வசந்த காலம் வருமோ? -20
By N Krishnamurthy
ராதிகாவின் அனுமானம் பொய்த்து போனது. சரியாக இரண்டே மாதங்களில் ம்ருதுளா கர்நாடக சங்கீதத்தின் பால பாடங்களை கற்றுக் கொண்டு விட்டாள்.
நெளிவு சுளுவுகள் அத்தனையும் அத்துப்படி ஆனது.Coming out with flying colours என்பார்களே அதுபோல அவள் ராதிகா வகுப்பிலிருந்து சீனியர் வகுப்பிற்கு சென்றாள்.
ராதிகாவிற்கு ம்ருதுளா மேல் கரை கடந்த அன்பும்,பாசமும் உண்டாயிற்று.
பிற்காலத்தில் இவள் கர்நாடக சங்கீத உலகை ஒரு கலக்கு கலக்கப்போகிறாள் என்று ராதிகா திடமாக நம்பினாள்.
இதன்பின்னர் ம்ருதுளா சுப்புலக்ஷ்மி வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்தாள்.
சுப்புலஷ்மியை குருவாக அடைந்தது ம்ருதுளாவுக்கு ஒரு பெரிய பாக்கியமாக இருந்தது.
சுப்புலக்ஷ்மி அடிப்படையில் (அதாவது பேசிக்கில்) மிகவும் ஸ்ட்ராங்காக இருந்தாள். குழந்தைகளுக்கு படிப்படியாக கற்றுக் கொடுத்தாள். குழந்தைகளின் மேல் கர்நாடக சங்கீதம் என்று பெரிய பளு, டக்கென்று இறங்காதவாறு பார்த்துக்கொண்டாள்.
ஒரு ராகத்தின் ஸ்வரூபம் கடைசி வரையில் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக, அதை கற்றுக் கொடுக்க, அதன் ஆரோகணம் அவரோஹணம், கீதம் என்று படிப்படியாக டெவலப் செய்த பின் தான் வர்ணம் கற்றுக் கொடுக்கப் போவாள்.
வர்ணம் கற்றுக்கொடுப்பதற்கு முன் பல கீதங்கள் மற்றும் ஸ்வரஜாதிகள்/ஜதிஸ்வரங்கள் ஆகியவற்றை சொல்லிக்கொடுத்தாள்சுப்பு லக்ஷ்மி. ஆரம்ப கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ராகங்களின் ஆரோஹணம் மற்றும் அவரோஹணத்தைப் பாடுவதற்கு, 15-20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாள். இவையே ஜீவ ஸ்வரங்கள் என்றும், ராக தேவதையின் முழு ஸ்வரூபத்தை வெளிக்கொணர இந்த பயிற்சி அவசியம் என்றாள்.
சரளி வரிசை,ஜண்ட வரிசை, மத்யஸ்தாயி, மந்த்ர ஸ்தாயி, தாரா ஸ்தாயி வரிசைகள் பற்றி விளக்கினாள். வர்ணங்களுக்குச் செல்வதற்கு முன் அலங்காரங்கள் பயிற்சி செய்யப்பட்டது.
வர்ணத்தை சொல்லி கொடுக்கும் போது,சுப்புலஷ்மி ராகத்தில் ஒரு கீதம், ஒரு ஜதிஸ்வரம் / ஸ்வர ஜதியையாவது அறிந்திருக்க வேண்டும் என உறுதி படுத்தினாள்.
மோகனத்தில் அலங்காரத்தையும், அதைத் தொடர்ந்து "வரவீணா ம்ருது பானி" கீதத்தையும், தொடர்ந்து இரண்டு ஜதீஸ்வரங்களையும் சொல்லித்தந்த பின்னர் தான் மோகன ராக வர்ணம் " நின்னு கோரி" யை பாடி பயிற்சி அளித்தாள்.
ஒரு கீர்த்தனத்தை சொல்லிக் கொடுத்தால் மற்ற குழந்தைகள் கிரஹித்துக் கொண்டு பாடுவதற்கு பத்து நாள் ஆகும் என்றால் ம்ருதுளாவிற்கு அது சரியாக ஒரே நாள் தான் பிடித்தது. நோடேஷன் எதுவும் எழுதிக்கொள்வதில்லை
ம்ருதுளாவின் வேகத்திற்கு சுப்புலக்ஷ்மியால் ஈடு கொடுக்க முடியவில்லை.
No comments:
Post a Comment