Tuesday, November 14, 2023

சேனைக்கிழங்கு வறுவல்

 மாலினி மாமியின்

சேனைக்கிழங்கு வறுவல்

*🔰தேவை*

சேனைக்கிழங்கு - 250 கிராம் 
* துருவிய தேங்காய் - 1/2 கப் 
* கடுகு - 1/2 டீஸ்பூன் 
* கறிவேப்பிலை - சிறிது 
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் 
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன் 
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
* சாம்பார் தூள் - 2 டீஸ்பூன் 
* உப்பு - சுவைக்கேற்ப 
* எண்ணெய் - தேவையான அளவு 
*மாலினி மாமி*

🔰செய்முறை: 

* முதலில் சேனைக்கிழங்கை குக்கரில் போட்டு, அதில் 1/4 கப் நீரை ஊற்றி, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். 

* பின்பு அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள் தாளிக்க வேண்டும். 

* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் பொன்னிறமாக வறுக்க வேண்டும். 

* பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், சாம்பார் தூள் சேர்த்து சில நொடிகள் வறுத்து, வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து, சிறிது உப்பைத் தூவி நன்கு ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும். 

* கிழங்கு நன்கு ட்ரையாகி, கிழங்குடன் மசாலா அனைத்தும் ஒன்று சேர்ந்ததும், அதில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் தயார்.

🟨🔴🟨🔴🟨🔴🟨🔴

No comments:

Post a Comment