சஹேலி வாங்கியும் பர்த்தாவும் கிட்டத்தட்ட கஸின்ஸ் மாதிரி. ரொம்ப வித்தியாசம் இல்லே...
முக்கியமா இதுக்கு தேவை கும்மட்டி அடுப்பு... எங்கேயோ கேட்ட ஞாபகம்... இல்லே.. எங்கிட்ட கேஸ் ஸ்டவ்தான் இருக்கு கும்மட்டிக்கு எங்க போறதுன்னு சொல்றவா தயவு செய்து இடத்தை காலி பண்ணலாம். பெரிய ஸைஸ் கத்திரிக்காய் மார்க்கட்டில பார்த்திருப்பீங்களே.... நாலு பேருக்கு ஒண்ணு போதும்.. ஊதாவோ பச்சையோ எது கிடைக்குதோ வாங்கிக்குங்க.... அடுப்புக்கரி கருப்பா இருக்குமே .. அதுதான் கும்மட்டில போட்டு நல்லா தணல் பண்ணிக்க வேண்டியது ..இதுக்கு கொட்டாங்குச்சி ரொம்ப உபயோகமா இருக்கும். .சரி ஆச்சா பீடிகை.. இப்ப அந்த ஓவர் சைஸ் கத்தரிக்காய கழுவிட்டு ஈரம் போக துடைச்சு லேசா அதும் மேல கடலெண்ணை தடவிட வேண்டியது. இப்ப கத்திரிக்காய கும்மட்டி தணல்ல போட்டு எல்லா பக்கமும் சுடணும். முக்கியமா ஒண்ணு சொல்ல விட்டு போயுடுத்து . கத்தரிக்காய் காம்பை எடுக்க கூடாது. ஏன்னா அதைப் பிடிச்சுண்டு தான் திருப்பறோம். ஆச்சா இப்ப தோலி கறுப்பா கலர் மாறி இருக்கா .. இப்ப சுட்ட கத்திரிக்காய் ஜம்முனு வாசனையோட இருக்கும். அதை தணல் லேந்து எடுத்து ஒரு தட்டுல போட்டு ஷார்ப்பான முள் கரண்டியால அங்கங்கே குத்தணும் . கொஞ்சம் உப்பு மிளகாய்த் தூள் கலந்த மிக்ஸரை இந்த ஓட்டைல போடணும்.. ஆறிடுத்தான்னு பார்த்துட்டு தோலை உரிச்சு எடுத்துட வேண்டயது. இதுக்கு மின்னாடி சாம்பார் வெங்காயம் நாலு அஞ்சு தக்காளி பெரிய சைஸ் ஒண்ணு பொடியா கட் பண்ணி வெச்சிக்க வேண்டியது காரம் கொஞ்சம் ஜாஸ்தியா வேணுங்கறவா பச்சை மிளகாய் ஒண்ணு போட்டுக்கலாம். கடாயை அடுப்புல வெச்சு கடலை எண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு பெருங்காயம் கடுகு உளுத்தம் பருப்பு போட்டு கடுகு வெடிச்சு உளுத்தம் பருப்பு சிவந்து வாசனை வந்தப்பறம் இந்த நறுக்கி வெச்ச வெங்காயம் போட்டு கொஞ்சம் பொறுத்து தக்காளி கருவேப்பிலை சேர்த்து இதல்லாம் நல்லா வெந்தப்பறம் மஞ்சள் தூள் போட்டு பிசைஞ்சு வெச்சிருக்கற கத்தரிக்காய இதில போட்டு நல்லா வதக்கிக்க வேண்டியது தேவைப்பட்டா உப்பு இன்னும் கொஞ்சம் போட்டுக்கலாம்..நல்லா வாசனை வரும்.அப்ப எறக்கிடலாம்.சூடான சாதம் பிசைஞ்சு சாப்பிட லாம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்க நல்லா இருக்கும் இந்த மராட்டி சஹேலி வாங்கி.
No comments:
Post a Comment