Sunday, November 13, 2022

வடை மகாத்மியம்

 வடை மகாத்மியம் :)-

மத்யமர் முகநூலிலிருந்து sridhar hanumantharao

     நண்பர்களே எந்த ஒட்டலில் காலை சிற்றுண்டி சாப்பிட  போனாலும்  “ இட்லி வடையா, பொங்கல் வடையா” என்று கேள்வி நம் முன் எழும், எல்லோருக்கும் கிரிஷ்பியாக வடை சாப்பிட பிடிக்கும்  .எனக்கு பரிச்சியமான சில வடை வகைகளைப்பார்ப்போம் . இதில் மசால் வடை கணக்கில் வராது .ஒரு நெடுஞ்சாலை உணவகத்தில் மதிய வேளையில் வடை தொட்டுப்பார்த்தால் சூடாக இருந்தது, காலையில் செய்த வடை மைக்ரோஓவனில் சூட படுத்தியது , எண்ணெய் வழிய இருந்த அதை சாப்பிடாமல் தவிர்த்துவிட்டேன்,அந்த ஓட்டலையும் பின்வரும்  காலங்களில் தவிர்த்துவிட்டேன் .

     அடுத்து சாம்பார்  வடைதான் பெரும்பாலும் நண்பர்கள் விரும்பி சாப்பிடுவது .சமீபத்தில் புதிய பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்ட கோவை அன்னபூர்ணாவில்  சம்பார் வடையை ஆனந்தமாக உண்டு மகிழ்ந்தாகிவிட்டது  .நண்பர்களுடன் காலை நடைப்பயிற்சி முடித்து தர்மபுரி ஆனந்த ஓட்டலில் சாம்பார்வடையுடன்  காபி சாப்பிடுவதும்  பேரானந்தம் .

    சில இடங்களில் மோர்குழம்பு வடையும் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டுள்ளேன் .

     நல்ல வெயில் நேரத்தில் புளிக்காத கட்டி தயிரில் ஊறிய தயிர்வடை மேலே காராபூந்தியுடன் அமிர்தமாய் இருக்கும் .

     பெங்களூரில்  போண்டா சூப் என்று உளுந்தில் செய்த போண்டாவை பாசிப்பருப்பு சாம்பாரில் ஊறவைத்து தருகிறார்கள் , அருமையாக உள்ளது .( சமீபத்தில் HSR layout Raghavendra tiffin roomல் சாப்பிட்டேன் நன்றாக உள்ளது ).

      பாளையம்புதூர் சாய்சங்கீத்தில்   மாலை வேலைகளில் சின்ன சின்ன உளுந்து போண்டாக்களை சாம்பாரில் ஊறவைத்துக்கொடுக்கிறார்கள் , பிறகு சூடாக ஒரு காபி அதி அற்புதமாக இருக்கிறது .

     நண்பர் திரு  சீனிவாசன் உப்பிலி அவர்கள் கும்பகோணம் திருமால் வடை தயாரிப்பு பற்றி எழுதி இருந்தார் ( கருப்பு உளுத்தம் பருப்பில் செய்வது), நான் சரவணபவனில் ( சேலம் செல்வம் ஓட்டல் தரைதளத்தில் இயங்கி வந்த பழைய ஓட்டலில் ) மாலையில் சூடாக இந்த திருமால் வடையை சாப்பிட்டு இருக்கிறேன் , மொறு மொறு என்று இருக்கும் .

      சில ரோட்டோர கடைகளில் இனிப்பு உளுந்துவடை கிடைக்கிறது . அவ்வளவு பரிச்சயம் இல்லை .

      இவ்வளவு வடைகள் இருந்தாலும் ரச வடை மீது எனக்கு தனி காதல். சமீபத்தில் வேலூர் ரத்னகிரி எதிரில் உள்ள அலங்காரில் சாப்பிட்டேன் , சரியான சூட்டில் , சரியான காரத்தில்( மேல் அண்ணத்தில்  அந்த சூடு & காரம் தெரிய) சிறிதே கொத்தமல்லி தூவி அதி அற்புதமாக இருந்தது. இது மதிய நேரம் மட்டுமே கிடைக்கும் . முயற்சி செய்து பாருங்கள் 🤪( புகைப்படம் இணைத்துள்ளேன் )

   இதை தவிர வேறு ஏதாவது வேறு வடை வகைகள் கிடைக்கிறதா உங்கள் ஊரில் , எழுதுங்கள் நண்பர்களே முயற்சிக்கலாம் 🥰🥰

   பின்குறிப்பு :எங்கள் பக்கத்து மாவட்ட தம்பி திரு கார்த்திகேயன்  மழைக்கால பதிவாக பஜ்ஜி பதிவை பார்த்தபின் இந்த பதிவை எழுதினேன் 😇😇

No comments:

Post a Comment