Tuesday, November 15, 2022

மிதிபாகக்காய்

 கிச்சன் சீக்ரெட்... 

இந்த காயை எவ்வளவு பேருக்கு குறிப்பாக எவ்வளவு இளைஞர்களுக்கு தெரியும் என தெரியவில்லை. 

இதற்கு பெயர் மிதிபாகக்காய். 

இந்த காயில் அநேக மருத்துவ குணங்கள் உண்டு. 

எல்லா காலங்களிலும் இது கிடைக்காது. 

கிடைக்கும்போது பயன் படுத்திக் கொள்ளவேண்டிய ஒரு சுவைமிக்க காய். 

பாகக்காய் என்றாலே கசப்பு என ஒதுக்கி வைக்காமல் அதை சரியான முறையில் சபைத்தால் இவ்வளவு டேஸ்ட்டானதா என கேட்கும் அளவிற்கு இருக்கும். 

குறிப்பாக கறி அதாவது பொறியல் செய்து சாப்பிடுவது மிக சிறந்ததாகும். 

இதன் விலை சற்று அதிகம் என்றாலும் இதனால் கிடைக்கும் மருத்துவபயன் இதன் விலையை மறக்க செய்யும். 

வாங்கின அன்றே சமைத்து விட வேண்டும். சீக்கிரம் பழுக்கக் கூடிய குணம் கொண்டது. 

கறி(பொறியல்) செய்யும் முறை:

காயை வாங்கிய வுடன் நன்றாக கழுவி விட்டு அதன் இரண்டு பக்கங்களில் இருக்கும் காம்பை கிள்ளி எடுத்து விடவேண்டும். 

காயை நடுவில் இலேசாக கத்தியை வைத்து கீறி விடவும். 

தட்டில் மஞ்சள் பொடியை வைத்து கூறினார் பாகக்காயை லேசாக பிரட்டி எடுக்கவும். 

ஒரு வானொலியில் நல்லெண்ணை விட்டு கடுகு மிளாகாய் போட்டு தாளித்தவுடன் பாகக்காய் களை வானொலியில் போட்டு தட்டால் மூடி விடவும். தண்ணீர் சேர்க்க கூடாது. எண்ணெயிலேயே வழங்க வேண்டும். 2 நிமிடங்களுக்கு பிறகு தேவையான உப்பு பெருங்காய பொடியை தூவவும். 2 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். 

பாகக்காய் கலர் மாறி லேசான ப்ரவுன் நிறத்தில் வரும்போது 

1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை மேலாக விட்டு ஒரு களறுகளறி கீழே இறக்கவும். 

சாம்பார், ரசம், மோர்க்குழம்பு இப்படி எல்லா வகை உணவுகளுக்கும் மிக பொருத்தமான சைடிஷ் இது. 

சில காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் இந்த அற்புத காயை குடும்பத்தினறோடு சுவைத்து மகிழவும்.... 

அன்புடன்

சேகர். எஸ் மத்யமர் முகநூல் பதிவு 

No comments:

Post a Comment