ஆமணக்கு விதை சாப்பாட்டில் யூஸ் பண்ணலாமா....?
--------
இட்லிக்கு வெளியில் கொடுத்து அரைப்போர், மாவாகவே வாங்குவோர் லெஃப்ட் எடுத்து விரைவாக தாண்டி சென்று விடவும்.
--------
இட்லி அரிசி,
ரேஷன் புழுங்கல் அரிசி,
ரேஷன் பச்சையரிசி அனைத்தும் தலா அஞ்சி கப் தண்ணீர் விட்டு நாலு முறை நல்லா கழுவிட்டு அரிசிக்கு மேல ஒரு அங்குலம் தண்ணீர் இருப்பது போல தண்ணி சேத்து ஊர வைங்க. அப்படியே அரைகப் வெந்தயம் எடுத்து நல்லா கழுவி அதில் ரெண்டு கப் தண்ணீர் விட்டு இதையும் ஊர வைங்க. வெந்தயத்தை மட்டும் முதல்நாளே ஊரவைத்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தா இன்னும் அமோகம்.
அரிசி ஊரவைத்த ஐந்து மணி நேரம் கழித்து மூனு கப் உளுந்து எடுத்து நாலுமுறை கழுவி இதையும் ஊர வைங்க. உளுந்து ரெண்டு மணி நேரம் ஊரினாலே போதும்.
மாவு அரைக்கும்போது இந்த ஊரவைத்த தண்ணீரையே யூஸ் பண்ணா மழை பனி காலத்தில் மாவு அருமையா பொங்கி வரும். நல்லா கழுவ வேண்டியதன் அவசியம் இதுதான்.
கோடைக்காலத்தில் ஐஸ் வாட்டர் சேர்த்து அரைக்கலாம்.
அடுத்து ஆமணக்கு விதைல ஒரு டஜன் எடுத்து மேலுள்ள ஓட்டை தட்டி உரிச்சிடுங்க.
முதல்ல உளுந்து அரைப்பதில் உள்ள சௌகர்யம் என்னன்னா... வேல முடிஞ்சி கிரைண்டர கழுவ ஈசியா இருக்கும். அரிசி அரைப்பதால் உளுந்தின் கொழகொழப்பு இருக்காது.
உளுந்துடன் வெந்தயம் சேர்த்து நல்லா நைஸா அரைக்கனும். அரிசியுடன் ஆமணக்கு விதை சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாவும் அரைக்கலாம்.
(இன்னொரு ரகசியம்... :) இத்துடன் மூனு பச்சை மிளகாய பொடியா கட்பண்ணி போட்டு அரைச்சிப் பாருங்க... பாத்துட்டு சொல்லுங்க...)
தேவையான உப்பை அரைக்கும்போதே போட்டுடுங்க.
இந்த மாவு நாலைந்து மணி நேரத்திலேயே இட்லிக்கு தயாராகிடும்.
By: Shiva's Kitchen.
No comments:
Post a Comment