நாற்கோணம் -14
By N Krishnamurthy
*ஜானகி:* ராகவ அண்ணாவை மகாபலிபுரத்தில் பாத்ததும் நான் திகைப்படயவில்லைன்னு சொல்லியிருந்தேன் அல்லவா. அது ஏன்னு தெரிஞ்சுகதற்கு, முதல் நாள் நடந்த சம்பவத்தை உங்களுக்கு நான் சொல்லணும்.
சீதாவை உறவாக்கிக் கொள்ளணம்னு நான் முடிவு எடுத்ததும் என் மனசுல முதல்ல வந்தது ராகவன் அண்ணா தான். ராகவன் அண்ணாவும் நல்லா அழகா இருப்பான். ராகவா அண்ணாவையும், ராமையும் பக்கத்ல பக்கத்ல நிறுத்தி வைச்சு, ஒரு பொண்ணு கூப்பிட்டு யார் பிடிக்றதுன்னு கேட்டா அவ பதில் சொல்றதுக்கு ரொம்ப டைம் எடுத்துப்பா. எனக்கு என்னமோ ராகவ அண்ணா போட்டோ பினிஷ்ல, ராமை ஜெயிச்சிடுவான்னு தோணற்து. சீதாவையும் உறவாகிக்கணம்,ராமும் நேக்கு வேணும்ன்ற, ரெண்டு மாங்காயையும் ஒரே கல்லால அடிக்கணும்னா, ராகவா அண்ணா கிட்ட சரணாகதி பண்ணற்து தான் சரீன்னு தீர்மானம் பண்ணி, மகாபலிபுரம் போறதுக்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை மத்தியானம் ரெண்டு மணிக்கு ராகவன் அண்ணாவை போன்ல கூப்பிட்டேன். அண்ணா " ஹாய் ஜானு எப்படி இருக்கே. ஆபீஸ்லாம் எப்படி போயிண்டிருக்கு" என்று கேட்டான்.
"எல்லாம் சூப்பரா இருக்கு அண்ணா" என்று சொல்லிவிட்டு "அண்ணா இன்னைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு கொஞ்சம் பெசன்ட் நகர் பீச் வர முடியுமா" என்று கேட்டேன். அதுக்கு அவன் "வந்துடறேன். ஏதாவது அர்ஜெண்டா" ன்னு கேட்டான் அதுக்கு நான் " அவவளவு அர்ஜென்ட் இல்லேண்ணா.ஆனா முக்யமானது. உங்க கூட கொஞ்சம் பேசணும்" என்று சொன்னேன்.
"சரி ஆறு மணிக்கு நா வந்துடறேன். நீ அங்க வந்ததுக்கு அப்புறம் எங்க நிக்கிறேன்னு நேக்கு போன் பண்ணு" என்றான்
அன்று மாலை 5:50 க்கே நான் பெசன்ட் நகர் பீச் போய்ட்டேன். ஆறு மணி வரைக்கும் வெயிட் பண்ணி பாத்தூட்டு அண்ணாவுக்கு போன் பண்ணேன் .எங்கே இருக்கேன்னு சொன்னவுடன் அண்ணா நான் இருக்கும் எடத்துக்கு வந்தான். ரெண்டு பேரும் பீச் மணல்ல போய் உக்காந்தோம்.
"சோ ஜானு. அப்புறம் எப்படி இருக்க. என்ன விஷயம். ஏதாவது லவ் மேட்டரா" என்றான். அதுக்கு நான்" சீ.சீ. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல"ன்னு சொன்னேன். பிறகு சீதாவின் விஷயத்தைப் பற்றி முழுக்க நான் அவன் கிட்ட சொன்னேன். அண்ணா அதை கேட்டூட்டு "பாவம் உன் பிரண்டு. ஏன்தான் மனுஷாலுக்கு இப்படி எல்லாம் வரதோ" ன்னு கூறி அங்கலாச்சிண்டான். அதுக்கு பிறகு அவன் "இத என் கிட்ட ஏன் சொல்ற" என்று கேட்டான்.
கொஞ்சம் தயங்கி தயங்கி நான் அவனிடம் "இத உன்கிட்ட சொல்றதுக்கு ஒரு காரணம் இருக்கண்ணா. சீதா என் டியர் ஃப்ரெண்ட். அவளுக்கு ராம் கூட கல்யாணம் ஆகலேன்னா வேற ஏதாவது நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நான் தீவிரமா யோசிச்சிண்டு இருக்கும் போது உங்க ஞாபகம் தான் வந்தது. உங்களுக்கு ஆத்துல பொண்ணு பாக்கறான்னு கேள்விப்பட்டேன். இதுக்கு நீங்க ஒத்து போவேளோ அல்லது உங்க மனசுல வேற எதாவது பொண்ணுக்கு எடம் இருக்கோன்னு நேக்கு சந்தேகமா இருந்தது. அதனால தான் உங்க கிட்ட பேசணும்னு கூப்பிட்டேன் " என்றேன்.
அண்ணா கொஞ்ச நேரம் மௌனம் சாதிச்சான். அப்புறம் அவன் பேச ஆரம்பித்தான்
"என் மனசுல எந்த பொண்ணுக்கும் எடமில்லை. நீயே சீதாவ ரெக்கமண்ட் பண்ணும்போது சீதாவுக்கும், ராமுக்கும் மனசளவலதான் நெருக்கம் இருக்குன்னு நான் புரிஞ்சுண்டூட்டேன். எனக்கு சீதாவை பண்ணிக்கிறதுல எந்த அப்ஜக்ஷனும் இல்லை" என்றான்.இத கேட்டதும் " நான் ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.ரொம்ப தேங்க்ஸ் அண்ணா " என்று மொபைலில் ஸ்டோர் பண்ணியிருந்த. சீதாவின் போட்டோவை காண்பிச்சேன்.
"ஆனா ஒரு விஷயம்" என்றான் ராகவா அண்ணா ."என்னண்ணா" என்றேன் திகிலுடன்.
"அப்பா, அம்மா ஜாதகம் பொருந்தினாத்தான் ஒத்துப்பா"என்றான்.
" சரிண்ணா. அத பாத்துக்கலாம். எப்படி இருந்தாலும் ஜாதகம் பொருந்தினா தான் இந்த கல்யாணம் நடக்கும்னு நேக்கும் தெரியும்" என்றேன்.
பிறகு ராகவ அண்ணா என்னை உத்து பாத்து "நேக்கு என்னமோ உன் பிரண்டுக்கு ஒத்தாசை பண்ணறதல நீ குறியாயிருக்கறதோட வேற எதுவோ உன் மனசுல இருக்குன்னு நெனக்கிறேன்" என்றான். நான் மௌனம் சாதித்தேன். என் இரு கன்னங்களும் சிவந்தன.
உடனே அண்ணா" உனக்கு அந்த ராம் மேல ஒரு கண்ணோ" என்றான்.
நான் அண்ணாவிடம் "இல்லைண்ணா. ஒரு கண் இல்ல. ராம் மேல நேக்கு ரெண்டு கண்" என்றேன் வெக்கத்தை விட்டு.
அண்ணா கலகலவென்று வாய்விட்டு சிரித்தான். "சரிம்மா .ஏற்கனவே நம்ம ரெண்டு பேரும் அண்ணா,தங்கை.புது உறவையும் கொண்டு வரணும்னு நீ பாக்கற. எல்லாம் அந்த பகவான் விட்ட வழி" என்று சொன்னான்.
"அண்ணா உன் ஜாதகம் உன் கிட்ட இருக்கா" ன்னு கேட்டேன். " இல்லம்மா. நான் ஒணா அப்பா, அம்மா கிட்ட எழுதி வாங்கி தரேன்" என்றான். நான் "சரிண்ணா.ஒரு ரெண்டு மூணு நாள்ல கொடுத்தயான்னு நான் மேல் கொண்டு ஆக வேண்டியதை பாப்பேன்" ன்னு சொன்னேன்." சரி ஜானு .அப்ப நான் கிளம்பட்டுமா " என்றான்." நீ எப்படி போப்போற. உன்ன ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணீடட்டுமா" என்றான். அண்ணா இருப்பது கோடம்பாக்கத்தில். என்ன ஹாஸ்டல்ல உட்டூட்டு போனா அவனுக்கு நாழி ஆயிடும்.
" ஒண்ணு பண்ணண்ணா. மத்திய கைலாஷ் ஸ்டாப்பிங்ல என்ன இறக்கி விட்டூடு " என்றேன். அண்ணா என்னை மத்ய கைலாஷ் ஸ்டாப்பிங்ல இறக்கி விட்டதும், நான் ஷேர் ஆட்டோ பிடிச்சு ஹாஸ்டலுக்கு போய் சேரும்போது மணி எட்டை நெருங்கீட்த்து. ரெண்டு சாப்பத்தி சாப்ட்டேன்னு பேர் பண்ணீட்டு படுக்கயில விழுந்தேன்.மனசுல உற்சாகம் பொங்கி ததும்பியது. அந்த சந்தோஷத்தோட நான் தூங்க ஆரம்பித்து விட்டேன்.
No comments:
Post a Comment