புடவை maintainance.
மத்மர் முகநூலில் ஷோபா லக்ஷ்மி பதிவு
Ancila Fernanda அவர்கள் எழுதிய பதிவுக்கு எசப்பதிவு இது.
பட்டுப்புடவை maintainance
1.. ஷாம்புவில் அலசும் போது பார்டர் பகுதியை கொசுவி ஒரு பாவாடை நாடாவில் கட்டி பார்டர் அல்லாத பகுதியை முதலில் ஷாம்பு நீரில் அலசி பின் நல்ல தண்ணீரில் அலச வேண்டும். 'நன்றாக நீர் வடிந்தபின் பார்டர் பகுதியை தனியாக அலசி பார்டர் பகுதி கீழே இருக்கும்படி தண்ணீர் வடிய வேண்டும். காயபோடும்போது பார்டர் பகுதி கீழே இருக்கும் படி காயபோடவேண்டும்.
2. பட்டுப்புடவையை நிழலில் உலர்த்தவேண்டும்.
3. ரீவைவ் Starch powder light. ஆ கஞ்சி போடலாம்.
3. குறைந்த ஹீட் அயர்ன் செய்வது
4. பார்டரை திருப்பி போட்டு அயர்ன் செய்வது. (உல்டாவாக... ஜரிகை மீது direct ஆக iron செய்யகூடாது.)
5. இரண்டு சைடு பார்டர்-இருந்தால் பாதியாக மடித்து காயபோடவேண்டும்.
6. வசதி இருந்தால் நீளமாக காயவைப்பது ஒரே மடிப்பில்.
7. மடிப்பு மாற்றி மடித்து வைத்தால் கிழியாது.
8. மாதத்திற்கு ஒருமுறையோ அடிக்கடியோ பட்டு புடவையை எடுத்து பிரித்து கட்டாவிட்டாலும் ஆறவிட வேண்டும்.
9. அட்டை பெட்டியில் வைத்தால் நல்லது.
10. நாப்தலின் உருண்டை அல்லது Sandalwood powder pockets வைத்தால் புடவை வாசனையா இருக்கும்.
11. புடவையில் சாப்பாடு ஐட்டம், or எண்ணெய் கறை படிந்தால் உடனடியாக ஒரு துளி ஷாம்பு அந்த இடத்தில் தேய்த்தால் கறை போகும்..
அடுத்தது. காட்டன் புடவை.
1. கஞ்சி போட்ட காட்டன் புடவை நீண்டநாள் கட்டாமல் பீரோவில் வைத்தால் சீக்கிரம் கிழியும்.
2. வெயில் காலம் வருமுன் கஞ்சி போட்டு வைத்தால் நல்லது
. 3. மொத்தமாக கஞ்சி போடும்போது ஒரு புடவைக்கு தேவையான அளவு கஞ்சி எடுத்து தனிதனியாக கஞ்சி போட்டால் எல்லாப் புடவையும் Stiff - ஆக இருக்கும்.
இல்லாவிட்டால் கடைசி புடவை கஞ்சி நீர்த்துவிடும்.
4.. உங்களுக்கு இடம் இருந்தால் மொட்டைமாடியில் Clean செய்து தரையில். நீளமாக காய போட்டால் இஸ்திரி செய்வது மிச்சம்.. அப்படியே எடுத்து மடித்துவிடலாம். விஜயவாடாவில் இப்படி தான் செய்வார்கள்.அங்கு வெயில் அதிகம். காட்டன் தன் கட்டுவார்கள். Daily use காட்டன் கூட கஞ்சி இல்லாமல் கட்டமாட்டார்கள். புடவைக்கு கஞ்சி போடுவது திருவிழா மாதிரி செய்வார்கள். மேலும் சாதாரண பூனம் , Silk..லேசான காட்டன் அல்லாத எல்லா சிந்தடிக் சேலைகளுக்கும் கஞ்சி போட்டு கட்டுவதை நான் அங்கு தான் முதன் முதலாக பார்த்தேன். இதனால்சேலைகள் இடுப்பில் வழுக்காமல் Stiff - ஆக இருக்கும்.
எந்த ஒரு புடவையையும் முதன்முறை துவைக்கும் போது எந்த ஒரு Sachet ஷாம்புவாக இருந்தாலும் அதில் நனைத்து அலசி துவைத்தால் நல்லது. அதன்பிறகு normal ஆக wash செய்யலாம்.
இவ்வளவு எழுதும் நான் பட்டு கட்டுவதை மஹாபெரியவருக்காக விட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. திருமண புடவை இரண்டு மட்டும் ஞாபகார்த்தமாக வைத்துள்ளேன். ஒன்று பெண்ணுக்கு ஒன்று மருமகளுக்கு (என் மாமியார் வீட்டில் கல்யாணத்திற்கு வாங்கி கொடுத்தது) கட்வொர்களா தெரியாது.
ஏதோ எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் நட்பூக்களே...
No comments:
Post a Comment