பச்சரிசி-2 கப்
நல்ல பிஞ்சு கத்தரிக்காய்-1/2 கிலோ
First
புளியை கரைக்கவும்
வாணலியை காய வைத்து அதில் கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை வெந்தயம் என்று ஒவ்வொன்றாகப் பொடித்து (ட்ரை பவுடர்) வைத்துக் கொள்ளவும். இத்துடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
கத்தரிக்காயை நீள நீளமாகப் பிளந்து தயாராக வைத்துள்ள மசாலாவை அடைக்கவும். ( இது optional. அடைக்காமல் அப்படியேவும் தூவலாம் but அடைத்து வதக்கினால் டேஸ்ட் நன்றாக இருக்கும்)
அடுப்பில் எண்ணெய் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கத்தரிக்காயையும் போட்டு நன்றாக வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு மீண்டும் சேர்த்து மூடி வைக்கவும். கத்தரிக்காய் நன்றாக வெந்து, க்ரே பேஸ்ட் போல் ஆனவுடன், தயாராக வடித்து வைத்துள்ள சாதத்துடன் சேர்த்துக் கலந்து (குழையாமல் கலக்க வேண்டும்)
ஒரு தட்டில் சாதத்தைப் பரத்தி சிறிதளவு நல்லெண்ணெய் போட்டுப் பின் கத்தரிக்காய் மசாலாவைப் பரத்தி, கலந்தால் சாதம் குழையாமல் கலக்கலாம். தயிர்ப் பச்சடி, பொறித்த அப்பளம், வடகம், உருளைக் கிழங்கு ரோஸ்ட் கறி, முதலியவைகளுடன் சேர்த்துப் பரிமாறினால், சூப்பரா ருசியாக இருக்கும்.
இதில் சிலர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். நான் சேர்ப்பதில்லை
No comments:
Post a Comment