Saturday, November 12, 2022

ஆப்பம்

 *ஆகா என்ன ருசி.* 

ஆப்பம் / Aapam

பரிமாறும் அளவு - 4

தேவையான பொருள்கள் -
பச்சரிசி - 2 கப் 
சாதம் - 1 1/2 கப் 
தேங்காய் துருவல் - 1 1/2 கப் 
உப்பு - தேவையான அளவு
சோடா உப்பு - 1/2 மேஜைக்கரண்டி  

செய்முறை -

பச்சரிசயை 4-5 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்த பச்சரிசி, சாதம், தேங்காய் துருவல் அனைத்தையும் கிரைண்டரில் அரைத்து கொள்ளவும்.

8 மணி நேரம் மாவை புளிக்க விடவும்.

உப்பு மற்றும் சோடா உப்பை சேர்க்கவும்.

பிறகு ஆப்பச் சட்டியில் ஆப்பத்தை சுட்டு எடுக்கவும்.

ஆப்பத்தை தேங்காய் பால் அல்லது குருமாவுடன் சாப்பிடலாம்.

குறிப்புகள் -

8 மணி நேரத்துக்கு மேல் மாவை புளிக்க விட வேண்டாம். ஃப்ரிஜில் வைத்து உபயோகிக்கவும்.

தோசை/இட்லி மாவை விட ஆப்ப மாவை கொஞ்சம் தண்ணியாக அரைக்க வேண்டும்.

நான்-ஸ்டிக் ஆப்பச் சட்டி/டவாவை உபயோகிக்கவும்.

No comments:

Post a Comment