Thursday, November 10, 2022

நேரில் நின்று பேசும் தெய்வம்

 நேரில் நின்று பேசும் தெய்வம்

முகநூல் பதிவு சாந்தி ரவி

தன் கணவன் முகுந்தனக்கு திருச்சியில் இருந்து சென்னைக்கு வேலை மாற்றம் ஆனதால் ராதாவும் அவள் கணவர் முகுந்தனும் சென்னையில் ஒரு அப்பார்ட்மெண்டில் குடி புகுந்தார்கள்.

வீட்டை ஓரளவு சுத்தம் செய்துவிட்டு வாசலில் பெரியதாக கோலம் போட்டு குளித்து முடித்து ஒரு பாலை காய்ந்து விட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் அழைத்து வெற்றிலை பாக்கு கொடுத்தாள். எல்லோரும் வந்து வாங்கிக் கொண்டு சென்று விட்டார்கள் . ஒரு மாமியை மட்டும் காணவில்லை. தாமே சென்று கூப்பிடலாம் என்று நினைத்து மாமியின் வீட்டின் கதவை தட்டினாள்.

மாமி கதவை திறந்தார்.

மாமி நான் எதிர்த்த அப்பார்ட்மெண்டில் புதுசா குடித்தனம் வந்து இருக்கேன் தாம்பூலம் வாங்க எங்க வீட்டிற்கு வாங்க மாமி. ஒரு பத்து நிமிஷம் வேலை இருக்குமா நான் முடிச்சுட்டு வரேன் நீ வேணா  உள்ள வந்து உட்காரேன்.

இல்ல மாமி எனக்கு வேலை இருக்கு. நீங்க வாங்க பத்து நிமிஷம் கழிச்சு.

பத்து நிமிடம் கழித்து...

வாங்க மாமி உக்காருங்க வேலை எல்லாம் ஆச்சா.

ஆச்சிமா .

மாமி உங்க குழந்தை எல்லாம் ...

எனக்கு ரெண்டு பொண்ணுமா கீதா, வசுதா.  ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிட்டேன்.  ஒருத்தி சிங்கப்பூரில் இருக்கா. இன்னொருத்தி ஆஸ்திரேலியாவுல இருக்கா.  ஆத்துல இப்ப நானும் மாமாவும் தான்.

உங்க  ஆத்துல அவர் எங்க வேலை பார்க்கிறார் ? உனக்கு எத்தனை குழந்தை?  உன்னோட சொந்த ஊர் எது?

மாமி நானும் அவரும் தான்.  எனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தான் ஆகிறது.  மாமி அவருக்கு திருச்சி. எனக்கு மதுரை.  மாமி அவருக்கு வேலை மாற்றம் வந்தது சென்னையில். அதனால இங்க நாங்க வந்து இருக்கோம். அவரோட அப்பா அம்மா எல்லாம் திருச்சில இருக்கா.

ராதா எனக்கு வெத்தலை பாக்கு கொடு . நான் கிளம்புறேன்   வீடு எல்லாம் செட்டில் பண்ணிட்டு ஃப்ரீயா இருக்கும்போது ஆத்துக்கு வா.

சரி மாமி.

ஒரு வாரம் ஆனது அவளுக்கு வீடு எல்லாம் செட்டில் பண்ண.  எல்லாத்தையும் முடித்துவிட்டு,  ராதா மாமியின் வீட்டிற்கு சென்றாள்.

வாமா ராதா !  எல்லாம் செட்டில் பண்ணிட்டியா.

எல்லாம் பண்ணிட்டேன் மாமி.

மாமி இவர்கள் யார்?  மாமி உங்களுடைய மாமனார் மாமியார் படங்களா ? நிறைய வைத்திருக்கிறீர்களே ?  பூ வேறு அடுக்கி வைத்திருக்கிறீர்கள்.  தட்டில் ஒரே வாசனையாக இருக்கிறது. ஏதோ ஒரு அமைதி தெரிகிறது.

ராதா இது என்னுடைய மாமனார் மாமியார் இல்லை.  பாண்டிச்சேரி ஸ்ரீ அன்னை ஸ்ரீ பகவான் அரவிந்தர். நான் அவர்களுடைய பக்தை.

மிகவும் வித்தியாசமான பூக்களாக இருக்கிறது    உங்களுக்கு எப்படி கிடைக்கிறது ? எப்படி நீங்கள் இதை எல்லாம் தனியாக அடுக்கி வைக்கிறேள் ? வீடும் மிகவும் சுத்தமாக இருக்கிறது.

ஒரு தெரிந்த பூக்கார பையன் இடம் சொல்லி வைப்பேன்.    வழக்கமாக அவன் கொண்டு வந்து கொடுப்பான்.  எந்த பூ கேட்டாலும் கொண்டு வந்து தருவான் .எனக்கு இது பழக்கமாகிவிட்டது.

மாமி நீங்கள் பூ அடுக்கும்போது எனக்கு சொல்லி அனுப்புங்கள். நானும் வந்து உதவி செய்கிறேன். எனக்கும் ஆசையாக இருக்கிறது.

கண்டிப்பாக கூப்பிடுகிறேன். பூக்களை எல்லாம் தட்டில் வைத்துக் கொண்டே ஸ்ரீ அன்னையை பற்றியும் ஸ்ரீ அரவிந்தர் பகவான் பற்றியும் உனக்கு நான் சொல்றேன்.

ராதாவின் மனம் அன்னையிடம் ஒன்றி விட்டது  தினமும் அவர்கள் வீட்டுக்கு சென்று விடுவாள்.

அன்று வெள்ளிக்கிழமை.  மாமி ராதாவிடம்....ராதா நானும் மாமாவும் நாளைக்கு பாண்டிச்சேரி போகிறோம்.  ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமத்திற்கு நீயும் உன் ஆத்துக்காரரை அழைத்துக் கொண்டு  வருகிறாயா போகலாம்.

ராதாவின் கண்களில் இருந்து கடகடவென்று கண்ணீர் கொட்டியது.

ஏமா ராதா!" ஏன் அழுகிறாய்? உன்னால வர முடியாதா உடம்பு சரியில்லையா என்ன விஷயமா சொல்லு.  ஏம்மா அழற திடீர்னு.

இல்ல மாமி அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமி 

நான் உன் அம்மா மாதிரி. உன் மனசுல இருக்கிறது சொன்னா தான் எனனால் உனக்கு உதவ முடியும்.

மாமி மாமி என்று இன்னும் கொஞ்சம் அழ ஆரம்பித்து விட்டாள்.

இந்த தண்ணிய குடி . கொஞ்ச நேரம் அமைதியா அன்னை கிட்ட உட்காரு. அப்புறம் பேசலாம்.

மாமி மாமி..

சொல்லுமா.

மாமி எனக்கு கல்யாணமாகி ஒரு வருடம் ஆகிறது.  எனக்கும் என் கணவருக்கும் ஒரு உறவும் இல்லை, பற்றுதலும் இல்லை . மாமி ஒரு ஜடப் பொருளாக வாழ்ந்து வருகிறோம். இது என் அம்மாவிற்கும் என் மாமியார் வீட்டிற்கும் தெரியாது.

நான் சமைத்து போடுவேன் . வீட்டு வேலைகளை பார்ப்பேன் . அவர் காலையில் சாப்பிட்டுவிட்டு,  அலுவலகம் சென்று விடுவார்,  பின் மாலையில் காபி குடிப்பார்.  இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவார். 

நேருக்கு நேர் நின்று அவர் எதுவும் கேட்டதில்லை . நானும் சொன்னதும் இல்லை.  மாமி இப்படி ஒரு வருடம் ஓடிவிட்டது.

சேர்ந்து எங்கேயுமே போகவில்லையா?

கல்யாணம் ஆன புதிதில் அவர்கள் அம்மா சொன்னார்கள் என்று என்னை திருவானைக்காவல்  கோவிலுக்கு அழைத்து சென்றார் .

சரி கண்ணை துடைச்சுக்கோ.  மாமி ஒன்னு சொல்றேன். உங்க ஆத்துக்காரர் கிட்ட போய் கேளு. நாளைக்கு மாமா மாமி பாண்டிச்சேரி போறாளாம்  நம்ம ரெண்டு பேரையும் கூப்பிடுகிறார்கள்  போலாமா என்று கேள்.  வருவதாக இருந்தால், என்னிடம் சொல்   காலையில் நான்கு பேரும் போகலாம்   மாமாவிடம் கார் இருக்கிறது.

சரி மாமி கேட்டுப் பார்க்கிறேன். நடக்குமா என்று தெரியவில்லை.

மாலை முகுந்த் அலுவலகத்திலிருந்து வந்தவுடன், அவனுக்கு  காபி கொடுத்துக் கொண்டே ராதா கேட்கிறார்.

என்னங்க! 

நிமிர்ந்து பார்த்தான் 

எதிர்த்து வீட்டில் மாமியும் மாமாவும் ஸ்ரீ அரவிந்த ஆஸ்ரமத்திற்கு போகிறார்களாம்.  நம் இருவரையும் அழைக்கிறார்கள். போகலாமா? 

ம்... போகலாம்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கால் தரையில் நிற்கவில்லை . காதில் விழுவது உண்மையாய் என்று ஒரு சந்தேகம்.

மீண்டும் கேட்டாள்.

ம்ம் போகலா.....ம்.

காரில் எல்லோரும் ஆசிரமம் புறப்பட்டார்கள்.

எட்டு மணிக்கு பாண்டிச்சேரி சென்றடைந்தார்கள்.

ஆசிரமம் உள்ளே சென்று சமாதி தரிசனம் செய்துவிட்டு ஒரு ஓரமாக நான்கு பேரும் அமர்ந்து கொண்டார்கள்.

ராதாவின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது. அன்னையிடம் எல்லா பாரத்தையும் இறக்கி வைத்தாள். மனதும் லேசாகியது.

நால்வரும் தரிசனம் முடித்து வெளியே வந்தார்கள்.

அப்பொழுது முகுந்த் முக்குந்த் என்று யாரோ அழைப்பது போல் குரல் கேட்டது.

முகுந்த் திரும்பி பார்த்தான்   தன் கல்லூரியில் படித்த தோழி மீரா என்று அடையாளம் தெரிந்து கொண்டான்.

மீரா தான் கட கட வென்று பேசினாள்.

முக்குந்த் எப்படி இருக்க?

இவர் என் கணவர் சுந்தர்.

இது என் குழந்தை ஸ்வேதா.

நீ எப்படி இருக்கே? உனக்கு எத்தனை குழந்தை முகுந்த்.

அவன் உடனே தன் மனைவியை கூப்பிட்டான்.

ராதா... இவள் பெயர் மீரா. கல்லூரியில் நானும் இவளும் ஒன்றாக படித்தோம்.

மீரா ...இவள் என் மனைவி ராதா.

முகுந்த் வேறு எதுவும் பேசாமல் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டான் 

ஒரு வருடம் ஓடியது.  ராதாவிற்கும் முகுந்திருக்கும் ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அன்னை கொடுத்த பிரசாதம். ஆகையால் அரவிந்த் என்று பெயர் வைத்தாள்.

இவளும் அன்னை அன்பர் ஆகிவிட்டாள். மாமி போலவே ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் பகவான் படங்களை வைத்து தட்டில் பூக்களை சமர்ப்பித்து மகிழ்ந்து வந்தாள்.

ராதா நாளைக்கு Prosperity Day . அன்னைக்கு பூவெல்லாம் தட்டில் அடுக்கணும்.

நான் வரேன் மாமி. ரெண்டு பேரும் சேர்ந்து அடுக்கி வைக்கலாம்.

மறுநாள்

வாமா ராதா  குழந்தையை அந்த பெட்ல விட்டுடு    மாமா பார்த்து பார். பால் எல்லாம் கொடுத்துட்டியா?

கொடுத்துட்டேன் மாமி . தூங்குறான் இப்போதைக்கு எழுந்துக்க மாட்டான். நாம போய் பூவெல்லாம் அடுக்கி வைக்கலாம்

மாமி .. மனசு ரொம்ப அமைதியா சந்தோஷமா இருக்கு.   நான் இங்க வந்தது,க்ஷ உங்கள சந்திச்சது,  நீங்க எனக்கு அன்னையை அறிமுகம் செய்தது,  நாம் எல்லோரும் பாண்டிச்சேரிக்கு சென்று அன்னையை தரிசனம் செய்தது , 

மாமி அன்றைய தினத்திலிருந்து என் வாழ்க்கையில் அன்னை எப்படி ஒரு அற்புதத்தையும் அருளையும் வாரி வழங்கி இருக்கிறார்.

ராதா .. நானே கேட்கணும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  அவர் எப்படி மனம் மாறினார்? 

மாமி .  ஆசிரமம் சென்று திரும்பிய தினத்திலிருந்து அவர்  என்னுடன் சகஜமாக பேச ஆரம்பித்தார்   பின் இரண்டு நாள் கழித்து என் கையைப் பிடித்துக் கொண்டு  அழுதார் . நான் உனக்கு துரோகம் செய்து விட்டேன் என்னை மன்னித்துவிடு என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. பேசாமல் அவர் பேசுவதே கேட்டுக் கொண்டிருந்தேன் . அவர் பேசி முடித்தவுடன் பேசலாம் என்று

அவர் தொடர்ந்தார்....

ராதா அன்று பாண்டிச்சேரியில் ஆசிரமத்தின் வாசலில் என் கல்லூரி தோழி மீரா என்று அறிமுகப்படுத்தினேன் ஞாபகம் இருக்கிறதா?

ஆமாம் நன்றாக நினைவிருக்கிறது.

நானும் அவளும் ஒருவரை ஒருவர் உயிராக காதலித்தோம்.  எங்கள் இருவர் வீட்டிலும் கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை . அவள் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வேறு ஊருக்கு சென்று விட்டாள்   எனக்கும் கல்யாணம் ஆகிவிட்டது   எங்க அம்மாவையும் அப்பாவையும் மறுத்து பேச முடியவில்லை.

ஆதலால் கல்யாணத்திற்கு ஒப்பு கொண்டேன் . ஆனால் அவளை மறக்கவும் முடியவில்லை.  உன்னுடன் வாழவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். 

அப்போது பாண்டிச்சேரியில் அவளை பார்த்தவுடன்,  எனக்கு ஒரே ஷாக் ஆக இருந்தது.  அவள் மிகவும் உற்சாகத்துடன் தன் கணவனையும் குழந்தையும் என்னிடம் அறிமுகப்படுத்தினால்  ஒன்றுமே நடக்காதது போல் பேசிவிட்டு சென்றுவிட்டாள். 

அவளே அவ்வளவு சந்தோஷமாக இருக்கும் பொழுது,  நாம் ஏன் இப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேன்   உன்னையும் நினைத்தேன்.  என் மனது உருகி மாறிவிட்டது என்று கூறினான்.

இதான் மாமி நடந்தது.

இது எல்லாம் அன்னையின் அருள் ராதா.

நாம் பாண்டிச்சேரிக்கு போகும்போது, அவளையும் வரவைத்து, அவளுடைய வாழ்க்கையை அறியும் படி செய்தது, எல்லாம் அன்னையின் கருணை தான்.

நேரில் நின்று பேசும் தெய்வம் ஸ்ரீ அன்னை.

என் கதையை பொறுமையுடன் படிப்பதற்கு மிகவும் நன்றி நண்பர்களே.🙏🙏🙏

No comments:

Post a Comment