வசந்த காலம் வருமோ?-7
By N Krishnamurthy
ரங்கநாயகி தீபாவளிக்கு வந்திருந்து,திரும்ப போய் கிட்டத்தட்ட இரண்டு மாதம் ஆகிவிட்டது.
அன்று காலையிலிருந்தே சுமதிக்கு படபடப்பாக இருந்தது. இந்த மாதம் தள்ளிப் போயிருந்தது அவளுக்கு தெரிந்திருந்தது.
காலையில் கோமளா குடிக்க பாலை தந்த போது, மைதிலி "வேண்டாம்மா. ஒரு மாரி வாந்திக்கு வர மாரி இருக்கு" என்றாள்.
திடீரென்று நினைத்துக் கொண்ட கோமளா மைதிலியைப்பார்த்து "இந்த மாசம் நீ குளிச்சயோ" என்று கேட்டாள்.
தலையை குனிந்த மைதிலி "இல்லம்மா. அம்பது நாள் ஆயிடுத்து" என்றாள்.
கோமளத்துக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை." அப்ப போய் டாக்டரை பாக்கறது தானே" என்றாள். "இன்னும் ஒரு பத்து நாள் போகட்டும்ன்னு என்று பாக்கறேன்" என்றாள் மைதிலி. "அதெல்லாம் வேணாம் மைதிலி. நீ சாயங்காலம் அவனை அழச்சுண்டு போய் டாக்டர பாத்தூட்டு வா" என்றாள்.
சாரங்கனும், மைதிலியிம் அன்று மாலை டாக்டரை பார்க்கப்போனார்கள். இவர்களை பார்த்து வரவேற்ற டாக்டர்" என்ன மைதிலி,ஏதாவது விசேஷமா" என்று கேட்டாள். "ஆமாம் டாக்டர்" என்று தலையசைத்தாள் மைதிலி. சாரங்கனை பார்த்து டாக்டர்" நீங்க கொஞ்சம் வெளியே இருங்கள் " என்று கூறிவிட்டு மைதிலி டெஸ்ட் செய்து பார்த்தாள். பின்பு அவள் மைதிலியிடம் "கங்க்ராஜுலேஷன்ஸ் மைதிலி. நீ கன்சீவ்வாயிருக்க" என்று கூறி சாரங்கனை உள்ளே வரச்சொன்னாள். சாரங்கனிடம் விஷயத்தை கூறினாள். " நீங்க கொஞ்சம் கவனமா இருக்கணும். ரொம்ப நாள் கழிச்சு கன்சிவ் ஆயிருக்கா. அதனால நீங்க கொஞ்சம் கவனமா பாத்துணும். நான் டானிக் ,மாத்திரை எழுதி தரேன். சாப்பிட சொல்லுங்க. நல்ல ஊட்டமான ஆகாரத்தை சாப்பிடணம்" என்று சொல்லி விட்டு டானிக்கையும் ,மாத்திரையும் எழுதி கொடுத்தாள். "ரெகுலராசெக்கப்புக்கு வரணம் " என்று சொல்லி அடுத்த செக்கப் தேதியை குறித்துக்கொடுத்தாள்.
மிக சந்தோஷத்துடன் இருவரும் வீட்டுக்கு திரும்பினார்கள்.வரும் போது கடையிலிருந்து கொஞ்சம் ஸ்வீட் வாங்கிக்கொண்டார்கள்
வாசலிலேயே நின்று கொண்டு இருந்த கோமளா "என்னாச்சு மைதிலி" என்றாள் பரபரப்புடன். மைதிலி நாணத்தில் தலையை குனிந்தாள். "ஓ அப்படியா சமாச்சாரம்" என்று கூறிய கோமளம் தன் மாட்டுப் பண்ணை தன்னோடு அணைத்து கொண்டு " பெருமாள் நம்பளை கைவிடலம்மா" என்று கூறினாள்.
பின்பு மைதிலையையும் சாரங்கனையும் கை, கால் அலம்பி கொண்டு வர சொன்னாள். பூஜை அறையில் பெருமாள் படத்தின் முன்பு கற்பூரத்தை ஏற்றி பெருமாளுக்கு காட்டிய கோமளா "பெருமாளே. வெங்கடாஜலபதி. நீதான் நல்லபடியா காப்பாத்தணம்" என்று சொன்னாள். மைதிலியும், சாரங்கனும் பெருமாளுக்கு நமஸ்காரம் செய்தார்கள்.
தன்னுடைய அறையில் இருந்து வெளியில் வந்த சக்கரவர்த்தி "என்ன நடக்கறது இங்க" என்று கேட்டார். உடனே கோமளம் " இன்னும் கொஞ்ச நாள்ல உங்களுக்கு பேரனோ,பேத்தியோ பொறக்க போறது" என்றாள். அதைக் கேட்ட சக்கரவர்த்தி மிகவும் சந்தோஷத்துடன் " என்ன இத சாதாரணமா சொல்ற" என்று கூற,வாங்கிக்கொண்டு வந்திருந்த ஸ்வீட்டில் கொஞ்சம் அவருக்கு தந்தான் சாரங்கன்.
பெருமாள் படத்தை முன் உட்கார்ந்த மைதிலி, தம்புராவை மீட்டிக்கொண்டு
" வந்நமு ரகுநந்தநா ஸேது
பந்தந ,
பக்தசந்தந, ராம" என்ற சகானா ராகத்தில் அமைந்த தியாகய்யர் கீர்த்தனையை மனமுருகி பாடினாள்.காருண்ய ரசத்தை வெளிப்படுத்துவதில்,
சஹானா ராகத்திற்கு இணையாக ஏதும் கிடையாது. அதை மிகுந்த பாவத்துடன,தன்னுடைய தீங்குரலில் மைதிலி பாடியது, சர்க்கரை பந்தலில் தேன் மழை பொழிந்த மாதிரி இருந்தது. பெருமாளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவள் இதை பாடி முடித்தாள்.
வாழ்க்கையில் நாம் எல்லோரும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பிறருக்கு நன்றி சொல்கிறோம். அதை ஒரு நாகரீகமாக கூட பழகி விட்டோம். பஸ்ஸிலிருந்து இறங்கும் போது, படிக்கட்டின் அருகில் நின்று கொண்டிருக்கும் பயணியை நகரச் சொல்லிவிட்டு, அவர் நகர்ந்ததும், அவருக்கு நன்றி சொல்கிறோம். இது போன்ற சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட நன்றி சொல்லும் நாம், கடவுள் சில நல்லவைகளை நமக்கு அளிக்கும்போது மறந்தும் கூட அவருக்கு நன்றி தெரிவிப்பதில்லை .
சில அதிமேதாவிகள் இதைப் பற்றி குறிப்பிடும் போது "ஆமாம் நீங்கள் நன்றி சொல்லித்தான் கடவுளுக்கு விடிய போறதாக்கும்" என்று உளறுகிறார்கள். கஷ்டப்படும்போது கடவளிடம் பிரார்த்தனை செய்யும் நாம், ஒரு நல்லது நடக்கும் போது அதற்காகவும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து, நன்றி கூற வேண்டும்.
கோமளம் சாரங்கனைப் பார்த்து" டேய்.சாரங்கா. ரங்கநாயகிக்கு டெலிபோனை போட்டு,விஷயத்தை சொல்லுடா.அவ ரொம்ப கவலைப்பட்டுண்டு இருந்தா" என்றாள். சாரங்கன் ரங்கநாயகிக்கு போன் போட்டான்." அக்கா, ஒரு வழியா மைதிலி உண்டாகிருக்கா" என்றான். அந்தப் பக்கத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு பதிலே வரவில்லை. பிறகு சுதாரித்து பேசிய ரங்கநாயகி
நீங்க தாண்டா கவலைப்பட்டிண்டிருந்தேள்.நேக்கு நிச்சயம் அவளுக்கு குழந்தை பிறக்கும்ன்னு தெரியும்டா. ஜாக்கிரதையா பாத்துக்கோ. நான் ஒரு பத்து நாள் கழிச்சு அவள வந்து பாக்கறேன்" என்று சொன்னாள். ரங்கநாயகி வெகு சுலபமாக தன்னுடைய ட்ராக்கை மாற்றிக் கொண்டு விட்டாள்.
(தொடரும்)
No comments:
Post a Comment