*அலர்ஜி அரிப்பு நீங்க*
*தேவையான பொருட்கள்:*
1. கலப்படம் இல்லாத தேங்காய் எண்ணெய் – 3 அல்லது 4 ஸ்பூன்
2. எலுமிச்சை சாறு – 1 அல்லது 2 ஸ்பூன்
*செய்முறை விளக்கம்:*
முதலில் ஒரு சுத்தமான பவுலில் கலப்படம் இல்லாத தேங்காய் எண்ணெயினை 3 அல்லது 4 ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக பவுலில் எலுமிச்சை சாற்றினை 1 அல்லது 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டையும் பவுலில் சேர்த்த பிறகு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். மிக்ஸ் செய்த பிறகு கலவையினை 10 முதல் 15 நிமிடம் வரை வெயிலில் வைக்க வேண்டும். அடுத்து 15 நிமிடம் கழித்த பிறகு வெள்ளை நிறம் கொண்ட திரவ நிலையில் கலவையானது இருக்கும்.
இது போன்று அந்த திரவமானது இருக்கும். ஒரு முறை தயாரித்தால்
*செயல்படுத்தும் முறை:*
இந்த திரவத்தை குளிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு உடல் மற்றும் சருமத்தில் அலர்ஜி உள்ள இடங்களில் இதனை தடவி 1 மணிநேரம் வரையிலும் வைத்திருக்க வேண்டும்.
1 மணி நேரம் பின்னர் வாஷ் செய்து கொள்ளலாம். இந்த டிப்ஸ் கண்டிப்பாக அலர்ஜி உள்ள இடங்களில் பயன்படுத்திய பிறகு நல்ல மாற்றம் தெரியும்.
மரு, தடிப்புகள் உள்ளவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வர 6 வாரங்களில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
*முக்கிய குறிப்பு*
இந்த டிப்ஸில் எலுமிச்சை சேர்ப்பதினால் எரியும் தன்மை அதிகமாக இருப்பதனால் சிறிதளவு கலவையினை எடுத்து தேய்த்து பார்த்த பிறகு அப்ளை செய்து வரலாம்.
குழந்தைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்வது நல்லது. 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயன் படுத்துவது நல்லது.
தேங்காய் எண்ணெயில் ஆன்டி மைக்கிரேபியல்(Anti Microbial) தன்மை அதிகமாக உள்ளது. கலப்படம் இல்லாத தேங்காய் எண்ணெயானது பாக்டீரியா, பூஞ்சை தொற்று போன்ற நோய்களுக்கு மிகவும் நல்லது.
No comments:
Post a Comment