Monday, November 21, 2022

பிரண்டை பொடி

 பிரண்டை பொடி

பிரண்டையை நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள பழகிக் கொண்டால், உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஞாபக சக்தி பெருகும். வயிறு கோளாறுகள் நீங்கும். மூளை நரம்புகளும் பலப்படும். இப்போது பிரண்டை பொடி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

 *தேவையான* *பொருட்கள்:-* 

பிரண்டை துண்டுகள் - 15 
கறுப்பு உளுந்து - ஒரு கப் 
கடலைப்பருப்பு - ஒரு கப்
பூ ண்டு பல் - 15 
தோல் நீக்கிய இஞ்சி - சிறு துண்டு
வர மிளகாய் - 15 
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - கைப்பிடியளவு
உப்பு - தேவையான அளவு

 செய்முறை:-

👉 பிரண்டை பொடி செய்வதற்கு முதலில் வெறும் வாணலியில் கறுப்பு உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயத்தூள், இஞ்சி ஆகியவற்றை தனித்தனியாகப் போட்டு வறுத்து ஆற வைத்துக்கொள்ளவும். 

👉 அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பிரண்டை துண்டுகளை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். 

👉 அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு வறுத்து வைத்துள்ள பொருட்களை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று அரைத்து, அதனுடன் உப்பு, பு ண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் சத்தான பிரண்டை பொடி தயார். 

🪷🪷🪷

No comments:

Post a Comment