Saturday, November 12, 2022

தாயுமானவள்

 தாயுமானவள்

===============

அருணுக்கு அ‌ன்று மிகவும் முக்கியமான நாள். ஆம் அவனுக்கு திருமணம் ஆகி இன்றுடன் ஒன்பது வருடம் முடிந்து விட்டது இதோ அவன் மனைவி பத்மா இடுப்பு வலியில் துடித்துக் கொண்டு இருக்கிறாள். அவனது உயிரின் உயிரை உலகுக்கு கொண்டு வர போராடி கொண்டு இருக்கிறாள்.பத்மாவை பற்றி சொல்ல வேண்டுமானால் தங்கமானவள். தாய் தகப்பன் இல்லாதவள்.மாமன் மாமியால் வளர்க்கப்பட்டவள் அதனால் தாய் பாசத்துக்கு ஏங்குபவள்

அருணின் அம்மாவை பார்த்தவுடன் அவளுக்கு பிடித்து விட்டது கணவன் இறப்புக்கு பிறகு 13 வயதான தன் பிள்ளையை இத்தனை ஒழுக்கத்துடன் வளர்த்து இருக்கும் தன் மாமியார் தன்னுடன் இருந்தால் தன்   குழந்தைகள் நன்கு வளரும் என்ற எண்ணத்தில் இருந்தாள் .அருண் அதற்கு உடன் படாததால் தான் இத்தனை நாள் குழந்தை பிறப்பை தள்ளி போட்டாள்.கடைசியில் பிள்ளை  பேறுக்கு மாமியார் வந்தே ஆக வேண்டும் என்று பத்மா கட்டாய படுத்தியதால் அருண் ஒத்து கொண்டான.

அது எமர்ஜென்ஸி வார்ட் அவன் இருப்பது வெளிநாடு ஆனதால் கணவன் அவளுடன் இருக்க வேண்டிய கட்டாயம் என்று சொல்லி விட்டதால் அவன் உள்ளே அவளுடன் இருந்தான் அவள் ஒவ்வொரு வலிக்கும் துடிப்பது கண்டு அவன் கண்களில் கண்ணீர் வ‌ந்தது  கடவுளே இது என்ன சோதனை இந்த பூமி க்கு ஒரு உயிரை கொண்டு வர ஆசைப் படும் நீ அதற்கு இலகுவான வழியை வகுத்து இருக்க கூடாதா?.அ‌ந்த உயிரை தன் வயிற்றில் சுமக்கும் இவளுக்கு இந்த ஒன்பது மாதமும் எவ்வளவு கட்டுபாடுகள் குப்புற படுக்க கூடாது  புரண்டு படுக்க கூடாது நிமிடத்துக்கு ஒரு முறை உதைக்கும் சின்ன உயிர் மூத்திரப் பையை பதம் பார்க்க அவ்வப்போது கழிவறை சென்று களைத்து போவது உண்ணும் உணவில் கட்டு பாடுகள் வாயை கட்டி வயிற்றை கட்டி என்பார்கள் அது இது தான் போல என்று எண்ணிய அவனுக்கு பத்மாவின் அலறல் மேலும் வலியை கொடுத்தது  .

டாக்டர் இடம் அவன் ஒட  என்ன அருண் இன்னும் நாலு மணி நேரம் ஆகும் இதற்கே இப்படி சோர் ந்து விட்டீர்களே உங்கள் மனைவி வலியில்லாத பிரசவத்துக்கு ஒத்து கொள்ள வில்லை அதனால் இந்த சுகமான வலியை அனுபவித்து தான் ஆகணும் என்றாள் அந்த டாக்டர்  ஒரு இந்திய அதுவும் தமிழ் பெண்  அறுபது வயதை நெருங்குபவள்  தமிழில் அவனிடம் உங்கள் குழந்தை  பிறக்கும் வரை அவள் கூடவே இருங்கள் உங்கள் சப்போர்ட் தான் அவளுக்கு டானிக். மேலு‌ம் ம‌ற்ற எல்லா விதத்திலும் மேலை நாகரீகத்தை நான் எதிர்த்தாலும் இதோ இப்போது இ‌ந்த குழந்தை பிறக்க காரணமாக இருக்கும் ஆணை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருப்பதை பாராட்ட வேண்டும்

 உன் தாய் உன்னை இப்படிதான் பெற்று எடுத்தாள் என்று புரிய வைக்கும் கலாச்சாரம்  ஏன் என்றால் ஒரு பெண்  பிரசவ காலம் ஒன்பது மாத அவஸ்தையையும் கூடவே இந்த பிரசவ  வலியையும் அனுபவிப் பதால் தாயின் மகத்துவம் புரிந்து பிள்ளை பிறப்பு க்கு பிறகு தாயை இன்னும் அதிகமாகவே நேசிக்க ஆரம்பிக்கிறாள்  ஆனாலும் நம்ம ஊரில் சில ஆண்கள் திருமணத்துக்கு பிறகு தாயை மறந்து விடுகிறார் கள் . அங்கும் இது போல கணவன் பிரசவ அறையில் மனைவி கூட இருக்க வேண்டும் என்று கட்டாய படுத்த வேண்டும் அப்போது தான் தாய்மையின் வலி புரியும்.ஆனால் இப்போது மருத்துவ துறை முன்னேற்றத்தால் வலியில்லாம ல் பிரசவம் என்று கண்டு பிடிக்க பட்டாலும்   அந்த நேரத்துக்கு வலியை உடல் மறக்க வைக்கிறது  ஆனால் அதையும் தாண்டி  அதற்கு பின் அந்த பெண் அனுபவிக்கும் பின் விளைவுகள் எத்தனையோ  என்று அவள்  சொல்லி போனது அவனை     செவிட்டில் அறைந்தது போல இருந்ததது 

பத்மாவுக்கு ஒரு வலிக்கும் அடுத்த வலிக்கும் உடல் இடைவெளி கேட்டு அவளை தூங்க வைத்தது இவன் நினைவுகள் முழித்து கொண்டது  அவனுக்கு சின்ன வயசில் இருந்து அம்மாவை அவ்வளவு பிடிக்காது ஏன் என்றால் அவள் அப்பா போல இல்லை ரொம்ப கண்டிப்பு  ஆனால் அப்பாவை அவன் 13 வயதில் இழந்த போது மொத்தமாக அம்மாவின் கண்டிப்பு  ரேடார்க்குள் வந்தான் அது பண்ணாதே இது பண்ணாதே என்று முட்டு கட்டை போடுவது இதை இப்படிதான் பண்ண வேண்டும் என்று கட்டாயப் படுத்து வது 

அவன் ஒரு விஷயம் செய்ய ஆசைப் பட்டால் அதற்கு அவள் பர்மிஷன் வாங்க தலை கீழாக அவன் நிற்க வேண்டியது இது எல்லாம் அவன் மனம்  அம்மா வை விட்டு தூரமாக விலகி நிற்க காரணம் ஆனது .அவன் வீட்டின் ஹால் ரூமில் மாட்டி இருக்கும்  அந்த போட்டோ  அவனுடைய அம்மா விரும்பி பார்க்கும் அந்த போட்டோ, அம்மா தன்னை சிறு வயதில்  சுமந்து நிற்பது  அதை பார்த்தால் கூட அவனுக்கு வெறுப்பாக தான் இருக்கும் 

ஏற்கனவே கண்டிப்பினால் அம்மாவின் மேல் பாசம் அன்பு இல்லாத அவனுக்கு பத்மாவின் கண்டிஷன் இல்லாத அன்பு அம்மாவை முற்றிலும் மறக்க செய்தது. அவன் தான் மறந்தான் ஆனால் பத்மா வாரம் ஒரு முறை மாமியாரிடம் பேசி நலம் விசாரித்து கொண்டாள் இப்போது கூட பத்மாவின் கட்டாயத்தின் பேரில்  பிரசவத்துக்கு உதவி பண்ண இந்த ஒன்பது வருடத்தில் ஒருதடவை கூட அம்மாவை அன்புடன் நினைக்காத அவன் அம்மாவை கூட்டி வந்திருக்கிறான்  அவனுக்கு ஒரு ஆச்சர்யம் அவன் கூப்பிட்ட போது அம்மா மறு வார்த்தை சொல்லாமல் அவனுடன் கிளம்பி வந்ததுதான். 

அவன் மனம் அம்மாவை நினைக்க ஆரம்பித்தது எதற்காக அவனை அவ்வளவு கண்டித்தாள் அவளுடைய கண்டிப்பால தான் இப்போது எப்பேர்பட்ட நல்ல நிலையில் இருக்கி றான் என்பது அவன் மனத்தில் நிழலாடியது நினைத்து முடிக்கு முன் பத்மாவின் அடுத்த அலறல் அவனை தாக்கியது எழுந்து அவள் அருகில் ஓடியவன் அவள் கையை பிடிக்க அவன் கைகள் உடைவது போல அவள் இறுக்க அவனுக்கு அவளது வலியின் வேகம் புரிந்து கண்கள் குளமானது 

ஆனால் இப்போது  அவனுக்கு பத்மாவின் உருவில் அம்மாவும் பிறக்கும் குழந்தை  தான் ஆகவும் நினைக்க  தோuன்றியது. இந்த காலத்திலாவது வலியில்லா பிரசவத்துக்கு வழி இருக்கிரது ஆனால் தான் பிறந்த காலத்தில் நினைக்கும் போதே  மனது வலித்தது .தாயை ப்பார்க்க மனம் துடித்தது அவள் மடியில் படுத்துக் கதற மனம் ஏங்கியது.எப்படியாவது அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அவள் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்க சொல்ல வேண்டும்   

இனி வரும் காலங்களில் அவள் காலை தரையில் பட விடாமல் சொகுசாகவும் சந்தோஷமாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்று அவன் நினைத்து முடிக்கவும் குவா குவா என்ற அழுகை சத்தம் அவன் காதில் விழ வாழ்த்துக்கள் இந்தாருங்கள் உங்கள் மகள் என்று டாக்டர் ரத்த திட்டுக்கள் நிறைந்த அவன் குழந்தை  யை பத்மாவின் நெஞ்சில் வைத்தாள். தன்  ரத்தத்தில்  உதித்து பத்மாவின் ரத்தத்தில் நீந்தி இந்த உலகை காண வந்த மகள். அத்தனை நேரம் கதறிய அவள் தாயின் உடலின் அந்த வெது வெது ப்பில் அமைதியாக , பத்மா வுடன்  சேர்த்து அவனும்  அந்த இளம் குருத்தை கட்டி அணைக்க முதன் முறையாக அவன் வாயில் இருந்து  அம்மா என்ற வார்த்தை தன் மகளை பார்த்து வந்தது. உண்மை .அவனுக்கு அவன் தாயின் மகத்துவத்தை உணர்த்திய தாய் அவள் .இவள் என் தாயுமானவள் என்று இருகக்க கட்டி முத்தமிட்டான்.

மகளை பார்த்து அவனின் உதடுகள் உச்சரித்த அந்த அம்மா என்ற வார்த்தை யும் அவன் கண்கள் குள மாகி நிற்பதை பார்த்த பத்மா விற்கு தான் பட்ட வலியின் வேதனை பறந்து போனது அவள் அருகில் இருந்த டாக்டர் இடம் நான் வலியை தாங்கி இவளை பெற்றது இவருக்கு அவரின் அம்மாவின் அருமை யை உணர்த்த தான் என்று சொன்ன வுடன் டாக்டர் அவனிடம் அருண் நீங்கள் உண்மையில் ஆசீர் வதிக்க பட்டவர் இனி உங்கள் வாழ்க்கையை உங்கள் தாய், உங்கள் மகள்,, சகோதரி மேலும்  தோழி யின் வடிவிலான உங்கள்  மனைவி உடன் வாழப் போகிறீர்கள் அப்புறம் என்ன சந்தோஷத்துக்கு குறைச்சல் all the best என்று சொல்லி நகர  தன் தாயின் அருமையை தனக்கு உணர்த்த தன்னை வருத்தி கொண்ட மனைவியை பெருமிதமாக பார்த்தவன் அவளை அணைத்து நெற்றியில் முத்தம் இட்டு தாய்மையின் மகத்துவத்தை எனக்கு உணர்த்திய நீயும் எனக்கு இன்னொரு தாய் தான் என்றான் 

சாரதா ஸ்ரீ நிவாசன் மத்யமர் முக நூல் பதிவு

PC Mohan manimala

No comments:

Post a Comment