Monday, November 21, 2022

வாழைத்தண்டு மோர்க்குழம்பு

 வாழைத்தண்டு மோர்க்குழம்பு

வாழைத்தண்டை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வாழைத்தண்டில் நீர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இப்போது வாழைத்தண்டை வைத்து எளிமையான முறையில் சுவையான வாழைத்தண்டு மோர்க்குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 தேவையான* *பொருட்கள்:-

நறுக்கிய வாழைத்தண்டு - 2 கப் 
கடைந்த தயிர் - 4 கப் 
பச்சை மிளகாய் - 2 
சீரகம் - 1 டீஸ்பு ன்
​தனியாத்தூள் - 1 டீஸ்பு ன்
கடலைப்பருப்பு - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு 
கடுகு - கால் டீ ஸ்புன் 
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு. கல்

 *செய்முறை:-* 

👉 வாழைத்தண்டு மோர்க்குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். அதேபோல் கடலைப்பருப்பையும் வேகவைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். 

👉 அடுத்து பச்சை மிளகாய், ​தனியாத்தூள், சீரகம், கொத்தமல்லித்தழை, இஞ்சி ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து வேக வைத்துள்ள வாழைத்தண்டுடன் சேர்த்து கலக்கவும். பின்பு அதனுடன் தயிர், உப்பு, வேக வைத்துள்ள கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வைத்துக்கொள்ளவும். 

👉 பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சு டானதும், அதில் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் வாழைத்தண்டு கலவையை சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான வாழைத்தண்டு மோர்க்குழம்பு தயார். 

🪷🪷🪷

No comments:

Post a Comment