அவரைக்காய் பிரியாணி
தேவையானவை :
அரிசி - சீரக சம்பா/ பாஸ்மதி - 300 கிராம், பொடியாக நறுக்கிய அவரைக்காய் - 200 கிராம், நீளமாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம், 2 பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய 2 இஞ்ச் தோல் சீவிய இஞ்சி, இடித்த பூண்டு - 4பற்கள், தேங்காய் பால் - 50 மிலி,
நல்லெண்ணை - 2 tbs, பட்டை - 2, கிராம்பு - 10, ஏலக்காய் -10, கறிவேப்பிலை -15, கடுகு - 1 /2 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், வெந்தயம் - 1/4 டீஸ்பூன், பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன், வெண்ணை - 2tbs, முந்திரி - 12, குங்குமப்பூ -1/4ஸ்பூன் (optional) உப்பு - தேவைக்கு.
செய்முறை :
அடி கனமான ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமாக எரிய வைத்து கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் போட்டு தாளித்து பின் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை. சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். பிறகு தீயை அதிகரித்து 4 கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு அதில் அரிசி & வெண்ணெய் சேர்த்து கிளறவும். நன்கு கிளறிய பின்பு..கடாயை முடி போட்டு மூடி வேக வைக்கவும். அரிசி 75% வெந்ததும் அதோடு நறுக்கிய அவரைக்காய் சேர்த்து கிளறவும். இப்போது தேங்காய் பால் சேர்த்து குங்குமப் பூவை 1 ஸ்பூன் நீரில் கரைத்து ஊற்றி கிளறவும்.
அனைத்தும் நன்கு வெந்தவுடன் தேவையான உப்பு சேர்த்து கிளறி எடுத்து வறுத்த முந்திரிகளைத் தூவவும். ருசியான அவரைக்காய் பிரியாணி (புலாவ்) ரெடி. வெஜ் குருமா, தயிர் பச்சடி, வடகம், அப்பளம் அனைத்தும் இதற்கு நன்றாக இருக்கும்!
No comments:
Post a Comment