Monday, November 14, 2022

சமச்சீரான உணவு சக்கரை நோயாளிகள்

 நீரிழிவு நோயாளிகள் காலை முதல் இரவு வரை கடைபிடிக்க வேண்டிய உணவு மற்றும் அளவு முறைகளை பட்டியல் இடமுடியுமா?

காலையில் எழுந்ததும்

6. 00 மணிக்கு- ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீரை பொறுமையாக காபி போன்று குடிக்கவும்.

6.30 மணி அளவில் -கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஒரு தம்ளர் அல்லது லெமன் டீ குடிக்கலாம்.

8.30 மணிக்கு - இட்லி - 3 (சிறிய அளவு ) பாசிப்பருப்பு சாம்பார் ஒரு சிறிய கிண்ணம் எடுத்துகொள்ளலாம். (அல்லது) சிறிய வெங்காயம் சேர்த்த எண்ணெய் குறைத்த ஊத்தாப்பம் - 2 (சிறிய அளவு) கறிவேப்பிலை துவையல் - 4 டீஸ்பூன் அளவு (அல்லது)

சப்பாத்தி -2, சென்னா கடலை கிரேவி - 3 தேக்கரண்டி (அல்லது)

பொங்கல் - வரகு அரிசியில் செய்தது -1 சிறிய கப், தொட்டுக்கொள்ள கத்தரிக்காய் பாசிப்பருப்பு கொத்சு- 1 கப்

இவற்றில் ஒன்று எடுத்துகொள்ள வேண்டும். உடன் ஒரு சிறிய ஆப்பிள் அல்லது கொய்யா சேர்த்துகொள்ளலாம். வாரத்தில் இரண்டு நாள் முட்டையை வேகவைத்து வெள்ளைகருவை சாப்பிடலாம்

11.00 மணி அளவில் காய்கறி சூப் அல்லது காய்கறி சாலட் - 1 கப்.

​மதிய உணவு - சர்க்கரை நோயாளிகள் ஒரு நாள் உணவு

சர்க்கரை நோயாளிகள் கார்போஹைட்ரேட் உணவை குறைத்து எடுக்க வேண்டும். அதனால் அரிசி உணவு அதிகம் வேண்டாம். அதே போன்று கோதுமையும் கூட கார்போஹைட்ரேட் கொண்டதுதான். அதற்காக இதை தவிர்க்க வேண்டிய தில்லை சரிவிகிதமாக எடுத்துகொள்ளலாம்.

பட்டை தீட்டிய அரிசி உணவை வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும். அதற்கு பதிலாக கைக்குத்தல் அரிசி பயன்படுத்தினால் அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டாது அதனால் தான் கோதுமை, கம்பு, கேப்பை போன்றவற்றை அறிவுறுத்துகிறார்கள்.

1. 00 மணி அளவில்-

சாதம் - 1 கப் 200 கிராம் அளவு

பருப்பு, காய்கறிகள் நிறைந்த சாம்பார் - 1 கப்

கீரை பொரியல், அல்லது பாசிப்பருப்பு சேர்த்த கூட்டு - 1 கப்

ஆவியில் வேகவைத்த காய்கறிகள் - 1 கப்,

அசைவம் சாப்பிடுபவர்கள் மீன் குழம்பு - 1 கப், ( 2 மீன் துண்டுகளோடு ) மட்டன், கோழி குழம்பும் இதே அளவு. கொழுப்பு இல்லாமல் இருக்க வேண்டும். வறுவலும் கூடாது .(அல்லது)

கேழ்வரகு களி- ஒரு கையளவு உருண்டை

குழம்பு - 1 கப் (கீரை, முருங்கைக்கீரை புளி மசியல், பருப்பு துவையல்)

சாதம் - கால் கப்,

மோர் - 1 தம்ளர்.

(அல்லது)

சப்பாத்தி - 2 , பாசிப்பருப்பு கூட்டு - 1 கப், வெங்காயம் தயிர் சேர்த்த பச்சடி - 1 சிறிய கப்,

சாதம்- அரைகப்,

ரசம் அல்லது மோர் - தேவைக்கு.

​மாலை சிற்றுண்டி - சர்க்கரை நோயாளிகள் ஒரு நாள் உணவு

நேரத்து சத்தான உணவை எடுத்துகொள்ள வேண்டும் அதோடு குறைந்த அளவிலான உணவு என்பதால் பசி எடுக்க கூடும். அதனால் மாலையில் சிற்றுண்டி சாப்பிடுவது நல்லது.

மாலை 4 - மணி அளவு பாசிப்பருப்பு சுண்டல் - 1 சிறு கப் உடன் கொழுப்பு நீக்கப்பட்ட பால் - 1 தம்ளர் (அல்லது )

பேரிக்காய், ஆப்பிள், பழச்சாலட், பாதாம் பருப்பு - ஏதேனும் 1 கப் உடன் கொழுப்பு நீக்கப்பட்ட பால் - 1 தம்ளர்

​இரவு உணவு - சர்க்கரை நோயாளிகள் ஒரு நாள் உணவு

இரவு 8 மணி அளவு

எண்ணெய் இடாத சப்பாத்தி - 2 பாசிப்பருப்பு அல்லது சென்னா சுண்டல் கிரேவி, வெங்காயம் தயிர் ரைத்தா - சிறிய கப் (அல்லது)

சிறுதானிய தோசை / கேழ்வரகு அடை / கோதுமை தோசை காய்கறிகள் சேர்த்தது - 2 தொட்டுக்கொள்ள கொத்துமல்லி, புதினா சட்னி. (அல்லது)

நவதானிய உப்புமா - 1 கப் தொட்டுக்கொள்ள புதினா சட்னி,

இரவு 9.00 மணி அளவு

வெது வெதுப்பான சூட்டில் ஒரு தம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் - ஒரு தம்ளர், உடன் ஆப்பிள் (தேவைப்பட்டால்)

சர்க்கரை நோயாளிகளுக்கான ஒரு நாளைக்கு தேவையான சமச்சீரான உணவு இது.

No comments:

Post a Comment