Monday, November 7, 2022

தெரியாதவற்றை தெரியவைப்பது

 *தெரியாதவற்றை தெரியவைப்பது*

*பகிர்வு:*

*🌟🌟அம்மு✨* 

​ *குளிர்சாதனப்பெட்டியில் வைக்காதீங்க*

 பெரும்பாலானோருக்கு குளிர்சாதனப் பெட்டியில் எந்தெந்த உணவுப் பொருட்களை வைக்கலாம், வைக்கக் கூடாது என்று தெரிவதில்லை. மேலும் குளிர்சாதனப்பெட்டியில் சில உணவுப் பொருட்களை வைத்து பயன்படுத்துவதால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

​உருளைக்கிழங்கு :​

👉 உருளைக்கிழங்கை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் அதன் சுவையை மாற்றி இனிப்பாக்கிவிடும். மேலும், இது உருளைக்கிழங்கில் இயற்கையாகவே உள்ள அக்ரலமைட் என்கிற இரசாயனத்தின் அளவை அதிகரிக்கிறது. எனவே குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உருளைக் கிழங்கை சமைத்து சாப்பிடும் போது இந்த இரசாயனம் நமது உடலுக்குள் சென்று தீங்கு விளைவித்து மேலும் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்க செய்கிறது.

​தக்காளி :​

👉 இயற்கையாகவே தக்காளி மிகவும் மென்மையானது. தக்காளியை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதனால் அதன் சுவையில் மாற்றம் ஏற்படும். மேலும், குளிர்சாதனப்பெட்டியின் குளிர் காற்றானது பழுக்கும் செயல்முறையை நிறுத்துவதால் அதன் இயற்கை தன்மையை இழக்கிறது. நன்கு பழுத்த தக்காளிகளை ஓரிரு நாட்களுக்குள் உபயோகப்படுத்திவிடுவது நல்லது. 

​தானிய உணவுகள் :​

👉 சமைக்கப்பட்ட தானிய உணவுகளை காலையிலேயே சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதனால் அவை சுவையிழந்து, சத்து இழந்து வீணாகிவிடும்.

​பூண்டு :​

👉 குளிர்சாதனப்பெட்டியில் பூண்டை வைத்தால் அதன் சுவை குறைந்துவிடும் மற்றும் விரைவில் கெட்டியாகிவிடும். பூண்டை காற்றோட்டமான சூழ்நிலையில் வைப்பதே சிறந்தது.

​தேன் :​

👉 குளிர்சாதனப்பெட்டியில் தேனை வைக்கக்கூடாது. ஏனெனில் அது அடர்த்தியாகி அதன் இயற்கை நிலையை இழந்துவிடும்.

​ஜாம் :​

👉 ஜாமை குளிர்சாதனப்பெட்டியில் வைக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், ஜாம் போன்ற உணவுகள் தயாரிக்கும் போது நிறைய பதப்படுத்தப்படுகின்றன. எனவே, அவை சீக்கரமாக கெட்டுப் போகாது. 

​வெங்காயம் :​

👉 வெங்காயத்தில் ஏற்கனவே ஈரப்பதம் இருக்கிறது. அதை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதால் அவை மேலும் மென்மையாகி அழுகிவிடும். இதனால் ஒரு வகையான துர்நாற்றம் ஏற்படும். அதுமட்டுமின்றி குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதால் வெங்காயத்திலுள்ள ஃபோலிக் ஆசிட், குவர்சிட்டின் சத்துக்கள் குறைந்துவிடும். வெங்காயத்தை காற்றோட்டமான சூழ்நிலையில் வைப்பதே நல்லது.

​தர்பூசணி, முலாம்பழம் :​

👉 நீர்சத்து அதிகமுள்ள பழங்களான தர்பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற வற்றை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதனால் அவற்றிலுள்ள சத்துகள் குறைந்து விடும். எனவே, நீர்சத்து அதிகமுள்ள பழங்களை குளிர் சாதனப்பெட்டியில் வைக்கக்கூடாது

No comments:

Post a Comment