*சமையல் குறிப்புகள்*
*பத்தே நிமிசத்துல சூப்பரா துவரம் பருப்பு சட்னி அரைக்கலாம் தெரியும்மா?*
டிபனுக்கு மட்டும் இல்லங்க, சுட சுட சாதம் வைச்சு இதை போட்டு சாப்டா செம்ம டேஸ்டா இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.
காலையில் எழுந்த உடனே முதல் டென்ஷனே காலை டிபனுக்கு என்ன செய்வது, மதியம் சமையலுக்கு என்ன செய்வது என்பது தான். வேலைக்கு செல்லும் அவசரத்திலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் அவசரத்திலும் என்ன செய்வது என்று தெரியாமல் சில நேரம் விழி பிதுங்கி விடும். இது போன்ற சமயங்களில் இந்த சட்னி உங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். ஏனென்றால் இது அரைத்தால் மதியம் சாப்பாட்டிற்கும் வைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் கரைத்து காலை டிபனுக்கும் வைத்துக் கொள்ளலாம் இரண்டுக்கும் சேர்த்து ஒரே டிஷ் அதை எப்படி செய்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
*தேவையான பொருட்கள்:*
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், துவரம் பருப்பு -1 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4 டேபிள் ஸ்பூன், பூண்டு – 4 பல், சின்ன வெங்காயம் – 5, புளி – 1/2 நெல்லிக்காய் அளவு, மிளகு – 10, கருவேப்பிலை – 1 கொத்து.
இந்த சட்னி அரைக்க முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் துவரம் பருப்பை அதில் சேர்த்து நல்ல பொன்னிறமாக வறுக்க வேண்டும். துவரம் பருப்பு வறுபட்டதும் நல்ல வாசம் வரும் அந்த நேரத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள். இதை ஒரு தட்டில் வைத்து நன்றாக அரா வைத்து கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் நான்கு காய்ந்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், புளி, உப்பு இவை எல்லாம் சேர்த்த பிறகு வறுத்து ஆற வைத்து துவரம் பருப்பையும் இதில் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இது நல்ல ஃபைன் பேஸ்ட்டாக அரைக்க வேண்டும் அரைக்கும் போது கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு துவையல் பதத்திற்கு வரும்படி அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அரைத்து எடுத்த இந்த சட்னியை அப்படியே கெட்டியாக வைத்து சாதத்துடன் சாப்பிட்டால் ஒரு அருமையான துவையல் தயார். இந்தத் துவையல் இருந்தால் போதும் சுடச்சுட சாதத்துடன் இதை போட்டு சாப்பிடும் போது எதற்கு வேறு ஒரு சைட் டிஷ்ஷை கூட தேவையில்லை அட்டகாசமாக இருக்கும். இது காலை டிபனுக்கு செய்வதாக இருந்தால் இத்துடன் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒரு தாளிப்பை மட்டும் இதில் சேர்த்த பிறகு சாப்பிட்டால், இதுவரை நீங்கள் சுவைத்திடாத அருமையான ஒரு சட்னி தயார். ஒரே டிஷ் வைத்து பருப்பு சாதமாகவும் சாப்பிடலாம் சட்னியாகவும் சாப்பிடலாம் இரண்டுமே அட்டகாசமான சுவையில், இதோட டேஸ்ட் ரொம்பவே நல்லாவே இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.
தேங்காய் போடணும்
ரசத்திற்கு சூப்பர் காம்பினேஷன் பருப்பு துவையல் துவரம் பருப்புஒரு பங்கு அதே அளவு
கடலைபருப்பு தே துருவல்கடலைப் பருப்பு, தேங்காய் , வரமிளகாய், பெருங்காயம்.கொஞ்சூண்டு கடலை எண்ணெய் விட்டு சூடானப்பறம் பெருங்காயம் கட்டி கடலைப்பருப்பு அப்பறம் மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். ரொம்ப சேப்பா ஆகக்கூடாது. லைட்டா வறுத்துக்கணம். இனிப்பும் மிக்ஸில இதை எல்லாத்தையும் தேங்காயும் கொட்டி தேவையான உப்பு சேர்த்து நைசாகவும் இல்லாமல் கரகரப்பாகவும் இல்லாமல் அரைத்தால் சூப்பர் தொகையில் தய்யார்
No comments:
Post a Comment