அவளது ஞானம் ஆச்சரியப்படும் விதமாக இருந்தது)
No comments:
Post a Comment