Wednesday, November 1, 2023

அக்கி ரொட்டி

 *அக்கி ரொட்டி* 

 *தேவையானவை* : பச்சரிசி மாவு – கால் கிலோ, தேங்காய் – ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்),  கொத்தமல்லி –  ஒரு கட்டு, 

பச்சை மிளகாய் – 4, சீரகம் – ஒரு டீஸ் பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 50 கிராம், 

உப்பு – தேவைக்கேற்ப.

 *செய்முறை* :  கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  

எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, சப்பாத்திக்கு மாவு பிசைவதை விட சற்று தளர்வாக பிசையவும். 

ஆரஞ்சுப் பழ அளவு மாவு எடுத்து உருட்டி சூடான தவாவில் போட்டு, தண்ணீர் (அ) எண்ணெயை கையில் தடவி, அப்படியே ரொட்டி போல் தட்டவும். 

ஒருபுறம் சிவந்த பின் மறுபுறம்  எண்ணெய் விட்டு சிவக்கவிட்டு எடுக்கவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள புதினா/கொத்தமல்லி சட்னி சிறந்தது. 

விரும்பினால் கேரட், வெள்ளரியைத் துருவி மாவில் சேர்த்துத் தயாரிக்கலாம்.

No comments:

Post a Comment