Saturday, November 19, 2022

பொன்னாங்காணி கீரை

 🌺 *பொன்னாங்கண்ணி* *கீரை* இந்தியாவில் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய சாதாரணமான கீரை. அதிலே இருக்கும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் மிக அதிகம். இது கற்பக மூலிகையென்று அந்தக்கால சித்தர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் சகல விதமான நோய்களுக்கு இதை மருந்தாக பயன்படுத்தி இருக்கின்றனர்.

👉பொதுவாக காய்கறிகள், கீரைகளில் அரிசி உணவை போல் அதிக கார்போஹைட்ரேட் இருக்காது. வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், உயிர்ச்சத்துக்கள் மட்டுமே அதிகம் இருக்கும். ஆனால் இந்த பொன்னாங்கண்ணி கீரையில் மட்டும் வைட்டமின்கள், தாது உப்புக்களோடு உடலுக்கு சக்தி அளிக்கும் மாவு சத்தும் இருக்கிறது. சோறு பாதி, இந்தக் கீரை பாதி என்று சாப்பிட்டு விட்டு, வயலில் இறங்கி வரப்பு கட்டலாம்.

👉இதிலே சுண்ணாம்பு சத்து (அதாங்க கால்சியம், கால்சியம்), இரும்பு சத்து, தங்கச்சத்து போன்ற சத்துக்களும் இருக்கிறதாம். அதனால் இந்தக் கீரையை தொடர்ந்து வேகவைத்து உண்டால், சும்மா தங்க பஸ்பம் சாப்பிட்ட மாதிரி உடல் தகதக வென்று ஜொலிக்குமாம். அப்படியே கொஞ்சம் பூண்டு சேர்த்து சாப்பிட்டால், மூல வியாதியிலிருந்து குணம் கிடைக்குமாம். 

👉பொன்னாங்கண்ணி கீரையை உப்பில்லாமல் வேகவைத்து, வெண்ணெய் சேர்த்து ஒரு மண்டலம் உண்டு வர கண் சார்ந்த நோய்களில் இருந்து விடுதலை கிடைக்குமாம். கண் ஒளி பெறுமாம். இதை ஏற்கனவே நமது முன்னோர்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு பொன்+ஆம்+காண்+இ= பொன்னாங்காணி என்று பொருத்தமான காரணப்பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது இது நமது கண் ஒளியை பொன் போல ஒளிர செய்யுமாம். காலப்போக்கில் பொன்னாங்காணி என்பது மருவி பொன்னாங்கண்ணி ஆகி  விட்டது.

👉பொன்னாங்கண்ணி கீரையை... மன்னிக்கவும். பொன்னாங்காணி கீரையை வதக்கி உண்டது மட்டுமல்லாமல் பசு நெய் விட்டு வதக்கி கண்களுக்கு வைத்து கட்டவும் செய்யலாமாம். தைலமாக செய்து தலைக்கு தேய்க்கவும் செய்யலாமாம். 

👉பொன்னாங்காணி கீரையை பச்சையாக ஒரு பிடி எடுத்து மென்று அதன் சாற்றை குடித்து வர சூட்டினால் வரும் வாய்புண், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளில் இருந்து குணம் கிடைக்கும். இது உடல் சூட்டை குறைக்கும்.

🪷🪷🪷

No comments:

Post a Comment