நாற்கோணம் - 11
By N Krishnamurthy
*ராம்:* சீதாவை போய் பாத்துட்டு வந்ததுக்கப்பறம் ரெண்டு வாரம் ஓடீட்த்து. அவகிட்டேந்து ஒண்ணும் போன் வரல.
அவ என்னதான் பண்ணுவ.பாவம். நிச்சயம் ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு அவ ஒத்துக்க மாட்டான்னு நேக்கு தெரியும். இருந்தாலும் சும்மா சொல்லி வைக்கலாம்னு தான் சொல்லி வச்சேன். எனக்கும் வேற வழி தெரியல.
நடுவுல இந்த ஜானகி வேற ஒரு தரம் போன் பண்ணி இருக்கா. நான் அவ கால எடுக்கல.சீதாவை சும்மா வெறுப்பேத்தற்தக்கு ஜானகி கூட பேசினது தப்புன்னு எனக்கு இப்ப தோணறது.கண் கெட்ட பின்னாடி சூர்ய நமஸ்காரம்.இத அட்வான்டேஜா எடுத்துண்டு, ஜானகி எதுக்காவது அடி போடறாளோன்னு சந்தேகமா இருக்கு.
மொத்தத்ல என்ன பண்றதுன்னு நேக்கு தெரியல. ராமாயணத்தில ராமன் சீதாவோட கல்யாணம் ஆன பெறகு தான் 14 வருஷம் பிரிஞ்சு இருந்தான். என் சீதாவ கல்யாணம் பண்ணிக்காமலேயே வாழ்நாள் முழுக்க பிரிஞ்சி இருக்கணம்னு போது மனசு கெடஞ்சு அடிச்சுகறது.
நான் என்ன தப்பு பண்ணேன்.யாருக்கு த்ரோகம் பண்ணேன். எனக்கு இப்படி எல்லாம் வரது.
ரெண்டு மாசம் வெயிட் பண்ணி பாக்க போறேன். பிராப்ளம் சரியாகலேன்னா ஏதாவது ஆபர்ச்யுனிடி கிடைச்சா போய் யூ.எஸ். ல ரெண்டு வருஷம் இருந்துட்டு வந்துட வேண்டியது தான். ஆறு மாசம் முன்னாடி ஆபீஸ்ல, யூ.எஸ் ல ரெண்டு வருஷம் வேலை செய்தற்கு ஆபர்ச்யுனிடி இருக்கு, போறயான்னு கேட்டா . அப்போ வேணாம்னு சொல்லிட்டேன்.வேற ஒண்ணும் இல்ல. அப்பா, அம்மாவை, சீதாவை விட்டு பிரிஞ்சு இருக்கணுமேன்னுதான்.இப்ப சீதாவே இல்லைன்னு ஆயிட்டதுக்கப்புறம் கொஞ்ச நாள் யூ.எஸ் ல போய் இருந்துட்டு வந்தா என்னான்னு தோணறது.ஆபீஸ்ல செக் பண்ணி பாக்கணும்.
காலைல ஏந்திருக்கும்போது "ஒரு வேளை பொருத்தமில்லைன்னு ஜோசியர் சொன்னது பொய்யாயிருக்குமோ"ன்னு நெனச்சுப்பேன்.அப்போ,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா வாயில போட்டுண்ட உடனே, அது தொண்டேல எறங்கி கரஞ்சு, ஸ்வீட் பூறா உடம்பல பரவற மாரி இருக்கும். அடுத்த செகண்ட் அது உண்மையில்லேன்னு தெரிஞ்சதும், தமிழ் வருஷ பொறப்பன்னிக்கி, அம்மா பரரிமாற்ற வேப்பம் பச்சடி சாப்ட்ட மாறி மனசெல்லாம் கசக்கும்.
இந்த மனசுதான் எல்லாத்துக்கும் காரணம்.மனச அடக்கணம் இல்லேன்னா ஒடுக்கணும்.சீரியஸ்ஸா த்யான கிளாஸ் போகலான்னு கூட யோசிக்கறன்.
அப்பா,அம்மாவுக்கு ஒரே பையனா பொறந்து தொலைச்சிட்டேன். இல்லேன்னா ராமகிருஷ்ணா மடத்தில் சேந்து ராமாநந்தான்ற பேரோட சன்னியாசம் வாங்கிண்டிருப்பேன். இப்படி ஒரு ரெண்டு கெட்டான் நெலமை நேக்கு வரணுமா.
அதென்னவோ சின்ன வயசுலேந்து ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட்ஷிப்பையும் யார் கிட்டயும் வளத்துகல.அப்படி யாரவது க்ளோஸ் ஃப்ரண்டுன்னு இருந்திருந்தா அவன் கிட்ட என் துக்கத்தை கொட்டி,ஆறுதல் தேடிண்டிருக்கலாம்.
சின்ன வயசுலேந்து இன்னிக்கு வரைக்கும் என் க்ளோஸ் ஃப்ரண்டுன்னா அது சீதாதானே.
ஆத்துல கூட ஒத்தர் கிட்ட ஒத்தர் பேசிக்கறது இல்ல. அம்மா என் மூஞ்சிய பாக்குறதுக்கு பயப்படறா. அப்பா கூட பொதுவாவே அதிகமாக பேசறது இல்ல. எல்லா குடும்பத்திலும்
வளர்ந்த பசங்க அப்பா கூட அதிகமா பேசறது இல்ல. என்ன காரணம்ன்னு நேக்கு தெரியல.
வாழ்க்கை ரொட்டீனா போயிண்டு இருக்கு.
வேற வழியில்லேன்னு ஒரு நாள் சீதாவுக்கு போன் பண்ணேன். போன எடுத்த சீதா "சொல்லுங்க" அப்படீன்னா.
" சீதா நீ தான் சொல்லணும். நான் சொன்னத யோசித்து பாத்தயா" ன்னு கேட்டேன். அதுக்கு அவ
" நான் நண்ணா யோசிச்சு பாத்தூட்டேன். ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கறது திருட்டு கல்யாணத்துக்கு சமம். அது வேண்டாம்னு நெனக்கறேன்" என்றாள் உறுதியா.
" அப்ப இதுக்கு என்னதான் சொல்யூஷன்" னு கொஞ்சம் கோபமா கேட்டேன். இத கேட்டதும் அவ உடைஞ்சு போயிட்டான்னு நெனக்கறேன்.அந்த பக்கம் லேசா அழுற மாதிரி கேட்டது. எனக்கும் கொஞ்சம் அழணம் போல இருந்தது. சுதாரிச்சிண்ட அவ சொல்றா "ஏதாவது சொல்யூஷன் கெடைக்கறதா பாப்போம். இல்லன்னா அந்த பெருமாள் விட்ட வழின்னூ அவாவா வழியை அவாவ பாத்துண்டு போக வேண்டீதுதான்".
நான் போன கட் பண்ணிட்டேன். தொடர்ந்து பேசினா எங்க நான் அழுதுடுவனோன்னு நேக்கு பயமா இருந்தது.
மாடிலேந்து கீழே இறங்கி வந்து ரூமுக்குள் நுழைஞ்சு பாரதியார் கவிதை புக்கை திறந்தேன்.
நேக்கூன்னு அந்தமகா கவி எழுதி வெச்ச மாதிரி
என்ற வரிகள் கண்ல பட்டு என் துக்கத்தை அதிகம் பண்ணீட்டது.
ஆம்பள அழக்கூடாதூன்னுவா.
ஏன் அழக்கூடாது?
இவ்வளவு துக்கத்தை மனசுல வெச்சுண்டு ஒத்தன் அழலைன்னா அவன் ஆம்பளையா,என் சொரணை உள்ள மனுஷனா கூட இருக்கமுடியாது.
No comments:
Post a Comment