Wednesday, November 29, 2023

கருப்பு உளுந்தில் அடை தோசை.

 உடலுக்கு வலு சேர்க்கும் கருப்பு உளுந்தில் அருமையான அடை தோசை.

பகிர்வு 

மல்லிகா

தேவையான பொருட்கள் 

இட்லி அரிசி -1 கப் துவரம் பருப்பு – 1/2 கப் கடலைப்பருப்பு -2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் -1/4 டீஸ்பூன் கருப்பு உளுந்து – 1/4 கப் உடைத்தது தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் -1/4 டீஸ்பூன் உப்பு -1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 6 மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு 

செய்முறை

முதலில் இட்லி அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு அரிசி பருப்பு முழுங்கும் வரை தண்ணீர் ஊற்றி இதை மூன்று மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அடுத்து உடைத்த கருப்பு உளுந்தை இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு ஒரு ஜல்லியில் தண்ணீர் முழுவதும் வடிய விட்டு அப்படியே ஊற விடுங்கள். இதை தனியாக தண்ணீர் ஊற்றி ஊற வைக்க கூடாது. வடிகட்ட நிலையில் ஊற வேண்டும். - இப்போது மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், உளுந்து இரண்டையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அடுத்து ஏற்கனவே ஊற வைத்த அரிசி பருப்பு இரண்டையும் சேர்த்து கால் டீஸ்பூன் உப்பையும் சேர்த்து மீண்டும் கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.   அடுத்து மிளகு சீரகத்தை ஒன்றும் பாதியுமாக தட்டி அதையும் இந்த மாவில் கலந்து பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் தோசை கல் வைத்து நன்றாக சூடான உடன் இந்த மாவு எடுத்து நல்ல மொறு மொறு தோசையாக ஊற்றி எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சிவந்ததும் எடுத்து விட்டால் கருப்பு உளுந்து அடை தோசை தயார். -

🌹🌹

வசந்த காலம் வருமோ? -27

 வசந்த காலம் வருமோ? -27

By N Krishnamurthy 

அந்த வாரம் வியாழக்கிழமை காலை  பதினோரு மணிக்கு சுப்புலக்ஷ்மி மைதிலிக்கு போன் செய்தாள். 

" சொல்லுங்க, மாமி "என்றாள் மைதிலி.

" உங்காத்துல கல்கி வாங்கறேளா" என்றாள் சுப்புலக்ஷ்மி.

"ஆமாம் மாமி .இன்னிக்க காலைல வந்திருக்கு. இன்னும் படிக்கலை " என்றாள் மைதிலி.

" சுப்புடு சார்,ம்ருதுளா கச்சேரியை விமர்சனம் பண்ணியிருக்கார்" என்றாள் சுப்புலக்ஷ்மி.

மைதிலி சற்றே பயத்துடன் " என்ன மாமி எழுதியிருக்கார்" என்றாள். அதற்கு சுப்புலக்ஷ்மி " நீங்களே படிச்சுப்பாருங்கோ" என்று சொல்லி போனை துண்டித்தாள்.

மைதிலிக்கு பயம் பிடித்துக்கொண்டது. சுப்புடு சார் மனதில் பட்டதை நறுக்கு தெரித்தாற்போல் எழுதிவிடுவார் என்று அவள் அறிந்திருந்தாள்.

போனை எடுத்த இடத்தில் வைத்த பின், அன்று வந்திருந்த கல்கி பக்கங்களை கிடுகிடுவென புரட்டி, சங்கீத விமர்சன பக்கத்தை கண்டுபிடித்து படிக்கத்தொடங்கினாள்.

அதில் அவர் எழுதியிருந்ததை அப்படியே தருகிறேன் 

" எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறார் என்று சொல்கிற மாதிரி நானும் சங்கீதக் கச்சேரிக்கு போயிண்டே இருக்கிறேன்.

எத்தன பேர் முழு கச்சேரியையும் மடியா, ஸ்ருதி விலகாம,ராக பாவம் மாறாமா பாடறாளோன்னு பாக்கறேன். இது போன ஞாயிற்றுக்கிழை வரை நடக்கல. சில பெரிய வித்வான்கள் நான் அவா  கச்சேரிக்கு வருவதை  விரும்புவதே இல்லை. எங்கே நான் ஏதாவது தப்பு கண்டுபிடித்து விடுவேனோ என்று யோசிக்கிறார்கள். சரியாக பாடினால் நான் ஏன் தப்பு கண்டுபிடிக்க போகிறேன்? 

இப்படித்தான் போன வாரம் ஒரு கச்சேரியில் ஒரு பெரிய சீனியர் வித்துவான், சங்கீத பரம்பரை குடும்பத்திலிருந்து  வந்தவர், தர்பாரில் லேசாக  நாயகியை அழைத்து வந்து நுழைத்து விட்டார். யாராவது கண்டுபிடிக்க முன்னர் தர்பாருக்கு திரும்பி விட்டார். இதை நான் கேட்டு தொலச்சூட்டேன். இப்பொழுதெல்லாம் நான் கச்சேரிக்கு போனால் முடிந்தவரை  என்னை காட்டிக் கொள்வதில்லை. 

சரி இன்றைய விமர்சனத்திற்கு வருகிறேன். பொதுவா நிறைய கச்சேரிக்கு நான் போகும் போது, *வர்ணம்* முடிந்ததும், கச்சேரியிலிருந்து திரும்ப *வரணம்* என்ற நினைப்பே வரும். போன ஞாயிற்றுக்கிழமை மியூசிக் அகேடமி  12 மணி கச்சேரி போயிருந்தேன். எல்லோரையும் போல நானும்  அசிரித்தையாக தான் கச்சேரிக்குப் போனேன். ஏதோ, மிருதுளா என்ற பொண்ணு முதல் முதலாக பாடரான்னு கேள்விப்பட்டேன் .சரி பார்க்கலாம் என்று போனேன்.பொண்ணு பாக்குறதுக்கு தேவதை மாதிரி இருந்தா. சரி சங்கீதம் எப்படி இருக்குமோன்னு பயந்து கொண்டு உட்கார்ந்து இருந்தேன்.

சஹானா வர்ணம் முடிஞ்சதும் எனக்கு தெரிஞ்சு போச்சு, ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு. கர்நாடக சங்கீதம் அழியாமல் இருக்கறதுக்கு பகவான் புதுசு புதுசா இவளைப்போல  உற்பத்தி பண்ணி  அனுப்பறான்னு.  இந்த குழந்தை  என்ன அருமையா பாடறா. இதுதான் முதல் கச்சேரி என்று சொன்னார்கள். பொய் சொல்றான்னு கூட எனக்கு முதலில் பட்டது. சீனியர் வித்வான்கள் கூட  கச்சேரி முழுதும் இவ்வளவு பர்ஃபெக்டாக பாட முடியுமான்னு எனக்கு தெரியவில்லை. சாங் செலக்ஷன் அபாரம். லலிதா ராகத்ல இந்த பொண்ணு பாடின பாட்டு இருக்கே, ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் அசாத்தியம். நிச்சயம் அந்த சபாவல முத்துசாமி தீக்ஷதர் எங்கேயாவது உட்கார்ந்திருந்து, கேட்டுண்டு, ரசித்திருப்பார்ன்னு  நினைக்கிறேன். கொடுத்த டயத்தை கன கச்சிதமா இந்த பொண்ணு பயன்படுத்தி இருக்கா .இந்த பொண்ணு கச்சேரியை ஒரேடியா பாராட்டி இருக்கேனே  ஒண்ணும் குற்றம், குறை இல்லையான்னு கேக்கலாம். சத்தியமா குற்றம் ஏதுமில்லை.  எனக்கு ஒரே ஒரு சின்ன குறை. இன்னும் ஒண்ணு, ரெண்டு தியாகராஜ கீர்த்தனைகளை  இந்த குழந்தை பாடி இருக்கலாம்  என்று. இந்த குழந்தைக்கு ஒரு அட்வைஸ். இவளுக்கு நிறைய கச்சேரி சான்ஸ் வந்துண்டே  இருக்கும். எல்லா சான்ஸ்யையும்  எடுத்துக்க வேண்டாம்.நல்ல சபாவா பார்த்து பாடணும்" என்று முடித்து இருந்தார்.

மைதிலியின் சந்தோஷத்திற்கு அளவில்லாமல் போனது.

ம்ருதுளாவுக்கு ஒரு பெரிய சன்மானம் கிடைத்தது போல மைதிலி எண்ணினாள். 

சுப்புடு சார் இப்படி ஒரு பாராட்டு மழைல ம்ருதுளாவை நனைப்பார்ன்னு மைதிலி எதிர்பார்க்கவில்லை. 

இது மாதிரி பாராட்டை அந்த நபர் சாதாரணமாக கொடுத்து விட மாட்டார்.வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்று சொல்வார்களே அது போலத்தான் இது.

கால் மணி சென்றதும் டெலிபோன் மணி அடித்தது. மைதிலி போனை எடுத்ததும் மறு முனையில் சுப்புலஷ்மி  " என்ன மைதிலி படிச்சிட்டாங்களா" என்றா. அதற்கு மைதிலி " ஆமாம் மாமி. படிச்சூட்டேன். என்னால நம்பவே முடியல" என்றாள். அதற்கு  சுப்புலக்ஷ்மி " அதுதான் சுப்புடு சார்.எந்த கொம்பனா  இருந்தாலும் சரியா பாடலேன்னா கிழிச்சி போட்டுடுவார். நண்ணா  பாடின அத பாராட்டாமல் இருக்க மாட்டார்" என்றாள். உடனே மைதிலி சுப்புலக்ஷ்மி யிடம் " மாமி நம்ப போய் அவரைப் பார்த்து, ம்ருதுளாவை அவருக்கு நமஸ்காரம் பண்ண சொல்லணும்னு நெனைக்கிறேன் .இது சாத்யமா "என்று கேட்டாள்.

அதற்கு சுப்புலக்ஷ்மி " நானும் அதே தான் நினைச்சுண்டு இருந்தேன். எங்கிட்ட சாருடைய நம்பர் இல்ல. விஸ்வநாத  சர்மாவ காண்டாக்ட் பண்ணி,அவர் கிட்ட கேட்டு பாக்கிறேன். சுப்புடு சார் நம்பர் கொடுத்தார்ன்னா  நம்ப போன்ல பேசி அவர்கிட்ட  அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்" என்றாள்.

Tuesday, November 28, 2023

சோளிங்கர் யோக நரசிம்மர்

சோளிங்கர் யோக நரசிம்மர்


தொண்டை மண்டலத்தில் உள்ள 22 வைணவத் தலங்களில் ஒன்றாகவும் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் கருதப்படும் கோளிங்கபுரம் தற்போது சோளிங்கர் என அழைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் வாலாஜாப்பேட்டை-அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சோளிங்கரில் ரெயில்வே நிலையமும் உள்ளது. சென்னை-பெங்களூர் ரெயில்வே மார்க்கத்தில் அமைந்துள்ள சோளிங்கர், திருக்கடிகை அல்லது கடிகாசலம் என முன்பு வழங்கப்பட்டுள்ளது. சோளிங்கர் நகரின் மையப்பகுதியில் பக்தோசிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு யோக நரசிம்ம சுவாமியின் உற்சவப் பெருமாள் அருள்பாலிக்கிறார். சோளிங்கர் நகருக்குத் தெற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் கொண்டபாளையம் என்ற சிற்றூர் உள்ளது. இவ்வூரில் பெரியமலை உச்சியில் யோக நரசிம்மர் திருக்கோவில் உள்ளது. மலைக்கோவிலின் நீளம் 200 அடி. அகலம் 150 அடி. உயரம் 750 அடியாகும். சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலுக்குச் செல்ல 1305 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். பெரியமலைக்கு எதிரில் உள்ள சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயசுவாமி திருக்கோவில் உள்ளது. 150 அடி நீளமும் 250 அடி அகலமும் கொண்ட இக்கோவிலை அடைய 406 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். உயரம் 350 அடியாகும். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பக்தோசிதசுவாமி கோவில் சுமார் 2 ஏக்கர் பரப்பில் 300 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்டுள்ளது.

வசந்த காலம் வருமோ?- 26

 வசந்த காலம் வருமோ?-  26

By N Krishnamurthy 

கச்சேரி முடிந்ததும் திரை மூடப்பட்டது. அருகிலிருந்த அறைக்குள் எல்லோரும் சென்றார்கள். 

ம்ருதுளாவை பார்த்து ராமச்சந்திரன் "என்ன மன்னிச்சுக்கோம்மா. நாங்கூட நீ எப்படி பாட போறயோன்னு பயந்துண்டிருந்தேன். சீசனட் வித்வான் மாதிரி நீ பாடற . இது எப்படி சாத்தியமாச்சுன்னு எனக்கு தெரியல. முன்ன பின்ன கச்சேரி பண்ணலைன்னு வேற சொல்ற. இது ஏதோ பகவான் உனக்கு கொடுத்திருக்க வரப்பிரசாதம். நீ ரொம்ப பெரிய பாடகியா  வருவ. அப்ப இந்த. ராமசந்திரனை மறக்காம ஞாபகம் வெச்சுகணம்"என்றார். இதைக் கேட்ட ம்ருதுளா" பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாமே மாமா. ஏதோ எனக்கு தெரிஞ்சத நான் பாடினேன்" என்றாள்.முரளியும்  கிட்டத்தட்ட இதே போன்று கூறினார்.

சுப்புலக்ஷ்மி ம்ருதுளாவை கட்டி அணைத்துக் கொண்டு, உச்சி முகர்ந்தாள். மைதிலியை பார்த்து அவள் "ஆத்துக்கு போனதும் முதல் வேலையா ம்ருதுவுக்கு சுத்தி போடுங்க" என்றாள். அதற்குள் ராமசந்திரனும், முரளியும் அவர்களிடம் "அப்ப நாங்க கிளம்பறோம்மா.உன்ன பத்தி வேற நெறைய சபாக்களிலும் சொல்லி வைக்கிறோம்" என்று சொல்லி,  சுப்புலக்ஷ்மியின் நம்பரை வாங்கிக் கொண்டார்கள்.

இதற்குள் அந்த ரூமுக்கு கச்சேரி கேட்ட சில ரசிகர்கள் வந்திருந்தார்கள்.ம்ருதுளாவின்  சம வயது பெண்கள் ம்ருதுளாவை  அதிசயமாக பார்த்தார்கள். நிறைய மாமிகள் அவள் கையைப் பிடித்துக் கொண்டு "சூப்பரா பாடினேம்மா. உன் ஒரு குரு யார்"என்று கேட்டார்கள். அவர்களுக்கு சுப்புலக்ஷ்மியையும், ராதிகாவையும் காட்டினாள். அந்த ரசிகர்கள் அவர்கள் இருவரையும் வெகுவாக பாராட்டினார்கள்.

இதற்குள் விசுவநாத சர்மாவும், லலிதாவும் அந்த அறைக்குள் வந்தார்கள். விஸ்வநாத சர்மா ம்ருதுளாவிடம் "நான் எதிர்பார்த்ததை விட பிரமாதமா பாடிட்டேம்மா. கெடைச்ச சான்ஸை நல்லா யூஸ் பண்ணிண்டூட்ட. போன ஜென்மத்தில, நீ பகவானுக்கு தேனால அபிஷேகம் பண்ணியிருக்க. இல்லேன்னா இப்படி போட முடியாது .வித்வத் ஒரு பக்கம் இருக்கட்டும். சப  கூச்சம் இல்லாம, ஏதோ இதான் உன் ஐம்பதாவது  கச்சேரி மாதிரி பாடீட்ட.  உன் சங்கீதம் வேற லெவல் மா "என்றார். லலிதாவும் ம்ருதுளாவின் கையை பிடித்துக் கொண்டு பாராட்டினாள்.

அப்பொழுது அங்கே கோல்டு பிரேம் கண்ணாடி அணிந்து, பணக்கார களையுடன்   ஒரு மாமி வந்தாள். "பிரமாதமாக பாடியயிருக்கே" என்றாள். "நான் யாருன்னு சொல்லலையே. உனக்கு சான்ஸ் கிடைக்க நான் ஒரு காரணம் என்றாள்"அவள்.ம்ருதுளா, மைதில, சுப்பு லக்ஷ்மி ஆகியோர் முழித்தார்கள். 

" புரியலயா .இந்த ஸ்பாட்டுல பாட  இருந்தது என் பையன் சங்கர க்ருஷ்ணன். அவனுக்கு அம்ம போட்டு, இன்னிக்கு தான் முதல் ஜலம் உட்டுது. அதனால அவன் இன்னிக்கி  பாட முடியவில்லை. மனப்பூர்வமா சொல்றேன். அவன் பாடியிருந்தா கூட இவ்வளவு பிரமாதமாக பாடி இருக்க முடியுமான்னு தெரியல.என் பேரு ராஜேஸ்வரி" என்றாள். பின்னர் அவள் மைதிலியிடம் 

" இவளுக்கு என்ன வயசாரது மாமி" என்றாள் ராஜேஸ்வரி.

அதற்கு மைதிலி " பதினெட்டு நடந்திண்டிருக்கு "என்றாள்.

" பாத்தா அவ்வளவு வயசா தெரியல "என்ற ராஜேஸ்வரியின் மனது வேறு கணக்கை போட்டுக்கொண்டிருந்தது.  

"ரொம்ப தேங்க்ஸ் மாமி" என்றாள்  ம்ருதுளா.

இதற்குள் ஒரு நடுத்தர வயது மனிதர் ம்ருதுளாவிடம் வந்து "என்னமா  பாடின குழந்தை .இதுதான் உன் முதல் கச்சேரின்னு  என்னால் நம்பவே முடியல. நான் கிருஷ்ண கான சபா செக்ரட்டரி சபேசன். எதேச்சையாக இன்னைக்கு இங்க வந்திருந்தேன். உன்னுடைய அருமையான கச்சேரியை கேக்க வாய்ப்பு கெடைச்சுது. எங்களுடைய சபாவலையும் நீ ஒரு நாள் பாடணம்" என்று கூறி சுப்புலக்ஷ்மி நம்பரை வாங்கிக் கொண்டார். இதன் பின்பு மைதிலி சுப்புலக்ஷ்மியின் கைகளை பிடித்துக் கொண்டு " நீங்க மட்டும் இல்லேன்னா, இவ இவ்வளவு தூரம் பாடியிருப்பாளான்னு  நேக்கு தெரியல. ஒரு நல்ல குரு அமையறது எவ்வளவு முக்கியம்னு புரியரது. உங்களுக்கு வாழ்நாள் பூரா நான்  நன்றியோடு இருப்பேன்" என்றாள். சுப்புலக்ஷ்மி"  கால்பங்கு தான்  என்பங்கு. உன் பொண்ணு தான் முக்கா பங்கு. அவ ஒரு ஸ்வயம் பிரகாசி. அவ ஏத்தின குத்துவிளக்கா இருக்கா.நான் கொஞ்சம் திரியை தூண்டி விடறேன்.அவ்வளவு தான். இன்னிக்கு அவ பிச்சு உதறிட்டா" என்றாள். அன்று கச்சேரியில் ஆறாவது வரிசையில் ஒரு மூலையில் யாரும் கவனிக்காதபடி  அமர்ந்திருந்த சுப்புடுவை நிறைய பேர் பார்த்திருக்கவில்லை.

Monday, November 27, 2023

வசந்த காலம் வருமோ?-25

 வசந்த காலம் வருமோ?-25

By N Krishnamurthy 

முதலில் "கருணிம்ப இதி மஞ்சி தருணமு சாமி" என்ற திருவொற்றியூர் தியாகய்யருடைய சஹானா ராக வர்ணத்துடன் கச்சேரியை ஆரம்பித்தாள் ம்ருதுளா.முதல் இரண்டு மூன்று வரிகள் பாடியவுடன்,  உடல் சற்று தொய்வாக, சோம்பறித்தனமாக அமர்ந்திருந்த சிலர், சீட்டில் நேராக உட்கார ஆரம்பித்தார்கள்.

பக்கத்தில்  உள்ளவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர்கள் தாங்கள் பேசுவதை நிறுத்திவிட்டு ம்ருதுளா பாடுவதை கேட்க ஆரம்பித்தார்கள்.

வர்ணம்  முடிந்ததும் அந்த கூட்டத்தில் இருந்த பலர் " இந்தப் பெண் சாதாரண பெண் அல்ல. வித்வத்  அபாரமாக இருக்கும் போல் இருக்கிறது" என்று எண்ண ஆரம்பித்தார்கள். ம்ருதங்கம் ராமச்சந்திரனும், வயலின்  முரளியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.

சஹானாவை அடுத்து, ஆபோஹியில் கோபாலகிருஷ்ண பாரதியின் "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா" என்று ம்ருதுளா பாட ஆரம்பித்த உடன், கச்சேரி களை கட்டி விட்டதாக பலர் நினைக்க ஆரம்பித்தார்கள். 

"ஒரு தரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே"  என்ற இடத்தை ம்ருதுளா   பாடியதும்,  பலர் தங்கள் சிதம்பரத்துக்கு போய் வந்ததை நினைவுக்கு  கொண்டு வந்தார்கள். "சபாபதிக்கு" பாடல் முடிந்ததும்  அப்ளாஸ் பிய்த்த்துக்கொண்டு போனது.

இதை தொடர்ந்து இரண்டே நிமிடத்தில்  சாமா ராகத்தின் முழு  ஸ்வரூபத்தையும் தனது ஆலாபனை மூலம்  வெளிக்கொணர்ந்த பின்னர், "மானச சஞ்சரரே" என்ற சதாசிவ பிரம்மேந்திரரின் கீர்த்தனையை பாட ஆரம்பித்தாள் ம்ருதுளா. இதற்குள் வயலின் முரளியும், ம்ருதங்கம் ராமசந்திரனும் " இவள்

சீக்கிரமே  ஒரு கைதேர்ந்த பாடகியாய் பரிமளிப்பாள். இவளுக்கு பார்த்து வாசிக்க வேண்டும்" என நினைத்துக் கொண்டார்கள். 

ஒரு வழியாக மானச சஞ்சரரே முடிந்தது. சபையில் இருந்த சிலர் எழுந்து நின்று தங்களுடைய மகிழ்ச்சியை கைத்தட்டல் மூலம் தெரிவித்துக் கொண்டார்கள்.

இதன் பின்னர் ஒரு நிமிடம் இடைவெளி விட்டாள்  ம்ருதுளா. இனி இவள் என்ன பாடப் போகிறாளோ என்று ஆர்வம் சபையில் இருக்கும் பலரை தொற்றிக் கொண்டது.

சுப்புலக்ஷ்மி, இதற்கிடையில் ம்ருதுளாவைப் பார்த்து வலது கை நான்கு விரல்களை மடக்கி,கட்டை விரலை உயர்த்தி, வெற்றி சின்னத்தை  காட்டினாள்.

அடுத்தது கனராகம் பாடப்போகிறாள் என அனைவரும் எதிர்பார்த்தனர். இந்தப் பெண் மோகனம், தோடி,பைரவி, கல்யாணி, கரகரப்பிரியா, காம்போதி,பைரவி  போன்ற ராகங்களில் ஏதோ ஒன்றைத்தான் பாடப்போகிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஆச்சரியம் கொடுக்கும்படி, "லலிதா" ராகத்தை தொடங்கினாள் ம்ருதுளா.  அவள் லலிதாவை  ஆலாபனை செய்த விதம்,ஸ்ரீ லலிதா பரமேஸ்வரிவரியே மேடையில் அமர்ந்து ம்ருதுளா சங்கீதத்தை கேட்டு,அனுபவிப்பது போன்ற  தோற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல. ஆலாபனை முடிந்தவுடன் வயலின் முரளி தன் பங்கிற்கு லலிதாவை வயலினில் தொடர்ந்தார். கூட்டத்தினர் சிலர் ம்ருதுளா லலிதா ராக ஸ்வரூபத்தை  முழுசாக கொண்டு வந்த அளவு முரளி கொண்டு வரவில்லையோ என்று ஐயப்பட ஆரம்பித்தார்கள். வயலின் வாசிப்பு முடிவுக்கு வந்ததும், சிறிது வெந்நீரை அருந்திய ம்ருதுளா முத்துசாமி தீக்ஷதரின்  "ஹிரண்மயீம்  லக்ஷ்மீம் சதா பஜாமி" என்ற பாடலை தொடங்கிய விதம் கர்நாடக சங்கீதத்தை மிகவும் ரசித்துக் கொண்டிருக்கும் சில ரசிகர்களுக்கு  மயிர் கூச்செறிந்தது. சிலர் இந்தப் பாடலை தமக்கு பிடித்த பாடகர்கள் பாடி கேட்டதை ஞாபகம் வைத்துக் கொண்டார்கள். கிட்டத்தட்ட இந்த பாடல் டி.கே. பட்டம்மாள், டி. கே. ஜெயராமனின் குடும்ப சொத்து மாதிரி இருந்தது. பாடல் பாடிக் கொண்டிருந்த பொழுது " கீத வாத்ய வினோதினிம்" என்ற  இடத்தில் ம்ருதுளா நிரவலை ஆரம்பித்தாள். ம்ருதுளா நிரவல் முடிந்து ஸ்வரம் போட ஆரம்பித்ததும்,  சங்கீத ஜாம்பவான்கள் கேட்டு கிறுகிறுத்து போனார்கள். அவள் ஸ்வரப்ராஸ்தாரம் செய்தது சில சமயம் மதுரை மணி ஐயர் மாதிரி இருந்தது.சில நேரம்  ஜி.என்.பி ஐ ஞாபகப்படுத்தியது.டி.கே.ஜெயராமனை போலவும்  இருந்தது. ஸ்வரம்பாடி முடித்ததும், தனியாவர்த்தனம் தர வேண்டுமா என்ற நோக்கில் ராமச்சந்திரன் சாரை பார்த்தாள் ம்ருதுளா. ராமச்சந்திரன் தனி வேண்டாம் என்று கண்ணாலே ஜாடை காட்டினார்.

சபையில் எழுந்த கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆயிற்று. கர்நாடக இசை வானில் ஒரு  புதிய நட்சத்திரம் உருவாகிவிட்டதாக எல்லோரும் நினைத்தார்கள்.

இதன்பிறகு தியாகையரின் மத்யமாவதி கீர்த்தனையான  "ராம கதா சுதாவை" பாடினாள் ம்ருதுளா. சாதாரணமாக இது போன்ற சமயத்தில், சரி கச்சேரி முடியப் போகிறது என்று பலர் எழுந்து செல்ல ஆரம்பிப்பார்கள். ஆனால் ம்ருதுளாவின் கச்சேரியில் அவ்வாறு செல்ல யாரும் எத்தனிக்கவில்லை. 'ராம கதா சுதா' முடிந்தவுடன், பாரதியாரின்  "திக்குத் தெரியாத காட்டில் உன்னை தேடி தேடி அலைந்தேன்" என்ற ராக மாலிகையை ஆரம்பித்தாள்  ம்ருதுளா. இந்த பாட்டை கேட்டதும் கர்நாடக சங்கீத ரசிகர்கள் தேனுண்ட வண்டானார்கள். அதுவும் " அண்ணா உனதடியில் வீழ்வேன். எனை அஞ்சக் கொடுமை செய்ய வேண்டா" என்ற அந்தப் பெண், வேடனிடம் இறைஞ்சுதலை சஹானா ராகத்தின் மொத்த உருக்கத்தையும் கொட்டி ம்ருதுளா  பாடிய போது, பலருக்கு காட்டில் ஒரு அபலைப்பெண், கொடிய வேடனிடம்  கெஞ்சுவதை போன்று காட்சி கண்ணில் வந்தது. இந்த வரியை முடித்து, அடுத்த வரிக்கு செல்வதற்கு முன், ஐந்தாவது ஐந்தாவது வரிசையில் இருந்து ஒரு ரசிகர் எழுந்து "ஒன்ஸ்மோர் "என்று கேட்டார்.மீண்டும் அந்த வரியை ம்ருதுளா பாட, ஒன்ஸ்மோர் கேட்டவரின் கண்கள் இந்த வரிகளை கேட்ட உடன் குளமாயின.  அதற்கு என்ன காரணம் என்று அவரேதான் அறிவார். 

கடைசியில் அருணகிரிநாதரின் "நாதவிந்து கலாதி நமோ நமோ" என்ற பாடலை பாடினாள் ம்ருதுளா. கச்சேரியை முடித்து, சபைக்கு  ஒரு பெரிய கும்பிடு போட்டாள். எல்லோரும் எழுந்து நின்று செய்த கரகோஷம் அடங்க கிட்டத்தட்ட ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆனது. பலர் இப்படி ஒரு சின்ன பெண் பாடுவது இதுதான் முதல் முறை என்று ஆச்சரியப்பட்டு போனார்கள். சிலர் அருகில் இருந்தவர்களிடம் இவள்  பெயர் என்ன? எங்கு இருக்கிறாள்? என்ன செய்கிறாள்? இவருடைய கச்சேரி வேறு  சில சபாக்களிள் இருக்கிறதா? இருந்தால் என்ன தேதியில் நடக்கிறது ?என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தார்கள்.

நானும் ஒரு தீவிர  சங்கீத  ரசிகன் தான். மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த நான், முழு கச்சேரி கேட்கும் பாக்கியத்தை பெற்றேன்.டி.கே.ஜெ, மதுரை மணி ஐயர், டி.வி. சங்கரநாராயணன், மதுரை சேஷ  கோபாலன், மகாராஜபுரம் சந்தானம் போன்ற மகாவித்வான்கள் கச்சேரியை கேட்கும் போது ஏற்படும் சுபானுபவம், எனக்கு ம்ருதுளாவின் கச்சேரியை கேட்டதும் ஏற்பட்டது.

 பின்குறிப்பு:

முத்துசாமி தீக்ஷதர் ஒரு ஸ்ரீவித்யா உபாசகர். பெரிய மகான். அம்பாளிடம் தனக்கென்று  ஒன்றையம் கேட்க மாட்டார். ஒருமுறை அவர் மனைவி அவரிடம், தனக்கு தங்கத்தினால் நகைகள் ஒன்றும் இல்லை, அதுபோல ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டதாகவும், இதைக் கேட்ட உடனேயே அவர் "ஹிரண்மயீம் லக்ஷ்மீம்"என்ற பாடலை எழுதியதாகவும், பின்பு தன் மனைவி இது போன்ற சாதாரண ஆசைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறாளே என்று கஷ்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அன்று இரவே தீக்ஷதரின்   மனைவியின் கனவில் மகாலக்ஷ்மி தோன்றி அவளுக்கு தங்க காசுகளை அள்ளிக் கொடுத்ததாகவும், காலையில் எழுந்த அவர் மனைவி, தன் கணவரிடம் தான் வேண்டியது எவ்வளவு பெரிய தவறு என்று சொல்லி வருத்தப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

வசந்த காலம் வருமோ? -24

 வசந்த காலம் வருமோ? -24

By N Krishnamurthy 

சாரங்கன் குடும்பம் மியூசிக் அகாடமியை அடைந்து,மேடையின் பக்கத்திலிருந்த ரூமுக்குள் நுழைந்தார்கள். அங்கே ஏற்கனவே சுப்புலக்ஷ்மியும், ராதிகாவும் தம்புராவுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த ஐந்தாவது  நிமிஷத்தில் ம்ருதங்கம்  வாசிக்க குத்தாலம் ராமச்சந்திரனும், வயலின் வாசிக்க மன்னார்குடி முரளியும் ஆஜரானார்கள்.முதலில் ம்ருதுளாவை பார்த்ததும் அவர்கள் இருவருக்கும்  சிறிது பயம் எடுத்தது. அவர்கள் இருவரும் ஓரளவுக்கு சீனியர் வித்துவான்கள். ஏற்கனவே பன்னிரண்டு  மணிக்கு கச்சேரி பண்ண இருந்த பையனை பற்றி அவர்கள் முன்பே அறிந்திருந்தார்கள். எனவேதான் அவனுக்கு பக்கவாத்தியம் வாசிக்க ஒத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது ம்ருதுளாவை பார்த்தவுடன் 'இந்த பெண் எப்படி பாடுவாளோ? சுமாராகப்பாடி  நமது பெயரையும் கெடுத்து விடுவாளோ' என்று பயந்தார்கள்.

ராமச்சந்திரன் ம்ருதுளாவை பார்த்து  "என்னம்மா நல்லா பாடுவியா. பிராக்டீஸ் பண்ணியிருக்கயா" என்று கேட்டார்.உடனே ம்ருதுளா "நிச்சயமாக நான் நண்ணா பாடுவேன் சார் "என்றாள் தைரியமாக. 

" இதுக்கு முன்னாடி எங்கேயாவது  கச்சேரி பண்ணி இருக்கியா"  என்று கேட்டார் முரளி.

"பூர்வ ஜென்மத்தில் பல கச்சேரிகளை பண்ணியிருக்கிறேன்" என்று அவள் எப்படி சொல்வாள்! அப்போது  சுப்புலஷ்மி குறிக்கிட்டு ம்ருதுளாவை பற்றி ஒரு சிறிய பிரசங்கம் செய்து முடித்தாள். இதனால் ஓரளவுக்கு மனசாந்தி அடைந்த அந்த இருவரும், இன்னும் முதலில் ஏற்பட்ட தயக்கத்திலிருந்து விடுபடாமல் இருந்தார்கள். பின்பு ம்ருதுளா அவர்கள் இருவருக்கும் நமஸ்காரம் செய்தாள். அவளை ஆசீர்வதித்தார்கள்.

"நீ நண்ணா  பாடணம். ஸ்ருதி மட்டும் வெலகாம பாத்துக்கோ. எங்கேயாவது  கொஞ்சம் தொய்யர மாதிரி இருந்தா நாங்க பாத்துகறோம்" என்றார் ராமசந்திரன். "பாட போற பாட்டெல்லாம் பேப்பர்ல எழுதி வெச்சிண்டிருக்கயோ" என்று  கேட்டார் முரளி. "இல்ல மாமா.எல்லா பாட்டும் நேக்கு அத்துபடி" என்று மிகவும் சர்வசாதாரணமாக ம்ருதுளா  கூறினாள். "சரி.என்னவோ பகவான் விட்ட வழி" என்றார்  ராமச்சந்திரன்.

இதற்குள் சபாவை சேர்ந்த ஒருவர் உள்ளே வந்து இவர்களிடம் "சரியாக 12 மணிக்கு ஆரம்பித்து விட வேண்டும். சரிதானே" என்று கூறிவிட்டு,மைக் சிஸ்டம் சரியாக வேலை செய்கிறததா என பார்த்துவிட்டு சென்றார். 11:55 ஆகும் போது எல்லோரும்  மேடையின் மேல் அமர்ந்தார்கள். மேடைக்கு முன்பு ஒரு ஸ்கிரீன் போட்டு இருந்தது. ம்ருதுளாவின்  பக்கத்தில் ஒரு பிளாஸ்க்கில் குடிக்கும் பதத்தில்  வெந்நீரூம், கொஞ்சம் அதிமதுரம் தூளும் இருந்தது.  சரியாக 12 மணிக்கு திரை விலகியது. ஹாலில் அங்கும் இங்கும் ஆக மொத்தம் 50 பேர்களுக்கு மேல் இல்லை.முன் வரிசையில் மட்டும் சில பிரபலங்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.

சாரங்கன் குடும்பமும், சுப்பு லக்ஷ்மியும் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.

ம்ருதுளா சபையை பார்த்து ஒரு கும்பிடு போட்ட பின்பு "எனக்கு இங்கு பாட வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் என் வந்தனங்கள். என்னுடைய குரு சுப்பு லக்ஷ்மி மாமிக்கும், ராதிகா அக்காவுக்கும், மிருதங்கம் வாசிக்கப் போகும் ராமச்சந்திரன் சாருக்கும், வயலின் முரளி சாருக்கும் என்னுடைய நமஸ்காரங்கள்" என்று கூறிவிட்டு ஸ்ருதி கூட்டினாள். சபையில் உள்ளவர்களிள்  சிலர் "இந்தப் பெண் என்னதான்  பாட முடியும்" என்று அலட்சியமாக இருந்தார்கள்.

 வேறு சிலர் "ஒருவேளை இந்த பெண் நன்றாக பாடுபடுவாளோ" என்ற ஒரு நம்பிக்கையுடன் இருந்தார்கள். ம்ருதுளா  கச்சேரியை ஆரம்பிக்கும் போது, சிலர் கேண்டினில் சாப்பிட்டுவிட்டு, உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். மிருதங்கம் ராமச்சந்திரன் சாரையும், முரளி சாரையும் பார்த்து ம்ருதுளா  ஆரம்பிக்கலாமா என்று கண்ணாலே கேட்டாள். தனது முதல் கச்சேரியை ஆரம்பித்தாள் ம்ருதுளா.

அப்பொழுது அங்கிருந்த மைதிலிக்கும், சுப்புலக்ஷ்மிக்கும் படபடப்பாக இருந்தது.தாங்களே முதல் முதலில் கச்சேரி செய்வதாக நினைத்தார்கள். 

இதை எழுதும்போது எனக்கே படபடப்பாக இருக்கிறது. நாளை பதிவின் போது ம்ருதுளாவின் முதல் கச்சேரி எப்படி இருந்தது என்று நாம் அறிந்து கொள்ள போகிறோம். இதற்காக ஒரு நாள்  காத்துக் கொண்டிருக்க போகிறோமே என்று என்ற எண்ணம் எனக்குள்ளும் இருக்கிறது.

Saturday, November 25, 2023

வசந்த காலம் வருமோ? -23

 வசந்த காலம் வருமோ?-23

By N Krishnamurthy 

சுப்புலக்ஷ்மிக்கு, இந்த வருஷம் ம்ருதுளாவிற்க்கு சான்ஸ் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அடுத்த வருஷமாவது  கொடுக்கிறேன் என்று சொல்கிறாரே என்று ஆனந்த பட்டாள்.

ம்ருதுளாவும், மைதிலியும்  விசுவநாத சர்மா  வீட்டுக்கு போய்விட்டு வந்த அடுத்த  மாதத்தில், ஒரு நாள், ஒரு வெள்ளிக்கிழமை.

ம்ருதுளாவிற்கு கல்லூரி  நிறுவனர் நினைவு தினமாதலால் விடுமுறை  விட்டிருந்தார்கள்.

ம்ருதுளா குளித்துவிட்டு, சுவாமி படத்தின் முன் உட்கார்ந்து, ச்யாமா சாஸ்திரிகளின் பைரவி ஸ்வரஜதி "அம்ப காமாட்சி"ஐ பாட ஆரம்பித்தாள். ஏற்கனவே உருக்கமாக இருக்கும் அந்த பாடல் ம்ருதுளாவின் குரலில் இன்னும் உருக்கம் கூடியது. பாடி முடிக்கவும், டெலிபோன் மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

 ம்ருதுளா சென்று போனை எடுத்தாள். "யார் பேசர்து" என்றாள். அந்த பக்கம் பேசிய சுப்பு லக்ஷ்மி " நான்தான் ம்ருது,மாமி பேசறேன். கொஞ்சம் அம்மாவ கூப்படுறியா" என்றாள். சுப்புலக்ஷ்மி ."தோ கூப்பிடறேன் மாமி" என்று சொல்லிவிட்டு "அம்மா,பாட்டு டீச்சர் கூப்படறா" என்றாள். அடுக்களையில் வேலையாக இருந்த மைதிலி கேஸ் ஸ்டவ்வை சிம்மில் வைத்து விட்டு,போனை ம்ருதுளாவிடமிருந்து வாங்கிக் கொண்டாள். "சொல்லுங்க மாமி, மைதிலி பேசுறேன்" என்றாள்.

சுப்புலக்ஷ்மி அவளிடம் எடுத்தவுடனேயே "கடவுள் நம்ம பக்கம் இருக்கார் மைதிலி" என்றாள். "என்ன சொல்றேங்க நீங்க. புரியலயே" என்றாள் மைதிலி."என் சிஷ்யை, அதான் உன் பொண்ணு  ம்ருதுளாவுக்கு இந்த வருஷமே மியூசிக் அகாடமி 12 மணி கச்சேரிக்கு சான்ஸ் கெடைச்சிருக்கு" என்றாள் சுப்புலக்ஷ்மி. இதைக் கேட்ட மைதிலி ஆச்சரியத்துடன் "இந்த வருஷம் தான் ஃபுல் ஆயிடுத்துன்னு சொன்னாரே மாமி. எப்டி இப்டி திடீர்னு" என்றாள்.

 "அத ஏன் கேக்கற.

நேத்து ராத்திரி ஒன்பது மணி இருக்கும். விசுவநாத சர்மா மாமா ஃபோன் பண்ணார். வர ஞாயிற்றுக்கிழமை 12 மணி ஸ்லாட்ல, அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோ, பே ஏரியாவிலேந்து, சங்கர க்ருஷ்ணன்ற பையன் பாடறதா இருந்ததாம். அவனுக்கு திடீர்னு அம்ம போட்டிருக்கறதனால, அவனால பாட முடியல. இப்போ அவனுக்கு பதிலா ம்ருதளாவை பாட வைக்கலாம்னு மாமா  சஜஸ்ட் பண்ண, மீதீ பேர்லாம் ஒத்துண்டு இருக்காளாம். நீங்க ஓகேன்னு சொல்லிட்டீங்கன்னா, ப்ரோக்ராம் சேஞ்ச் ஆனது பத்தி ந்யூஸ் பேப்பருக்கு ந்யூஸ் கொடுத்துடுவேன்னு  சொன்னார்.நான் உங்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன் "என்றாள் சுப்புலக்ஷ்மி.

"கேக்கற்தக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமி. எல்லாம் உங்க முயற்சி தான். ஆமா என்னிக்கு பாடணம்" என்றாள் மைதிலி.

" நாளனிக்கு, ஞாயிற்றுக்கிழமை, பகல் 12 மணிக்கு பாடி ஆகணும்" என்றாள்  சுப்புலக்ஷ்மி.

 "அவ்ளோ சீக்கிரம் பாட முடியுமா மாமி"  என்று கேட்டாள் மைதிலி ." நீ ஒண்ணுக்கும் கவலைப்படாத மைதிலி. அவள  உடனே எங்காத்துக்கு  அனுப்பு. இன்னிக்கும், நாளைக்கும் ரெண்டு நாளும் முழுசா அவ எங்காத்துல இருக்கட்டும். நான் அவ்வள ட்ரெய்ன் பண்றேன். இத சொல்றதுக்கு எனக்கே வேடிக்கையா இருக்கு. அவளை ட்ரைன் பண்ண நான் யாரு. ஆனா கச்சேரிக்குன்னு எப்பவுமே ஒரு பேட்டேர்ன் இருக்கு. அந்தப் பேட்டர்ன் அமச்சி கொடுத்தது மாமேதை அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் தான். நான் அவளுக்கு கச்சேரி பாணியை கத்து கொடுத்து,  சாங் செலக்ஷன் பண்ண  ஹெல்ப் பண்றேன். விஸ்வநாத சர்மா மாமா கிட்ட நான் ஓகேன்னு சொல்லிடலாமா "என்று கேட்டாள்.

" எல்லாமே உங்க முடிவு தான் மாமி. அவள இந்த லெவலுக்கு கொண்டு வந்ததே நீங்கதானே ' என்றாள்  மைதிலிபவ்யமாக.

"வெளக்குல எண்ணை இருந்தா தான் தீபத்தை ஏத்த முடியும்" என்றாள் சுப்புலக்ஷ்மி.

கோமளாவிடமும், ம்ருதுளாவிடமும், சக்கரவர்த்தியிடமும் மைதிலி விஷயத்தை  கூறினாள். எல்லோரும் அடைந்த சந்தோஷத்துக்கு ஈடு இணையே இல்லை. கோமளா உடனே ரங்கநாயகிக்கு போன் செய்து இந்த விவரத்தை கூறி,  மருமாளின் கச்சேரிக்கு புறப்பட்டு வருமாறு சொன்னாள்.

இதைக் கேட்ட ரங்கநாயகி விட்டோத்தியாக "பாக்கறம்மா. முடிஞ்சா தான் வருவேன்" என்றாள். ம்ருதுளாவை உட்கார வைத்து சாப்பாடு பரிமாறி,அவள்   சாப்பிட்டவுடன் அவளை அழைத்துக் கொண்டு போய் சுப்புலக்ஷ்மி வீட்டிற்கு சென்றாள் மைதிலி. பின்பு அவள் சுப்புலஷ்மியிடம் "நேக்கு  ரொம்ப நெர்வசா இருக்கு மாமி" என்றாள். ம்ருதுளா பார்க்காத சமயமா பார்த்து, சுப்புலஷ்மி "உன்ன விட நேக்கு தான் அதிக  நெர்வசா இருக்கு. நம்ப ரெண்டு பேரும் தான் நெர்வசா  இருக்கோம்.ம்ருதுளாவ பாரு. கொஞ்சம் கூட   கவலையே படல. உன் பொண்ணு  பிச்சு உதறிட போறாள்" என்றாள்  சுப்புலக்ஷ்மி.

வசந்த காலம் வருமோ? -22.

 வசந்த காலம் வருமோ?-22.

By N Krishnamurthy 

சினிமாக்களில் குழந்தைகள் பெரியவர்கள் ஆவதை, சக்கரம் சுழல்வதை  போல காட்டுவதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

கிட்டத்தட்ட எட்டு வயது ஆகும் பொழுது, ஒரு கச்சேரி செய்யும் அளவுக்கு தயாரானாள் ம்ருதுளா. இன்னும் ஆர்.டி.பி தான் பாக்கி. தன் பள்ளியிலும், பின்பு பள்ளிகளுக்கு இடையேயும் நடக்கும் சங்கீத போட்டிகளில் ம்ருதுளா  ஈடுபட்டால் முதல் பரிசு அவளைத் தவிர வேறு யாருக்கும் செல்லாது என்று நிலை ஏற்பட்டது. கப்போர்ட் முழுவதும் வெற்றிக்கோப்பைகளால் நிரம்பி வழிந்ததால், புதிய பெரிய கப்போர்ட் வாங்க சாரங்கன் திட்டமிட வேண்டியதாயிற்று.

காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை.

ம்ருதுளா  இப்பொழுது குழந்தை அல்ல. டீன் ஏஜ் ஜில் அடி எடுத்து வைத்திருக்கிறாள்.  வயது பதிமூன்று.

சாரங்கனை போல உயரம்.கூரான நாசி.மற்றபடி, முகஜாடை, கலர்,உடல் வாகு அத்தனையும் டிட்டோ மைதிலி.பருவம் அவளுக்கு அதீத வனப்பை வாரி வழங்கிக்கொண்டிருந்தது.

அவளது பாடும் பணி எம்.எஸ், எம்.எல்.வி, டி.கே.பி  மாதிரி இல்லாமல்  வித்தியாசமாக இருந்தது.

பதினாறு வயதை எட்டியதும், பள்ளிப்படிப்பை நன்றாக படித்து முடித்து, ஒரு பெண்கள் கல்லூரியில் ப்ரீ யூனிவர்சிட்டியை தொடர்ந்தாள். அதற்கு மேல் பி.ஏ மியூசிக்கில் அவளை சேர்க்கலாம் என்று மைதிலி நினைத்தபோது, கோமளம் அதற்கு "இவளுக்கு மியூசிக்கில் தெரியாது ஒண்ணும்  இல்லேன்ற  நிலை வந்துடுத்து. இனிமே பி.ஏ மியூசிக் ல போய் என்ன புதுசா கத்துக்க போற. வேற ஏதாவது சப்ஜெக்ட்ல போட்டுடு" என்றாள். ஒரு பெண்கள் கல்லூரியில் மிருதுளாவுக்கு பி.காமில் சேர இடம் கிடைத்தது.

ஒரு வியாழக்கிழமை அன்று சுப்பு லக்ஷ்மி  மைதிலிக்கு போன் செய்து, "நாளைக்கு நவராத்திரி  கொலுவுக்கு ஒத்தராத்ல என்ன கூப்பிட்டு இருக்கா. நான் போறதா இருக்கேன். நீங்களும், ம்ருதுளாவும் என் கூட வந்தீங்கன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்" என்றாள். மறுநாள் மைதிலியும், ம்ருதுளாவும், சுப்புலக்ஷ்மியுடன் ராஜா அண்ணாமலை புரத்தில் இருந்த விஸ்வநாத சர்மா என்பவர் வீட்டிற்கு சென்றார்கள். வீட்டின் ஹாலில்  விஸ்வநாத சர்மா அமர்ந்து கொண்டு இருந்தார். இவர்கள் போனதும், விஸ்வநாத சர்மா"லலிதா,சுப்பு லக்ஷ்மி மாமி வந்திருக்கா பார் ",என்று குரல் கொடுத்தார். விஸ்வநாத சர்மாவின்  மனைவி லலிதா, சுப்பு லக்ஷ்மியை பார்த்து "வாங்க மாமி.பாத்து ரொம்ப நாள் ஆயிடுத்து. நண்ணாயிருக்கேளா? பாட்டு கிளாஸெல்லாம் எப்டி போயிண்டிருக்கு?ராதிகா சௌக்யமா.அவ ஏன் வரல" என்று கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தாள்.

சுப்பு லக்ஷ்மி" ராதிகா ஏதோ வேலையா காஞ்சிவரம் வரைக்கும் போயிருக்கா.பாட்டு க்ளாஸ் அமோகமா போறது" என்று சொல்லிவிட்டு, மைதிலி யையும், ம்ருதளாவையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள். 

" ஒரு பாட்டு பாடுங்க மாமி" என்றாள் லலிதா.

"என் பாட்டுதான் வழக்கமா கேக்கறேளே.

இன்னிக்கு நான் பாடறதுக்கு  பதிலா ம்ருதுளா தான் பாட போறா"என்றாள்  சுப்புலக்ஷ்மி. லலிதா ச்ருதி பெட்டியை கொண்டு வந்து கொடுத்தாள். ச்ருதி சேர்த்துக்கொண்ட ம்ருதுளா,ச்யாமா சாஸ்திரிகளின்  "ஹிமாத்ரி சுதே பாஹிமாம்" என்ற  கல்யாணி ராக பாடலை பாடி, ச்யாமா க்ருஷ்ணன் சோதரி கௌரி என்ற   இடத்தில் நிறுத்தி, நிரவல் செய்து,

சிறிது ஸ்வரம் பாடினாள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விஸ்வநாத சர்மா மிருதுளாவின் பாடலில் சொக்கி போனார். அவர் எத்தனையே வித்வான்களின் கச்சேரியில் இந்த கீர்த்தனையை கேட்டு ரசித்திருக்கிறார். ஆனால் இப்போது ம்ருதுளா கீர்த்தனை பாடிய விதமும், அவளது கல்யாணியில் இருந்த கம்பீரமும் (Majesty) அவருக்குள்ளே ஊடுருவி, அவரை வேறோரு உலகத்திற்கு அழைத்துச்சென்றன. லலிதாவும் அப்படியே. பாடல் முடிந்து, அதை அனுபவித்த ஏகாந்த நிலையிலிருந்து விடுபட்டு, சகஜ நிலைக்கு திரும்பிய விஸ்வநாத சர்மா இரு கைகளையும் தட்டி "பேஷ். ரொம்ப பிரமாதமா பாடற கொழந்தை" என்றார்.

விஸ்வநாத சர்மாவை பற்றி இங்கு சொல்லியாக வேண்டும்.  மியூசிக் அகேடமி கவர்னிங் கவுன்சிலில் அவர் ஒரு முக்கிய அங்கத்தினர். இதை தெரிந்துதான் சுப்பு லக்ஷ்மி, ம்துளாவை அங்கே அழைத்துக் கொண்டு போயிருந்திருந்தாள். பின்பு மிருதுளாவை பற்றி சுருக்கமாக சுப்புலக்ஷ்மி விஸ்வநாத சர்மாவிடமும், லலிதாவிடமும் கூறினாள். சுப்பு லக்ஷ்மி பின்னர் அவரிடம் " மியூசிக் அகாடமில  12 மணி ஸ்லாட்ல இந்த கொழந்தைக்கு இந்த வருஷம் சான்ஸ் கெடைக்க நீங்கதான் மனசு வைக்கணம் " என்று விண்ணப்பித்தாள். 

 " என்னம்மா நீ. நவம்பர்ல வந்து இப்படி கேக்கற. இந்த வருஷம் ஷெட்யூல் எல்லாம் செப்டம்பர்லே முடிஞ்சு போச்சு. நிச்சயம் அடுத்த வருஷத்துக்கு நான் ஏற்பாடு பண்றேன்" என்று கூறினார்.

பிறகு சுப்புலட்சுமி, ம்ருதுளா மற்றும் மைதிலி ஆகியோர்  லலிதாவிடம் விடை பெற்றார்கள். குங்குமம் கொடுத்து, தட்டில் தேங்காய், ரவிக்கத் துண்டு,தனித்தனி பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருந்த ஸ்வீட்,பட்டாணி சுண்டல் ஆகியவற்றை மூவருக்கும்  கொடுத்தாள் லலிதா. மைதிலி சொன்னதும், ம்ருதுளா விஸ்வநாத சர்மாவுக்கும்,  லலிதாவுக்கும் நமஸ்காரம் செய்தாள். விசுவநாத சர்மா ம்ருதுளாவை பார்த்து "உனக்கு பிரகாசமான எதிர்காலம்  காத்துண்டிருக்கு குழந்தை. இந்த வருஷம் சான்ஸ் இல்லேன்னு கவலப்படாதே" என்றார். பின்பு மூவரும் வீடு திரும்பினார்கள்.

*பின் குறிப்பு:* சென்னை ம்யூசிக் அகேடமி, சங்கீத வித்வத் சபை என்றும் அழைக்கப்படுகிறது.

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், பல்லடம் சஞ்சீவராவ், டி.எல். வெங்கட்ராம ஐயர் மற்றும் பல புகழ் பெற்ற மனிதர்களால்,

1928 ஆகஸ்ட் 18 ல் இது உருவானது. ஒவ்வொரு வருடமும் *சங்கீத கலாநிதி* என்ற விருதை மிகச்சிறந்த  சங்கீத வித்வான்களுக்கு வழங்கி அவர்களுக்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தனக்கும் பெருமை சேர்த்துக்கொள்கிறது.

சங்கீத கலாநிதி அவார்டுகளை முக்கியமாக வாய்ப்பாட்டுக்காரர்களுக்கு கொடுப்பதையே வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. மாபெரும் மேதைகளான லால்குடி ஜெயராமன், டி.என். கிருஷ்ணன்,எம். எஸ் கோபாலகிருஷ்ணன், மாலி போன்ற வாத்திய கருவி விற்பன்னர்களை ம்யூசிக் அகேடாமி பல காலம் கண்டு கொண்டதாக தெரியவில்லை என்று படித்து தெரிந்து கொள்கிறேன்.

சங்கீத கலாநிதி அவார்டை, லால் குடி ஜெயராமன் அவர்களுக்கு மிக லேட்டாக கொடுக்க நினைத்து அவரை அணுகிய போது, 'தனக்கு உரிய நேரத்தில் அந்த விருதை  வழங்காததால் வேண்டாம்' என்று மறுத்துவிட்டதாக தெரிகிறது .

2008 ல் லால்குடி சாருக்கு life time award கொடுத்து தன்னை கௌரவித்துக் கொண்டது ம்யூசிக் அகேடமி. இன்றைய 

பின் குறுப்பில் நான் கூறிய எவையும் என் சொந்த கருத்து அல்ல. கூகுள் செய்து கண்டுபிடித்த கருத்துகளே ஆகும். இந்தக் கருத்துக்களுக்கும், எனக்கும், தொடர்பில்லை என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

பொரி உருண்டை

 பொரி உருண்டை

பொரி, வெல்லம்,  வறுத்த வேர்க் கடலை, மேஜைக் கரண்டி பொட்டுக் கடலை, மேஜைக் கரண்டி சுக்கு தூள், மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள், முந்திரி பருப்பு, நெய் இவைகளை எடுத்துக் கொள்ளவும்👇

 செய்முறை

முதலில் பொரியை ஒரு துணியில் கொட்டி அதை நன்கு சுத்தம் செய்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து, பின்பு முந்திரி பருப்பு களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் முந்திரி பருப்புகளை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு பவுலை எடுத்து அதில் அவல் பொரி, வறுத்த வேர்கடலை, பொட்டுக் கடலை, மற்றும் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரியை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு ஒரு ஏர் டைட் கண்டைனரில் போட்டு வைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வெல்லத்தை தூள் செய்து போட்டு 

2 கிளறு கிளறி பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை நன்கு கரைத்து விடவும்.

தண்ணீர் சேர்க்கும் போது கவனமாக சேர்க்க வேண்டும் அதிகமாக தண்ணீர் சேர்த்து விடக் கூடாது.

பின்பு வெல்லம் நன்கு கரைந்ததும் அதை ஒரு வடி கட்டியின் மூலம் வேறொரு பாத்திரத்தில் ஊற்றி அதை நன்கு வடிகட்டி கொள்ளவும்.

பிறகு வேறொரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் வடிகட்டிய வெல்லத்தை ஊற்றி அதை மீண்டும் சுட வைக்கவும். 

வெல்லம் சிறிது சூடானதும் அதில் சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

பின்னர் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து கவனமாக ஒரு கம்பி பதத்தை பாகு எட்டி விட்டதா என்பதை பார்க்கவும்.    

வெல்லப்பாகு 

2 கம்பி பதத்தை தாண்டியவுடன் ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு தண்ணீரை எடுத்து அதில் கொதித்து கொண்டிருக்கும் வெல்ல பாகிலிருந்து ஒரு கரண்டியின் மூலம் 

2 துளிகளை எடுத்து விடவும்.

பின்பு அதை நம் கைகளின் மூலம் உருட்டும் போது அது நன்கு உருட்ட வரவேண்டும்.

அப்படி உருட்ட வந்தவுடன் அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு அதில் நாம் கலந்து வைத்திருக்கும் அவல் பொரி கலவையை கொட்டி அதை பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிளறி விடவும்.

பிறகு அதில் அரை மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடவும்.

இந்த பொரி கலவையை சூடாக இருக்கும் போதே நாம் உருண்டை களாக பிடித்தால் தான் உண்டு. 

அப்படி இல்லை என்றால் அவை ஆறியவுடன் நம்மால் பிடிக்க முடியாது.

அதனால் நம் கைகளில் நன்கு நெய்யை தடவி கொண்டு அது சூடாக இருக்கும் போதே அதை பக்குவமாக உருண்டைகளாக பிடித்து அதை சிறிது நேரம் ஆற விட்டு பின்பு பரிமாறவும்.

Friday, November 24, 2023

இருதயாலீசுவரர் திருக்கோயில்,

 அருள்மிகு இருதயாலீசுவரர் திருக்கோயில்,

*திருநின்றவூர்,* 

*திருவள்ளூர் மாவட்டம்.*

*+91-94441 64108.*

*காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*


*மூலவர்    –         இருதயாலீஸ்வரர் (மன ஆலய ஈஸ்வரர்).*
*அம்மன்    –         மரகதாம்பிகை, மரகதவல்லி.*
*தல விருட்சம்    –         வில்வம்.*
*பழமை    –         1000-2000 வருடங்களுக்கு முன்.*
*ஊர்    –         திருநின்றவூர்.*
*மாவட்டம்    –         திருவள்ளூர்.*
*மாநிலம்    –         தமிழ்நாடு.*

*நாயன்மார்களில் ஒருவரான பூசலார் திருநின்றவூரில் பிறந்தவர். இவர் தினமும் அவ்வூரிலுள்ள சிவலிங்கம் ஒன்றைத் தரிசித்து வந்தார். மேற்கூரை இல்லாத அந்த இலிங்கம் வெயிலிலும், மழையிலும் நனைந்தது. இதைப்பார்த்த பூசலாருக்கு சிவனுக்கு கோயில் கட்ட ஆசை எழுந்தது. இவரோ பரம ஏழை. எனவே சிவனை தன் மனதில் இருத்தி, தன்னிடம் ஏராளமான பணம் இருப்பது போல் கற்பனை செய்து கொண்டார். மனதுக்குள்ளேயே கோயில் கட்ட ஆரம்பித்தார். அந்தக் கோயிலில் இல்லாத பொருளே இல்லை. செய்யாத வசதியே இல்லை.*

*மனம் காற்றை விட வேகமானது என்பர். மனம் நினைத்தால் ஒரே நாளில் கோயிலைக் கட்டி விடலாம். ஆனால், நாயனார் அவசரப்படவில்லை. உண்மையிலேயே ஒரு கோயில் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆகுமோ, அத்தனை ஆண்டுகள் இந்த கோயிலை கட்டினார்.*

*இந்த நேரத்தில் காஞ்சிபுரத்து மன்னன் சிவனுக்கு உண்மையான கோயிலை கட்டிக் கொண்டிருந்தான். அவன் கட்டி முடித்த நேரமும், பூசலார் தன் மனக்கோயிலை கட்டி முடித்த நேரமும் ஒன்றாக அமைந்தது. இருவரும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்த நாள் குறித்தனர். மன்னன் கட்டிய கோயில் கும்பாபிஷேகத்திற்காக காஞ்சி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான்,”நீ எனக்கு கோயில் கட்டியிருப்பது குறித்து மகிழ்ச்சிதான். ஆனால், இதே நாளில் திருநின்றவூரில் பூசலார் என்ற அடியார் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்து விட்டார். நான் அந்த கோயிலுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே நீ வேறொரு தேதியில் கும்பாபிஷேகத்தை வைத்துக் கொள்” என்று கூறி மறைந்தார்.*

*திடுக்கிட்டு விழித்தான் பல்லவ மன்னன். கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு இறைவன் குறிப்பிட்ட திருநின்றவூருக்கு புறப்பட்டான். அங்கு சென்றதும் பூசலார் என்பவர் இவ்வூரில் கட்டியிருக்கும் கோயில் எங்கே என விசாரித்தான். யாருக்கும் அது பற்றி தெரியவில்லை.*

*பின் பூசலாரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை வணங்கி, “நீங்கள் கட்டியுள்ள கோயில் எங்கே உள்ளது? நேற்றிரவு சிவன் எனது கனவில் கூறினார். அதைத் தரிசிப்பதற்காக வந்துள்ளேன்” என்றான்.*

*மன்னன் சொன்னதைக் கேட்டு பூசலாருக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது. “அரசே! சிவபெருமான் உங்கள் கனவில் கூறியதை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கோயில் கட்டுமளவு என்னிடம் வசதி இல்லை. எனவே எனது உள்ளத்திற்குள் ஒரு சிவாலயம் கட்டி, இன்று கும்பாபிஷேகம் நடத்துவதாக கற்பனை செய்து கொண்டேன். இதைத்தான் சிவன் உங்களிடம் கூறியுள்ளார்” என்றார். இதை கேட்டதும் மன்னன் அதிர்ச்சி அடைந்தான். அன்பினால் மனதில் கட்டும் கோயிலுக்கும், பல லட்சம் செலவு செய்து கட்டும் கோயிலுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டான்.*

*குறிப்பிட்ட நாளில் பூசலார் எழுப்பிய மனக்கோயிலில் சிவபெருமான் எழுந்தருளினார். அவரது இதயத்தில் நடந்த கும்பாபிஷேகத்தை பக்தர்கள் அனைவரும் கண்டுகளித்தனர். அன்றே ஈசனின் திருவடியையும் அடைந்தார் அவர். சிவபெருமான் அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.*

*பூசலாரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் மன்னன் இத்தலத்தில் நிஜக்கோயில் கட்டி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து அதற்கு இருதயாலீஸ்வரர் என்று திருநாமம் சூட்டினான்.*

*சிவனின் மூலஸ்தானத்திலேயே பூசலார் நாயனாரின் சிலை இருப்பது தனி சிறப்பு. பூசலார் நாயனார் இறைவனைத் தன் இதயத்தில் வைத்துப் பூஜித்து கோயில் கட்டியதால், இதயம் தொடர்பான நோய்களுக்கு இங்கு வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது.*

*சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள பக்தி மிக்க இதயநோய் டாக்டர்கள் தங்களது நோயாளிகள் விரைவில் குணமாக வேண்டும் என திங்கட்கிழமைகளில் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.*

*சுவாமி கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். “கஜபிருஷ்டம்” என்னும் அமைப்பில், தூங்கானை மாட வடிவில் சுவாமியின் விமானம் அமைந்துள்ளது.*

*சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நந்திதேவர், சண்டிகேஸ்வரர், நடராஜர் சன்னதிகள் அமைந்துள்ளன.*

*திருவிழா:*

*மகாசிவராத்திரி, தைப்பூசம், மகா சங்கராந்தி, பங்குனி உத்திரம், ஆருத்ரா தரிசனம், வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, பிரதோஷம், கார்த்திகை, சித்திரை வருடப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, திங்கள், வெள்ளிக்கிழமைகள்.

*கோரிக்கைகள்:*

*இதயநோய் குணமாக திங்கட்கிழமைகளில் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.*

*நேர்த்திக்கடன்:*

*வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.*

Thursday, November 23, 2023

Andhra Style - Palakura Pappu

 Andhra Style - Palakura Pappu

Palak/Spinach - 2 cups ( 1 big bunch)
Toor dal - 1/2 cup
Tamarind or Tomato OR lemon juice  - Berry size or 1 no (Do not chop the tomato)/ few drops
Salt & water - as needed
Big onion - 1 no
Green chillies – 4 nos ( I used 2)
Ginger - 1 inch (finely chopped)
Turmeric powder - 1/4 tsp
Sugar – a pinch
Oil - a drop

 To temper

Cooking oil or ghee - 1 tbsp
Mustard seeds - 1/2 tsp
Urad dal - 1 tsp
Garlic cloves - 5 nos ( crushed with skin)
Red chillies - 2 nos ( I used guntur chilli)
Cumin seeds - 1/2 tsp
Curry leaves - few
Hing/Asafetida - a big pinch

 METHOD

Wash and chop the palak leaves finely.In a pressure cooker base, take the toor dal and add 1.5 to 2 cups of water. 

Add turmeric powder,roughly chopped big onion, one full tomato(optional) slitted green chillies ginger, ,salt, sugar and chopped palak ( some uses tomato.But I read its not good to add palak & tomato together. 

So If uou don’t want to use tomato, use 1 tsp tamarind extract after cooking the dal and boil well}

Let it pressure cook in low flame for one whistle.After the steam is released,open the cooker and mash everything well using a thick ladle or whisk. 

Boil it to bring its right consistency.( If you don’t want to use tomato, add tamarind extract after opening the cooker now and boil the mixture  for a minute)

In a kadai, heat ghee or oil and splutter mustard seeds, urad dal,  cumin seeds, red chilli and crushed garlic cloves. 

Saute well for a minute and add them to the boiling dal.

Add tamarind extract if uing. Boil for a minute. 

After the dal becomes slightly thick and pourable, remove it and serve hot with rice adding a drop of ghee. Enjoy ! 

(Note : You can also add few drops of lemon juice instead of tomato or tamarind).

Palakura pappu

 Note

I read in Vahchef’s site by readers that palak & tomato should not be cooked together. I am not sure about the reason. 

So if you want to skip tomato, add thick tamarind extract only after cooking the dal palak mixture. 

You can also use lemon juice instead of tomato or tamarind. 

If using tomato, do not chop it and add to dal. Dal won’t be cooked well n mushy. 

So add it as whole tomato.

Make sure the dal is mashed well after cooking else the mixture will look watery and separate.

You can replace toor dal with moong dal too.

This palakura pappu can be done in another way, also 

ie. Heat oil in a cooker. Temper all the spices given above and then add onions, green chillies, ginger. 

Saute them for a while and now add the moong dal and washed palak leaves.  

Add required water and salt. Pressure cook everything for one whistle in low flame.

Easy, healthy Palakura Pappu is ready to relish with hot rice n ghee !

வசந்தகாலம் வருமோ? -21

 வசந்தகாலம் வருமோ? -21

By N Krishnamurthy 

கிட்டத்தட்ட நான்கு மாதங்களிள் சுமார் 12 உருப்படிகள் ம்ருதுளாவிற்கு அத்துபடியானது.

(இந்த உருப்படி ஒரு வேடிக்கையான வார்த்தை. சங்கீதத்தில் உள்ள கீர்த்தனைகளுக்கும் உருப்படி என்கிறார்கள். துணிகளை அயர்ன் செய்ய கொடுக்கும் போதும், சலவைக்காரரும் எத்தனை உருப்படி என்று தான் கேட்கிறார்!)

ம்ருதுளாவிற்கு சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்த மாதிரி குரல், நல்ல மனோதர்மம், ஸ்வரம் பாடினாள் என்றால் இன்றைக்கு பூராவும்  கேட்டுக் கொண்டிருக்கலாம். G.N.B மாதிரி ஸ்வரங்களை சின்ன சின்ன Phrase ஆக  பாடுவதை கேட்கும் போது, இவ்வளவு லகுவாக கூட ஸ்வரம் பாட முடியுமா என்ற வியப்பு கேட்டவர்களுக்கு மேலோங்கியது.

ஓரு நாள் சுப்புலக்ஷ்மி புதிதாக ஒரு கீர்த்தனையை சொல்லிக்கொடுக்க தீர்மானித்து, சித்த ரஞ்சனியில் அமைந்த தியாகராஜரது கீர்த்தனையான 

"நாத தனுமனிஷம் சங்கரம்" 

பற்றி ஒரு சிறிய இன்ட்ரொடக்ஷன் கொடுத்தாள்.

"என்னுடைய மனதாலும்,உடலாலும், நாதமே உருவான சங்கரனை நமஸ்கரிக்கிறேன். ஏழு ஸ்வரங்களும் சிவபிரானது ஐந்து முகங்களிலிருந்து உருவானவை " என்று கூறி, இது மாபெரும் சித்தர்களின் மனதிலும் புகுந்து இனிமையை கூட்டும் ராகமாதலால் சித்தரஞ்சனி என பெயர் பெற்றது என்றாள்.

சித்தரஞ்சனியில் ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்,மற்றும் கைஷிகி நிஷாதம் வரும் என்று கூறியபின், அந்த ராகத்தின் ஆரோஹணம், அவரோஹணமான ,ச,ரி,க,ம,ப,த,நி/ நி,த,ப,ம,க,ரி,ச பாடிய பின், பாடலை பாடிக்காட்ட ஆரம்பித்தாள். பாட்டில் "சரிகபதனி" என்ற இடம் வரும்போது, உணர்ச்சி பெருக்கால் அடுத்த வரி ஞாபகம் வராமல், மேலே செல்ல முடியாமல், சுப்பு லக்ஷ்மி தவித்தபோது, தீடிரென்று ம்ருதுளா 'வர சப்த ஸ்வர' என்று எடுத்துக்கொடுக்க, திடுக்கிட்ட 

சுப்புலக்ஷ்மி,அதனை தொடர்ந்து பாடலை நிறைவு செய்தாள்.

ம்ருதுளாவிடம் " நோக்கு முன்னாடியே இந்த கீர்த்தனை தெரியுமா? அம்மா ஆத்துல பாடுவாளா இல்ல ரேடியோவில கேட்டிருக்கயா" என்று கேட்டாள். எல்லாவற்றிற்கும் இல்லை என ம்ருதுளா பதிலளித்தாள். "அப்புறம் எப்படி சரியா அடுத்தவரியை எடுத்துக்கொடுத்தே" என்றதும்,ம்ருதுளா " நேக்கு என்னமோ இந்த கீர்த்தனையை எப்பவோ கேட்ட மாதிரியும்,  நானே பாடின மாதிரி உணர்ந்தேன்" என்றாள்.

சுப்புலக்ஷ்மி உணர்ச்சி பெருக்கால் ம்ருதுளாவை கட்டி அணைத்துக் கொண்டாள். மனதுக்குள் "ஆண்டவா.இந்த கொழந்தைக்கு பூர்ண ஆயசை கொடுத்து நீதான் ரக்ஷிக்கணம்" என்று வேண்டிக்கொண்டாள்.

ராதிகாவிடம் இந்த நிகழ்ச்சியை சொல்லிக்காட்டியபோது அவள் " அம்மா, இதெல்லாம் அவளுக்கு சர்வ சாதாரணம். ஜுஜீபி. அவ மனசுல இருக்ற சங்கீதம்  முழு பிரவாகமா வெளில வரும் போது தான் இருக்கு வேடிக்கை. நான் சொல்றேன், நீ எழுதி வெச்சுக்கோ,இவ கச்சேரி பண்ண ஆரம்பிச்சா, இப்போ இருக்கற சீனியர் வித்வான்லாம் காணம போய்டுவா" என்றாள்.

பின் குறிப்பு : சித்தரஞ்சனி  ராகத்தில் ஒரு தமிழ் திரை இசைப் பாடல் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? 1949 ஆம் வருடம் வெளிவந்த மங்கையர்கரசி என்ற திரைப்படத்தில் "காதல் கனி ரசமே" என்று இந்த ராகத்தில் அமைந்த பாடலை, பி.யூ. சின்னப்பா பாடி இருக்கிறார்

வசந்த காலம் வருமோ? -20

 வசந்த காலம் வருமோ? -20

By N Krishnamurthy 

ராதிகாவின் அனுமானம் பொய்த்து போனது. சரியாக இரண்டே மாதங்களில் ம்ருதுளா கர்நாடக சங்கீதத்தின் பால பாடங்களை கற்றுக் கொண்டு விட்டாள்.

நெளிவு சுளுவுகள் அத்தனையும் அத்துப்படி ஆனது.Coming out with flying colours  என்பார்களே அதுபோல அவள் ராதிகா வகுப்பிலிருந்து சீனியர் வகுப்பிற்கு சென்றாள்.

ராதிகாவிற்கு ம்ருதுளா மேல் கரை  கடந்த அன்பும்,பாசமும் உண்டாயிற்று.

பிற்காலத்தில் இவள் கர்நாடக சங்கீத உலகை ஒரு கலக்கு கலக்கப்போகிறாள் என்று ராதிகா திடமாக நம்பினாள்.

இதன்பின்னர் ம்ருதுளா சுப்புலக்ஷ்மி  வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்தாள். 

சுப்புலஷ்மியை குருவாக அடைந்தது ம்ருதுளாவுக்கு ஒரு பெரிய பாக்கியமாக இருந்தது. 

சுப்புலக்ஷ்மி அடிப்படையில் (அதாவது பேசிக்கில்) மிகவும் ஸ்ட்ராங்காக இருந்தாள். குழந்தைகளுக்கு படிப்படியாக கற்றுக் கொடுத்தாள். குழந்தைகளின் மேல் கர்நாடக சங்கீதம் என்று பெரிய பளு, டக்கென்று இறங்காதவாறு பார்த்துக்கொண்டாள்.

ஒரு ராகத்தின் ஸ்வரூபம் கடைசி வரையில் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக,  அதை கற்றுக் கொடுக்க, அதன் ஆரோகணம் அவரோஹணம், கீதம் என்று படிப்படியாக டெவலப் செய்த பின் தான் வர்ணம் கற்றுக் கொடுக்கப் போவாள்.

வர்ணம் கற்றுக்கொடுப்பதற்கு முன்  பல கீதங்கள் மற்றும் ஸ்வரஜாதிகள்/ஜதிஸ்வரங்கள் ஆகியவற்றை சொல்லிக்கொடுத்தாள்சுப்பு லக்ஷ்மி. ஆரம்ப கட்டத்தில்  அறிமுகப்படுத்தப்பட்ட ராகங்களின்  ஆரோஹணம் மற்றும் அவரோஹணத்தைப் பாடுவதற்கு, 15-20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாள். இவையே ஜீவ ஸ்வரங்கள் என்றும், ராக தேவதையின் முழு ஸ்வரூபத்தை வெளிக்கொணர இந்த பயிற்சி அவசியம் என்றாள். 

சரளி வரிசை,ஜண்ட வரிசை, மத்யஸ்தாயி, மந்த்ர ஸ்தாயி, தாரா ஸ்தாயி வரிசைகள் பற்றி விளக்கினாள். வர்ணங்களுக்குச் செல்வதற்கு முன் அலங்காரங்கள் பயிற்சி செய்யப்பட்டது.

வர்ணத்தை சொல்லி கொடுக்கும் போது,சுப்புலஷ்மி ராகத்தில் ஒரு கீதம், ஒரு ஜதிஸ்வரம் / ஸ்வர ஜதியையாவது அறிந்திருக்க வேண்டும் என உறுதி படுத்தினாள்.

மோகனத்தில் அலங்காரத்தையும், அதைத் தொடர்ந்து "வரவீணா ம்ருது பானி" கீதத்தையும்,  தொடர்ந்து இரண்டு  ஜதீஸ்வரங்களையும்  சொல்லித்தந்த பின்னர் தான் மோகன ராக வர்ணம் " நின்னு கோரி" யை  பாடி பயிற்சி அளித்தாள். 

ஒரு கீர்த்தனத்தை சொல்லிக் கொடுத்தால் மற்ற குழந்தைகள் கிரஹித்துக் கொண்டு பாடுவதற்கு பத்து நாள் ஆகும் என்றால் ம்ருதுளாவிற்கு அது சரியாக ஒரே நாள் தான் பிடித்தது. நோடேஷன் எதுவும் எழுதிக்கொள்வதில்லை

ம்ருதுளாவின் வேகத்திற்கு சுப்புலக்ஷ்மியால்  ஈடு கொடுக்க முடியவில்லை.

வசந்த காலம் வருமோ?- 19

 வசந்த காலம் வருமோ?- 19

By N Krishnamurthy 

சுப்புலக்ஷ்மி "குழந்தை என்ன சொல்றா" என்று கேட்டவுடன் "ஒண்ணும் இல்ல மாமி. நீங்க உங்க ஸ்டூடன்ட்ஸ்க்கு  சொல்லிக் கொடுத்துண்டு இருந்தேங்களே "கொலுவ மரகத கோதண்டபாணி",  அது தோடி ராகம்ன்னு சொல்றா" என்றாள்.

சுப்புலட்சுமி ஆச்சரியத்துடன்  இத்தனூண்டு கொழந்தையா இதெல்லாம் கண்டுபிடிக்கிறா" என்று கேட்டாள்.

" ஆமாம் மாமி. ரெண்டு வயசுலேந்து எந்த பாட்டு பாடினாலும்  ராகத்தை சரியா கண்டுபிடிக்கிறா" என்றாள் மைதிலி. அதற்கு சுப்பு லக்ஷ்மி "இது போல  அதிசயத்த எல்லாம் நான் கேள்விப்பட்டுதான் இருக்கேன்.இப்பதான் முதல் மொறையா பாக்கறேன்"  என்று சொல்லி " சோபில்லு சப்த ஸ்வர" என்று ஒரு வரிதான்  பாடினாள்.  ம்ருதுளா  உடனே "ஜகன் மோகினி" என்றாள்.

குழந்தையை மைதிலியிடமிருந்து வாங்கி, உச்சி முகர்ந்து "எப்படிடா கண்ணா கண்டுபிடிக்கிற? நாங்க எல்லாம் ஆரோஹணம்,அவரோகணத்தை  வச்சித்தான் ராகங்களை கண்டுபிடிக்கிறோம். அதெல்லாம் ஒண்ணும் தெரியாம நீ பாட்டுக்கு அடிச்சு விடற" என்று சொல்லி குழந்தைக்கு முத்த மாதிரி பொழிந்தாள்.

மைதிலையை பார்த்து "நீங்களும்  பாடுவேளா" என்றாள்."ஆமாம் மாமி. ஒரு ஆறு வருஷம் கத்துண்டேன். கல்யாண ஆகி குழந்தை பெறந்துட்டா. வீட்டு வேலைக்கு டைம் சரியா போய்ண்டு இருக்கு. அதனால அதை கண்டினியூ பண்ண முடியல. ஆனா சமயம் கெடைக்கும் போதெல்லாம் பாடுவேன்" என்றாள் மைதிலி. இதைக் கேட்ட சுப்புலக்ஷ்மி" ரொம்ப நல்லது. இந்த குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறதுன்னு நேக்கு பயமா இருக்கு. என் பொண்ணு ராதிகா கிட்ட கேட்டூட்டு உங்களுக்கு நாளைக்கு தகவல் சொல்லட்டுமா. ஆத்ல போன் இருந்தா, நெம்பரை குடுங்கோ"என்று கூறி தன் டெலிபோன் நெம்பரை மைதிலியிடம் கொடுத்தாள்.

மகள் ராதிகா வந்தவுடன் சுப்பலக்ஷ்மி அவளிடம் விஷயத்தை சொல்ல,கேட்டதும் ராதிகாவுக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது.

"அந்த கொழந்தை நம்ப கிட்ட பாட்டு கத்துண்டா நமக்கு எப்பேர்பட்ட பேர் கெடைக்கும்னு யோசிச்சு பாத்தயா" என்றாள்.

இதன் பிறகு சுப்புலக்ஷ்மி மைதிலிக்கு போன் செய்தாள்.

"மாமி.என் பொண்ணு ராதிகா கிட்ட பேசினேன். அவ குழந்தைக்கு டீச் பண்ண ரொம்ப இன்ட்ரஸ்ட்டா இருக்கா. நாளையிலிருந்து அவளை நீங்க கொண்டு வந்து விட்டுடுங்கோ. முதல்ல தினம் அரை மணி நேரம் சொல்லிக் கொடுக்கலாம். எப்படி போறதுன்னு பாத்துண்டு பின்னாடி டையத்தை இன்க்ரீஸ் பண்ணிக்கலாம்" என்றாள்.

" சரி மாமி.ரொம்ப சந்தோஷம். எவ்வளவு பீஸ் கொடுக்கணும்" என்று கேட்டாள் மைதிலி. அதற்கு சுப்புலக்ஷ்மி "அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். மொதல்ல நாளையிலேந்து குழந்தை மறக்காம அழிசிண்டு  வாங்க" என்றாள் .

மறுநாள் சுப்புலக்ஷ்மியும், ராதிகாவும், மைதிலியையும், மிருதுளாவையும் பார்க்க காத்துக் கொண்டிருந்தார்கள். மைதிலி குழந்தையுடன் போய் சேர்ந்தவுடன், ராதிகா மிருதுளாவை தூக்கி கொண்டாள். அவளை கொஞ்ச நேரம் கொஞ்சினாள்.

" என்னடா கண்ணம்மா. ராகம்லாம் நீ கண்டு பிடிக்கிறியாமே"என்று கூறிவிட்டு ஸ்யாமா சாஸ்திரிகளின் "சங்கரி சம் குரு சந்திரமுகி, அகிலாண்டேஸ்வரி" என்னும் பாடலை பாடிவிட்டு,குழந்தையை பார்த்து,"இது என்ன ராகம்"என்று அவள் கேட்டு முடிக்கு முன்னர் குழந்தை ஸ்பஷ்டமாக "சாவேரி" என்று சொன்னாள். இதைக் கேட்ட ராதிகா "மாமி இவ கொழந்தையே இல்ல. குழந்தை ரூபத்தில இருக்கிற ஒரு மாமேதை. இப்படி கூட இந்த வயசுல இருக்க முடியுமான்னு தெரியல. எங்கம்மா சதா சர்வகாலமும் பாடிண்டு, அத நான் கேட்டுண்டு இருந்தாலும் கூட, எனக்கு சில ராகங்களை கண்டுபிடிக்கிற சக்தி எட்டு வயசுலதான்  தான் வந்தது. இது போல ஆச்சரியத்தை நான் இப்பதான் மொதல் மொறயா  பாக்கிறேன். இவள என் கிட்ட வுடுங்கோ. இன்னும் கொஞ்ச நாள்ல்ல பிரிப்பேர் பண்ணிடறேன்.என் அனுமானம் சரின்னா ஆறு மாசத்துல இவள அம்மா கிளாஸ்ல சேர்ந்துடலாம்னு நெனைக்கிறேன்" என்றாள்.

Tuesday, November 21, 2023

காஷ்மீரி தம் ஆலு

 காஷ்மீரி தம் ஆலு 👇👇

 தேவையான பொருட்கள்: 👇

சின்ன சின்ன உருளைக் கிழங்கு-1/2 கிலோ 
காஷ்மீரி மிளகாய்-10
தயிர்-1/2 லிட்டர் 
முந்திரி -20 
சுக்கு – 1 இன்ச்
மிளகு – 1/2 ஸ்பூன்
சீரகம் – 3/4 ஸ்பூன்
வர மல்லி – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
பட்டை – 1 
கிராம்பு – 2
ஏலக்காய் – 3
மிளகாய் தூள் – 1 ஸ்பூன், 
டொமேட்டோ கெட்சப் --3 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய்-தேவையான அளவு 

 *எப்படி பண்ணனும்* :❓

சிறிய உருளைக் கிழங்குகளை  நன்றாக அலசி கொண்டு, வெட்டாமல் அப்படியே முழுசாக குக்கரில் போட்டு ஒரே ஒரு விசில் மட்டும் விட்டு வேக வைத்து ,தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் உருளைக் கிழங்கின் சில பக்கங்களில் போஃர்க் வைத்து ஆங்காங்கே சிறிய ஹோல் போட்டு கொள்ள வேண்டும்.  

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு களை போட்டு, பொன்னிறமாக மாறும் வரை பொறித்து ஒரு தட்டில் எடுத்து கொள்ள வேண்டும்.

பின்பு காஷ்மீரி மிளகாயில் உள்ள விதைகளை அகற்றி விட்டு, தண்ணீரில் சுமார் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். 

ஒரு சின்ன கிண்ணத்தில் முந்திரி பருப்பை வெந்நீரில் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து , இந்த இரண்டினையும் தண்ணீரில் இருந்து வடித்து கொண்டு, ஒரு மிக்சி ஜாரில் தனித் தனியாக சிறிது நீர் தெளித்து விழுது போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் தயிரை மத்து பயன்படுத்தி நன்றாக கடைந்து வைத்துக் கொண்டு, அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது மற்றும் முந்திரி பருப்பு விழுதை சேர்த்து மீண்டும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

இப்போது தயிரின் நிறம் சிவப்பாக மாறி விடும். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொண்டு அதில் வர மல்லி, மிளகு , சீரகம் , சோம்பு  ஏலக்காய் ,பட்டை கிராம்பு ,சுக்கு ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் இல்லாமல் இரண்டு நிமிடங்கள் வறுத்த பின், மிக்சி ஜாரில் மாற்றி நைசான பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் தூள் மற்றும் நம்மிடம் அரைத்து வைத்துள்ள மசாலா தூள் சேர்த்து வறுத்து விட்டு, அதில் கடைந்து வைத்துள்ள தயிரை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். 

பின் அடுப்பின் தீயை மிதமாக வைத்து சுமார் 10 நிமிடங்கள் இதை கொதிக்க வைத்து, மேலே ஒரு தட்டு போட்டு மூடிவிட வேண்டும்.

எண்ணெய் பிரிந்து மேலே வரும் போது டொமேட்டோ கெட்சப் ஊற்றி , நன்றாக மிக்ஸ் செய்து சிறிது தண்ணீரை ஊற்றி, மீண்டும் சுமார் ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். 

அடுத்ததாக வறுத்து வைத்துள்ள பொட்டேட்டோவை இதனில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, மீண்டும் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மல்லி தழையை தூவி விட்டால் போதும். 

வேற லெவல் டேஸ்ட்டில் காஷ்மீரி தம் ஆலூ ரெடி !!

💐💐💐💐💐💐

Monday, November 20, 2023

வசந்த காலம் வருமோ?-18

 வசந்த காலம் வருமோ?-18

By N Krishnamurthy 

"அப்போ நாங்க கெளம்பறோம் மாமா" என்றான் சாரங்கன்.

சாம்பசிவ சாஸ்திரிகள் மைதிலியிடம்              " யாருக்கும் கெடைக்காத பொக்கிஷம் நோக்கு கெடச்சிருக்கம்மா. அவளுக்கு மொறையா சங்கீதம் கத்து கொடுக்க ஏற்பாடு பண்ணு. என் வார்த்தையை குறிச்சு வெச்சுக்கோ.பெரிவளானதும் அவ பெரிய பாடகியா பேர் எடுப்போ" என்றார்.

" கேக்றதுக்கே ரொம்ப சந்தோஷ இருக்கு மாமா.உங்கள போல பெரியவா ஆசிர்வாதம் வீண் போகாது மாமா" என்று மைதிலி கூறிய பின்  மைதிலியும், சாரங்கனும் அவருக்கு நமஸ்காரம் செய்தார்கள்.

" ஸ்ரேயசா இருங்கோ"          என வாழ்த்தினார் சாஸ்திரிகள். 

பின்பு இருவரும் ம்ருதுளாவுடன் வீடு திரும்பினார்கள்.

அன்று இரவு மைதிலி வேறு சில பாடல்களை ம்ருதுளாவின் முன் பாட, குழந்தை எல்லாவற்றின் ராகத்தையையும் சரியாக கூறினாள்.

மறுநாள் கோமளமும்,சக்ரவர்த்தியும் திரும்பியதும் விஷயத்தை கேள்விப்பட்டு பெரிதும் வியப்பும்,சந்தோஷமும் அடைந்தார்கள்.

"கொழந்தைக்கு த்ருஷ்டி சுத்தி போட்டயா" என்றாள் கோமளம் மைதிலியிடம்.

" இல்லம்மா" என்று மைதிலி சொன்னவுடன் கோமளா" அதை முதல்ல செய்ய வேண்டாமோ. கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது,தெரியாதோ" என்று அங்கலாய்த்து சொன்னாள்.

பின்னர் கோமளம் சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு, வலது புறமாக மூன்று முறையும் ,இடது புறமாக மூன்று முறையும்  சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட்டாள்.

மிளகாய் வெடித்தது.

" பார். கொழந்தைக்கு இப்பவே எவ்வளவு த்ருஷ்டி இருக்கு பார்" என்றாள் கோமளா. பின்னர் கோமளா வீட்டு வாசலில் கற்பூரம் ஏற்றி வைத்தாள்.

அன்று மாலை கோமளம்  ரங்க நாயகியிடம் போனில் விஷயத்தை சொன்னாள். முதலில் ஆச்சர்யமடைந்த ரங்க நாயகி பின்னர் "தோ பார்மா.இந்த காலத்ல கொழந்தைகள் படு சுட்டியா இருக்கா.என் பொண்ணே கச்சேரிக்கு கூப்டுண்டுபோன ரெண்டு,மூணு ராகத்த கண்டு பிடிக்கறா.செஸ் கத்துக்கறா.அவ செஸ் ஆடறத பாத்தா சீக்ரமே கிராண்ட் மாஸ்டர் ஆய்டுவான்னு தோணர்து" என்றாள்.

முதல் நாள்தான், தமுக்கம் மைதானத்தில் நடந்த எக்ஸிபிஷனில்,மகளின் தொணதொணப்பை தாங்க முடியாமல்,மேக்னடிக் செஸ் போர்டையும், காயன் பாக்ஸையும் வாங்கி கொடுத்திருந்தாள் ரங்கநாயகி. சொந்த தம்பி மகளுக்கு இந்த சின்ன வயசிலே இப்படி ஒரு சங்கீத ஞானம் இருப்பதை கேள்விப்பட்டதும் கொஞ்சம் சந்தோஷம் ஏற்பட்டாலும்,தன் சொந்த மகள் அப்படி இல்லையே என்ற அசூயை அவளிக்கிருந்தது.

எல்லா காலத்திலும், ஏன் திருவள்ளுவர் காலத்தில் கூட, இது போன்று மனிதர்களிடம் பொறாமை இருந்தது போல் இருக்கிறது. அதனால்தான் அவர் "அழுக்காறு,அவா, வெகுளி, இன்னாச்சொல் இந் நான்கும்" என்ற குரளில் அழுக்காறை (அதாவது பொறாமையை) முதலில் வைத்தார் போல் இருக்கிறது.

ரங்க நாயகி இப்படி பேசியது கோமளத்துக்கே பிடிக்கவில்லை.என்ன செய்வது.பெற்ற மகளாயிற்றே. விட்டுக் கொடுக்க முடியுமா?

மைதிலியிடம்" ரங்க நாயகி விஷயத்தை கேள்விபட்டதும் எவ்வளவு சந்தோஷபடறா தெரியுமோ நோக்கு" என்றாள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சக்கரவர்த்தி மைதிலியிடமும், கோமளத்திடமும்" ரங்கநாயகிக்கு சந்தோஷம் இருக்காதா பின்ன.ம்ருதுளா சொந்த மருமா ஆச்சே" என்றார் உண்மை  தெரியாமல்.

அப்போதெல்லாம் Pre K.G கிடையாது.L.K.G, U.K.G தான். ம்ருதுளாவிற்கு நான்கு வயது ஆரம்பித்ததும், ஒரு விஜயதசமிஅன்று அருகிலிருந்த ஒரு நர்சரி ஸ்கூலில் சேர்த்தார்கள்.

முதல் பத்து நாட்கள் அம்மாவை விட்டு விட்டு ஸ்கூல் போக, ம்ருதுளா முரண்டு பிடித்தாள்.அழுது,ஆகாத்யம் செய்தாள். பின்பு ஒழுங்காக ஸ்கூல் போய் வர ஆரம்பித்தாள்.

ஆறுமாதம் போனதும் ம்ருதுளாவிற்கு சங்கீத பால பாடத்தை ஆரம்பித்தாள் மைதிலி.

அருகில் சுப்புலக்ஷ்மி என்ற மாமி வாய்பாட்டு கற்று தருவதாக அறிந்து, ஒரு நாள், ம்ருதுளாவுடன் அவளை சென்று பார்த்தாள் மைதிலி.

சுப்புலக்ஷ்மி கொஞ்சம் அடிப்படை சங்கீத ஞானம் அடைந்தவர்களுக்கு கீர்த்தனங்கள்,ஸ்வரம் பாட கற்றுக் கொடுப்பது ஆகியவற்றை செய்து கொண்டிருந்தாள்.

அவளது பதினாறு வயது மகள் ராதிகா சின்ன குழந்தைகளுக்கு அடிப்படை சங்கீதம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள்.

வீட்டு மொட்டை மாடியில் கீற்றுக்கொட்டாய் போட்டிருந்தது. அங்கு காலையில் சீனீயர்களுக்கு வகுப்பும்,வீட்டிற்குள்ளேயே ஹாலில் குழந்தைகள் வகுப்பும் நடந்து கொண்டிருந்தன.

மைதிலி போகும்போது  சுப்புலக்ஷ்மி மாத்திரம் சீனியர்களுக்கு 'கொலுவ மரகாத கோதண்டபாணி' கீர்த்தனையை பாடி, எங்கே நி(நெ)ரவல் பண்ண வேண்டும் என்பதை விளக்கி,சில ஸ்வரங்களை பாடி காண்பித்தாள். 

அங்குள்ளவர்களை பிராக்டீஸ் செய்யுமாறு கூறி விட்டு,மைதிலியிடம் வந்து " சொல்லுங்கோ" என்றாள்.அவளிடம் குழந்தை இரண்டு வயதிலிருந்தே ராகங்களை கண்டுபிடிக்கிறாள் என்பதை சொல்லாமல்" கொழந்தைக்கு பாட்டு சொல்லி கொடுக்கணம்னு ஆசைப்படறோம்", என்றாள்.

தன் எதிரில் இருப்பது ஒரு பெரிய விருக்ஷம்,தன்னை மறைத்து, விதையாக காட்டிக்கொண்டிருக்கிறது என்று அறியாத  சுப்பு லக்ஷ்மி " ரொம்ப கொழந்தையா இருக்காளே.கொஞ்சம் டைம் ஆகட்டமே" என்றாள்.

அப்போது ம்ருதுளா மைதிலியின் காதில் ஏதோ கூறினாள். அதை சுப்புலக்ஷ்மியும் கேட்க முடிந்தது. "என்ன சொன்னா.

என்ன சொன்னா" என்று இருமுறை கேட்ட சுப்புலக்ஷ்மிக்கு குழந்தை  ம்ருதுளா சொன்னதை கேட்டதும் தூக்கி வாரிப்போட்டது.

Sunday, November 19, 2023

வசந்த காலம் வருமோ? -17

 வசந்த காலம் வருமோ? -17

By N Krishnamurthy 

சாம்பசிவ சாஸ்திரிகள் "என்ன சொல்லுங்க" என்று சொன்னவுடன்,  சாரங்கன் நடந்ததையெல்லாம் அவரிடம் விவரித்தான். அதை கேட்ட அவர் "இது மிகவும் சுவாரஸ்யமாகவும், ஆஸ்ச்சர்யமாகவும் இருக்கு" என்று கூறினார்.

பின்பு தன்னுடைய சன்னமான குரலில் "ராரா மா இண்டி தாக" என்ற அசாவேரி ராக கீர்த்தனையை பாடினார் சாஸ்திரிகள். ம்ருதுளாவைப் பார்த்து "இது என்ன ராகம்மா கோந்தை" என்று கேட்டார்.குழந்தை  பதில் சொல்லவில்லை.

மைதிலி ம்ருதுளாவைப்பார்த்து "சொல்லுடி என் செல்லமே" என்றாள்.ம்ருதுளா "அசாவேரி" என்றாள் மைதிலியின் காதில்.மைதிலி வேண்டுமென்றே குழந்தையை பார்த்து" சாவேரியா" என்று கேட்டாள். ம்ருதுளா இப்போது  கொஞ்சம் குரலை உயர்த்தி "அசாவேரி" என்றாள் நறுக்கு தெரித்தாற்போல்.

அதிர்ந்து போனார் சாம்பசிவ சாஸ்திரிகள். பின்பு அவர்கள் இருவரையும் பார்த்து "முதல்ல நீங்கள் சொன்னபோது நேக்கு நம்பிக்கை இல்லை. குழந்தை இப்போ நேரில  ராகத்தின் பேரை சொல்றப்போ இப்படி கூட இருக்க முடியுமா என்ற எண்ணம் எழுகிறது" என்று கூறியவர், மைதிலியை பார்த்து " ஏம்மா, நீ பாட்டு பாடுவயாக்கும் " என்று கேட்டார். அதுக்கு மைதிலி "ஆமா மாமா. சின்ன வயசுலேந்து பாட்டு கத்துண்டு வறேன். நிறைய கீர்த்தனம் பாடமா இருக்கு. அடிக்கடி பாடுவேன்" என்றாள். அப்பொழுது சாம்பசிவ சாஸ்திரிகள் " அது சரி. குழந்தை வயித்தல  இருந்த போது பாடிண்டே இருந்தயோ " என்றார்.

"ஆமாம் மாமா" என்றாள் மைதிலி. 

அவர் " இது ஒரு காரணமாக இருந்தாலும், இது ஒரு சின்ன காரணம்தான். இதனால குழந்தைக்கு சங்கீத ஞானம் ஓரளவுக்கு வருமே தவிர ராகத்தை எல்லாம் கண்டுபிடிக்கிற அளவுக்கு வராது. இந்த குழந்தை பூர்வ ஜென்மத்துல பெரிய சங்கீத வித்துவானா இருந்திருக்கணும்.பூர்வ ஜென்ம வாசம்  தொடர்ந்து வந்திண்டு  இருக்க.  இது எல்லாருக்கும் சாத்தியம் இல்லை. ரொம்ப புண்ணியம் பண்ணவாளுக்குதான் இது வாய்க்கும். இது மாதிரி வாய்க்கிறது கோடில ஒண்ணு கூட இல்ல. குழுந்தை வொண்டி புண்ணியம் பண்ணல.இவளை குழந்தையா அடஞ்சதுக்கு நீங்க எப்பேர்பட்ட புண்ணியம்பண்ணி இருக்கணம். நானே இது போல ஒரு நிகழ்ச்சியை இப்பதான் நேர்ல பார்க்கிறேன்" என்றார். 

இதை கேட்டு மைதிலையும், சாரங்கனும் ஆச்சரியம் அடைந்தார்கள். பின்பு சாம்பசிவ சாஸ்திரிகள் சொல்ல ஆரம்பித்தார்.

"பூர்வ ஜென்ம வாசம் தொடரதை பத்தி உங்களுக்கு ரெண்டு உதாரணம் சொல்ல போறேன்.முதல்ல கதை. அடுத்தது நான் சமீப காலத்ல படிச்ச ஒரு ந்யூஸ். ஒரு காவல்காரன், வழக்கம்போல் பறையை அடிச்சிண்டு  பாதி ராத்திரில ''மகா ஜனங்களே ஜாக்கிரதை'' என்றுகத்திக்கொண்டே போவான்.திருட்டு பயம் இருந்ததால, அந்த தேசத்து ராஜா பண்ணின ஏற்பாடு இது.

ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால், அவன் வேலையை அவன் மகனிடம் செய்ய சொல்லீட்டு போய்ட்டான்.

அவன் மகனோ முன் ஜன்மத்தில் ஒரு வேதத்யானம் பண்ண மகா  பண்டிதனாக இருந்தவன். அவனுக்கு,ஈஸ்வர அனுக்ரத்தினால, பூர்வ ஜன்ம ஞாபகம் இருந்ததாம்.

ராத்திரில அவன் தப்பட்டை அடிச்சுண்டு "ஜாக்கிரதை" என்று மட்டும் சொல்லாமல், ஒரு ஸ்லோகத்தை  சொல்லிண்டு போனானாம்.

அடுத்த நாள் ராஜா அந்த தப்பட்டை அடிக்றவன் வீட்டு வாசலில் நிந்தாராம்.அந்த பையனைப் பார்க்கத்தான் அவர் வந்தாராம்.

''ஐயோ, ராஜாவே வந்திருக்கிறார், பையன் பெரிய தப்பு ஏதாவது பபண்ணீட்டானோ? அவனுக்கு கடும் தண்டனையைகொடுத்து டுவாரோ ராஜா?'' அப்டீன்னு காவல்காரன் நடு  நடுங்கி போய்ட்டான்.

ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க  வந்தாராம்? எதுக்காக?

முந்தின ராத்திரி பையன் '' ஜாக்கிரதை. ஜாக்கிரதை'' என்று அப்பாவை போல் சும்மா கத்திக்கொண்டு போகாம, ஸ்லோகமாக சில வார்த்தைகள் சொன்னது ராஜா காதுக்கு போய்டுத்தாம். மாறு வேடத்தில் இரவு வலம் வந்த‌ ராஜாவை அந்த ஸ்லோகத்துனுடைய அழகும்,கருத்தும்  மயக்குடுத்தாம்.

அந்த நீதி வாக்யங்கள்

ஸ்ரீ ஆதிசங்கர பகவந்பாதாள்  அருளிய வைராக்ய ஸ்லோகங்களில் சிலவாம்.முதல் ஸ்லோகமும் அதன் கருத்தும்சொல்றேன்.

 “மாதா நாஸ்தி,பிதா நாஸ்தி, 
நாஸ்தி பந்து, ஸஹோதரா,
அர்தம் நாஸ்தி, க்ருஹம் நாஸ்தி 
தஸ்மாத் ஜாக்ரதா ஜாக்ரதா”

அடே தூங்குமூஞ்சிகளா விழிச்சிகோங்கடா. அப்பனும் நிரந்தரமில்லை, பெற்ற தாயும் நிரந்தரமில்லை, அண்ணன், தம்பியும் நிரந்தரமில்லை, காசும் பொய். வீடும் பொய். சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் காற்றடைத்த பை, இதையெல்லாம் நம்பி ஏமாறாதே, உடனே விழித்துக் கொள் ஜாக்ரதை ஜாக்ரதை. இது பூர்வ ஜென்ம வாசனை புண்யாத்மாக்களுக்கு தொடரும்னற்தக்கு சொல்ற கதை" என்றவர்" இப்போ சமீப காலத்ல உண்மையிலேயே நடந்த நிகழ்ச்சிய சொல்றேன்.

ராஜஸ்தான் அழ்வார் மாவட்டத்தல,மிலக்பூர் கிராமத்தில இரண்டரை வயசு  சிறுமி மனீஷா. ‘உண்மையின் நான் மனீஷா இல்லை. டெல்லி புஷ்ப விஹாரைச் சேர்ந்த சுமன். என்னுடைய 15-வது வயதில் டைபாய்டு காய்ச்சலால் இறந்துவிட்டேன்!’ என்றதாம். மனீஷாவின் பெற்றோர்களும் அவளை டெல்லிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே சுமனின் பெற்றோர்களைக் கண்டதுமே ஓடிப் போய் கட்டிப்பிடித்துக்கொண்டாளாம்.. சுமன் படித்த ஆந்திரா எஜுகேஷனல் சொசைட்டி ஸ்கூலையையும், அவனது நண்பர்களையும் சரியாக அடையாளம் காட்டி அசர வைத்திருக்கிறாள் மனீஷா" என்று கூறி முடித்தார். இதை கேட்ட இருவரும் திக்பிரமையிலிருந்து விடு பட வெகு நேரம் பிடித்தது.

வசந்த காலம் வருமோ?- 16

 வசந்த காலம் வருமோ?- 16

By N Krishnamurthy 

இப்பொழுதுதான் முதல் வருஷ ஆயுஷ்ஹோமம் முடிந்த மாதிரி இருந்தது. அதற்குள் ஒரு வருடம் உருண்டோடி விட்டது.

ம்ருதுளாவிற்கு இப்போது இரண்டு வயதாகி, மூன்று மாதங்கள் ஆகியிருந்தன.

கொஞ்சம், கொஞ்சமாக மழலை வார்த்தைகள் வர ஆரம்பித்து விட்டன.

பெண் குழந்தைகள் சீக்கிரம் பேசுவார்கள் என்பார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அம்மாவின் இடுப்பில் சவாரி செய்து கொண்டிருப்பாள் ம்ருதுளா.

அன்றும் அப்படித்தான். குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மைதிலி வாணலியில் எதையோ போட்டு வறுத்துக்கொண்டிருந்தாள். மைதிலியின் வாய் " நன்னு பாலிம்ப" கீர்த்தனையை  முணு முணுத்து கொண்டிருந்தது. 

பாதி பாடுகிற போது திடீரென்று யாரோ "மோகனம்" என்று சொன்ன மாதிரி இருந்தத. மைதிலி சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் அங்கு இல்லை. கோமளாவும், சக்கரவர்த்தியும், ஒரு விசேஷத்திற்காக வெளியே சென்று இருந்தார்கள். சாரங்கனும் ஆபீஸ் போவதற்கு கிளம்பி கொண்டு இருந்தான். நாம் காதால் கேட்டது ஒருவேளை பிரமையாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டாள் மைதிலி. பின்பு பாட்டை தொடர்ந்தாள்.

" ஸுர பதி நீல மணி" என்று சரணத்தை பாடிய பொழுது, மீண்டும் ஒருமுறை "மோகனம்" என்று காதில் கேட்டது. ஒருவேளை ம்ருதுளா தான் சொல்லியிருப்பாளோ என்று அவளை பார்த்த  போது, அவள் அப்பொழுது தான் ஏதோ சொல்லி முடித்த மாதிரி, அவள் வாய் இருந்தது. மைதிலிக்கு ஆச்சரியமாக இருந்தது. குழந்தையை பார்த்து " தங்கமே நீ என்ன சொன்ன"என்று கேட்டாள். குழந்தை ஒரு நிமிடம் மௌனம் சாதித்துவிட்டு பிறகு, மெல்ல வாயை திறந்து "மோகனம்" என்றாள். மைதிலி திக்கு முக்காடி போனாள்.ரெண்டே  வயசு குழந்தை ராகம் கண்டுபிடிக்கிறது என்றால் சும்மாவா? உடனே அவள் உரத்த குரலில் " ஏன்னா. இங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்கோ" என்றாள். அப்போதுதான் சாரங்கன் ஷேவிங் பண்ணி முடித்திருந்தான். சாரங்கன். என்னவோ ஏதோ என்று கிடுகிடுன்னு ஓடி வந்தான்." என்ன மைதிலி. என்ன ஆச்சு சொல்லு" என்றான். 

" கொஞ்சம் இவள பாருங்கோ" என்றாள் மைதிலி. "என்ன ஆச்சு குழந்தைக்கு, ஏதாவது அடிபட்டூட்த்தா" என்று கேட்டான்.

 "அதெல்லாம் இல்ல. நான் நன்னு பாலிம்ப பாடிண்டிருந்ததேன். ம்ருதுளா  மோகனம்னு ராகம் பேரை சொல்றா" என்றாள்.

" மைதிலி விளையாடாதே.நேக்கு ஆபிசுக்கு டைம் ஆறது.இப்போ போய் விளையாடிண்டிருக்கே" என்றான் சாரங்கள். "இல்லண்ணா. நான் உண்மையத்தான் சொல்றேன். பாருங்க" என்று மறுபடியும் ஒரு தடவை சரணத்தை பாட குழந்தை மெதுவாக வாய் திறந்து "மோகனம்" என்றாள். சாரங்கனக்கு ஷாக் அடித்த மாதிரி இருந்தது.

அவனால் அவன் காதுகளை நம்ப முடியவில்லை.  மைதிலிக்கும், சாரங்கனுக்கும் உற்சாகம் பிய்த்து கொண்டு போனது. சாரங்கன் உடனே " சரி. ஒண்ணு  பண்ணலாம். பக்கத்து தெருவுல கதாகாலட்சேபம் பண்ற சாம்பசிவ சாஸ்திரிகள் இருக்கார். சாயங்காலம் அவர் கிட்ட குழந்தையை அழச்சிண்டு  போலாம். அவர் கிட்ட இத பத்தி கேட்டா  இதுக்கு அவர் ஏதாவது விளக்கம் கொடுப்பார்ன்னு நெனக்கிறன்" என்றான்.

அன்று  மதியம் குழந்தை தூங்கி எழுந்தவுடன், நெய் கலந்த பருப்பு சாதத்தை ஊட்டி விட்டு, குழந்தை வாயை துடைத்து விட்டாள் மைதிலி. அதன் பிறகு குழந்தையை படுக்கையில் படுக்க வைத்துக் கொண்டு,ஒருக்களித்து,தன்னை பார்த்துக்கொண்டிருந்த ம்ருதுளாவை நோக்கிக்கொண்டே, மைதிலி,  "பாலகிருஷ்ணன் பாத மலர்"  என்னும் பாபநாசம்  சிவன் பாடலை பாட ஆரம்பித்தாள். 

"கோகுலம் பிருந்தாவனம் " என்ற இடம் வரும்போது பாட்டை நிறுத்தி,குழந்தையை  பார்த்து "இது என்ன ராகம்டா பட்டு " என்று கேட்டாள்.ம்ருதுளா கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கொண்டிருந்து விட்டு,தன் மழைலை குரலில் "தன்யாசி",என்று சொல்லவும் குழந்தையை வாரி எடுத்து, முத்தமழை பொழிந்த மைதிலி " எப்டிடீ நோக்கு ராகம்லாம் தெரியர்து" என்று கூறிவிட்டு," என் கண்ணே பட்டூடும்போல இருக்கே " என்று சொல்லி, குழந்தைக்கு திருஷ்டி கழித்தாள். மைதிலிக்கு தீடிரென்று பயம் பிடித்துக்கொண்டது.

"ரெண்டு வயசு குழந்தை இப்படி சொல்ல முடியுமா? ஏதாவது இக்ஷணி வந்து அவ மனசுல உக்காந்து இருக்கா" என்றெல்லாம் நினைத்தாள்.

சாரங்கன் அன்று மாலை சிறிது முன்னதாகவே வந்து விட்டான். இருவரும் ம்ருதுளாவுடன்  கிளம்பி, அடுத்த தெருவில் உள்ள சாம்பசிவ சாஸ்திரிகள் வீட்டுக்கு சென்றார்கள். இவர்கள் சென்றவுடன் அவர் இவர்களை வரவேற்று " என்ன தம்பதி சமேதாளா வந்து இருக்கேள்" என்றார். "ஒண்ணும் இல்ல மாமா. உங்க  கிட்ட ஒரு விஷயத்தை பத்தி கேக்கலாம்னு வந்தோம்" என்றான் சாங்கன்

 சாஸ்திரிகள் கர்னாடக  இசையை முற்றிலும் கற்றவர்.நிறைய கீர்த்தனைகளும், அவற்றின் பொருளும் அவருக்கு அத்துபடி. உபன்யாசம்  பண்ணும் போது அருமையான கர்நாடக இசையை தன்னுடைய இனிமையான வாயால் பாடி, அதனை விளக்குவார்.

"என்ன சமாஜாரம் சொல்லுங்கோ.நேக்கு ஏதாவது தெரிஞ்சா நான் விடை கொடுக்க பார்க்கிறேன்" என்றார் சாஸ்திரிகள்

Friday, November 17, 2023

Potato Peas Kurma

 Potato Peas Kurma

சப்பாத்தி, பூரி, தோசை, மற்றும் இட்லிக்கு அசத்தலான சைடிஷ் குருமா தான். 

அதிலும் குறிப்பாக சப்பாத்தி குருமா காம்பினேஷனின் ருசி தனி தான். பலரையும் கவர்ந்த ருசி காம்பினேஷன் ஓட்டல்களில் மட்டு மல்ல பெரும் பாலான இல்லத்திலும் காலை நேர டிஃபன் ஆகவோ அல்லது இரவு நேரங்களில் சமைத்து சுவைக்கின்றனர். 

சப்பாத்திக்கு குருமா காம்பினேஷன் எனில் அதைவிட சிறந்த உணவு இருக்க முடியாது. குருமா தானே அதில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கலாம். 

அதுதான் இந்த ரெசிபியின் தனித் துவம். -- இந்த குருமாவில் தேங்காய் சேர்த்து அருமையான பக்குவத்தில் செய்வதுதான் இதன் ஸ்பெஷல். 

குருமா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குருமா செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள். அப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று தான் இது

உருளைக்கிழங்கு சத்தானது, மாவுச் சத்து நிறைந்தது. பச்சைப்பட்டா ணியில் புரதச் சத்து அதிகம் உள்ளது. இந்த இரண்டும் சேர்த்து செய்யப் பட்ட சமையல் உடல் நலத்திற்கு ஏற்றது. 

இது ஆலு மட்டர் குருமா என்று வடநாட்டிலும், தமிழ்நாட்டில் உருளைக்கிழங்கு பட்டாணி குருமா என்றும் அழைக்கப் படுகிறது. எளிதில் செய்யக்கூடிய சைவ சமையல் இது. 

உருளைக் கிழங்கையும், பச்சை பட்டாணி யையும் வைத்து ஒரு சூப்பர் குருமா ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகிறோம். 

இந்த இரண்டு பொருட்களை சேர்த்து வைக்கும் இந்த சைடிஷ், உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல், நாவிற்கு நல்ல சுவையும் கொடுக்கும். 

மிக மிக சுலபமாக செய்து முடித்து விடலாம். இவை செய்வதற்கு தேவையான பொருட்கள் சற்று அதிகமாக இருந்தாலும் இவை செய்வதற்கு சுலபம் தான்.   

Equipment 

1 மிக்ஸி 

1 குக்கர் 

1 பவுள் 

தேவையான பொருட்கள் 

▢1/4 கப் உருளைக் கிழங்கு 
▢1 பிரிஞ்சி இலை ▢1 டீஸ்பூன் சோம்பு ▢1 கொத்து கறிவேப்பிலை 
▢1 பெரிய வெங்காயம் 
▢1 தக்காளி 
▢1 டீஸ்பூன் இஞ்சி  விழுது 
▢1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 
▢1 டீஸ்பூன் மல்லி தூள் 
▢1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
 ▢2 டேபிள் ஸ்பூன் தயிர் 
▢1/4 கப் பச்சைப் பட்டாணி 
▢1/4 கப் நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃபிளவர் ▢உப்பு தேவையான அளவு 
▢புதினா சிறிதளவு 

அரைக்க : 

1/2 கப் தேங்காய் ▢2 பட்டை, கிராம்பு, ஏலக்காய் 
10 முந்திரி 

 *செய்முறை* 

▢ முதலில் அனைத்து காய்கறி களையும் நன்கு அலம்பி நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 

▢ ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, பிரிஞ்சி இலை, கருவேப்பிலை சேர்த்து ‌தாளிக்கவும். 

▢ அதன்பிறகு வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி  விழுது சேர்த்து வதக்கவும். 

▢ இஞ்சி வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கி அதனுடன் பொடிகளையும் சேர்த்து நன்றாக வதக்கவும். 

▢ சிறிது நேரம் கழித்து தயிர் மற்றும் காய்கறி களை சேர்த்து வதக்கவும். 

▢ ஒரு‌ மிக்ஸி ஜாரில் தேங்காய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், , முந்திரி மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவும். 

▢ அரைத்த விழுதை நாம் வதக்கி வைத்திருக்கும் காய்கறிகளுடன் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும். 

▢ விசில் அடங்கியதும் குக்கரை திறந்து சிறிது புதினா இலைகளை தூவி பரிமாறவும். 

▢ அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா தயார். 

இது சப்பாத்தி பரோட்டா இதற்கெல்லாம் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். 

💐💐💐💐💐💐

வசந்த காலம் வருமோ?-15

 வசந்த காலம் வருமோ?-15

By N Krishnamurthy 

ம்ருதுளாவிற்கு முதல் வருடம் விரைவில்  முடிவுக்கு வந்து கொண்டிருந்தது.

 ஆயிஷ்ஹோமம்  பண்ணுவதற்காக  ஒரு நாள் சாரங்கன் குடும்ப வாத்தியாரான ராகவ ஐயங்காரை  போய் பார்த்துவிட்டு வந்தான்.

பன்னிரெண்டு மாதங்கள்முடிந்து பதிமூணாம்  மாதத்தில் ம்ருதுளா பிறந்த நக்ஷ்த்ரமான மகம் வரும் தேதியையும், ஆயுஷ் ஹோமத்திற்கு என்னென்ன வாங்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்று அவர் சொல்ல அதைக் குறித்துக் கொண்டு வந்து கோமளத்திடம் கொடுத்தான்  சாரங்கன்.

ஆயுஷ் ஹோமம் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

ரங்க நாயகிக்கும், சீதாலஷ்மிக்கும்  போஸ்ட் கார்டில் ஆயுஷ்ஹோம பத்திரிக்கை  அனுப்பிய மூன்று நாட்கள் ஆனதும் அவர்களுக்கு போன் செய்தான் சாரங்கன். கோமளா தான்பேசினாள். இரண்டு பேருமே பத்திரிக்கை வந்துவிட்டதை உறுதி செய்தி விட்டு, முதல் நாளே வந்து விடுவதாக சொன்னார்கள்.

சீதாலஷ்மி, மஹா மற்றும் பட்டுசாமி முதல்நாள்  மாலை மூணு  மணிக்கு வந்து சேர்ந்தார்கள்.ரங்கநாயகி குடும்பத்துடன் மாலை ஆறு மணிக்கு வந்தாள்.

முதல் நாள் இரவே வீட்டின் முன்புறம் மாவிலையால் தோரணம் கட்டியிருந்தார்கள்.மாக்கோலம் போட்டு,சுற்றிலும் செம்மண் பூசி இருந்தார்கள்.

ஆயுஷ் ஹோமம் அன்று காலை ம்ருதுளாவை ஸ்னானம் செய்வித்து, புது ஆடையை அணிவித்தாள் மைதிலி.

ஒரு வயதுக் குழந்தை துருதுறுப்பின் மறு உருவம் என்று சொல்லலாம்.கை, கால்கள் முளைத்து சுதந்திரமாகத் திரிய கொஞ்சம் தைரியமும் வந்துவிட்டது. என்ன பண்ணலாம் என்று சுற்றிச்சுற்றிப் பார்க்கிறது.

ஆயுஷ் ஹோமத்தைத் தொடங்குவதற்கு முன்  வழக்கம் போல முதலில் தெய்வப் அனுக்ஹரத்தையும், பெரியவர்களின் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கான சாரங்கனும்,மைதிலியும்  அனுக்ஞையைச் செய்தார்கள்

அடுத்து மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விக்னேஸ்வர பூஜை  செய்யப்பட்டது. இதற்குப் பிறகு இந்த ஹோமத்தை எதற்காக எப்படிச் செய்யப் போகிறோம் என்பதை விளக்கும் சங்கல்பம் செய்யப்பட்டது.

சகல தீர்த்தங்களின் அதிபதியான வருணன், ஆயுள் தேவதை, மிருத்யுஞ்சய ருத்ரன், பஞ்ச சாத்குன்ய தேவதைகள், நட்சத்திர தேவதை (குழந்தை எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அந்த நட்சத்திரத் துக்கான தேவதை) ஆகியோரை தியானித்து ஆவாகனம் செய்தார்கள்.

பிறகு ஆயுஷ்ஹோமம் செய்யப்பட்டது.

இதற்கு பிறகு ம்ருதுளாவிற்கு காது குத்த ஏற்பாடாகியிருந்தது.

சாரங்கன் ம்ருதுளாவை மடியில் உட்கார வைத்துக்கொண்டு ஒரு வாழைப்பழத்து தோலுரித்து அவளிடம் நீட்டினான். மேலும் குழந்தைக்கு காது குத்தும் முன், இரு காது முனைகளிலும் சிறிது தேங்காய் எண்ணையை தடவினாள் ரங்கநாயகி.

தட்டான் காதில் ஊசி கொண்டு  துளையிட ஆரம்பித்தார். இன்றைய காலத்தில் பயன்படுத்தப்படும் காது குத்த உதவும் துப்பாக்கி போன்றவை போல நவீன கருவிகள் அக்காலத்தில் இல்லை.

குழந்தை வலி பொறுக்காமல் கத்தினாள்.மைதிலி நெடுநேரம் சமாதானம் செய்ய வேண்டியிருந்தது.

அங்கு வந்திருந்த தூரத்து சொந்த பெண்மணி

"கண்ணான அம்மாளுக்கு - ஏனம்மா
காதுகுத்தப் போறாகன்னு
கிண்ணியில் சந்தனமும்
கிளிமூக்கு வெத்தலையும்
தங்கத்தினால் ஆபரணமும் - ஏனம்மாளுக்கு
கொண்டு வந்தார் தாய்மாமன்"

என்று பாடினாள்.

மைதிலி 

"போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறற் கஞ்சன் கடியன்
காப்பாரும் இல்லை கடல்வண்ணா உன்னை
தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவ
நம்பீ உன்னைக் காது குத்த
ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்
அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்"

என்ற திருவாய்மொழியை சஹானா ராகத்தில் பாடினாள்.

(மைதிலி சிறுவயதில் திருப்பாவை, திருவாய்மொழி,மற்றும் பல வைணவ இலக்கியங்களை மனப்பாடமாக கற்றுத் தெரிந்திருந்தாள். இது கூட ஆச்சரியமில்லை, ஆனால் எந்தெந்த இடங்களில் எந்தெந்த பாடல்களை எடுத்து பாட வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கும் அவளது ஞானம் ஆச்சரியப்படும் விதமாக இருந்தது)

Thursday, November 16, 2023

வசந்த காலம் வருமோ?- 14

 வசந்த காலம் வருமோ?- 14

By N Krishnamurthy 

மிருதுளாவின்  முதல் வருட நடவடிக்கைகள்  எல்லா குழந்தைகளது போலத்தான் இருந்தது.

பெரும்பாலும் விடியற்காலம் நாலு, நாலரை மணிக்கு முழித்துக் கொண்டு விடுவாள். "காச்","மூச்" என்று கத்துவாள். பொதுவாக சமர்த்தான குழந்தை தான்.

பசி எடுக்கும் போது மட்டும் அழுவாள். அது என்னவோ தெரியவில்லை, நல்ல சங்கீதத்தை கேட்டால் குழந்தை மிகவும் சந்தோஷப்படுவாள்.

எல்லா குழந்தைகளும் போல தவழ ஆரம்பித்தாள். முட்டி போட்டு நடந்தாள். நடக்கும்போது தடுக்கி விழுந்தாள். முன் மண்டையில் லேசாக  அடிபட்டது. எல்லா அம்மாக்களையும் போல,மைதிலி இதைப்பார்த்து பதைபதைத்து போனாள். பல் முளைக்கும் தருணத்தில்  பேதி ஆனது. 

கோமளா சாரங்கனிடம்" கொழந்தைக்கு நம்ப சம்ரதாய ப்ரகாரம் ஆயுஷோமத்துக்கு முன்னாடி மொட்டை போட்டுணம்டா " என்றாள்.

அவர்களுக்கு குலதெய்வம் திருவள்ளுர்,  கனகவல்லி(வசுமதி) சமேத வைத்ய வீரராகப் பெருமாள்(எவ்வுட் கிடந்தான்) என்பதால் அங்கு சென்று மொட்டையிட தீர்மானித்தார்கள். இந்த விஷயத்தை போன் செய்து ரங்கநாயகிக்கும், சீதாலஷ்மிக்கும் தெரியப்படுத்தினார்கள். மொட்டையிட இன்னும் பத்து நாட்கள் இருந்ததால் அவர்களும் கிளம்பி வர இந்த ஏற்பாடு சௌகரியமாக இருந்தது. 

சீதாலக்ஷ்மி குடும்பமும், ரங்கநாயகி குடும்பமும் முதல் நாள், சனிக்கிழமையன்று வந்து விட்டிருந்தார்கள்.

ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் போவதற்கு சாரங்கன் ஒரு வேன் ஏற்பாடு செய்திருந்தான்.

காலை ஆறு மணிக்கு எல்லோரும் வேனில் உட்கார்ந்ததும் ,வேன் கிளம்பியது.

போகும் வழியில் சக்ரவர்த்தி,பட்டுசாமி தம்பதிகள் தவிர்த்து, மற்ற அனைவரும் பூந்தமல்லி பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் இருந்த துர்கா பவனில் பிரக்பாஸ்ட்டை முடித்துக்கொண்டார்கள்.  திருவள்ளூர் போய் சேரும்போது எட்டு மணி ஆகிவிட்டது.ஏற்கனவே ஒரு முறை அங்கே போய் சாரங்கள் குழந்தை மொட்டை அடிக்க   வேண்டிய ஏற்பாடுகளை செய்து விட்டு வந்திருந்ததால், மொட்டை அடிப்பவர் இவர்கள்  வருவதற்கு முன்பே அங்கே வந்து காத்திருந்தார். கோவில் குளத்திற்கு அருகில் ஒரு இடத்தில் முடி இறக்கப்பட்டது.

எதிர்பார்த்ததுக்கு மாறாக, குழந்தை ம்ருதளா, மொட்டை அடிக்கப்படும் போது, கூச்சல், குழப்பம் இல்லாமல் அமைதியாக இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. மொட்டை அடித்து முடித்தவுடன், குழந்தை  லேசாக சிணுங்கி அழ ஆரம்பித்தாள்.

மைதிலி குழந்தையை தூக்கிக்கொண்டு" ஒண்ணும் இல்லடா தங்கமே. உம்மாச்சிக்கு முடியை கொடுத்தாச்சு"என்று சமாதானம் செய்தாள்.

கோவில் குளத்தில் குழந்தையை குளிப்பாட்டினார்கள்.  மொட்டை இடப்பட்ட தலையில், எரிச்சல் தெரியாமல், குளிர்ச்சியாக இருக்க, சந்தனம் தடவப்பட்டது. 

இதன்பிறகு கோவிலுக்கு உள்ளே சென்று ,பெருமாளுக்கு குழந்தை பெயரில் அர்ச்சனை செய்தார்கள். அங்கே வழங்கப்பட்ட பிரசாத்தை அனைவரும் பகல் உணவாக உண்டார்கள். பின்பு இரண்டு மணிக்கு திருவள்ளூரை விட்டு கிளம்பி சென்னையில் வீட்டிற்கு வரும் பொழுது மணி நாலு ஆகியிருந்தது.வேனின் குலுக்கலில் ம்ருதுளா மட்டுமா தூங்கினாள்.கிட்டத்தட்ட (வேன் ட்ரைவர் தவிர 😁) அனைவரும்தூக்கம் போட்டனர்.

காலையில்போட்ட காப்பி பில்டரில் இன்னும் கொஞ்சம் பொடியை சேர்த்து, கூடுதல் டிகாக்ஷனை உண்டு பண்ணிய மைதிலி, பாலை சுட வைத்து, அனைவருக்கும் காபி கலந்து தந்தாள். 

மாலை ம்ருதுளா தன் பிஞ்சு கைகளால் தலையை தடவிப்பார்த்து அங்கு ஏதோ இல்லாததை உணர்ந்தாள்.

 மறுநாள் ரங்கநாயகி குடும்பமும், சீதாலக்ஷ்மி குடும்பமும்  அவரவர்கள் ஊர் போய் சேர்ந்தது.

பின்குறிப்பு: இறைவன் 'படுக்க எவ்வுள்' என்று கேட்டு சயனித்ததால், இத்தலம் 'திரு எவ்வுள்' என்று அழைக்கப்பட்டதாகவும், இத்தல இறைவன் 'எவ்வுள் கிடந்தான்' என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. 'திருவுள்' என்பதே காலப்போக்கில் மாறி, 'திருவள்ளூர்' என்பதாக கூறப்படுகிறது.

ஸ்மார்த்தர்களுக்கு வைத்தீஸ்வரன் கோவில் எப்படியோ, அப்படியே வைஷ்ணவர்களுக்கு இத்தலம்.

வசந்த காலம் வருமோ?- 13

 வசந்த காலம் வருமோ?- 13

By N Krishnamurthy 

இதுவரை இந்த கதையை படித்துக் கொண்டிருப்பவர்கள், இது மைதிலியின் கதை என்று எண்ணி இருந்தால், உங்கள் அபிப்ராயத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். இது மைதிலியின் கதையே அல்ல. இது ம்ருதுளாவின் கதை தான்.எனவே மெயின்  கதை இனிமேல் தான் ஆரம்பிக்கப் போகிறது. நீங்கள் வேண்டுமானால் இதுவரை நான் எழுதியிருந்ததை, முன் கதை சுருக்கமாக வைத்துக் கொள்ளலாம்

மறுநாள்  திங்கட்கிழமை காலையிலிருந்து சாரங்கனுக்கு மனது சரியில்லை. மைதிலியையும், குழந்தையையும் விட்டு விட்டு ஊருக்கு செல்ல போகிறோமே என்ற மன வருத்தம் அவனுக்கு. ஊருக்கு கிளம்பதற்கு முன்  அவன் மைதிலியிடம் தனியாக அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

"சீக்கிரம் கிளம்பி வந்துடு மைதிலி. உன்னையையும், குழந்தையையும் விட்டூட்டு என்னால அங்க எப்படி இருக்க முடியும்" என்றான். அதற்கு மைதிலி"டக்குனு எப்படி  கெளம்ப முடியும். எப்படியும் ரெண்டு,மூணு மாசம் ஆகும்னு நினைக்கிறேன். நீங்க ஓணா நடுவுல இங்க வந்துட்டு போங்கோ" என்றாள். அவன் " சரி நான் நிச்சயம் நடுவில் இரண்டு முறை வந்துட்டு போறேன். நீ சீக்கிரம் வரத்துக்கு பாரு" என்று கூறினான். பிறகு குனிந்து   குழந்தைக்கு முத்தம் கொடுத்தான்.  தூங்கிக் கொண்டிருந்த குழந்தை முழித்துக் கொண்டு அவனைப் பார்ப்பது போல்  அவனுக்கு தோன்றியது.

கோமளம் சீதாலக்ஷ்மியிடம் "எப்ப மைதிலியையும், குழந்தையையும் கொண்டு வந்து விடப் போறேள்" என்று கேட்டாள். எட்டாம் மாசம் அங்கேர்ந்து கெளம்பி வந்ததால  ரெட்டப்பட  மாசத்துல தான் திருப்பி கொண்டு வந்து விடணும் .அவளும், குழந்தையை கொஞ்சம் உடம்பு தேரட்டும். நானே உங்களுக்கு போன் பண்ணி எப்ப கொண்டு வந்து இந்த உடறம்னு சொல்றேன்" என்றாள். "சரி . எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொண்டு வந்து விட்டுடுங்கோ" என்றாள்  கோமளம்.காலை டிபன் சாப்பிட்டு விட்டு சாரங்கன்,கோமளா,சக்ரவர்த்தி, ரங்கநாயகி,அவள் கணவர் மற்றும் அவள் பெண் உறையூரிலிருந்து , ஜங்கஷன் செல்லும் பஸ்ஸில் ஏறி,சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இறங்கினார்கள்.

ரங்கநாயகியையும், அவள் குடும்பத்தினரையும் மதுரை பஸ்ஸில் ஏற்றிவிட்டு, மீதி மூவரும் சென்னைக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்கள்.  வீட்டிற்கு செல்லும் போது மணி கிட்டத்தட்ட நாலரை ஆகிவிட்டது.

நாட்கள் ஓடின. ஒவ்வொரு நாளும் குழந்தையிடம் ஒவ்வொரு புது வளர்ச்சியையும்,மாற்றத்தையும்  கண்டு மகிழ்ந்தாள்  மைதிலி. பசியில் குழந்தை அழுது கொண்டிருக்கும் போது, பால் கொடுப்பதை விட, ஒரு நல்ல பாட்டை பாடினால் உடனே அழுகையை  நிறுத்திவிட்டு, ஏதோ சங்கீதத்தை  ரசிக்கும் ரசிகை போல் ஆகிவிடுவாள்.  ம்ருதுளாவுக்கு நாலாவது மாதம் பிறந்ததும் சீதாலக்ஷ்மி வரதாச்சாரியாருக்கு  போன் செய்து ஒரு நல்ல நாள் குறித்து கொடுக்கும்படி  கேட்டுக்கொள்ள, அவர் அதற்கு அடுத்த புதன்கிழமை நாள் நன்றாக இருப்பதாகவும்,  அன்று எட்டு மணிக்கு மேல் பத்தரை மணிக்குள்அனுப்பி வைக்கலாம் என்றும் கூறினார்.


பட்டுசாமிக்கு சமைப்பதற்காக மஹாவை வீட்டிலேயே நிறுத்திவிட்டு, சீதாலக்ஷ்மி குழந்தையையும்,மைதிலியையும்  சென்னைக்கு அழைத்துச்செல்ல முடிவு செய்தாள்.

முதல் நாளே கோமளத்திற்கு போனில் தகவல் சொல்லப்பட்டது. மைதிலி,குழந்தை சகிதம் சீதாலக்ஷ்மி   ஆட்டோ பிடித்து ஜங்ஷன் போய் சேர்ந்தாள். பத்தரை  மணிக்கு சென்னை செல்லும் பாசஞ்சரில் ஏறி அமர்ந்தார்கள். இதுதான் ம்ருதுளாவிற்கு முதல் ரயில் பயணம். முதல் ரயில் பயணம் என்ன, முதல் பயணமே இதுதான். தாம்பரம் வரும் போது கிட்டத்தட்ட 5 மணி ஆகிவிட்டிருந்தது.

ஸ்டேஷனுக்கு சாரங்கன் வந்திருந்தான். அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து குரோம்பேட்டை வீட்டுக்கு போய் சேரும்பொழுது மணி ஆறே முக்கால் ஆனது. வாசலில் டாக்ஸி நின்ற   சப்தம் கேட்ட கோமளம் ஆரத்தியுடன் வெளியே வந்தாள். குழந்தைக்கும், மைதிலிக்கும்  ஹாரத்தி எடுத்து, நெற்றியில் இருவருக்கும் பொட்டு வைத்து உள்ளே அழைத்துச் சென்றாள்.

 ம்ருதுளாவுக்கு இது புது இடம் என்று நன்றாக தெரிந்திருந்தது. வீட்டில் உள்ளே சென்றவுடன் அழ ஆரம்பித்தாள். மைதிலி அவளை சமாதானப்படுத்தி, மெல்ல அவளை மடியில் போட்டுக் கொண்டு, சின்னதாக ஒரு பாட்டு பாடினாள். அம்மா பாடிய பாட்டை கேட்டு குழந்தை அமைதியாக தூங்க ஆரம்பித்தாள்.

சாரங்கன் அவர்களுடைய பெட்ரூமில் மைதிலியினுடைய பழைய புடவையை எடுத்து தூளி கட்டினான். எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும், மைதிலி குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு, அவளை தூளியில்  போட ,சாரங்கன் தூளியை ஆட்டினான்.தூளி ஆடிய சுகத்தில் ம்ருதுளா நன்றாக தூங்க ஆரம்பித்தாள். மைதிலியும்,ம்ருதுளாவும் வந்த சந்தோஷத்தில் சாரங்கனுக்கும் நல்ல தூக்கம் வந்தது. ட்ரெயினில் வந்த களைப்பில் மைதிலிக்கும் அருமையான தூக்கம் காத்திருந்தது.

நித்திரா தேவி எல்லோரையும் அரவணைத்துக்கொண்டாள்.