Thursday, November 10, 2022

சிந்தாமணி தியேட்டர்

 சிந்தாமணி தியேட்டர்,...

மதுரை மக்களின் வாழ்வோடும் வரலாற்றோடும் தொடர்புள்ளது திரையரங்கு. 90 வருட வரலாறு கொண்ட மதுரை சிந்தாமணி தியேட்டர்

1936 எம்.கே.டி.தியாகராஜ பாகவதரின் சிந்தாமணி திரைக்கு வந்தது

எம்.கே.டி.தியாகராஜ பாகவதருக்கே இப்படத்தில் நல்ல பெயர் கிடைத்தது.

மதுரை மற்றும் எல்லா ஊர்களிலும் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் நல்ல வசூல் கிடைத்தது

வந்த லாபத்தில் பங்குதாரர்கள்1939 ஆண்டு சிந்தாமணி என்ற பெயரில் புதியதாக  சினிமா தியேட்டரை கட்டினார்கள்.

“இது வெள்ளைக்காரன் காலத்திலேயே கட்டுன தியேட்டர் .

லண்டனில் ஓடியான் தியேட்டரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போய் அந்த வடிவமைப்பிலேயே கட்டப்பட்டதுதான் சிந்தாமணி தியேட்டர்

 பிறகு இதே வடிவமைப்பில் தமிழகத்தில் பல தியேட்டர்கள் கட்டப்பட்டன.

ராட்சத கப்பல் மாதிரியே இருக்கும் தியேட்டரோட அமைப்பு. உள்ள போனா, கடல் மாதிரி இருக்கும். ஆயிரம் சீட்.

அம்சவல்லி பவனில் பிரியாணி சாப்பிட்டு விட்டு, சிந்தாமணிக்குப் போய் செகண்ட் ஷோ பார்க்காத மதுரைக்காரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்

மதுரையைச் சுற்றி முப்பது நாப்பது மைல் சுற்றளவுல, பணம் படைத்தவர்கள் ஏதாவது பார்ட்டின்னா இங்கதான் வருவாங்க.

அம்சவல்லி’ ஓட்டல்ல சாப்பிட்டுட்டு, தியேட்டர்ல படம் பார்த்தாத்தான் அந்த பார்ட்டி முழுமையடையும்.

 “இந்தத் தியேட்டர்ல முதல்ல ரிலீஸ் ஆன படத்தைப் பார்த்தவங்க, இப்ப உயிரோட இருக்கிறதுக்கே வாய்ப்பில்லை.

 தன்னோட 200-வது படமான ‘திரிசூலம்’ வெள்ளி விழா கொண்டாடியபோது, சிவாஜி கணேசன், தன்னுடைய மனைவி கமலாம்மா, மகன்கள் ராம்குமார், பிரபு, மகள்கள் சாந்தி, தேன்மொழின்னு குடும்பத்தோட வந்தார்

.அடிமைப்பெண்’ வெள்ளி விழாவுக்குப் புரட்சித் தலைவர் எம்ஜிஆரும், கலைச் செல்வி ஜெயலலிதாவும் வந்திருந்தாங்க. ‘

களத்தூர் கண்ணம்மா’ ஓடிக் கொண்டிருக்கும் போது, குழந்தை நட்சத்திரமான கமல ஹாசன் தியேட்டருக்கு வந்திருக்கார்

இந்த தியேட்டர் தொடங்கப்பட்டபோது, என்.எம்.ஆர்.வெங்கடகிருஷ்ணய்யா, மதுரைக்காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன், என்.எம்.ஆர்.கிருஷ்மூர்த்தி, என்.எம்.என்.சேஷய்யர்னு நாலு பேர் பார்ட்னராக இருந்தனர்.

கொஞ்ச காலத்திலேயே அதிலிருந்து விலகினார் சுப்பராமன்.இவர்களுக்குப் பிறகு பிள்ளைகள், பிறகு பேரன்கள் தியேட்டரை நடத்தினார்கள். 2008-ல் தியேட்டரை விற்றபோது, 12 பேர் பங்குதாரர்களாக இருந்தனர் 

அந்தக் காலத்தில் சினிமா தொழில் லாபகரமாக இருந்தது. எப்போது மினிமம் கியாரண்டி என்று வந்ததோ, அதன் பிறகே தியேட்டர்கள் நலிவடைய ஆரம்பித்து விட்டன.

இப்போதுள்ள சூழலில், சினிமா தொழிலை நியாயமாகச் செய்ய முடியாது.

இப்போது சினிமா துறையைத் தேர்ந்தெடுக்காததற்கு அதுவும் ஒரு காரணம்”

மதுரையின் பழம்பெரும் தியேட்டரான சிந்தாமணி தற்போது புதிய ராஜ் மஹால் ஜவுளிக்கடையாக மாறி உள்ளது

No comments:

Post a Comment