Tuesday, November 1, 2022

செவ்வாய் தோஷம் – பரிகார கோயில்

 செவ்வாய் தோஷம் – பரிகார கோயில்.*

உங்கள் ஜாதகத்தில் 2 – 4 – 7 – 8 – 12 ஆகிய இடங்களில் செவ்வாய் பகவான் அமர்ந்து இருந்தால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்று அறிக..
இதில் 2 – 4 – 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது ‘’பரிகார செவ்வாய் ‘’ என்றும், 7 மற்றும் 8 ம் இடங்களில் செவ்வாய் அமர்ந்து இருந்தால் அது ‘’ முழு செவ்வாய் தோஷம் ‘’ என்றும் மனதில் கொள்க.
வேறு விதி விலக்குகள் எதுவும் இல்லை..
7 அல்லது 8 ல் செவ்வாய் உள்ளவருக்கு , அதே போல 7 அல்லது 8 ல் செவ்வாய் உள்ள ஜாதகரை இணைப்பதுதான் சரியான தீர்வு...
வேறு விதி விலக்குகள் இருப்பதாக கொண்டால் அது அவரவர் கருத்து..
உங்களுக்கு உடன்பட்ட விதியை எடுத்து கொள்ளுங்கள்...
நிற்க...நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வருகிறேன்.
திருமணம் என்ற பந்தம் பலருடைய வாழ்வில் நடைபெறாமல் இருப்பதற்கு இந்த செவ்வாய் தோஷமும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
*எதுவுமே காலா காலத்தில் நடக்க வேண்டும் அல்லவா..?*
*அதற்க்கு என்ன வழி...?*
செவ்வாய் தோஷ நிவர்த்தி ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் திருச்சிறுக்குடி..
*இந்த கோவிலுக்கு எப்படி போவது..?*
கும்பகோணம்-நாச்சியார்கோயில் சாலையில் சென்று கடகம் பாடி என்னும் ஊரை அடைந்து, அங்கிருந்து வலப்புறமாக 3  கி.மீ உள்ளே சென்று திருச்சிறுக்குடி சிவனை  அடையலாம்.
மணலால் பிடித்து வைத்த சிவலிங்கம் இது...!!
மங்களநாதர்,சூக்ஷமபுரீஸ்வரர்,சிறுகுடியீசர் என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறது.
இறைவி மங்கள நாயகி.
இங்குள்ள  தீர்த்தம் மங்கள தீர்த்தம்.
இத்தீர்த்தத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமை அன்று வந்து நீராடி கோவிலுக்கு வந்து வழிபட்டு பிரசாதம் வாங்கி செல்கின்றனர்.
வேற்று மதத்தினரும் இங்கு வந்து நீராடி இறைவனை வழிபட்டு செல்கின்றனர்.
செவ்வாய் தோஷத்தால் பாதிக்கபட்டு திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அங்கார தோஷம் நீங்கி விரைவில் திருமணம் ஆகிறது என்பது கண் கண்ட உண்மை.
மேல் அதிக கோவில் பற்றிய விவரங்களுக்கு google search ய் பயன்படுத்துக....
*வாழ்க வளமுடன்*

No comments:

Post a Comment